வந்தாள் மகாலட்சுமியே.. -22

22 மகளின் கண்களில் தெரிந்த காதலை சடகோபன் கண்டு கொண்டார்.. அவர் வீட்டுப் படியை மிதிக்கும் தைரியத்தை யதுநந்தனுக்கு யார் கொடுத்தது என்று அவர...

22

மகளின் கண்களில் தெரிந்த காதலை சடகோபன் கண்டு கொண்டார்.. அவர் வீட்டுப் படியை மிதிக்கும் தைரியத்தை யதுநந்தனுக்கு யார் கொடுத்தது என்று அவருக்கு தெரிந்து விட்டது..
அவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கிறது.. அது உண்மையில் அன்று யதுநந்தன் மீராவைப் பெண் கேட்டு வரப்போகிறான் என்ற விவரமே மீராவுக்கு தெரியாது என்பது..
யதுநந்தன் யாரிடமும் சொல்லவில்லை.. அவன் பெண் கேட்கப் போவதைப் பற்றி மூச்சே விடவில்லை.. எதிர்வீட்டுக்கு எதற்காக அவன் போனான் என்றுதான் பாகீரதி தன் வீட்டில் குழம்பிக் கொண்டிருந்தாள்..
மீராவும் அப்படித்தான்.. காலைக் காபியை உறிஞ்சியபடி மாடி பால்கனிக்கு வந்தவள்.. வழக்கம் போல எதிர் வீட்டை நோக்கிப் பார்வையை ஓட்டினாள்.. அங்கே கம்பீரமான நடையுடன் யதுநந்தன் வந்து கொண்டிருந்தான்..
'என்ன டீஸண்டா டிரெஸ் பண்ணியிருக்கான்..!'
அவன் உடையழகிலும்.. நடையழகிலும் மனம் லயிக்க அவனையே பார்த்தவள்.. அவள் அங்கிருக்கிறாள் என்பதை உணர்த்த கையை ஆட்டினாள்.. யதுநந்தன் தான் மாடிப்பக்கமே பார்க்க வில்லையே...
'இவனெல்லாம் என்னைக் காதலிக்கிறானாம்..'
சலிப்புடன் அவன் மீது எதையாவது எறியலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது.. நிதானமான நடையுடன் அவள் வீட்டை நெருங்கினான் யதுநந்தன்..
'இங்கேயா வர்றான்..? எதுக்கு வர்றான்..?'
மீரா காபியை மறந்து யதுநந்தனைக் கவனிக்க ஆரம்பித்தாள்.. அவன் அவள் வீட்டுக்குள்தான் நுழைந்தான்..
'என்னன்னு தெரியலையே..'
மின்னல் வேகத்தில் அவள் அறைக்குள் ஓடி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.. கசங்கிய நைட்டியும்.. கலைந்த தலையுமாக இருந்த அவளின் தோற்றத்தை அப்போது யதுநந்தன் பார்த்திருந்தால்..
'வாவ்..! கிளாஸிக் பியூட்டி..' என்று ரசித்திருப்பான்..
அவ்வளவு அழகாக இருந்தாள் மீரா.. இயற்கையான சோபையுடன் இருந்தவளுக்கு கசங்கிய நைட்டியும்.. கலைந்த தலையும் அழகைக் கூட்டிக் காண்பித்தன.. அதை உணராமல் அவள் உதட்டைப் பிதுக்கினாள்..
'இப்படியே அவன் முன்னால் போவதா..?'
குளியலறைக்குள் பாய்ந்தாள்.. மின்னல் வீரன் என்று அவனுக்குப் பெயர் வைத்திருந்தவள்.. மின்னல் மோகினியாக கணப்பொழுதில் குளித்து முடித்து அவளுக்குப் பிடித்த சுடிதாருக்கு மாறி.. லேசான ஒப்பனையுடன் மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.. அவள் ஹாலில் கால் வைப்பதற்கும்.. யதுநந்தன் சடகோபனிடம் பெண் கேட்பதற்கும் சரியாக இருந்தது..
'ஓ..!..' மீரா தேங்கி நின்றாள்..
அவளிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல்.. அத்தையின் குடும்பத்தை உதவிக்கு அழைக்காமல்.. நேரே அவள் வீட்டிற்கே வந்து.. அவளுடைய தந்தையைப் பார்த்துக் கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல் அவளைப் பெண் கேட்ட அவளது காதலனின் தீரத்தில் அவள் அயர்ந்து விட்டாள்..
சடகோபனின் அனைத்துப் பேச்சுக்கும் ஈடு கொடுத்த அவனது ஆண்மையின் அவன்மீதான அவளின் காதல் அதிகரித்தது..
இப்படிப்பட்ட காதலைப் பெற்றவள்.. அந்தக் காதலுக்காக காதலனின் பக்கம் நின்று போராட வேண்டாமா..?
மீராவின் மனதில் சடகோபனின் மீதான பயத்தையும் மீறி.. தைரியம் துளிர் விட்டது அந்த வினாடியில்தான்..
அந்த வேகத்துடன்தான் அவள் 'இல்லேன்னா என்னப்பா செய்துருவீங்க..?' என்று சவாலுடன் வெளிப்பட்டாள்..
"ம்மா.. இதில் எனக்கும் சம்பந்தம் இருக்கு.. யது மட்டும் என் மேல் ஆசைப்படலை.. நானும்தான் அவர் மேலே ஆசை வைச்சிருக்கேன்.. ஸோ.. இந்த பிராப்ளத்தில் நானும் இருக்கேன்.. என்னாலே நகர முடியாது.." மீரா உறுதியுடன் சொல்லி விட்டாள்..
சடகோபன் செல்போனை எடுத்தார்..
"என்னங்க.. எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்ங்க.. வேற ஏதும் விபரீதமா செய்துராதீங்க.. உங்களை வணங்கிக் கேட்டுக்கறேன்.." ஜானகி மன்றாடினாள்..
"என் லெவலுக்கு இவனெல்லாம் கொசு மாதிரிடி.. இவனை விரட்ட நான் போலீஸை இறக்கனுமா..?"
சடகோபனின் அலட்சியத்தில் மீரா வெகுண்டு எதையோ பேசப் போனாள்.. யதுநந்தன் கண்களால் அவளை அதட்டி அடக்கினான்..
"வாகீசன்.. நீங்களும் உங்க வொய்பும் கொஞ்சம் என் வீட்டுக்கு வந்துட்டுப் போங்க.." சடகோபன் செல்போனை அணைத்தார்.. யதுநந்தன் முகம் கருத்தான்..
"இப்ப எதுக்காக சார் என் அத்தையையும் மாமாவையும் வரச் சொல்கிறீங்க..?" கோபத்துடன் கேட்டான்..
சடகோபன் தூசைப் பார்ப்பதைப் போல அவனைப் பார்த்தார்..
"ம்ம்ம்.. பெண் கேட்டு வந்திருக்கயில்ல.. அவங்க வந்தா தாம்பூழத்தட்டை மாத்திக்கலாம்ன்னுதான்.."
அவரது இடக்குப் பேச்சில் யதுநந்தனின் ரத்தம் கொதித்தது..
"இது சரியில்லை சார்.. பெண் கேட்டு வந்தது நான்.. எனக்குப் பதிலைச் சொல்லாம என் அத்தை குடும்பத்தை இழுக்கிறது நியாயமில்லை.." என்றான்..
"நியாய அநியாயத்தைப் பத்தி நீ பேசாதே.. என் வீட்டு காம்பவுண்டு பக்கம் வரக்கூட நீ யோசிச்சிருக்கனும்.. அதை விட்டுட்டு தைரியமா என் வீட்டுப் படியேறி வந்து பெண் கேட்கறியே.. உன் தைரியத்துக்கு பரிசு கொடுக்க வேணாம்..?"
சடகோபன் கேட்டுக் கொண்டிருந்த போதே.. வாகீசனும் பாகீரதியும் அங்கே வந்து விட்டார்கள்.. வாகீசனின் முகத்தில் கலவரம் இருந்தது.. பாகீரதியின் முகத்தில் கலக்கம் இருந்தது.. அவர்கள் இருவரையும் 'வா'வென்று வரவேற்காமல ஜானகி நின்றதில் சூழ்நிலையின் கடுமையை அவர்கள் புரிந்து கொண்டார்கள்..
"வணக்கம் சார்.." என்றார் வாகீசன்..
"என்ன வாகீசன்..? உங்க வேலையைக் காப்பாத்திக்கனும்ங்கிற எண்ணமில்லையா..?" எடுத்த எடுப்பில் அவரை அரள வைத்தார் சடகோபன்..
ஜானகியால் பாகீரதியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. ஆழ்ந்த தோழமையுடன் பழகிய தோழியின் கணவரை அவளுடைய கணவர் மிரட்டுவதைக் கண்டும் காணாமல் பார்வையாளராக நிற்க நேர்ந்ததில் அவள் துயரம் கொண்டாள்..
'இதனால் என்னவெல்லாம் வரப் போகுதோ..' என்று பயந்து புலம்பிக் கொண்டிருந்த வாகீசனை சடகோபனின் மிரட்டல் எந்த அளவுக்கு ஆட்டி வைக்கப் போகிறதோ என்று பாகீரதி சங்கடம் கொண்டாள்..
"உங்க மைத்துனன் மகனாச்சேன்னு இவனை வீட்டுக்குள் அனுமதித்து.. உட்கார வைத்து.. காபி கொடுத்து உபகாரம் பண்ணி.. என்ன உதவி வேணும்ன்னு கேட்டா.. உங்க பெண்ணைக் கொடுங்கன்னு இவன் தைரியமா என் முகத்தைப் பார்த்துக் கேட்கிறான்..
எப்படி வாகீசன்..? நீங்க சொல்லிக் கொடுத்து அனுப்பி வைச்சீங்களா..? நான் கோபப் பட்டா உங்களை இருக்குமிடம் தெரியாம அழித்து விடுவேன்.. தெரியுமா..?" சடகோபன் தொடர்ந்து மிரட்டினார்..
யதுநந்தனின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. அவன் கோபத்துடன் பேசப் போன போது வாகீசன்..
"உஸ்ஸ்.." என்று அவனை அடக்கினார்..
சும்மாவே பயந்து கொண்டிருந்தவரை சடகோபனின் கோப மிரட்டல் சரணாகதிக்கு தள்ளி விட்டிருக்கும் என்று பாகீரதி வேதனை கொண்டாள்..
இதோ வாகீசன் சடகோபனிடம் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கி மன்னிப்புக் கேட்கப் போகிறார்.. உடனடியாக யதுநந்தனை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறேன் என்ற உத்திரவாதத்தை அளிக்கப் போகிறார்.. யதுநந்தனுக்கும் அவர் குடும்பத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று சொல்லப் போகிறார்.. என்று அவள் செவிகள் தயாராகின..
"இது சுதந்திர இந்தியா சார்.." என்றார் வாகீசன்..
'என்னது..?!..' பாகீரதி விழிகள் அகல கணவரைப் பார்த்தாள்..
அவரோ.. அவளைப் பார்க்காமல் கடுமையான முகத்துடன் சடகேபானுடன் பேசிக் கொண்டிருந்தார்..
"என் வேலையைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும் சார்.. யூணியன்னு எதுக்கு இருக்கு..? இந்த கவர்ண்ட் மெண்டில நீங்க கலெக்டர் மட்டும்தான் சார்.. கவர்ண்ட் மெண்டே நீங்கள் இல்லே.. கவர்ண்ட்மென்ட் நினைச்சாக் கூட அவ்வளவு சுலபத்தில ஒரு கவர்ண்மெண்ட் சர்வன்டோட வேலையைப் பிடுங்கிக் கிட்டு வெளியே போன்னு சொல்ல முடியாது.. நீதியும், கோர்ட்டும் எதுக்காக இருக்கு..? இருக்குமிடம் தெரியாம என்னை அழிக்க உங்களாலே முடியாது சார்.. நான் எப்போதும் இருக்கிற இடத்திலே எப்பவுமே இருப்பேன்.."

பேசிக் கொண்டிருப்பது தன் கணவர்தானா என்ற மாபெரும் சந்தேகம் வந்து விட்டது பாகீரதிக்கு.. அவள் மற்றவர்கள் பார்ப்பார்களே என்ற யோசனை இல்லாமல் தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.. வலித்தது..

"உங்க மகளைப் பெண் கேட்கிற தைரியம் என் மருமகனுக்கு வந்திருக்குன்னா அது எதனால சார்..? யதுநந்தன் படிச்சிருக்கான்.. பெரிய படிப்பு.. கை நிறைய சம்பளம் வாங்கறான்.. உங்க பெண்ணுக்கும் இவனைப் பிடிச்சிருக்கு.. இதைப் பயன்படுத்திக்கிட்டு உங்களுக்குத் தெரியாம கோவிலில தாலிகட்டி.. ரெஜிஸ்ட்ரர் ஆபீசில் கல்யாணத்தை பதிவு பண்ணி.. போலிஸீல் பாதுகாப்புக் கேட்டுக் குடும்பம் நடத்த ஆரம்பிக்காம.. நேர்மையா பெத்தவங்களிடம் சம்மதம் கேட்கனும்னு தைரியமா உங்க வீட்டுப் படியேறி வந்து உங்க முகத்தைப் பார்த்துத் துணிச்சலா பெண் கேட்டான் பாருங்க.. அங்கே நிற்கிறான் சார் எங்க வீட்டுப் பையன்.. அந்த நேர்மையை நீங்க பாராட்டனும்.."

திரைப்படங்களில் வரும் கதாநாயகனின் வீர தீர சாகசத்தைப் பார்ப்பதைப் போல கணவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி அயர்ந்து போய் நின்று விட்டாள் பாகீரதி..
'இவரா இவ்வளவு துணிச்சலாப் பேசறாரு..? இவரா யதுவை எங்க வீட்டுப் பையன்னு சொல்கிறாரு..? இவரா.. கலெக்டரோட பகை வந்துரும்ன்னு பயப்படாம உன்னாலே ஆனதைப் பார்த்துக்கன்னு சவால் விடறாரு..?'
இவரா என்று கணவனை அவள் பார்த்த பார்வை.. ஆதர்சக் கதாநாயகனைப் பார்க்கும் பார்வையாக இருந்தது.. அது மட்டும் சடகோபனின் வீடாக இல்லாமல்.. அவளுடைய வீடாக இருந்திருந்தால் வாகீசனைக் கட்டித் தழுவி அவர் முகமெங்கும் முத்தங்களைப் பதித்திருப்பாள்..
"உங்க பொண்ணும்.. எங்க வீட்டுப் பையனும் ஒருத்தரையொருத்தர் விரும்பறாங்க... இப்ப என்ன..? எங்க வீட்டுப் பையன் தானாப் பெண் கேட்டு வந்துட்டான்.. அதை வேண்டும்னா சரி பண்ணிரலாம்.. இப்ப நானும் என் வொய்பும் கேட்கிறோம்.. எங்க வீட்டுப் பையனுக்கு உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்குடுங்க சார்.."
"வாகீசன்.."
சடகோபனின் அலறலில் அந்த வீடே அதிர்ந்தது.. தெருவில் சண்டை நடந்தாலே பாகீரதியையும்.. பிள்ளைகளையும் வீட்டுக்குள் பற்றி விட்டு ஜன்னல் கதவுகள் முதற்கொண்டு இறுக மூடிவிடும் வாகீசன் எப்படி அதற்குப் பயப்படாமல் நிற்கிறார் என்று நம்ப முடியாமல் விழித்தாள் பாகீரதி..
"சொல்லுங்க சார்.."
வெகு அமைதியாக கேட்டாலும் வெகு நிமிர்வாக கேட்டார் வாகீசன்.. அந்த நிமிர்வில் பாகீரதி சந்தோசப் பட்டுப் போனாள்..
"என் லெவலைப் பத்தி உங்க மைத்துனன் மகனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.. உங்களுக்குத் தெரியுமில்ல.. நான் நினைச்சா என்ன வேணும்னாலும் நடக்கும்.."
"பூச்சாண்டி காட்டறிங்களா சார்..?"
அஞ்சாமல் கேட்டார் வாகீசன்.. அந்த அஞ்சாமையில் பாகீரதிக்கு அவர்மீது காதல் வந்தது..
"உங்க பவரைக் காட்டினா நான் மீடியாவுக்கு போக வேண்டியிருக்கும் சார்.. நான்தான் சொன்னேனில்ல.. இது சுதந்திர நாடு.. நானும் ஒரு கவர்ண்ட்மென்ட் சர்வண்ட்.. நீங்களும் ஒரு கவர்ண்ட்மென்ட் சர்வன்ட்.. உங்க பவரை நீங்க காட்டினா.. என் பவரை நானும் காட்ட வேண்டியிருக்கும்.."
"என்ன வாகீசன்.. பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு.."
"தினுசாத்தானே சார் இருக்கு..? திமிராய் இல்லையே.."
"உங்க மைத்துனன் செய்தது நியாயம்ங்கறிங்க..?"
"தப்பு இல்லேங்கிறேன்.. ஏன்..? இவன் யாரைப் பெண் கேட்டானோ.. அந்த உங்க மகளும் இங்கேதானே இருக்கு.. உங்களுக்கு வந்த இதே கோபம் ஏன் மீராவுக்கு வரலை..?"
வாகீசன் சரியான இடத்தில் அடித்து விட்டார்.. சடகோபனுக்கு வாகீசன் சொன்னதில் இருந்த மறை பொருள் புரிந்து விட்டது..
உன் பவரைக் காட்டுவாயா..? காட்டு.. நீ எதற்காக உன் பவரைக் காட்டினாய் என்பதை நானும் சொல்கிறேன்.. என் மருமகன் உன் மகளின் சம்மதமில்லாமலா பெண் கேட்டு வந்து விட்டான்..?
சடகோபன் பல்லைக் கடித்தார்.. விவரம் மீடியாவுக்குப் போனால் அவர் வில்லனாகச் சித்தரிக்கப் பட்டு விடுவார்.. அதுவரை அவர் கட்டிக் காத்து வந்த பிம்பம் உடைந்து விடும்.. அவருடைய உறவினர் வட்டாரத்தில் விவரம் கசிந்து விடும்..
"மிரட்டிப் பார்க்கறிங்களா..?"
இதை சடகோபன் வாகீசனிடம் கேட்டு வைத்ததில் பாகீரதிக்கு 'அட..!' என்று இருந்தது.. அதைவிட..
"அது உங்க பழக்கம் சார்.." என்று வாகீசன் போட்டுத் தாக்கியதில்.. 'அட.. அட..' என்று இருந்தது..
'என் புருசனைப் போல உண்டுமா..'
முதன் முறையாக அவள் மனதில் கணவன் மீதான கர்வம் உண்டானது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -22
வந்தாள் மகாலட்சுமியே.. -22
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy