வந்தாள் மகாலட்சுமியே.. -9

9 "மீரா.." ஜானகியின் அழைப்பில் டிவியை அணைத்து விட்டு எழுந்து போனாள் மீரா.. டைனிங் ஹாலில் சடகோபன் உட்கார்ந்திருக்க அவருக்கு...

9

"மீரா.."
ஜானகியின் அழைப்பில் டிவியை அணைத்து விட்டு எழுந்து போனாள் மீரா.. டைனிங் ஹாலில் சடகோபன் உட்கார்ந்திருக்க அவருக்குப் பரிமாறியபடி அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள் ஜானகி..
"என்னம்மா..?"
"பசியாவரம் வாங்கி வந்திருக்கியா..? சாப்பிடனும்னு தோணலை..?"
ஏன் தோன்றவில்லை..? மீரா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அப்போதுதான் என்றில்லை.. காலையில் அவனைப் பார்த்ததில் இருந்தே அவள் பசியா வரம் வாங்கியவளைப் போல்தான் பித்துப் பிடித்தவளைப் போல இருந்தாள்..
'இவன் எப்படி என் கனவில் வந்தான்..?'
அவள் மனதை இந்தக் கேள்விதான் குடைந்து கொண்டிருந்தது.. அவள் மனமும்..
'ஊம்..? போட்டோவில பார்த்து ஜொள்ளு விட்டியில்ல.. அதான்.. நைட்டில கனவில வந்திட்டான்..' என்று சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டது..
'போட்டோவை ரசிச்சா கனவில குதிரைமேல ஏறி வந்து என்னைத் தூக்கிட்டுப் போயிருவானா..?' அவளின் ஆழ்மனம் முரண்டியது..
அவள் என்ன அவனைப் பார்த்து மட்டுமா 'ஹேண்ட்சம் மேன்' என்று சொன்னாள்.. வசீகரமான ஆண்மகனைப் பார்த்தால் அப்படிச் சொல்வது அவள் வயதையொட்டிய யுவதிகளின் வழக்கம்தானே..
அது ஒரு வயது..! பதினாறு வயதுப் பிராயத்திலிருந்து அலைபாய ஆரம்பிக்கும் கன்னிப் பருவம் அது.. இளம் வயது ஆண்களைக் கண்டால் குறுகுறுக்கும் மனதுடன் தோழிகளிடம் கிசுகிசுத்து இவனுக்கு என்ன மார்க் போடலாம் என்று கேட்கும் வயது அது.. மயக்கும் மாலைப் பொழுதைப் போன்ற மனம் மயங்கும் பருவம் அது..
அந்தக் குறுகுறுப்போடுதான் யார் இது என்று யது நந்தனின் போட்டோவைக் காட்டி அவள் மகேஷிடம் கேட்டாள்.. கேட்டவள் அதை மறந்து போன பின்னாலும் அவள் கனவில் அவன் வெண்ணிறப் புரவியில் ஏறி விரைந்து வந்தது நியாயமா..? வந்தவன் சும்மாவும் இருக்காமல் அவள் இடையில் கை கொடுத்துத் தூக்கி புரவியில் உட்கார வைத்துக் கொண்டு பறந்து போனது தர்மமா..?
அதனால் அல்லவா.. அவனை நேரில் கண்டதும் அவள் உடலுக்குள் இனம் புரியாத ஒரு இன்பப் பரபரப்பு வந்து தொலைத்திருக்கிறது.. அவள் மனம் பரவசத்தில் ஆழ்ந்திருக்கிறது..
"மீரா.."
ஜானகியின் ஓங்கிய சப்தத்தில் உலுக்கிப் போட்டவளைப் போல விழித்தாள் மீரா..
"என்.. என்.. என்னம்மா..?" அவளின் வார்த்தைகள் தந்தியடித்தன..
"அப்பா பக்கத்திலே தட்டைப் போட்டிருக்கேன்.. உட்காருன்னா எங்கேயோ பார்த்து முழிச்சுக்கிட்டு இருக்க..? என்னடி ஆச்சு..?" ஜானகி விசித்திரமாக மகளைப் பார்த்தாள்..
"இல்லேம்மா.. ஏதோ நினைவு.." மீரா சடகோபனின் பக்கத்தில் உட்கார்ந்து தட்டில் இருந்த பூரியை பிய்த்தாள்..
"இந்த வயசில உனக்கென்னடி நினைப்பு வேண்டிக் கிடக்கு.. அப்பாவுக்குத்தான் ஆயிரம் நினைப்பிருக்கு.. எனக்கு வீட்டைப் பத்தின நினைப்பு இருக்கு.. உனக்கு எதைப் பத்திடி நினைப்பு வந்து அமுக்குது..?" ஜானகி அதட்டினாள்..
"விடு ஜானகி.. படிப்பைப் பத்தி நினைச்சிருப்பா.. எப்படி மீரா.. கோச்சிங் கிளாஸில படிக்கிறதையெல்லாம் வீட்டில ஒருதடவை படிச்சுப் பார்க்கிற இல்ல..?"
சடகோபனின் விழிகள் மகளைத் துளைத்தன.. மீராவின் கல்லூரி படிப்பு ஆரம்பித்த போதே ஐ.ஏ.எஸ். தேர்விற்கான கோச்சிங் கிளாஸில் அவளைச் சேர்த்து விட்டார் சடகோபன்.. அவளும் பி.எஸ்.ஸி பட்டப் படிப்பை முடித்து.. எம்.எஸ்.ஸியில் காலடி வைத்து விட்டாள்.. அந்த வருடம் தான் முதன் முதலாக ஐ.ஏ.ஏஸ் பரிட்சைக்கு விண்ணப்பிக்கப் போகிறாள்..
"ம்ம்ம்.." மீரா தோராயமாக தலையை ஆட்டி வைத்தாள்..
அவளுக்கு ஐ.ஏ.எஸ் பரிட்சையின் மீது ஆர்வம் இல்லை.. இசையில் பட்டம் வாங்கி.. அந்தத் துறையில் முன்னேற விரும்பினாள்.. அதை சடகோபனிடம் சொல்ல முயன்றபோது அவர் அவளை பேசவே விடவில்லை..
"அப்பாவைப் போல நீயும் ஐ.ஏ.எஸ் ஆபிசராகனும்.. அதுதான் எனக்குப் பெருமை.." என்று சொல்லி விட்டார்..
ஒற்றை மகளின் தலையில் அவர் ஐ.ஏ.எஸ் கனவை ஏற்றி வைத்துவிட பிடித்தமில்லாத நிர்வாகப் படிப்பை படிக்க முடியாமல் திணறிப் போனாள் மீரா..
இதில் அவள் படிப்பின் நினைவாகவே இருப்பதாக அவர் சொல்லி விட்டதில் பூரி கிழங்கு அவளுக்கு ருசிக்கவில்லை..
'என்னடா இது மீராவுக்கு வந்த சோதனை..' என்று அவள் குனிந்த தலை நிமிராமல் புதுப் பெண்ணைப் போல தட்டைப் பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்..
"டிவியில் என்ன பார்த்த..? நியூஸ் சேனல்தானே..?"
சடகோபன் கேட்டதில் அவளுக்கு தொண்டைக்குள் போன பூரி அங்கேயே தங்கி விட்டது..
'நியூஸ் சேனலா..? நான் நெஞ்சில் நிறைந்த கானங்களையில்ல பார்த்துக்கிட்டு இருந்தேன்..?'
அதை சடகோபனிடம் சொல்லிவிட அவளால் முடியாது.. அவரைப் பொறுத்தவரையில் மீராவுக்கு பாட வருவதென்பது அவளுக்கான சிறப்புத் தகுதி மட்டுமே.. அதையே முழுநேர ஆர்வத்துடன் அவள் பயிலுவதில் அவருக்கு விருப்பமில்லை..
"டெய்லி பேப்பரை மிஸ் பண்ணக் கூடாது... நியூஸையும் அப்படித்தான்.. இதையெல்லாம் அப்டு டேட்டா நீ வைத்துக்கிட்டா போதும்.. ஈஸியா வின் பண்ணிரலாம்.."
"ஓகேப்பா..."
சடகோபன் அவள் ஐ.ஏ.எஸ் பரிட்சையில் தேர்வா வதற்குப் படிக்க வேண்டியவற்றைப் பட்டியலிட்டார்.. மீரா ஊம்.. ஊம் என்று 'ஊம்' கொட்டியபடியே சாப்பிட்டு முடித்து விட்டாள்..
"நான் சொன்னதை மனதில் வைத்துக்க.." என்று சடகோபன் சொன்னபோது..
'எதை..?' என்று திருதிருத்தாள்..
அவர் பேசிய ஒரு சொல்லையாவது அவள் காதில் போட்டிருந்தால்தானே அவர் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியும்..?
இந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்கத்தான் மீரா எதிர்வீட்டிற்கு ஓடி விடுவாள்.. ஓய்வு நேரம் முழுவதும் அங்கே விருப்பம் போல ஆடிப்பாடி விளையாடிவிட்டு களைத்துப் போய் தூங்க மட்டும் வீட்டுக்கு வந்து சேருவாள்..
"சாப்பிட வாடி.." என்று ஜானகி அதட்டினால்..
"ஆண்ட்டி வீட்டில சாப்பிட்டுட்டேன்ம்மா.." என்று தூங்கி விடுவாள்..
அன்றும் அதுபோல செய்ய முடியாமல் மாட்டிக் கொண்டவள் அதற்குக் காரணமான யதுநந்தனுக்கும் கனவு வரக் கடவது என்று சாபம் கொடுத்தாள்..
'அவனால்தானே அப்பாவிடம் மாட்டிக் கொண்டிருக்கிறேன்..'
சடகோபனின் உபதேசத்திற்கு தலையைத் தலையை ஆட்டிவிட்டு மாடிக்கு ஓடிவிட்டாள்.. 
அவளுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்ததும் முதல் வேலையாக தாழ்ப்பாளை போட்டாள்..
'அப்பாடி.. பூட்டின கதவுக்குள் அப்பாவோட அட்வைஸாலே நுழைய முடியாது..'
நிம்மதியாக படுக்கையில் குப்புற விழுந்தவள்.. விடுதலை உணர்வுடன் கால்களை மாற்றி மாற்றி ஆட்டியபடி
      "லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்..
லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்..
தக்கத்திமிதா.. என்ற தாளத்தில் வா.."
என்று பாடினாள்.. பாடியபடியே திரும்பிப் பார்த்தவளின் காலாட்டம் அப்படியே நின்று விட்டது.. அங்கே எதிர் வீட்டு மாடியறை ஜன்னலில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.. ஜன்னலோரமாக யது நந்தனும் தெரிந்தான்..
மீரா சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.. ஆளுயுயர ஜன்னலை திறந்து வைத்து விட்டு.. விளக்கைப் போட்டு கட்டிலில் குப்புற விழுந்து காலாட்டியபடி பாட்டுப் பாடிய தன் மடமையை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டாள்..
அவசரமாக அறை விளக்கை அணைத்தவள்.. ஜன்னலின் ஓரமாக ஒளிந்து நின்றபடி எதிர் வீட்டு மாடியறையின் ஜன்னலைப் பார்த்தாள்.. யதுநந்தன் அவளைப் போல ஒளிந்து கொள்ளவில்லை.. அதற்கான அறிகுறிகள் சிறிதளவு கூட இல்லாமல் அவன் ஹாயாக ஜன்னலில் சாய்ந்து அவள் அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
'இங்கேதான் பார்க்கிறான்..'
மீரா சுவரில் சாய்ந்து நின்றாள்.. அவள் இதயம் படபடவென அடித்தது.. எப்போதுமே அவளது அறையின் ஜன்னல் கதவுகள் திறந்திருக்காது.. இழுத்து மூடி திரைச்சீலைகள் மறைத்திருக்கும்.. ஏஸியின் குளிரில் இருந்தவளுக்கு.. மழை பெய்யவும் செயற்கைக் குளிர் பிடிக்காமல் இயற்கைக் குளிரை பிடித்துப் போய் விட்டது.. ஜன்னலை விரியத் திறந்து விட்டு மழை நீர்தாரைகளை வேடிக்கை பார்த்தபடி சில்லென்ற மழைக்காற்றை அனுபவித்தவள் ஜன்னலை மூட மறந்து விட்டாள் போல..
'என்னைச் சொல்லனும்..'
தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் திரும்பவும் திருடிபோல ஒளிந்தபடி எட்டிப் பார்த்தாள்..
'நான் இருட்டில்தானே நிற்கிறேன்.. அவனுக்குத் தெரியாது..' மனதுக்குள் சமாதானமும் சொல்லிக் கொண்டாள்..
அவன் அறையிலிருந்து பாடல் சப்தம் கேட்டது..
      "மறைந்திருந்தே பார்க்கும்..
மர்மம் என்ன..?"
அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. என்னடா இது என்று அரண்டு போனவளாக தரையில் உட்கார்ந்து விட்டாள்.. அந்த நிலைமையிலும் 
'பாடினது அவன்தானா..? நல்லாப் பாடறானே..' என்ற எண்ணம் வந்து தொலைத்தது..
'சும்மாதான் இருக்கியா..?'
தனது பின் மண்டையில் அடித்துக் கொண்டாள்.. இப்படித்தான் அவன் பார்க்க நன்றாக இருக்கிறானே என்று நினைத்துத் தொலைத்தாள்.. அவன் கனவில் புரவியேறி வந்து அவளைத் தூக்கிக் கொண்டு போனான்.. அது போதாதென்று நன்றாகப் பாடுகிறானே என்று நினைத்தும் வைக்கிறாளே.. தேவையா..?
மீரா பூனை போல தவழ்ந்து படுக்கையில் ஏறிப் படுத்து ஒருக்களித்து திரும்பி எதிர் வீட்டின் ஜன்னலைப் பார்த்தாள்.. அவன் அங்கேதான் இருந்தான்.. இப்போது..
        "ஓ.. பாப்பா லாலி..
கண்மணி லாலி.."
என்ற பாடல் சன்னமான குரலில் காற்றில் மிதந்து வந்தது.. 
'இவனுக்கு இன்னும் கலெக்டர் சடகோபனைப் பற்றித் தெரியலை..' என்று நினைத்துக் கொண்டாள் மீரா..
அவன் அறையின் விளக்கு அணைந்து விட்டது.. தூங்கப் போயிருப்பான் என்று நினைத்தபடி தூங்கிப் போனாள் மீரா.. தூக்கத்தில் கனவு வந்து தொலைத்தது.. கனவில் அவனும் வந்து தொலைத்தான்.. வந்தவன் இப்போது அவளது இடையைப் பற்றிச் சுழற்றி ஆடியபடி..
         "ராஜாவின் பார்வை..
ராணியின் பக்கம்.."
என்று டூயட் பாடி வைத்தான்..
மீராவுக்கு விழிப்பு வந்து விட்டது.. எழுந்தவள் தலைமேல் கை வைத்து அப்படியே உட்கார்ந்து விட்டாள்..
'முட்டாள் மீரா..! அதான் அவனைப் பத்தி நினைச்சாலே கனவில் வந்து தொலைக்கிறானில்ல.. அப்புறமும் என்ன அலுவலுக்காக அவன் நல்லாப் பாடறானேன்னு நினைச்சுத் தொலைச்ச..? இப்பப் பாரு.. உன்கூட கனவில டூயட் பாட வந்து சேர்ந்துட்டான்..' அவள் மனம் அவளை செமத்தியாக திட்டித்தீர்த்தது..
இப்படியா ஒருவன் கனவில் வந்து பயமுறுத்துவான்..?
பார்க்க நன்றாக இருக்கிறானே என்று நினைத்துத் தொலைத்தால் புரவிமீது ஏறிவந்து அவளை 'அலேக்' பண்ணிக் கொண்டு போகிறான்.. நன்றாகப் பாடுகிறானே என்று நினைத்துத் தொலைத்தால் டூயட் பாட வந்து நிற்கிறான்..
நாளைக்கு அவனைப் பற்றி எதுவுமே நினைக்கக் கூடாது என்று திரும்பத்திரும்ப நெட்டுரு போட்டபடி தூங்க ஆரம்பித்தாள் மீரா..
மறுநாள் அவளுக்கு கல்லூரி இருந்தது.. அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தவள் காரில் ஏறும்போது யதேச்சையாக நிமிர்ந்து எதிர் வீட்டு மாடியைப் பார்த்தாள்.. அங்கே பால்கனியில் அவன் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தான்..
'பெரிய ஜிம் பாய்..!'
உதட்டை வளைத்தவளை அவன் கூர்ந்து பார்த்ததில் அரண்டு போனவளாக காருக்குள் ஏறிக் கொண்டவளை பயம் பிடித்துக் கொண்டது..
'அடக்கடவுளே..! இவனைப் பற்றி எதுவுமே நினைக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டு ஜிம் பாய்ன்னு நினைச்சு வைக்கிறேனே.. இன்னைக்கு கனவில என்ன கோலத்தில் வந்து நிற்கப் போறானோ..'
அன்று முழுவதும் அந்தக் கேள்வியே அவள் மனதில் ரீங்காரமிட்டு குடைந்து கொண்டிருந்தது.. மாலையில் 
வீடு வந்தவள் குளித்து உடைமாற்றி.. வாசல்பக்க தோட்டத்துக்கு வந்த போது சடகோபனின்கார் வந்தது.. சட்டென்று ஓடி மறைவில் ஒளிந்து கொண்டாள்..
'இப்ப அப்பா கண்ணில பட்டா அவ்வளவுதான்.. ஏன் கோச்சிங் கிளாஸீக்குப் போகலைன்னு ஒரு வழி பண்ணிருவார்..'
தப்பிக்க மார்க்கமில்லாமல் எதிர் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள்..
"அக்கா.."
காத்திருந்த வாண்டுகள் ரெண்டும் ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டார்கள்..
"எங்கேடா உங்க வீட்டு அத்தான்..?" கிண்டலாக மீரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே..
"அத்தான் இங்கே இருக்கிறேன்.." என்று அவள் பின்னாலிருந்து குரல் வந்தது..
திரும்பிப் பார்த்தவள் வெகு அருகாமையில் நின்றிருந்தவனின் மீது மோதி விழுகப் போனாள்.. அவன் சட்டென்று அவள் இடுப்பில் கை கொடுத்தான்.. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர், சரோஜாதேவி டூயட் பாட்டுப் போல அவர்கள் நின்ற போஸைப் பார்த்த பாகீரதி.. கன்னத்தில் கை வைத்து ஆச்சரியப் பட்டாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -9
வந்தாள் மகாலட்சுமியே.. -9
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy