வந்தாள் மகாலட்சுமியே. -21

21 சடகோபன் வீட்டு வாசலில் இருந்த செக்யூரிட்டி யதுநந்தனைக் கண்டதும் எதிர் வீட்டுக்காரனாயிற்றே என்று நட்புடன் புன்னகைத்தான்.. பதிலுக்குப் ப...

21

சடகோபன் வீட்டு வாசலில் இருந்த செக்யூரிட்டி யதுநந்தனைக் கண்டதும் எதிர் வீட்டுக்காரனாயிற்றே என்று நட்புடன் புன்னகைத்தான்.. பதிலுக்குப் புன்னகைத்த யதுநந்தன்..
"சார் இருக்கிறாரா...?" என்று கேட்டான்..
"இருக்கார் சார்.. இந்நேரத்துக்கு அவர் வீட்டில்தான் இருப்பார்.." என்றான் செக்யூரிட்டி..
"ஜாகிங் போயிருப்பாரோன்னு கேட்டேன்.."
"இல்லை சார்.. கலெக்டர் சார் வீட்டுத் தோட்டத்தில் தான் வாக்கிங் போவார்.. வெளியேயெல்லாம் போக மாட்டார்.."
"அப்பச் சரி.."
யதுநந்தன் கேட்டைத் திறந்ததை செக்யூரிட்டி ஆட்சேபிக்கவில்லை.. மாறாக அவனே எழுந்து வந்து அவசரமாக கேட்டைத் திறந்து விட்டான்..
"தேங்க் யு..."
யதுநந்தன் சிரித்ததில் செக்யூரிட்டியின் முகம் மலர்ந்து விட்டது.. அகலமாக திறந்து வழி விட்ட கேட்டில் ஆரம்பித்த பாதையில் நடக்க ஆரம்பித்தான் யதுநந்தன்..
மீராவின் வீடு ஒரு மாளிகையைப் போல இருந்தது.. வீட்டுக் காம்பவுண்டுக்கும்.. வீட்டுக்கும் இடையில் தோட்டம் இருந்தது.. தோட்டத்தை ஒட்டிப் போன பாதையில் காவி நிற வடிவிலான ஓடுகள் பதிக்கப் பட்டிருந்தன.. பாதையின் ஓரத்தில் அரைச் செங்கல்கள் முக்கோண வடிவத்தில் அழகுற செறுகப் பட்டிருந்தன.. தோட்டத்தின் நடுவில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்து வந்த ஈரக்காற்று யதுநந்தனின் உடல்
தழுவியது..
'இது மகாலட்சுமி வாசம் செய்கிற வீடேதான்..'
அவன் மனதில் இதம் படர்ந்தது.. அந்த மகாலட்சுமி அவன் காதலிக்கும் மீராவாக இருப்பதில் அவன் காதல் வெற்றி பெறுமா இல்லை தோல்வியைத் தழுவுமா என்ற வினா அவன் மனதில் எழுந்தது..
'எதுவாக இருந்தாலும் பின்வாங்கப் போறதில்லை..' அவன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..
இருபது கார்களுக்கு மேல் நிறுத்தலாம் போல இருந்த அந்த மிகப்பெரிய போர்டிகோவைக் கடக்கும் போது கூட அவன் நடை தளரவில்லை.. நிமிர்வாகவே வீட்டுப் படிகளில் ஏறிச்சென்றான்.. காலிங் பெல்லை அழுத்தினான்.. கதவைத் திறந்த வேலைக்காரப் பெண் அவன் எதிர் வீட்டுக்காரன் என்ற நினைவில் லேசாக
சிரித்து வைத்தாள்..
"கலெக்டர் சாரைப் பார்க்கனும்.."
"உட்காருங்கய்யா.. ஐயாவிடம் சொல்றேன்.."
பிரம்மாண்டமான ஹாலை வரிசை கட்டி பல சோபா செட்கள் நிரப்பியிருந்தன.. அதன் செல்வச் செழிப்பை எடைபோட்டபடி ஒரு சோபாவில் உட்கார்ந்தான் யதுநந்தன்.. உள்ளே போன வேலைக்காரப் பெண் காபியுடன் வந்தாள்..
"அம்மா கொடுக்கச் சொன்னாங்க.." என்றாள்..
மறுக்காமல் காபிகப்பை எடுத்துக் கொண்டான் யதுநந்தன்..
"ஐயாகிட்டயும் சொல்லிட்டேங்கய்யா.." என்றாள் வேலைக்காரப் பெண்..
தலை அசைத்து விட்டு காபியை உறிஞ்ச ஆரம்பித்தான் யதுநந்தன்..
"வாங்க தம்பி.." ஜானகி வந்து வரவேற்றாள்..
யதுநந்தன் சோபாவை விட்டு எழுந்து நின்று அவளுக்கு வணக்கம் சொன்னான்.. அவனது பண்பில் ஜானகி ஈர்க்கப் பட்டாள்..
"அவர் வந்துக்கிட்டே இருக்கார்.. நீங்க உட்காருங்க.. பாகீரதி உங்களைப் பற்றியேதான் பேசிக்கிட்டு இருப்பா.. நீங்கன்னா அவளுக்கு உயிர்.." உபசாரமாக பேசினாள் அவள்..
"அத்தைக்கு என்மீது பாசம் அதிகம்.." யதுநந்தன் முறுவலித்தான்..
"இருக்காதா பின்னே..?"
எதையோ சொல்ல வந்த ஜானகி.. அதைச் சொல்லாமல் ஓர் வினாடி அமைதியாக இருந்தாள்.. அவளது திடிர் அமைதிக்கான காரணத்தை அறிந்தவனைப் போல யதுநந்தனும் அமைதிகாத்தான்..
ஜானகி பொதுவாக அவனைப் பற்றி விசாரித்தாள்.. அவனும் கர்ம சிரத்தையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.. பேசியபடியே திரும்பிப் பார்த்த ஜானகி..
"அவர் வந்துட்டார்.." என்றாள்..
யதுநந்தன் எழுந்து நின்றான்.. மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்த சடகோபனை நேருக்கு நேராக அப்போதுதான் அவன் சந்திக்கிறான்.. அதற்கு முன்னால் வாகீசனின் வீட்டு மாடியிலிருந்து தோட்டத்தில் உலவுகிறவரைப் பார்த்ததுண்டு..
சடகோபனின் விழிகள் அவனைத் துளைப்பதைப் போல அளவிட்டன.. அவனுடைய மகாலட்சுமி காரணமில்லாமல் தந்தையிடம் பயம் கொள்ளவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது..
'இப்படி லேசர் பார்வை பார்த்தா அவ ஏன் அந்த பயம் பயப்பட மாட்டா..?' நினைத்துக் கொண்டான்..
"வணக்கம்.." கைகளைக் குவித்தான்..
பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்த சடகோபனிடம் அவரது உயர்வைக் குறித்த நிமிர்வு இருந்தது..
"எதிர் வீட்டு பாகீரதியோட அண்ணன் மகன்.." ஜானகி அவனை அறிமுகப் படுத்தி வைத்தாள்..
"ஓ.. வாகீசனின் மைத்துனர் மகனா..?" என்று கேட்டு வைத்தார் சடகோபன்..
'இரண்டும் ஒன்றுதானே..' நினைத்ததை வெளியில் சொல்லாமல் மையமாக தலை அசைத்து வைத்தான் யதுநந்தன்..
"உட்காருங்க.. ஜானகி தம்பிக்கு காபி கொடுத்தியா..?"
"வந்தவுடனே குடுத்துட்டாங்க.."
இயல்பாக பதில் சொல்லியபடி உட்கார்ந்த யதுநந்தனின் முகத்தை சடகோபனின் கண்டிப்பான விழிகள் ஆராய்ந்தாலும்.. அவர் முகத்தில் எதிர்ப்போ.. சந்தேகமோ தெரியவில்லை..
எதிர் வீட்டுக்காரரின் உறவுப் பையன் வந்திருக்கிறான்.. அவரிடம் அவனுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப் பட்டிருக்கக் கூடும் என்று மட்டுமே அவர் நினைத்தார்.. யதுநந்தனின் கம்பீரமான தோற்றமும்.. கண்ணியமான செயல்பாடுகளும் அவர் மனதில் நல்ல எண்ணத்தையே உருவாக்கின.. அவரும் ஜானகியைப் போல பொதுவாக விசாரித்தார்.. பிறகு..
"சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேணும்..?" என்று நேரடியாகவே கேட்டார்..
"இவர் இப்படித்தான்.." ஜானகி சிரித்தாள்..
"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்ங்கிறதைத்தான் இப்படிக் கேட்கிறார்.. என்னன்னாலும் தயங்காம கேளுங்க.. கட்டாயம் செய்வார்.." அவர் சார்பாக வாக்கும் கொடுத்தாள்...
"சார் சரியாத்தான் கேட்கிறார் மேம்.." யதுநந்தனின் முகத்தில் தீவிரம் வந்திருந்தது..
"நான் சாரிடம் ஹெல்ப் கேட்டு வரலை.. பெண் கேட்டு வந்திருக்கேன்.."
யதுநந்தன் வீசிய வெடிகுண்டில் ஜானகி ஸ்தம்பித்து விட்டாள்.. சடகோபனின் முகம் மாறினாலும் அவர் ஜானகியைப் போல ஸ்தம்பித்து விடவில்லை.. அவர் முகத்திலிருந்த இணக்கமும்.. நட்பும் மாறி அங்கே கடுமை விரவியது..
"இப்பப் புரியுதா ஜானகி.. யார் கூடப் பழகினாலும் அளவோடு பழகுன்னு உனக்கும், மீராவுக்கும் எதற்காக நான் அடிக்கடி அட்வைஸ் பண்றேன்னு இப்பப் புரியுதா..?"
புயலை உள்ளடக்கிய அவர் கோபத்தில் ஜானகி கைகளைப் பிசைந்தாள்.. அவள் முகத்தில் குற்றஉணர்வு வந்திருந்தது..
யதுநந்தனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. அவன் பெண் கேட்கும் விவரத்தில் மீராவையோ.. வாகீசனின் குடும்பத்தையோ அவன் இழுத்து விடப் போவதில்லை என்ற முடிவிலிருக்கும் போது.. மீராவின் அம்மா பாதிப்புக்கு ஆளாவதா..?
"சார் ப்ளீஸ்.. பெண் கேட்டு வந்தது நான்தான்.. இதுக்கும் மேமுக்கும் என்ன சம்பந்தம்..? நீங்க அவங்களைத் திட்ட வேண்டாம்.. எனக்குக் கில்ட்டியா இருக்கு.." என்று சடகோபனிடம் சொல்லி விட்டான்..
சடகோபனின் கண்கள் தீம்பிழம்பாய மாறியிருந்தன.. அவர் கடுங்கோபத்தில் இருப்பதைப் புரிந்து கொண்ட ஜானகி யதுநந்தனை எப்படி அங்கிருந்து அப்புறப் படுத்துவது என்று மனதுக்குள் அலை மோதினாள்..
அவளுக்கு சடகோபனைத் தெரியும்.. அவருடைய உயரத்தில் இருப்பவர்களிடம் மட்டுமே லேசாகப் பேசிப் பழகுவார்.. மற்றவர்களை எட்டத்தான் நிறுத்துவார்..
ஜானகி அப்படியல்ல.. அவள் எல்லோரிடமும் சகஜமாகப் பேசிப் பழகும் தன்மையுடையவள்.. அவளுக்காக அவருடைய உயரத்தின் நிழலின் பக்கம்கூட வர முடியாதவர்களிடம் நான்கு வார்த்தைகள் பேச வேண்டியிருக்கிறது என்று அடிக்கடி சடகோபன் அலுத்துக் கொள்வார்.. ஆனாலும் ஜானகி அவர் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள்.. அவளது அந்த இயல்பு ஏதோ ஒருவகையில் அவரை ஈர்த்ததில் மனைவியின் மீதிருந்த காதலுக்காக அவரும் தனது குணத்தில் சில சமரசங்களை செய்து கொண்டார்..
அந்த சமரசத்தினால்தான் வாகீசனால் சடகோபனை நேரில் பார்த்துப் பேசிப் பழக முடிந்தது.. இல்லையென்றால் சடகோபன் வீட்டுக் கேட்டைக் கூட அவரால் நெருங்கியிருக்க முடியாது..
அப்படிப்பட்ட சடகோபனிடம்தான் யதுநந்தன் பெண்கேட்டு வந்திருக்கிறான்..
"யார் வீட்டிற்கு வந்து யாரோட பெண்ணைக் கேட்கிறோம்ங்கிற கில்ட்டி உங்களுக்கு வரலை.. தகுதியும், தராதரமும் பார்த்து அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்களிடம் பேசிப் பழகனும்ன்னு என் வொய்பை நான் கண்டிக்கிறதுக்கு கில்ட்டி வருதா..?"
சடகோபனின் வார்த்தைகள் சாட்டையடிகளாக வந்தன.. ஜானகி அவனைக் கிளம்பிப் போய் விடும்படி சடகோபனுக்குத் தெரியாமல் சைகை செய்தாள்.. யதுநந்தன் கிளம்பவில்லை.. தோரனையாக உட்கார்ந் திருந்தான்..
"உங்க பெண்ணைக் கேட்கனும்னா உங்க வீட்டுக்குத் தானே சார் வரனும்..? இதில தகுதியையும், தராதரத்தையும் ஏன் இழுக்கறிங்க..? என் தகுதி நான் ஒரு எம்.ஈ. பட்டதாரி என்பது.. இண்டர் நேசனல் கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் ஹை போஸ்டில் இருக்கிறேன்.. ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கறேன்.. இந்த தராதரம் போதாதா சார்.."
"எனக்குப் போதாது.."
இகழ்ச்சியாகச் சொன்னார் சடகோபன்.. அவர் விழிகளில் தெரிந்த ஏளனத்திலும்.. உதாசீனத்திலும் வேறு ஒருவராக இருந்தால் துடித்துப் போயிருப்பார்கள்.. யதுநந்தன் இரும்பு நெஞ்சம் கொண்டவன்.. அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்..
"ஒன்றரை லட்சம்..! ஹ..! இது உனக்கு வேணும்னா பெரிசா இருக்கலாம்.. ஏன்னா உன் தகுதியும்.. தரமும் அப்படிப் பட்டது.. லட்சமே உனக்குப் பெரிசு.. நான் கோடிகளில் புரள்கிறவன்.. எனக்கு இது பெரிசில்லை.. என் மகளை நினைக்கக் கூட உனக்குத் தகுதி பத்தாது.. அவள் நிழழை நெருங்கக் கூட உனக்குத் தராதரம் பத்தாது.. போ.. போய் உன் லெவலில் பெண் பார்.. எட்டாக்கனியின் மேலே ஆசைப்படாதே.. என் மகள் ஆகாயத்தில் இருக்கும் வெண்ணிலா.. உன்னால் அண்ணாந்துதான் அவளைப் பார்க்க முடியும்.."
"இல்லை சார்.." மறுப்பாக தலை அசைத்தான் யதுநந்தன்..
"நிலாவை அண்ணாந்து பார்த்தது அந்தக்காலம்.. இப்போ அப்படியில்லை.. அதைத் தொட்டுப் பார்க்க நினைச்சா தாராளமா விண்வெளிப் பயணத்தில் போய் தொட்டுப் பார்த்துட்டு வரலாம்.."
சடகோபனின் முகம் பயங்கரமாக மாறியது.. ஜானகி பதறி விட்டாள்..
"நீங்க போங்க தம்பி.." வெளிப்படையாகவே யதுநந்தனிடம் கெஞ்சினாள்..
"இல்லை மேம்.. முடிவா எனக்கொரு பதில் கிடைக்கிற வரைக்கும் நான் போக மாட்டேன்.." யதுநந்தன் அசையமறுத்தான்..
"முடிவா..? என்ன முடிவு..? என்னிடம் பெண் கேட்டு வந்ததே தப்புங்கிறேன்.. இதில் முடிவை வேற சொல்லனுமா..? மரியாதையாய் இடத்தைக் காலி பண்ணு.. இல்லேன்னா.." சடகோபன் கொதித்துக் கொண்டிருந்த போது..
"இல்லேன்னா..? என்னப்பா செய்வீங்க..? கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவீங்களா..?" என்ற குரல் கேட்டது..
"மீரா..!" ஜானகி அதிர்ந்து போய் திரும்பினாள்..
அமைதியாக மீரா அவர்களுக்கருகில் வந்தாள்.. யதுநந்தன் தலையை ஆட்டினான்..
"இது என்னோட பிராப்ளம்.. நீ இதில் இன்வால்வ் ஆக வேணாம் மீரா.."
"ஓ.. என்னைப் பெண் கேட்கிறது உங்களோட பிரச்னை மட்டும்தானா..? எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையா..?"
சடகோபனின் முன்னால் நின்று பேசக்கூட பயப்படும் மீராவா இதைப் பேசுவது..?
ஜானகியின் நெஞ்சம் தடதடத்தது.. பூகம்பம் வரப் போவதற்கான அறிகுறி இது என்று அவள் பயந்தாள்..
"மீரா..! உன் ரூமுக்குப் போ.." சடகோபன் கண்டிப்பான குரலில் அதட்டினார்..
"மாட்டேன்ப்பா.." மீரா உறுதியுடன் அதை மறுத்தாள்..
"சொன்னால் கேட்கனும் மீரா.. இதில் நீ வர வேண்டாம்.. எனக்குத்தான் உன்னைப் பிடிச்சிருக்கு.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிற தீர்மானம் வந்திருக்கு.. உன் அப்பாவிடம் பெண் கேட்கிறேன்.. உனக்கு என்ன வந்தது..?"
மீராவை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் யதுநந்தன் பேசியதில் ஜானகிக்கு ஆறுதலாக இருந்தது.. மகளைக் காப்பாற்ற முனையும் யதுநந்தனின் செய்கையில் அவள் மனம் அவனுக்கு நன்றி சொன்னது..
"எதுவும் வரலைங்கறிங்களா.. இல்லை.. வரக் கூடாதுங்கறிங்களா..?" மீராவும் ஒரு முடிவோடுதான் இருந்தாள்..
"இரண்டும்தான்.. உன்மேல் நான்தான் ஆசைப் பட்டேன்.. ஸோ.. பிராப்ளம் என்னுடையது... என் பிராப்ளத்திலே நான் என் அத்தையின் வீட்டையே இன்வால்வ் பண்ணலை.. நீ இன்வால்வ் ஆக எப்படி சம்மதிப்பேன்..? போய் விடு.." யதுநந்தன் அவளைவிடத் தீவிரமாக இருந்தான்..
சடகோபன் தாடையைத் தடவியபடி மகளையும்.. யதுநந்தனையும் பார்த்துக் கொண்டிருந்தார்.. அவரது கோபமான முகத்தைப் பார்க்கப் பார்க்க ஜானகிக்கு பயம் அதிகரித்தது.. யதுநந்தனையே போய் விடச் சொன்னவளுக்கு.. மகள் அங்கே நின்று பேசுவதில் கொஞ்சம் கூடச் சம்மதமில்லை..
"வா மீரா..."
மகளின் கையைப் பிடித்து அவள் இழுத்தாள்.. மீரா தாயின் கையை உதறி விட்டு பிடிவாதமாக அங்கேயே நின்றாள்.. ஜானகிக்கு அழுகை வந்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே. -21
வந்தாள் மகாலட்சுமியே. -21
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-21_16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-21_16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy