வந்தாள் மகாலட்சுமியே.. -28

28 "ஆகட்டும் பாட்டி.. கட்டாயம் மீராவோட அப்பா வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்குப் போகிறோம்.." யதுநந்தன் வாக்களித்தான்.. "ம...

28

"ஆகட்டும் பாட்டி.. கட்டாயம் மீராவோட அப்பா வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்குப் போகிறோம்.." யதுநந்தன் வாக்களித்தான்..
"மீராவோட அப்பா வீடா..? உன் மாமனார் வீடுன்னு சொல்லுப்பா.." சதாசிவம் பேரனைக் கண்டித்தார்..
"இந்தப் பேச்சுத்தானே பத்துப்பேர் மத்தியிலயும் வந்து விழுகும்..?" கங்கா அவள் பங்குக்கு பேரனுக்கு புத்தி சொன்னாள்..
அந்தப் பெரியவர்களின் நியாயத்தில் மீராவுக்கு நிம்மதிவந்தது.. அவளுடைய பிறந்த வீட்டை அவள் பிரிய வேண்டியிருக்காது.. என்பதில் அவள் மனதில் ஓர் அமைதி நிலவியது..
"மறுவீட்டு விருந்துக்குப் போறேன்.. ஆனா.. அத்தை வீட்டில விருந்து கொண்டாடிட்டு அதுக்கப்புறம்தான் மாமனார் வீட்டுக்குப் போகிறதைப் பத்தி யோசிப்பேன்.." என்று சொல்லிவிட்டான் யதுநந்தன்..
மீராவும் அதை ஏற்றுக் கொண்டதில் கங்காவுக்கு பெருத்த சந்தோசம்..
"என் கண்ணே..!" என்று மீராவை உச்சி முகர்ந்து வழியனுப்பி வைத்தாள்..
வாகீசன் வீட்டுப் போர்டிகோவில் கார் நின்றதும் பாகீரதி ஆரத்தி தட்டுடன் வந்தாள்.. யதுநந்தனின் அருகே நின்ற மீராவின் மனதில் பழைய நினைவுகள் எழும்பின.. முண்டா பனியனும்.. மடித்துக் கட்டிய கைலியும்... தலையில் முண்டாசுமாக.. தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் பம்பைக் காட்டிக் கொண்டிருந்த வாகீசனைப் பார்த்துச் கேலிச் சிரிப்புடன்..
"வீட்டுக்காரங்க இல்லையா அங்கிள்..?" என்று கேட்டாள்..
முண்டாசைக் கழட்டித் துண்டை உதறித் தோளில் போட்டபடி அருகில் வந்த வாகீசன் அந்தக் கேலியில் கலந்து கொண்டார்..
"இங்கே வேலைக்காரங்கன்னு யாருமில்லம்மா... வீட்டுக்காரங்கதான் அப்பப்ப வேலைக்காரங்களா அவதாரம் எடுப்போம்.. அதனால வேலைக்காரங்களும் நாங்கதான்.. வீட்டுக்காரங்களும் நாங்கதான்.."
பாகீரதி கணவரின் நகைச்சுவையை பெருமையுடன் ரசித்தபடி அண்ணன் மகனுக்கும்.. அவன் மனைவிக்கும் ஆரத்தி எடுத்த பாகீரதியின் கண்கள் பனித்தன..
"மழை வரும் போல இருக்கில்ல..?" யதுநந்தன் சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்..
"பாகி.. இன்னைக்குப் பேப்பர் எங்கேடி..?" வாகீசன் வீட்டுக்குள் ஓட முனைந்தார்..
"அடடா.. இவரோட முடியாது.. ஏங்க.. அதைத்தான் ஒரு தடவைக்கு பத்துத்தடவை நீங்க படிச்சு மனப்பாடம் பண்ணிக்கிட்டாச்சுல்ல.. அதுக்கப்புறமும் எதுக்காக அலறி வைக்கறீங்க..?" பாகீரதி கணவரைக் கடிந்துகொண்டாள்..
"அதுசரி அத்தை.. மழை வரும் போல இருக்குன்னா எதுக்காக மாமா பேப்பரைப் பத்திரப்படுத்தத் துடிக்கிறாரு..?" விவரம் கேட்டான் யதுநந்தன்..
அதற்குள் மகேஷ், சுரேஷீடன் ஐக்கியமாகியிருந்த மீரா.. தோட்டத்து ஊஞ்சல் பக்கம் சென்றிருந்தாள்.. அவளை மகேஷீம், சுரேஷீம்.. ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்ட ஆரம்பித்திருந்தனர்..
"அங்கே பார்.. உன் பெண்டாட்டிய.. இவளைப் பாத்தா கல்யாணமான பொண்ணுன்னு யாராச்சும் சொல்வாங்களா..? நம்ம வீட்டு ரௌடிப்படையோட கூட்டணி போட்டுக்கிட்டு இருக்குதே.." பாகீரதி சிரித்தாள்.
"தானைத்தலைவியே நம்ம மேடம்தானே..." யதுநந்தன் சிரித்தான்..
"மழை வந்துட்டா இதுக அடிக்கிற லூட்டியில உன் மாமாவோட பேப்பர் காகிதக் கப்பல்களா மாறி மழைத் தண்ணியில டிராவல் பண்ண ஆரம்பிச்சுரும்.. அந்தப் பயத்திலதான் அவர் அலறி வைக்கிறாரு.." விளக்கம் சொன்னாள் பாகீரதி..
"இவ இதையும் செய்வாளா..? தளவாடம் சப்ளை பண்றதில இவ எக்ஸ்பர்ட் ஆச்சே.." என்றான் யதுநந்தன்..
மீரா பழைய நாள்களுக்குத் திரும்பியவளாய் மகேஷ்.. சுரேஷீடன் ஓடி விளையாடினாள்.. ஊடும்.. பாடும்.. எதிர் வீட்டை நோக்கி அவள் பார்வை போகும்.. கண்களில் ஏக்கம் சூளும்.. அதைக் கணப்பொழுதில் மறைத்துக் கொண்டு மகேஷீடன் கபடி விளையாட ஆரம்பித்து விடுவாள்..
"பிறந்த வீட்டை நினைச்சு ஏங்கறாடா..?" பாகீரதி புரிந்து கொள்ளலுடன் சொன்னாள்..
"ஒன் வீக் ஆகட்டும் அத்தை.. அதுக்கப்புறமா மறுவீட்டு விருந்துக்குன்னு தடாலடியா மாமனார் வீட்டில கிரஹப்பிரவேசம் செய்துடறேன்.." யதுநந்தன் தோள் தட்டினான்..
"அந்த வீட்டில இருந்து ஒரு சுண்டெலிகூட வந்து கூப்பிடலையேடா யது..?"
"பெருச்சாளி இருக்கிற வீட்டில சுண்டலி எப்படி வரும் அத்தை..?"
"இந்த ஜானகியாகட்டும்.. பெத்த பொண்ணு எதிர் வீட்டுக்கு வந்திருக்காளே.. கிராமத்தில போயி கூப்பிடாட்டியும் பரவாயில்லை. இங்கனக்குள்ள ஒரு எட்டு வந்து கூப்பிட்டுப் போகலாம்ன்னு நினைக்காம இருக்காளே.." பாகீரதி பெருமூச்சு விட்டாள்..
"மாமனார் கிழிச்ச கோட்டைத் தாண்ட முடியாம இருப்பாங்க.."
"அப்படித்தான் இருக்கும்.. ஆனாலும் அந்தக் கலெக்டருக்கு இம்புட்டு அழுத்தம் ஆகாது யது.."
"அதை யாரு அவர்கிட்டச் சொல்கிறது..?"
"என்னவோ ஊருக்குள்ளேயே இவர் ஒருத்தர்தான் கலெக்டரப் போல பில்ட்-அப் கொடுத்துக்கிட்டு இருக்காரு.. மத்தவங்க நினைச்சா கலெக்டரா ஆக முடியாதா..?"
பாகீரதி புலம்பியபடி வாகீசனைப் பார்க்க.. அவருக்கு 'கெதுக்' என்று இருந்தது..
"எனக்கு வயசு பத்தாதுடி.." முந்திக்கொண்டு சொன்னார்..
"உங்களை யாருங்க சொன்னது..?" பாகீரதி தலையில் அடித்துக் கொண்டாள்..
அவள் வாயை மூடுவதற்குள்..
"அக்கா.." என்று ஓடிவந்தன் மகேஷ்..
"நான்தான் சொல்லுவேன்.. நான்தான் சொல்லுவேன்.." என்று தொடுத்து வந்தான் சுரேஷ்..
"விழுந்துராம வந்து சேருங்கடா.." மீரா அதட்டினாள்..
"இதுக என்னத்துக்காக மூச்சு வாங்க ஓடி வருதுக.." பாகீரதி கை வேலையை விட்டுவிட்டு ஹாலுக்கு வந்தாள்.
"உன் பிள்ளைகள் ஓடி வாரதுக்கு காரணம் வேணுமா..? அந்த மட்டிலும் மத்தவங்களை ஓட வைக்காம.. இவனுக ஓடி வரானுகளே.. அதுக்குப் பாராட்டியாகனும்.." என்றார் வாகீசன்..
"என்னடா ஆச்சு..? இந்தியா வெர்ல்டு கப்புல வின் பண்ணிட்டாங்களா..?" யதுநந்தன் விசாரித்தான்..
"குட்நீயூஸ் அத்தான்.." மகேஷ் ஆர்ப்பரித்தான்..
"வெரி.. வெரி.. குட் நீயூஸ்.." சுரேஷ் பின்பாட்டுப் பாடினான்..
"ஐ கான்ட் பிலிவ் திஸ்.." இது மகேஷ்..
"நானும்தான்.. நானும்தான்.." இது சுரேஷ்..
"ஸ்டடி மிராக்கிள்.."
"ஷ்யூர்.. ஷ்யூர்.. இது ஸ்டடி மிராக்கிளேதான்.."
இரண்டு சிறுவர்களும் மாறிமாறி சஸ்பென்ஸ் வைத்ததில் நியூஸ் சேனலையே தியாகம் பண்ணி விட்டார் வாகீசன்..
'நடந்தது என்ன..?'
அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் 'ஆ'வென்று புத்திரர்களின் வாயைப் பார்த்தார்.. அதைப் பார்த்த பாகீரதிக்கு சிரிப்பு வந்து விட்டது..
"உன் மாமாவைப் பாரேன்.." யதுநந்தனின் காதில் கிசுகிசுத்தாள்..
அவன் பார்த்து விட்டு படு நாசுக்காக சிரிப்பை விரட்டியடித்தான்..
"இப்ப என்னன்னு சொல்லப் போறிங்களா இல்லையாடா..?"
மீரா குச்சியை கையில் எடுத்த பின்புதான் அவர்கள் ஒருவழியாக சொல்ல வந்ததைச் சொன்னார்கள்..
"நீங்ககூட ஐ.ஏ.எஸ் எக்ஸாமை பாஸ் பண்ணிட்டிங்க.. அக்hக.. கங்கிராஜிலேசன்ஸ்" மகேஷ் கை கொடுத்தான்..
"அதுவும் ரேங்க் எடுத்துப் பாஸ் பண்ணியிருகீங்க.." சுரேஷ் குதித்தான்..
மீராவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது..
"நிஜமாவாடா..?"
கன்னத்தில் கை வைத்து நம்பமுடியாமல் மீரா உதடுகுவித்து விழி விரிக்க.. வாகீசன்..
"பாகீ.." என்றபடி மயக்கம் போட்டு வைத்தார்...
"இவ மயக்கம் போடுவான்னு பார்த்தா.. இவரு மயக்கம் போட்டு வைக்கிறாரு.."
பாகீரதி கணவர் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்..
விழித்து எழுந்த வாகீசன் மீராவை வேற்று கிரக வாசியைப் போல பார்த்தபடி..
"ஏம்மா.. நீயா ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணியிருக்க..?" என்று உறுதி செய்வதைப் போல கேட்டு வைத்தார்..
"அப்படித்தான் உங்க பசங்க சொல்கிறாங்க அங்கிள்.."
"அது எப்படிம்மா.. ரெட்டைவாலாக்கூட இல்லாம இரண்டாயிரம் வாலா அலையறீங்க.. பரிட்சைன்னு வந்தா பிய்ச்சு உதறிட்டு வந்து நிக்கறிங்க.. இப்படித்தான் மகேஷ்.. டென்த்தில ஸ்டேட் லெவலில ஐந்தாவது ரேன்க் வந்திருக்கான்.. நீ என்னடான்னா ஐ.ஏ.எஸ் பரிட்சையை ரேன்க் எடுத்துப் பாஸ் பண்ணியிருக்க.. என்னதான் நடக்குது..? பாகீ.. எனக்கு மயக்கம்.. மயக்கமா வருதுடி.."
"திரும்பத் தண்ணி தெளிக்கிற வேலையை வைக்காம நியூஸ் சேனலைப் பாருங்க.. உங்களுக்கு எதுக்கு இந்த வெட்டி ஆராய்ச்சி..? நீங்க என்ன ரேங்க் ஹோல்டரா..?"
"இல்லைடி.."
"இல்லைல்ல..? அப்படின்னா திருவாயைத் திறக்கவே கூடாது.."
பாகீரதி இனிப்பு செய்ய சமையலறைக்குள் விரைந்தாள்.. நெய் மணம் ஹாலை நிரப்பியது.. நியூஸ் சேனலில் ஆழ்ந்திருந்த வாகீசனின் நாசியை வருடி அது இழுத்ததில் அவர் செய்தியை மறந்து வாசனையின் பின்னால் செல்ல ஆயத்தமானார்..
ஹால் வாசலில் நிழலாடியதில் நிமிர்ந்து பார்த்தவர்..
"வாங்க சார்.." என்று அவசரமாக எழுந்து கை கூப்பி வரவேற்றார்..
"பாகீ.. இங்கே யார் வந்திருக்காங்க பாரு.."
அவர் சமையலறைப் பக்கம் திரும்பி கூவியதில்.. கை வேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு அங்கே வந்த பாகீரதி..
"வாங்க.. வா ஜானு.." என்றாள்..
சடகோபனும் ஜானகியும் உள்ளே வந்தார்கள்.. ஜானகியின் விழிகள் மகளைத் தேடின.. அதை உணர்ந்த பாகீரதி...
"யது.. மீரா.. கீழே வாங்க.." என்று மாடியைப் பார்த்து குரல் கொடுத்தாள்..
யதுநந்தன் முன்னால் வர.. அவன் பின்னால் வந்த மீரா..
"அப்பா.." என்று கண்கலங்கி அவர் பாதம் தொட்டு வணங்கினாள்..
"என் பேரைக் காப்பாத்திட்டம்மா.. ஐ.ஏ.எஸ் ரிசல்ட் வந்தவுடனே நம்ம சொந்த பந்தம், பிரண்ட்ஸ், தெரிஞ்சவங்கன்னு அத்தனைபேரும் போன் மேல போனாப் போட்டு பாராட்டறாங்க.. எனக்குத் தலைகால் புரியலை.. நான் கேட்டுக்கிட்டதைச் செய்து முடிச்சிட்ட.. என் பெண்ணுங்கிறதை புரூவ் பண்ணிட்ட.."
மகளின் உச்சியில் கை வைத்து ஆசிர்வதித்த சடகோபனின் குரல் நெகிழ்ந்தது.. யதுநந்தனின் காதலுக்கு கட்டுப்பட்டு அவன் இல்லத்துக்கு வருகை தந்த அந்த மகாலட்சுமி.. அவளைப் பெற்ற தகப்பனின் மனக்கிடங்கை யையும் நிறைவேற்றி விட்டாள்..
"மீரா.."
"அம்மா.."
சேய் பறவை, தாய்பறவையின் சிறகுக்கடியில் இளைப்பாறியது..
"மறுவீட்டு விருந்துக்கு வாங்க மாப்பிள்ளை.." மனமார அழைத்தார் சடகோபன்..
அந்த அழைப்பில் யதுநந்தனின் வெற்றிச் செய்தி இருந்தது.. கணவனுடன் மறுவீட்டு விருந்துக்குச் சென்ற மீரவை அவளின் பிறந்தவீடு தடபுடலாக வரவேற்றது..
யதுநந்தன் தன் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் தலைமை அலுவலகத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டான்.. மீரா ஐ.ஏ.எஸ் டிரெயினிங் முடிந்து வந்து கலெக்டராக பதவி ஏற்றாள்.. காடாறு மாதம்.. நாடாறு மாதம் என்பது போல யதுநந்தன் வெளிநாட்டிற்கும் தாய்நாட்டிற்குமாக பறந்து பறந்து பிஸினெஸைக் கவனித்தான்.. அவனை கரம் பிடித்த சந்தோசத்துடன் மீரா.. சந்தோசமாக வாழ ஆரம்பித்தாள்..
நினைவுகள்.. உறுதியுடன் இருந்தால் நிச்சயம் அங்கு மகாலட்சுமி வருவாள்..

- முற்றும் -




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -28
வந்தாள் மகாலட்சுமியே.. -28
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy