வந்தாள் மகாலட்சுமியே.. -19

19 பேப்பர் படித்துக் கொண்டிருந்த வாகீசன் அழுத்தமான காலடியோசையில் பேப்பரை தழைய விட்டார்.. காலை நேர ஜாகிங் முடிந்து வீட்டுக்குள் வந்து கொண...


19

பேப்பர் படித்துக் கொண்டிருந்த வாகீசன் அழுத்தமான காலடியோசையில் பேப்பரை தழைய விட்டார்.. காலை நேர ஜாகிங் முடிந்து வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான் யதுநந்தன்.. இறுக்கமான கால் சராயும்.. டிசர்ட்டும் அவனுடைய கவர்ச்சியை அதிகப் படுத்திக் காட்டின.. எதிர் வீட்டைப் பார்த்தார்.. மீரா வாசலில் நின்று கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்..
'இது கோலத்தை ரசிக்குதா.. இல்லே.. இவனோட இந்தக் கோலத்தை ரசிக்குதா..?'
பின்னதுதான் என்பதை மீராவின் பார்வை யது நந்தனின் மீது விழுந்து நிருபித்தது..
வேகத்தடை போட வேண்டியதன் அவசியத்தை வாகீசன் உணர்ந்தார்.. போர்டிகோவைத் கடந்து வராண்டாவில் ஏறிய யதுநந்தனை..
"இங்கே வாப்பா.." என்று அழைத்தார்..
"என்னையா மாமா..?" ஆச்சரியத்துடன் கேட்டான் யதுநந்தன்..
"உன்னைத்தான்.. ஏன்ப்பா.. நான் உன்னிடம் பேசக் கூடாதா..? உன் அத்தைதான் உன்னிடம் பேசனுமா..?" வினயமாக கேட்டார் வாகீசன்..
"அப்படின்னு நான் சொன்னேனா மாமா..?"
யதுநந்தன் அவர் முன்னால் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.. வாகீசன் பேப்பரை மடித்து விட்டு யோசனையுடன் அவன் முகம் பார்த்தார்..
'எப்படி ஆரம்பிக்கிறது..?' அவருக்கு சங்கடமாக இருந்தது..
"சும்மா சொல்லுங்க.."
அவர் முகத்தைப் பார்த்தபடியே இருந்த யதுநந்தன் ஊக்கப் படுத்தினான்..
"பாருப்பா.. நான் பிராக்டிகல் மேன்.. மனதில பட்டதைச் சொல்லிடறவன்.. என்மேல நீ வருத்தப் பட்டுக்காதே.."
"ஓகே.."
"எதிர்வீட்டு சடகோபன் மிகப் பெரிய கோடிஸ்வரர் மட்டுமில்லை.. கலெக்டர்.."
"இருக்கட்டும்.. அதற்கு என்ன..?"
"இதுவரைக்கும் ஒன்னுமில்லேப்பா.. இனிமேலும்.. அப்படியே இருக்கனும்னு நான் ஆசைப்படறேன்.."
வாகீசன் சொல்ல வருவது எதை என்று புரிந்து கொண்ட யதுநந்தனின் முகம் இறுகியது..
"என்னாலே உங்களுக்குப் பிரச்னை வரும்ன்னு நினைக்கறிங்களா மாமா..?" நேரடியாக கேட்டு விட்டான்..
அந்த நேரடிக் கேள்வி வாகீசனை சங்கடப் படுத்தியது.. அவரால் மனதிலிருந்ததை உடைத்துப் பேச முடியவில்லை.. அதற்காக பேசாமல் இருக்கவும் முடியவில்லை..
"என்னப்பா பேசற..? உனக்கு பிரச்னை வந்தா மட்டும் அது எங்களைப் பாதிக்காதா..?" பாகீரதியை மனதில் வைத்துக்கொண்டு கேட்டார்..
"பயப்படாதீங்க மாமா.. அத்தைக்கும்.. உங்களுக்கும் என்னாலே எந்தப் பிரச்னையும் வராது.." தெளிவாக சொல்லி விட்டு எழுந்து போய் விட்டான் யதுநந்தன்..
வாகீசனுக்குத்தான் அந்தத் தெளிவு வர மறுத்தது..
'இவன் இப்ப என்னதான் சொல்றான்..' அவருக்கு தலைதான் காய்ந்தது..
யதுநந்தன் மீராவை பார்வையிடுவதை நிறுத்தி விடுவான் என்று நம்புவதற்கு அவர் தயாராக இல்லை..
'அதைக் காதிலே பூவைச்சிக்கிறவன்தான் நம்புவான்..'
வாகீசன் தோளைக் குலுக்கியபடி குளிக்கப் போனார்.. டைனிங் டேபிளுக்கு வந்தபோது யதுநந்தன் தாழ்ந்த குரலில் பாகீரதியிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தான்.. காலையில் அவர் பேசியதைச் சொல்லிக் கொண்டிருக்கிறானோ என்ற சம்சயம் அவர் மனதில் வந்தது.. வந்த வேகத்தில் அழிந்தும் போனது..
'இவனாவது.. நான் பேசினதை பாகீரதியிடம் பற்ற வைக்கிறதாவது.. பக்கா ஜென்டில் மேனாச்சே இவன்..'
அவரது கணிப்பு சரியாக இருந்தது.. பாகீரதி அவரைக் கண்டதும் இயல்பாக சிரித்தபடி தட்டை வைத்து டிபனை பரிமாறினாள்.. யதுநந்தன் சிநேகிதமாக சிரித்தான்.. இவருக்குத்தான் தொண்டைக்குள் மீன்முள் மாட்டிக் கொண்டதைப் போல அவஸ்தை வந்து தொலைத்தது..
'இவனிடம் சடகோபனைப் பத்திப் பேசியிருக்கக் கூடாதோ..'
குற்ற உணர்வுடன சாப்பிட்டு விட்டு ஆபிஸ் கிளம்பிப் போனார்.. மாலையில் வீடு திரும்பியவர்.. பப்பரப்பா என்று திறந்திருந்த வீட்டில் பிரவேசித்தார்..
ஹாலில் யாரையும் காணோம்.. கதவைத் திறந்து போட்டு விட்டு எங்கே போனார்கள் என்ற கோபம் அவருக்கு வந்தது.. உடைமாற்றி.. முகம் கழுவி விட்டு வந்து என்னவென்று கேட்கலாம் என்று முடிவெடுத்தவராக மாடி ஹாலில் காலை வைத்தார்.. வைத்தவர் அப்படியே நின்று விட்டார்..
அங்கே.. யதுநந்தனின் மார்பில் கண்மூடி சாய்ந்திருந்தாள் மீரா.. அவளைத் தழுவியபடி அவளது உச்சந்தலையில் முகத்தைப் பதித்து தானும் கண்மூடியிருந் தான் யதுநந்தன்..
வாகீசனுக்கு தனது கண் பார்வை குறித்த சந்தேகம் வந்து விட்டது.. கண்ணைக் கசக்கி விட்டு மீண்டும் பார்த்தார்.. அந்தக் காட்சி கலையாமல் அப்படியே இருந்ததில் அவருக்கு நெஞ்சு வலிப்பதைப் போல இருந்தது..
'காலையில்தானே இவனால் எனக்குப் பிரச்னை வராதுன்னு சொன்னான்.. சொல்லி முழுதாய் அரைநாள்கூட ஆகலை.. அதுக்குள்ளே நடுவீட்டில் இவளைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நிற்கிறானே..'
சத்தமில்லாமல் பின் வாங்கிய வாகீசன் மாடிப்படிகளில் இறங்கி வாசலை நோக்கி நடந்தார்..
'யாராச்சும் வந்து தொலைச்சிட்டா..?' அவருக்கு பயம் வந்தது..
போர்டிகோவை ஒட்டியிருந்த வராண்டாவில் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சரிந்தவர் நெற்றியைப் பிடித்துக் கொண்டார்.. ஒற்றைத் தலைவலி விண்.. விண்ணென்று தெறித்தது.. அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாரோ.. அவருக்கே தெரியவில்லை..
"இங்கே.. பாருங்கடா.. அப்பா அதுக்குள்ளே வந்திட்டாரு.." என்ற பாகீரதியின் குதூகலமான குரலில் நிமிர்ந்து பார்த்தார்..
மகேஷீம்.. சுரேஷீம் இரண்டு பக்கமும் பாதுகாவலர் களைப் போல வர.. ஊடே மகாராணியைப் போல நடந்து வந்தாள் பாகீரதி.. அவள் கையில் பூஜைதட்டு இருந்தது..
"எப்ப வந்தீங்க..?"
அவர் நெற்றியில் திருநீரை இட்டபடி வினவினாள்.. பாகீரதியின் செய்கையில் வாகீசனின் மனபாரம் சற்றே குறைந்ததைப் போல இருந்து..
"நான்தான் வந்தாச்சே.. எப்ப வந்தா உனக்கென்ன..? நீயென்ன வீட்டில இருந்து கதவைத் திறந்து விட்டயா..?" எரிச்சலுடன் கேட்டார்..
"சாருக்கு அந்தக் கோபமாக்கும்.." சரசமாக சிரித்தாள்.. பாகீரதி..
அவள் எப்போதாவது ஒருமுறைதான் அரிதாக குறிஞ்சிமலர் பூப்பதைப் போல பிள்ளைகளின் எதிரில் சரசமாக பேசி வைப்பாள்.. மற்ற நேரங்களில் போர் முரசைத்தான் கொட்டுவாள் அப்படிப்பட்ட அரிதான தருணங்களைப் பொத்திப் பாதுகாத்து வைத்துக் கொள்வதில் வாகீசனுக்கு நிகர் வாகீசனேதான்..
அப்படிப்பட்ட அரிதான குறிஞ்சி மலர் தருணம் வாய்த்தும் அதைப் பத்திரப்படுத்திக் கொள்ள முடியாத வறியனாக ஆகியிருந்தார் வாகீசன்..
"எரிச்சலைக் கிளப்பாதேடி.. என் கோபத்தைக் கண்டு ரொம்பத்தான் பயப்படுகிறவ.. வீட்டைத் திறந்து போட்டுட்டு எங்கே ஊர் சுத்தப் போன..?"
"என்னது..?"
பாகீரதியின் முகம் மாறிவிட்டது.. இதுபோன்ற கடுஞ்சொற்களை வாகீசன் பேசி அப்போதுதான் முதன் முதலாக கேட்கிறாள் பாகீரதி.. அவர் இதுபோலப் பேசக் கூடியவரல்ல..
"ஊர் சுத்தப் போனேனா..? யாரைப் பாத்து என்ன வார்த்தை பேசறிங்கன்னு யோசிச்சுத்தான் பேசறிங்களா..?"
பாகிரதியின் பல் கடிப்பைப் பற்றி வாகீசன் கிஞ்சித்தும் கவலை கொள்ளாததில் அவளுக்கு கோபம் அதிகரித்தது..
"நிறுத்துடி.." என்றார் அவர்..
"வீட்டுக்கு வரேன்.. வீடு பப்பரப்பான்னு திறந்து கிடக்குது.. எவனாவது திருடன் வந்து கொள்ளையடிச் சுட்டுப் போயிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.. அப்படி கொள்ளை நடந்திருந்தா நிச்சயமா நான் திருடன் மேலே குற்றம் சொல்லியிருக்க மாட்டேன்.. திறந்து கிடக்கிற வீடு 'வா.. வா..'ன்னு கூப்பிட்டா திருடன் வந்து கைவரிசையைக் காட்டாம என்ன பண்ணுவான்..?"
"விட்டா நீங்களே திருடனைக் கூப்பிட்டு வந்துருவீங்க போல இருக்கே.."
"ஆமாண்டி.. கூப்பிட்டுத்தான் வருவேன்.. சும்மாவும் கூப்பிட மாட்டேன்.. வெத்தலை பாக்குவைச்சு.. கொட்டு மேளத்தோட கூப்பிட்டுக்கிட்டு வருவேன்.."
வாகீசனின் ஆவேசத்தில் இந்த மனிதருக்கு என்ன ஆனது என்ற கவலைக்கு ஆளானாள் பாகீரதி..
'ஒரு மனுசன் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வந்தா கதவைத் திறக்க ஆளிருக்கனுமா..? நானென்ன இந்த வீட்டுக்கு வாட்ச் வுமனா..?' அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
"ஏன் கூப்பிட்டுக்கிட்டு வர மாட்டிங்க.. கட்டின பெண்டாட்டி என்னைக்குப் பிறந்தான்னு அவ பிறந்த நாளைக்கூட ஞாபகத்தில வைச்சுக்காத மனுசன் கொட்டு மேளத்தோட திருடனைக் கூப்பிட்டுக்கிட்டு வருவாராமில்ல.. தாராளமாக் கூப்பிட்டுக்கிட்டு வாங்க.. நான் இப்பவே என் அப்பா அம்மா வீட்டுக்கு டிரெயினைப் பிடிக்கறேன்.."
பாகீரதியின் அறிவிப்பில் வாகீசனுக்கு சுரீர் என்று ஆகி விட்டது..
'இன்னைக்கு பாகீயோட பர்த்டேயில்ல.. மறந்தே போயிட்டேனே..' நாக்கைக் கடித்துக் கொண்டார்..
அவர் மறந்து விட்டதை பொருட்படுத்தாமல் அவள் இயல்பாக பேசியதே பெரிய விசயம்.. அது தெரியாமல் வாகீசன்.. கழனித் தொட்டியில் விழுந்த கன்றுக்குட்டியைப் போல துள்ளிக் குதித்து விட்டாரே..
"ஸாரிடி பாகீ.." குழைந்தார்..
"யாரிடம் ஸாரி சொல்கிறிங்க..? யாராவது வீட்டோட வாட்ச் வுமனுக்கு ஸாரி சொல்வாங்களா..?" பாகீரதி மலையேறினாள்..
"நீயாடி வாட்ச் வுமன்..?"
"ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்.."
"எதுக்குடி இத்தனை ஆமாம் போடற..?"
"உண்மையை உரக்கச் சொல்லறேன்.."
"உண்மை இது இல்லைடி.."
"வேற எதுவாம்..?"
"நீ இந்த வீட்டின் மகாராணிடி.."
"கேட்க நல்லாத்தான் இருக்கு.. விடியறதுக்கு முன்னாலே எழுந்திருச்சு.. இந்த வீட்டையே எழுப்பி விட்டு.. ஆளுக்கொரு விதமா சமைச்சுப் போட்டு.. ஆபிசுக்கு போகிறவங்களை ஆபிஸ்க்கு அனுப்பி.. ஸ்கூலுக்குப் போகிறவங்களை ஸ்கூலுக்கு அனுப்பின்னு.. டாட்டா காட்டி அனுப்பி வைச்சிட்டு.. தலை கீழா புரண்டு கிடக்கிற வீட்டை ஒழுங்கு பண்ணி அதுக்கப்புறமா ஆறிப் போன சாப்பாட ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கிட்டு.. சாயந்திரம் வருகிறவர்களுக்கு காபி டிபன் கொடுத்து.. நைட் சப்பிட வகை தொகையாய் டிபன் செஞ்சு.. திரும்பவும் சாப்பாட்டுக் கடையை விரிச்சு.. அத்தனை பேருக்கும் பறிமாறி சாப்பிட வைச்சு.. நீங்கள்ளலாம் பள்ளியறைக்கு துயிலப் போன பின்னால போர்க்களமா கிடக்கிற டைனிங் டேபிளை துடைச்சு சுத்தம் பண்ணி பாத்திரம் பண்டங்களை ஒழிச்சு சின்க்கில் போட்டுட்டு.. நானும் ஒரு வாயி ஆறிப் போனத அள்ளிப் போட்டுக்கிட்டு.. மிச்சம் மீதி இருக்கிறத சுட வைச்சு பிரிட்ஜில வைச்சுட்டு வீட்டைப் பூட்டிட்டோமான்னு செக் பண்ணிட்டு தூங்க வந்தா ஜாமக் கோழி ஏய் கூவுதம்மான்னு கூவி வைக்கும்.. அம்மாடின்னு கட்டையைச் சாய்ச்சா.. விடியச் சொல்லிக் கோழி கூவுதுன்னு கோழி கூவி எழுப்பி விட்டிரும்.. இப்படி ஓடாத் தேய்கிறவளுக்கு பிறந்தநாளு ஒரு கேடான்னு சொல்லாம சொல்லி வெத்தலபாக்கு வைச்சு திருடன வீட்டுக்குள்ள அழைக்க நினைக்கிற நீங்க சொல்கிறிங்க.. நான் இந்த வீட்டுக்கு மகாராணின்னு.. குட்ஜோக்.. சிரிப்புத்தான் வரலை.."
பாகீரதியின் நீண்ட சொற்பொழிவில் வாகீசனின் காது ஜவ்வு கிழியவா என்று கேட்டது.. குருதி கொட்டும் நிலைக்கு ஆளாகாமல் காதைத் தப்புவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த வாகீசன் கையெடுத்துக் கும்பிடாத குறையாக..
"போதும்டி பாகீ.." என்று கெஞ்சினார்..
"அதெல்லாம் போதாதும்மா.." என்றான் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய மூத்த புதல்வன் மகேஷ்..
"இட்'ஸ் டூ பேட்.." முகம் சுளித்தான் அவருடைய இளைய புதல்வன் சுரேஷ்..
"அம்மாவுக்கு பர்த் டே விஷ் சொன்னீங்களா..?"
"நீ வேறண்ணா.. அவருக்கு அம்மாவுக்கு இன்னைக்கு பர்த்டேங்கிற விவரமே மறந்திருக்கு.. இதில விஷ் பண்ணலையான்னு கேட்டு வைக்கிற.."
"எப்படிப்பா இப்படியிருக்கீங்க..?"
"அம்மா கோவிலுக்குப் போகனும்னு உங்களுக்காக வெயிட் பண்ணிப் பாத்தாங்க.. நீங்க வரலை.."
"ஸோ.. நாங்களும்.. எதிர் வீட்டு ஆண்ட்டியும் அம்மாவுக்கு கம்பெனி கொடுத்தோம்.."
"சிச்சுவேசன் இப்படியிருக்க.. நீங்க திருடனைக் கூப்பிட்டுக்கிட்டு வருவீங்களா..?"
"அந்தத் திருடன்கிட்ட அப்பாவைப் பிடிச்சுக் கொடுக்கனும்டா.."
"குட் ஐடியா.."
"அம்மா ஊர் சுத்தப் போனாங்களாமே.."
"அப்படி எத்தனைநாள் அவங்க ஊர் சுத்தினாங்கன்னு ரமணாவைப் போல புள்ளி விவரம் சொல்லச் சொல்லுண்ணா.."
"இவர் என்ன வைத்துக்கிட்டா வஞ்சகம் பண்றாரு.. ஆபிஸோட ஸ்டேட்டிக்ஸே இவருக்குத் தெரியாது.. இதில இதைக் கேட்டா என்னடா செய்வாரு..?"
அவர் பெற்ற தவப் புதல்வர்கள் அவரைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டார்கள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -19
வந்தாள் மகாலட்சுமியே.. -19
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahalakshmiye-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahalakshmiye-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy