வந்தாள் மகாலட்சுமியே. -26

26 வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மிகப்பெரிய திருமண மண்டபத்தின் வளாகத்தில் வரிசை கட்டி நின்றிருந்த கார்களின் எண்ணிக்கை கோடி...

26

வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மிகப்பெரிய திருமண மண்டபத்தின் வளாகத்தில் வரிசை கட்டி நின்றிருந்த கார்களின் எண்ணிக்கை கோடிஸ்வரர் சடகோபனின் உயரத்தையும், செல்வாக்கையும் பறை சாற்றியது..
விடிந்தால் அவர் மகள் மீராவுக்குத் திருமணம் என்ற நிலையில் அவர் வந்தவர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டிருந்தார்.. திருமண மண்டபத்தின் முகப்பில் 'மீரா வெட்ஸ் பிரகாஷ்..' என்ற வாசகத்தைத் தாங்கிய அலங்காரத் தட்டி மின்னியது.. மணமகளுக்கான அறையிலிருந்த மீரா வெறுமையான பார்வையுடன் கட்டிலில் முழங்கால்களைக் கட்டியவாறு அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.. அவள் கொடுத்த வாக்கை வைத்தே அவளை மடக்கி விட்ட தந்தையின் சாதுர்யத்தில் அவள் மனம் குமுறிக் கொண்டிருந்தது..
அன்று.. 'ஏக்கம் என்ன பைங்கிளி..?
என்னை வந்து சேரடி..'
என்று அவளிடம் பாடி விட்டுப் பிரிந்து போன யதுநந்தனை அவளால் மீண்டும் சந்திக்கவே முடியவில்லை..
"யு.எஸ் போயிட்டான் மீரா.. அவனோட கம்பெனியில முக்கியமான புராஜெக்டை இவன்கிட்ட ஒப்படைச்சிருக்காங்களாம்.." பாகீரதி சொன்னாள்..
"யு.எஸ் போனாலும் தொழிலாளி.. தொழிலாளிதான்.. முதலாளி.. முதலாளிதான்.." சடகோபன் மீராவின் காதுபட ஜானகியிடம் சொன்னார்..
"பாட்டுப் பாடிட்டா மட்டும் போதாது.. ஒரே பாட்டில நடந்து போகிறவன், சைக்கிளுக்கு மாறி.. சைக்கிளில் போகிறவன், ஸ்கூட்டருக்கு மாறி.. ஸ்கூட்டரில் போகிறவன் காருக்கு மாறுகிறதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்.." அவளை சந்திக்க வந்த பிரகாஷ் இடக்காக சொன்னான்..
அது என்னவோ.. மீராவுக்கும், யதுநந்தனுக்குமான காதலைப்பற்றிக் கேள்விப் பட்ட பின்னால்தான்.. மீராவைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற அவனுடைய பிடிவாதம் வலுத்தது..
"ஒரு சாதாரண சிவில் என்ஜினியர் என்னைத் தோற்கடிக்கிறதா..? நான் மேரேஜ் பண்ணிக்கனும்னு நினைக்கிற பெண்ணை அவன் மேரேஜ் பண்ணிக்க விடுகிறதா..? நெவர்.."
சடகோபனுக்கு வேலையே வைக்காமல் அவன் தன்னுடைய தீரவிரமான ஈடுபாட்டை அவரிடம் தெரியப் படுத்தி விட்டான்..
"அந்த யதுநந்தன் தலையாலே தண்ணீர் குடித்தாலும்.. உங்களை மிஞ்சி வளர்ந்து விட முடியாது அங்கிள்.. அதற்கு இந்த ஆயுளே அவனுக்குப் போதாது என்கிறபோது.. இருபத்தி இரண்டு மாதங்கள் என்பதெல்லாம் ஒரு கணக்கா ஆங்கிள்..? அவன்தான் கனாக் காண்கிறான்னா.. நீங்களும் அதை நினைச்சுக் கவலைப் பட்டுக்கிட்டு இருக்கீங்க.. டோன்ட் வொர்ரி அங்கிள்.. நீங்க இப்பவே மேரேஜ் ஹாலை புக் பண்ணிருங்க.."
அவரை விட வேகம் காட்டிய பிரகாஷின் அதீத நம்பிக்கையில் சடகோபனுக்கு ஆயிரம் யானை பலம் வந்தது.. அவர் அப்போதே மீராவின் திருமணத்திற்கான திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துவிட்டார்.. அந்தத் திருமணம்.. யதுநந்தன் அவருடைய சவாலை ஏற்றுக் கொண்ட தினத்திலிருந்து மிகச் சரியாக 24 மாதங்கள் முடிகின்ற தினமாக அமைந்தது..
"ஒரு நாளில என்ன ஆகப் போகுது..?" மனம் தாங்காமல் ஜானகி கேட்டாள்..
"ஒன்னும் ஆகாதுன்னு எனக்குத் தெரியும்.. ஆனா.. இந்த சடகோபன்கிட்டேயே சேலன்ஜ் விட்டானில்ல.. நான் யார்ன்னு அவனுக்குக் காட்ட வேண்டாமா..? அதனால தான்.. 24 மாதங்கள் முடிந்த அடுத்த நிமிசத்தில என் மகள் கழுத்தில தாலி ஏறுகிறதைப் போல முகூர்த்த நேரத்தைக் குறிச்சேன்.."
சடகோபனின் குரூரத்தில் மீராவின் மனம் சல்லடையானது.. பாகீரதியிடம் அவள் தஞ்சம் புகுந்தாள்.. அவளோ மீராவை விட மறுகிக் கொண்டிருந்தாள்..
"எங்கேயிருக்கான்னே தெரியலை மீரா.. ஒரு போனில்லை.. அவன் வேலை செய்கிற கம்பெனியில் கேட்டா.. கான்பிடென்ஸ்ன்னு சொல்கிறாங்களாம்.. இவர் சொல்றார்.. நான் என்ன பண்ணுவேன்..? என் அண்ணன் மகன் எங்கேயிருக்கானோ..? என்ன செய்கிறானோ.." அவள் அழுகையில் கரைந்தாள்..
தங்களுடன் விளையாட வராத மீராவின் சோகத்தை மகேஷீம், சுரேஷீம் புரிந்து கொண்டதுதுhன் ஆச்சரியம்.. அதைவிட ஆச்சரியம் அவர்கள் மீராவுக்கு ஆறுதல் சொன்னது..
"அத்தானைப் பத்தி உங்களுக்குத் தெரியாது அக்கா.. அவர் ஹி மேன்..."
'ஏன் தெரியாது..? அவன்தான் புரவி வீரனாச்சே..'
மகேஷின் வார்த்தைகளில் மீராவின் முகத்தில் புன்னகை வந்தது..
"அவர்  சொன்னாச் சொன்னதுதான்.. பார்த்துக்கிட்டே இருங்க.. அவர் காத்திலே பறந்து வந்து உங்களை அலேக்கா தூக்கிக்கிட்டுப் போகத்தான் போகிறாரு.. உங்கப்பா.. தோற்றுப் போய்.. 'nநு..'ன்னு முழிக்கத்தான் போகிறாரு.."
சடகோபன் எப்படி 'nநு' என்று விழிப்பார் என்பதை சுரேஷ் விழித்துக் காட்டினான்.. அதை மகேஷ் வெகுவாக பாராட்டினான்.. அவர்களுடைய அத்தானை நாடு கடத்தி விட்ட சடகோபனின் மீது அந்தச் சிறுவர்களுக்கு ஆழ்ந்த கோபம் இருப்பது மீராவுக்குப் புரிந்தது..
அவர்கள் வெறுக்கும் சடகோபன் அவளுடைய தந்தை என்பதில் அவளுக்கு மனம் வலித்தது.. மீரா மீளாத்துயர் கொண்டாள்..
மகnஷ் பத்தாம் வகுப்பிற்கு தாவினான்.. சுரேஷ் ஆறாம் வகுப்பிற்கு வந்தான்.. மீராவிடம் கதை பேச மகேஷிற்கு நேரமில்லாமல் போனது.. சுரேஷிற்கு நேரம் இருந்தது.. அவன் மகேஷ் அவர்களுடன் சேர்ந்து அரட்டையடிக்காத குறையை ஈடுகட்டிக் கொண்டிருந்தான்..
மீரா பட்டப் படிப்பை முடித்து விட்டு.. எம்.எஸ்.ஸி படிக்க ஆரம்பித்தாள்.. ஐ.ஏ.எஸ் தேர்விற்கான கோச்சிங் கிளாஸை விடாமல் தொடர்ந்து பயின்றாள்..
"என் மேலிருக்கிற கோபத்தை எக்ஸாம் மேலே காட்ட வேணாம்ன்னு உன் பெண்ணிடம் சொல்லு.." என்று ஜானகியிடம் சொன்னார் சடகோபன்..
யது நந்தன்னைப் பிரிந்த நாளிலிருந்து அவருடன் மீரா பேசுவதில்லை.. அவர் எவ்வளவோ முயன்றும் மௌனம்தான் அவருக்குப் பதிலாக கிடைத்தது.. மீரா இறுகிப் போனாள்..
"இவ நல்லதுக்குத்தானேடி நான் போராடறேன்.. இவ ஏன் அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா..?" மனைவியிடம் அவர் முறையிட்ட போது..
"அவ நல்லது, கெட்டதை முடிவு பண்ண நீங்க யார்..?" என்று அவள் கேட்டு வைத்தாள்..
"என்னடி ஜானகி.. நீயும் அவகூட சேர்ந்து பின் பாட்டுப் பாடற..? நான் அவளைப் பெற்ற தகப்பண்டி.. அவ வாழ்க்கையிலே எனக்கு அக்கறை இருக்காதா..?"
"இருக்கிறதைப் போல எனக்குத்தெரியலை.."
"முட்டாள் போலப் பேசாதே.."
"நான் முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்.. நீங்க கோடிஸ்வரக் கலெக்டராவே இருங்க.. பெத்த மக முகத்திலே சிரிப்பில்ல.. அவ சந்தோசத்தைத் தொலைச் சிட்டு நிற்கிறா.. இது புரியாம நீங்க உங்க அந்தஸ்தையே கட்டிக்கிட்டுத் தொங்கறிங்க.. அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன் உங்களை விடக் கோடிஸ்வரனா இருந்தா மட்டும் போதாதுங்க... அவ மனசுக்குப் பிடிச்சவனாவும் இருக்கனும்.."
"இந்த இடியாடிக் சென்டிமெண்டைக் கட்டிக் கடலில் போடு ஜானகி.. நமக்கு அது உதவாது.. ஸ்டேட்டஸ் மெயிண்டெயின் பண்ணக் கத்துக்க.. நம்ம லெவலை விட்டுக் கீழே இறங்க ஒருநாளும் நான் ஒப்புக்க மாட்டேன்.. மைண்ட் இட்.."
சடகோபன் கர்ஜித்தார்.. விளைவு..? ஜானகியும் அவருடன் அளவாகப் பேச ஆரம்பித்தாள்.. பேச்சே அளவு கோலில் வரும்போது.. அவளுடைய சிரிப்புக்கு அவர் எங்கே போவார்..?
'என்னடா இது..? இவளும் ரேசன் பேச்சை ஆரம்பிச்சுட்டா..'
இதனால் எல்லாம் மனம் தளர்ந்தால் அவர் எப்படி சடகோபன் ஆவார்..? எனவே.. அவர் சற்றும் மனம் தளராத சடகோபனாய்.. தன் வேலைகளை செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தார்..
மகேஷ் பத்தாம் வகுப்பில் மாநிலத்திலே ஐந்தாவது மாணவனாக தேர்ச்சி பெற்றிருந்தான்.. அதில் வாகீசன் மயக்கம் போட்டு விழுந்தார்..
"நிஜமாவே இது இவன் நம்பர்தானா பாகீ..?" மனைவியிடம் அவர் சந்தேகம் கேட்க அவள் நெற்றிக் கண்ணைத் திறந்தாள்..
"எனக்கு நல்லா வந்திரும் வாயிலே.. கடுப்பைக் கிளப்பாம தள்ளிப் போங்க.. என் மகனுக்குச் சுத்திப் போடனும்.."
"அதுக்கில்லடி பாகி.. இவனே ரெட்டை வால்.."
"பத்து வாலா இருந்தாலும்.. படிப்புன்னு வந்தா விட்டுக் கொடுத்திருவானா..? சுட்டித்தனம் பண்றவன் கிட்டத்தான் மூளை சுறுசுறுப்பா இருக்கும்.."
"அப்படியா சொல்கிற..?"
வாகீசன் கேட்டு வாய் மூடு முன்னால் அவர் வீட்டின் கண்ணாடி ஜன்னல் கதவு உடைந்து சிதறியது.. பதறிப் போய் வெளியில் ஓடினார்..
"ஸாரிப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸிங்.." கிரிக்கெட் பேடுடன் நின்றிருந்தான் அவர் பெற்ற இளைய புதல்வன் சுரேஷ்...
தலையில் கை வைத்தாலும் அவர் அவனைத் திட்ட வாய் திறக்கவில்லை..
'யார் கண்டது..? நாளைக்கு இவன் ஸ்டேட் பர்ஸ்ட்டா வந்தாலும் வரலாம்..?'
வருமுன் காப்பது சாலச்சிறந்தது என்று அவர் வாய் மூடிக் கொண்டார்..
மகேஷ் ப்ளஸ் ஒன் படிக்க ஆரம்பித்தான்.. சுரேஷ் ஏழாம் வகுப்பிற்கு ஏணி வைத்து ஏறினான்.. மீரா எம்.எஸ்.ஸி இறுதியாண்டைப் படித்தபடி ஐ.ஏ.எஸ் தேர்வையும் எழுதினாள்..
மாதங்கள் கடக்கக் கடக்க.. அவள் இதயம் தடதடக்க ஆரம்பித்தது.. யது நந்தன் சபதமிட்ட இருபத்தி நான்காம் மாதம் வந்து விட்டது.. சடகோபன் திருமணப் பத்திரிக்கையை ஊர் முழுவதும் விநியோகிக்க ஆரம்பித்தார்.. வாகீசன் கோபத்துடன் முழுக்கை சட்டையை மடித்து ஏற்றி விட்டுக் கொண்டு எதிர் வீட்டுப் படியேறி சண்டைக்குப் போனார்.. அதில் மகிழ்ந்து போன பாகீரதி அவருக்கு வீரதிலகமிட்டு அனுப்பி வைத்தாள்..
"பாருங்க வாகீசன்.. இந்த சடகோபன் வார்த்தை மாறுகிறவனில்லை.. இந்த சேலன்ஜைப் பத்தின எல்லா விவரத்தையும் பிரகாஷிடம் சொல்லிட்டுத்தான் கல்யாண வேலைகளிலே இறங்கியிருக்கேன்.. யதுநந்தன் கேட்டுக் கிட்ட 24 மாதங்கள் முடிகிற வரைக்கும் பிரகாஷ் மீராவின் கழுத்திலே தாலி கட்ட மாட்டார்.. பட்.. அது முடிஞ்ச மறு நிமிசம் என் மகள் கழுத்திலே தாலி ஏறியாகனும்.. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு.. வரட்டும்.. யதுநந்தன் வரட்டும்.. கடைசி செகண்டில் உங்க மருமகன் வந்து நின்னாலும் நான் அதே கல்யாண மண்டபத்திலே என் மகள் மீராவை உங்க மருமகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறேன்.. பட்.. அவர் வரலைன்னா..?"
இந்தப் பேச்சுக்கு எதிர் பேச்சுப் பேச வாகீசனால் முடியவில்லை..
'இந்த யது நந்தன் எங்கே போனான்..?'
இந்தக் கேள்விதான் அவர்கள் அனைவரின் மனதிலும் ஆடியது.. விடைதான் கிடைக்கவில்லை.. மீரா சோர்ந்து போனாள்..
கிராமத்திலிருந்த பாகீரதியின் பெற்றோர் வாகீசனின் வீட்டில் வந்து இறங்கினார்கள்.. எப்போதுமே பாகீரதிதான் கிராமத்துக்கு போய் வருவாள்.. அப்படியில்லாமல் அவர்கள் சென்னைக்கு வந்ததில் வாகீசனுக்கு ஆச்சரியம் வந்தது..
"எங்க பேரன் சொன்ன 24 மாதக் கெடு முடியப் போகுது.. கடைசி செகண்டில அவன் வந்துட்டா.. அவன் கல்யாணம் உடனே நடந்துரும்.. அதைப் பார்க்க வந்திருக்கோம்.." பாகீரதியின் அப்பா சதாசிவம் நிதானமான குரலில் அழுத்தம் திருத்தமாக சொன்னார்..
"எங்க பேரன் கல்யாணத்தை நாங்களும் பார்க்கனுமில்ல..?" பாகீரதியின் அம்மா கங்கா கேள்வி கேட்டாள்..
யதுநந்தனின் மீதான அந்த முதியவர்களின் நம்பிக்கை மீராவின் பட்டுப் போன நம்பிக்கையின் வேரில் நீராக பாய்ந்து உரம் கொடுத்தது.. அவளுக்குள் லேசாக ஜீவன் வந்தது..
"கேட்டில்ல.. இந்த வயசானவங்களுக்கு அவங்க பேரன் மேலே இருக்கிற நம்பிக்கை.. உன் காதலின் மேல உனக்கு இருக்க வேணாமா..?" பாகீரதி அந்த நம்பிக்கைக்கு வலிமை கொடுத்தாள்..
"நீ எங்க வீட்டு மகாலட்சுமிம்மா.. என் பேரன் உன் கழுத்தில் தாலிகட்டி எங்க வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வரத்தான் போகிறான்.. நான் ஆலத்தி எடுத்து உன்னை என் வீட்டுக்குள் அழைச்சுக்கத்தான் போகிறேன்.." மீராவின் கன்னம் வழித்த கங்கா நிச்சயத்துடன் சொன்னாள்..
திருமண மண்டபத்துக்கு கிளம்பும் போது.. மீரா பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தாள்.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..
"என் யதுவை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடு.."
வாய்விட்டுச் சொன்ன அவள் வேண்டுதலில் சடகோபனின் முகம் கருத்தது.. அசைக்க முடியாத மீராவின் நம்பிக்கையில் வெறுத்துப் போனவராக அவர் வெளியே போய் விட்டார்..
திருமண மண்டபத்திற்கு வாகீசன் குடும்பம் வந்திருந்தது..
"இவர்களை யார் அழைச்சது..?" சடகோபன் சீறிய போது..
"நான் அழைத்தேன்.." என்றாள் ஜானகி..
"பெண்ணைப் பெத்தவளுக்கு என் மக கல்யாணத்துக்கு என்தோழியைக் கூப்பிடக்கூட உரிமையில்லையா என்ன..?"
அவள் உரிமைக்குரல் எழுப்பியதில் எதற்கு வம்பு என்று சடகோபன் நகர்ந்து விட்டார்..
விடியும் வரை தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள் மீரா.. விடிவதற்குள் அவளைக் குளிக்க வைத்து அலங்காரம் செய்து விட்டபோது பதுமை போல அமர்ந்திருந்தாள்.. மணமேடைக்கு அழைக்க வந்த போது..
"ஒன் செகண்ட்.." என்று பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டாள்..
அங்கே இருந்த ஷெல்பில் மறைவாக வைக்கப் பட்டிருந்த விச பாட்டிலை எடுத்து இடுப்புச் சேலை மறைவுக்குள் செறுகிக் கொண்டாள்.. கடைசி வரைக்கும் யதுநந்தனைப் பார்க்காமலே அவள் போய் விடுவாளோ என்ற நினைவில் கண் கலங்கினாள்..
'எது எப்படி இருந்தாலும் அந்த பிரகாஷின் தாலி மட்டும் என் கழுத்தில் ஏறி விடக் கூடாது..'
வைராக்கியத்துடன் மண மேடைக்குப் போனாள்.. பிரகாஷின் பக்கத்தில் உட்கார்ந்த போது அவன் சொந்தத்துடன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.. அவளோ 'யாரடா நீ..' என்ற அறிமுகமற்ற பார்வையைப் பார்த்தாள்..
'என்ன திமிர்..!' பிரகாஷ் பல்லைக் கடித்தான்..
அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்களை விட்டு விட்டு மீராவின் பின்னால் அவன் மனம் சென்றதற்கு இந்தத் திமிர்தானே காரணம் என்று அவனது மனச்சாட்சி அவனைக் கேட்டது..
முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.. பிரகாஷ் தாலியைக் கையில் எடுத்தான்.. மீரா விச பாட்டிலை கையில் எடுத்தாள்..
"வெயிட் மிஸ்டர் பிரகாஷ்.. ஷி இஸ் மை வுமன்.." என்ற கம்பீரமான குரல் ஒலித்தது..
'வந்துட்டான்..' மீராவின் கையில் இருந்த விசப் பாட்டில் நழுவியது..
அதை எடுத்துப் பார்த்த ஜானகி பதறினாள்.. சடகோபனிடம் அதை நீட்டினாள்.. அவர் இதயம் அதிர்ந்தது..
"ஜெயிக்கப் போகிறோம்ன்னு நினைச்சீங்கள்ல.. யதுநந்தன் வராமல் இருந்திருந்தாலும் நீங்க ஜெயிச்சிருக்க மாட்டிங்க.. உங்க மக உங்களை ஜெயிக்க விட்டிருக்க மாட்டா.. இந்த உலகத்தை விட்டேப் போயிருப்பா.. அவ போன பின்னாலே நான் மட்டும் உயிரோட இருப்பேன்னு நினைச்சீங்களா..?"
"ஜானகி.."
"பெண்டாட்டியும்.. பெண்ணும் செத்தாக் கூடப் பரவாயில்லை.. உங்க ஸ்டேட்டஸ் பெரிசுன்னு நீங்க நினைச்சிருப்பீங்க.. இன்னொரு கல்யாணம் பண்ணினா உங்களுக்கு பெண்டாட்டி கிடைச்சிருவா.. அவ மூலமா பிள்ளையும் கிடைச்சிரும்.. நீங்க உங்க ஸ்டேட்டஸை காப்பாத்தியிருப்பீங்க.. எனக்குத் தெரியுங்க.. இதைத்தான் நீங்க செய்திருப்பீங்க.."
மனைவியின் குமுறலில் சுக்கு நூறாக நொறுங்கிப் போனார் சடகோபன்.. அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஆட்டிப் பார்த்தது அந்தக் கேள்வி..
மீரா எழுந்திருக்கப் போனாள்..
"வெயிட்.." என்றான் பிரகாஷ்..
"இன்னும் உன் காதலன் சேலன்ஜில் ஜெயித்துடலை.. அவன் வந்து நின்னாப் போதுமா..?" எகத்தாளமாய் கேட்டான்..
"உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்..?" இகழ்ச்சியாகச் சொன்னாள் மீரா..
"சேலன்ஜில் ஜெயிக்க முடியலைன்னா.. அவர் இங்கே வந்திருக்கவே மாட்டார்.. உன்னைப் போல அடுத்தவன் காதலிக்கு தாலி கட்ட நினைக்கிறவன்னு அவரை நினைச்சியா..?"
மீராவின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் அவனைச் சுட்ட போதும் பிரகாஷால் யதுநந்தன் ஜெயித்திருப்பான் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
'இவனாவது.. பரம்பரை கோடிஸ்வரர் சடகோபனை விட அதிகமாக உயர்ந்திருப்பதாவது.. நெவர்..!' இப்படித்தான் அவன் நினைத்தான்..
"மிஸ்டர் மாமா.. என்ன அப்படிப் பார்க்கறிங்க.. சவாலில் ஜெயித்த பின்னாலும் உங்களை பெயர் சொல்லிக் கூப்பிட்டா அது நல்லா இருக்குமா..? அதான் மாமான்னு கூப்பிட்டேன்.." விளக்கம் சொன்ன யதுநந்தன்.. சடகோபனின் முன்னால் ஒரு பெட்டியைத் திறந்து காட்டினான்..
"செக் பண்ணிக்கங்க.. இது அமெரிக்காவில நான் ஆரம்பிச்சிருக்கிற கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியோட பத்திரம்.. இது நான் கட்டி விற்ற கட்டிடங்களின் டாக்குமெண்ட்ஸ்.. இது என் பெயரில் அங்கேயும்.. சென்னையிலும் நான் வாங்கியிருக்கிற சொத்துக்களின் பத்திரங்கள்.. இது என் பேங்க் பேலன்ஸ்.. இது யு.எஸ்ஸில் இருக்கிற என் வீட்டோட பத்திரமும் போட்டோக்களும்.. தோராயமா கூட்டிக் கழிச்சுப் பார்த்தா.. இந்த செகண்டில நான் உங்களை விட ஒரு கோடியே ஐம்பது லட்சம் அதிகமாக வைச்சிருக்கேன்.. எப்படி..? சவாலில் சமாளித்தேனா.. இல்லையா..? இப்ப உங்க மகளை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதில உங்களுக்கு எந்தவிதமான அப்ஜெக்சனும் இல்லையே..?"
யதுநந்தனின் கேள்வியில் மகேஷீம்.. சுரேஷீம் விசிலடித்து நடனமாடினார்கள்.. அந்த விசிலிலும், நடனத்திலும் வாகீசன் இணைந்து கொண்டதுதான் ஹை-லைட்..
"இப்ப எழுந்திருக்க வேண்டியது உங்கமுறை.." மீரா பிரகாஷீக்கு வாசலைக் காட்டினாள்..
முகம் கருக்க அவன் எழுந்து கொள்ளாமல் அவள் கழுத்தில் தாலியைக் கட்டி விடும் வேகத்துடன் தாலியைத் தேடினான்..
"பாஸ்..! அது இங்கே இருக்கு..."
யதுநந்தன் தாலியைச் சுழற்றியபடி மணமேடையில் ஏறினான்..
"மண்டபத்துக்குள்ளே வந்ததும் முதல் வேலையா இதைத்தானே கைப்பற்றினேன்..? இது என்னோடது பாஸ்.. நீங்க இடத்தைக் காலி பண்றிங்களா..?" யதுநந்தனின் கை அழுத்தமாக பிரகாஷின் தோள் மீது படிந்தது..
அதில் தெரிந்த எச்சரிக்கை சமிக்ஞையில் வேறு வழியில்லாமல் எழுந்து கொண்டான் பிரகாஷ்.. அவனுக்கு ஸ்டைல் காட்டத்தான் தெரியும்.. சண்டை போடவெல்லாம் தெரியாது..
யதுநந்தன் மீராவின் பக்கத்தில் மணமேடையில் உட்கார்ந்தான்.. கெட்டிமேளம் ஒலிக்க நாதஸ்வரம் இசைக்க.. மீராவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.. வாகீசன் குடும்பத்துடன் மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினார்..
அன்றே யதுநந்தன் கிராமத்துக்கு கிளம்பி விட்டான்.. வாகீசன் குடும்பம் கூடப் போனது.. வரிசையாக வந்த கார்களை ஊர் எல்லையிலேயே மேள, தாளத்துடன் அந்த கிராம மக்கள் வரவேற்றார்கள்.. சதாசிவத்தின் வீடு அலங்கார விளக்குகளால் ஒளிர்ந்தது.. அதில் மீராவின் கண்கள் விரிந்தன..
"உங்கப்பா கோடிஸ்வரரா இருக்கலாம்.. எங்கப்பா.. இந்தக் கிராமத்துக்கு பெரிய வீட்டுக்காரர்.." என்றான் யதுநந்தன்..
குலதெய்வம் கோவிலில் பூஜை செய்து வணங்கிய பின் வீடு வந்து சேர்ந்தவர்களை ஆலத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டாள் கங்கா..
"நீ இந்த வீட்டு மகாலட்சுமிம்மா.. வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வா தாயி.."
அன்புடன் கங்கா அழைத்தாள்.. வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டுக்குள் வந்தாள்.. அந்த வீட்டின் மகாலட்சுமியான மீரா..
"வந்தாள் மகாலட்சுமியே..
என் வீட்டில்..
என்றும் அவள் ஆட்சியே.."
யதுநந்தன் உரத்த குரலில் பாடினான்... அங்கிருந்தவர்கள் மகிழ்ந்து போனார்கள்.. முதலிரவின் தனிமையில் அவளை நெருங்கியவனின் கழுத்தை வளைத்துக் காதலுடன் அவனைப் பார்த்த மீரா..
"எப்படி இதை சாதிச்சீங்க.." என்று வியப்புடன் கேட்டாள்..
"முதலிரவில் கேட்கிற கேள்வியாடி இது..?"
யதுநந்தன் உன்மத்தத்துடன் அவளைக் கலைத்துக் கலந்தான்.. புயல்வேக ஆக்ரமிப்பில் மூச்சுத்திணறி அவனில் மூழ்கிப் போனாள் மீரா.. அவனுடைய ஆழ்ந்த முத்தமும்.. அலைந்த கைகளும்.. புரியாத ஒரு உலகுக்கு அவளை அழைத்துச் சென்றன.. புதிர்கள் விடுபட ஆரம்பித்த போது விடிந்திருந்தது.. அவன் சலித்துக் கொண்டான்..
"இவ்வளவு சீக்கிரமா விடியனுமா..?"
அவனின் அடங்காத மோகத்தில் வெட்கிப் போனாள் மீரா.. ஒருவார காலம் அவர்கள் கிராமத்திலேயே இருந்தார்கள்.. மீராவை அழைத்துக் கொண்டு ஆற்றங்கரை.. தென்னந்தோப்பு என்று சுற்றினான் யதுநந்தன்.. ஆளில்லாத இடங்களில் அத்து மீறினான்.. அவளை சூறையாடினான்..
மீராவுக்கு உலகமே இனிப்பானதாக இருந்தது.. அவள் விரும்பிய புரவி வீரன் அவளைக் கவர்ந்து விட்டதில் அவள் எல்லையில்லாத உவகையை அடைந்தாள்..
அப்படியொரு தருணத்தில்.. ஆற்றங்கரையில் அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த யதுநந்தன்.. அவன் ஜெயித்த கதையை விவரித்தான்.. அவன் மார்பில் படிந்திருந்த அவள் கையை இறுக்கியபடி கதை சொன்னான்.. அவன் முடிகோதி அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்..
"சென்னையிலே நான் கட்டின அபார்ட்மெண்ட் என் திறமையை புரூவ் பண்ணிச்சுடி.. யு.எஸ்ஸில இருந்த ஒரு கம்பெனி அவங்களுக்கான கட்டிடங்களைக் கட்டச் சொல்லி என்னை அப்ரோச் பண்ணினாங்க.. நான் வேலை பார்த்த கம்பெனியை விட்டு விலகி தனியாய் கம்பெனி ஆரம்பிச்சேன்.. ஈஸியா லோனும் கிடைச்சது.. என் கம்பெனிக்கு வேலை கொடுத்த கம்பெனி எதிர்பார்த்ததை விட சீக்கிரமாவே நான் கட்டிடங்களை கட்டிக் கொடுத்துட்டதிலே.. என் கம்பெனிக்கு பெயரும், புகழும் கிடைச்சது.. வொர்க் அதிகமானது.. புது புராஜெக்ட்கள் குவிஞ்சன.. நிற்க நேரமில்லாமல் ஓடினேன் மீரா.. ராப்பகலா உழைச்சேன்.. சாப்பாடு, தூக்கத்தை மறந்தேன்.. கிடைச்ச லாபத்தை சொத்துக்களா மாத்திக்கிட்டே இருந்தேன்.."
அவனுடைய உழைப்பை களைத்த அவன் விழிகள் சொல்லியதில் மீரா கண் கலங்கினாள்.. குனிந்து அவன் இதழ்களில் முத்தமிட்டாள்..
"என்னால்தானே இந்த ஓட்டம்..?"
அவன் மார்பில் வருடிக் கொண்டிருந்த அவள் கையை எடுத்துத்தன் இதழ்களில் பதித்து முத்தம் கொடுத்த யதுநந்தன்..
"நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியல மீரா.. உன்னை அடைஞ்சே தீரனும்கிற வெறி மனசில ராப்பகலா கொழுந்து விட்டு எரிஞ்சுக்கிட்டு இருந்தப்ப.. ஓட்டம் தானாய் வந்திருச்சுடி.." என்றான்..
அவன் முகத்தில் கவிழ்ந்த மீராவின் ஆவேச முத்தங்களில் சிலிர்த்துப் போனான் யதுநந்தன்.. அன்றைய இரவில் அவன் மீதான ஆவேசத்தைக் அவள் காட்டியதில் அவன் அயர்ந்து போனான்.. அவளுடைய காதலின் வேகத்தைக் காட்டினாள் மீரா.. அவன் கள்ளுண்ட வண்டானான்.. விடிய.. விடிய அவள் மீது கவிழ்ந்து தாகம் தீர்த்துக் கொண்டான்.. மீரா மறுக்கவில்லை..
"என் மீரா.." அவளை இறுக்கிக் கொண்டவனின் விழிகளில் தெரிந்த திருப்தியில் அவள் மனம் நிறைந்தது.. அவன் மார்பில் சாய்ந்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே. -26
வந்தாள் மகாலட்சுமியே. -26
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy