வந்தாள் மகாலட்சுமியே. -18

18 காபி ஷாப்பில் கூட்டம் அதிகமில்லை யென்றாலும்.. அளவுக்கு அதிகமான நெருக்கம் இருக்கும் சிலரின் பார்வையை ஈர்க்கும் என்பதில் மனமில்லாமல் வி...


18

காபி ஷாப்பில் கூட்டம் அதிகமில்லை யென்றாலும்.. அளவுக்கு அதிகமான நெருக்கம் இருக்கும் சிலரின் பார்வையை ஈர்க்கும் என்பதில் மனமில்லாமல் விலகி அமர்ந்தாள் மீரா..
யதுநந்தன் அவளுக்கு ரசகுல்லாவை ஊட்டி விட்டான்.. காதல் சொன்ன பின்பு ஏற்பட்டு விட்ட மன நெருக்கத்தை கொண்டாட விழைந்தது அவன் மனம்..
மீராவும் அதே மனநிலையில்தான் இருந்தாள்.. அவன் வேறு.. அவள் வேறு.. என்று அவளுக்குத் தோன்றவில்லை.. அவன் ஊட்டி விட வாகாக தன் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள்..
"இன்னைக்கு என்ன புதுசா பஸ்ஸில கிளம்பிட்ட..?"
அவளது முன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டபடி பேசினான் யதுநந்தன்.. உரிமையான அவனின் அந்தத் தொடுகையில் பாகாய் உருகினாள் மீரா.. அவளது முடி கோதிய கையில் முத்தமிட வேண்டும் போல அவளுக்கு இருந்தது..
"ச்சும்மா.. ஜஸ்ட் எ சேன்ஜ்.. பஸ்ஸில் போகனும்னு தோணுச்சு.. அதான்.." என்றாள்..
அவள் விழிகளில் வழிந்த மயக்கம் அவள் மனதை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.. மற்றவர்களின் கவனத்தைக் கவராத வகையில் அவளை ஒட்டி.. உரசி.. அமர்ந்தான்..
அந்த நெருக்கத்தை அவளுக்குப் பிடித்திருந்தது.. முகம் சிவக்க.. அவன் சட்டையின் பொத்தானை நிரடினாள்.. அவளின் அந்தச் செய்கையை அவனுக்குப் பிடித்திருந்தது..
"உன் வீட்டில் எப்படி அலோவ் பண்ணினாங்க.."
அவள் கைவிரல்களோடு தன் விரல்களை பிணைத்தபடி அவன் வினவினான்.. மீரா தாள முடியாத தவிப்பிலிருந்தாள்.. அவனின் அருகாமையும்.. உரிமையும்.. அவளை ஏதோ ஒரு மாய உலகத்திற்கு அழைத்துச் சென்றன.. அதிலிருந்து மீண்டுவர முடியாமல் அவள் திண்டாடினாள்..
"அவங்க அலோவ் பண்ணினாங்கன்னு யார் சொன்னது..?"
கனவில் மிதப்பவளைப் போல கண்கள் செறுக பதில் சொன்னாள்.. யதுநந்தன் நெருக்கத்தை அதிகரித்தான்..
"அப்படின்னா..?"
"அவங்களுக்குத் தெரியாது.. கார் டிரைவர்கிட்ட என் பிரண்ட் வீட்டுக்குப் போயிருக்கிறதா சொல்லச் சொல்லிட்டேன்.."
"யார் சொன்னது..?"
"வேறொரு பிரண்ட்.. எங்க வீட்டுக்குப் பக்கத்து தெருவில இருக்கிற பிள்ளையார் கோவிலில் வெயிட் பண்ணச் சொல்லியிருக்கேன்.."
சொல்லிக் கொண்டே வந்தவள் கையை உதறினாள்..
"என்ன ஆச்சு..?" என்றான் யதுநந்தன்..
"டிரைவர் கோவிலில வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பார்.. நான் போகனும்.." மீரா பரபரத்தாள்..
"இவ்வளவுதானே..? இதுக்குப் போயா இந்தப் பதட்டம்..? வா போகலாம்.."
பில்லுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு யதுநந்தன் எழுந்து கொண்டான்.. கூட நடந்த மீராவின் கையைப் பற்றிக் கொண்டான்..
'யாராவது பார்த்துட்டா..' மீராவுக்கு பயமாகத்தான் இருந்தது..
ஆனாலும் யதுநந்தனின் கைபற்றி நடக்க அவளுக்குப் பிடித்திருந்தது.. அவளுக்குப் பிடித்த ஆண்மகனின் கைவளைவில் நடை போடும் சுகத்தை அவள் அனுபவித்தாள்..
வேய்ங்குழல் ஓசை போன்ற இனிமையான உணர்வைக் கொண்டது காதல்.. நிலா முற்றத்தில் யாழ் மீட்டும் உன்னதமான சுகானுபவத்தை உள்ளடக்கியது.. யாமத்தில் பூத்த சாமந்தி மலரைப் போல அலாதியான இன்பங்களை அளிக்க வல்லது..
அந்தக் காதலில் விழுந்த மீராவிற்கு உலகமே புதிதாகத் தோன்றியது.. அவளுக்காக யதுநந்தன் கார் கதவைத் திறந்து விட்டான்..
"இது சுட்ட காரில்லையா..?" என்றபடி அவள் காரில் ஏறி உட்கார்ந்தாள்..
"ஊஹீம்.. நான் சம்பாதித்து என் சொந்தப் பணத்தில் வாங்கின கார்.. மும்பையில இருந்து.. என் பிரண்ட் ஓட்டிக்கிட்டு வந்து கொடுத்துட்டுப் போறான்.."
"நிஜமாவா..?"
"உன்னிடம் போய் பொய் சொல்வேனா..?"
"ஹை.. சார் என்னிடம் பொய்யே சொல்லாத ஆள்தான்.."
"அது அப்ப.."
"இப்ப..?"
"சார் உன்னிடம் கிளின் போல்டு.."
யதுநந்தன் அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.. மீரா உதட்டைக் கடித்துத் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடினாள்.. அவளை சொந்தத்துடன் பார்த்தபடி காரைக் கிளப்பிய யதுநந்தனைப் பார்த்தவள்..
'என்னமோ தாலி கட்டி விட்டதைப் போல பார்த்தாகிறது..' என்று மனதுக்குள் செல்லமாக திட்டித் தீர்த்தாள்..
"தாலி கட்டினாத்தானா..?" காரை ஓட்டியபடி அவளிடம் திரும்பிக் கேட்டவனின் புருவங்கள் ஏறி இறங்கின..
'பெரிய மன்மதன்தான்..' மையலுடன் அவள் உதட்டைச் சுழித்தாள்..
"மனதைப் படிக்கிற வித்தையைத் தெரிஞ்சு வைச்சிருக்கீங்களா..?"
"ஆமாம்ன்னுதான் வைத்துக்கயேன்.."
"யாரை..?" குறும்புடன் கேட்டவளுக்கு
"என்னை.." அதே குறும்புடன் பதில் சொன்னான் அவன்..
"அப்ப.. தாலி கட்டி பெண்டாட்டியாக்கிக்கனும்கிற நோக்கமெல்லாம் சாருக்கு இல்லை போல.." அவள் வம்புக்கு இழுத்தாள்..
"இருக்குன்னு இப்பவே புருவ் பண்ணவா..?"
"எப்படியாம்..?"
"நேரே கோவிலுக்கு காரை விடறேன்.. உன் கழுத்தில் தாலியைக் கட்டறேன்.." அவன் புளி போட்டு விளக்கியதில்..
"அம்மாடி.." என்று அவள் பயந்து போனாள்..
அதைக் கவனித்த யதுநந்தனின் புருவங்கள் முடிச்சிட்டன.. அவன் ஏதும் பேசாமல் மௌனமாக காரை ஓட்டினான்.. மீராவும் யோசனையில் இருந்தாள்.. சற்றுப் பொறுத்து யதுநந்தனே மௌனத்தைக் கலைத்தான்..
"என்னைக்கிருந்தாலும் காதல் கல்யாணத்தில முடிந்தாகனும் மீரா.." யோசனையுடன் சொன்னான்..
"இல்லேன்னு யார் சொன்னது..?"
"உன் பயம் சொல்லுது.."
"இன்னைக்குத்தான் பிரி.கே.ஜி சேர்ந்த குழந்தை கிட்ட.. பட்டம் வாங்க வான்னு கூப்பிட்டா பயப்படாதா..?"
"புரியலை.."
"இன்னைக்குத்தான் காதலை சொல்லியிருக்கோம்.."
"மிகப் பெரிய திருத்தம் ஒன்னு இருக்கு மீரா.. நான் உன்னிடம் காதல் சொன்னேன்.. பதிலுக்கு உன்னையும் காதலை சொல்ல வைத்தேன்.."
"இப்ப எனக்குப் புரியலை.."
"நீயா காதலை சொல்லலை மீரா.. அப்பவும் இதே பயம்தான் உன் கண்ணிலே தெரிஞ்சது.. ஏன் மீரா..?"
ஏனென்று கேட்டாள் அவள் என்ன பதிலைச் சொல்லுவாள்..? எதுவும் பேச முடியாமல் மௌனித்தாள்..
"இன்னொன்றும் இருக்கு மீரா.. இப்பத்தான் நாம் காதல் சொல்கிறோம்ங்கிறது என்னவோ உண்மைதான்.. ஆனால்.. எப்பவோ இந்தக் காதலை உணந்துட்டோம்.. அதை மறக்காத.. பட்டம் மட்டுமில்லை மீரா.. நாம் பி.எச்.டி முடிச்சவங்க.. நீ என்னவோ பிரி.கே.ஜி. லெவலிலேயே நிற்கறியே.."
மீராவின் மௌனம் யது நந்தனை பாதித்தது.. அவன் சாலையோர மரத்தின் அடியில் காரை நிறுத்தினான்.. அவள் பக்கமாக திரும்பி அமர்ந்தான்..
"சொல் மீரா.. உனக்கு இவ்வளவு பயமிருந்தா.. நாம் வேண்டும்னா இன்றைக்கே பிரிஞ்சுடலாம்.."
'பிரிந்து விடுவதா..?' மீராவுக்கு தூக்கிவாரிப் போட்டது..
அவளால் அந்த வார்த்தை வீச்சைத் தாங்க முடியவில்லை..
"ஆம்பளைப் புத்தியைக் காட்டிட்டீங்கள்ல.." குமுறினாள்..
யதுநந்தனின் முகத்தில் புன்னகை வந்தது.. விரல் நீட்டி அவள் இதழ் மீது சுண்டினான்.. செல்லமாக அவள் சிணுங்கினாள்.. அவளை இழுத்தவுடன் அவன் அணைப்புக்குள் அடங்கிவிட்டாள்.. அவள் முடிகோதி.. உச்சந்தலையில் முத்தமிட்டவனின் மனம் நிறைந்திருந்தது..
"நான் உன்னோட ஆம்பளைடி.. உன்னைப் பிரிஞ்சாலும் வேற ஒருத்தியை மனசால கூட நினைக்க மாட்டேன்.."
அவன் வார்த்தைகளில் இப்போது அவளுக்குள் கர்வம் வந்தது.. அது பெண்மைக்கே உரிய கர்வம்.. அவளுடைய ஆண்.. அவளைத்தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் தீண்டமாட்டான் என்ற உறுதியில் ஏற்பட்ட கர்வம்..
"போதும்.. இவர் பிரிவாராம்.. மனசால மட்டும் என்னையே நினைச்சுக்கிட்டு இருப்பாராம்.. யாருக்கு வேண்டும் உங்க நினைப்பு..?" அவன் கையைக் கிள்ளினாள்..
"ஸ்ஆ.. வலிக்குதுடி.." பொய்யாக சொன்னவன்..
"உனக்கு வேண்டாமா..?" என்று கேட்டான்..
"எது..?"
"என் நினைப்பு.."
அவன் கைகள் அவள் தோள் தடவி இறங்கி முதுகுப் பகுதியில் படர்ந்ததில் அவள் கிறங்கித் தவித்தாள்..
"வேணும்.." அவள் வாய் முணுமுணுத்தது..
"எது..?" அவன் குனிந்தான்..
"உங்க நினைப்பு.." என்றவளின் இதழ்களில் இதழ் பத்தினான்..
ஆழமான அந்த நீண்ட முத்தத்தில் அவள் மனதிலிருந்த பயமெல்லாம் விலகி ஓடி விட்டதைப் போல இருந்தது.. நீண்ட நிமிடங்களுக்குப் பின்னால் அவளை விடுவித்தவன்.. சிவந்திருந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..
"நேரமாகுது.." அவள் சிணுங்கினாள்..
"ஆகட்டும்.." அவள் தலையில் சின்னக் குட்டு வைத்து விட்டு காரைக் கிளப்பினான் யது நந்தன்..
"முரடு.." மோகத்துடன் சொன்னாள் மீரா..
"இதுக்கே முரடுன்னா.. இன்னும் எவ்வளவோ இருக்கே.. அதுக்கெல்லாம் என்ன சொல்லுவியோ.." என்ற அவன் வார்த்தைகளில் அவள் முகம் குங்குமமானது..
"ச்சீய்.." அவனை அடித்தாள்..
வாய்விட்டு சிரித்தான் அவன்.. சிரித்தபோது தெரிந்த அவன் பல்வரிசையில் மயங்கிப் போனாள் மீரா..
'இவன் மயக்கும் கண்ணனேதான்..'
அவன் மார்பில் சாய்ந்து அப்படியே எங்காவது போய்விடத் துடித்தது அவள் மனது..
"பஸ் பிரேக் டவுன் ஆகிருச்சு போல.."
"ஊம்.. எனக்கு மூட்-அவுட் ஆகிருச்சு.."
"என்னைப் பார்த்ததும் அவுட்டான மூடு திரும்பவும் வந்திருக்குமே.."
"வாட் எ கான்பிடென்ஸ்..! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.."
"நம்பிட்டேன்.."
தூரத்தில் மீரா குறிப்பிட்ட பிள்ளையார் கோவில் தெரிந்தது.. கூடவே கோவில் வாசலில் நின்றிருந்த மீரா வீட்டுக் காரும் தெரிந்ததில்..
"இங்கேயே காரை நிறுத்துங்க.. இறங்கிக்கறேன்.." என்றாள் மீரா..
"ஏன்..?"
"எங்க கார் நிற்குது.."
"ஓ.."
காரை நிறுத்தினான் யது நந்தன்.. இறங்க முனைந்த மீராவிடம்
"ஒரு நிமிடம்.." என்றான்..
'என்ன..?' விழிகளால் வினவியபடி தாமதித்தாள் மீரா..
அவளது வலது உள்ளங்கையை விரித்து.. அதில் தனது உள்ளங்கையைப் பதித்தான் யது நந்தன்.. மீராவுக்கு எதுவும் புரியவில்லை..
"உனக்கு வாக்குக் கொடுக்கறேன் மீரா.. இந்தக் காதலால் உனக்குத் துன்பம் வர நான் விட மாட்டேன்.."
"நான் அப்படிச் சொல்லலையே.." தடுமாறினாள் மீரா..
"உன் பயம் சொல்லுது.." நிதானமாகச் சொன்னான் யதுநந்தன்..
"அது.. அது.. வந்து.." மீராவால் பேச முடியவில்லை..
"சிரமப் பட்டுக்காதே.. நான்தான் உன்னைக் காதலித்தேன்.. உன்னை காதலை ஒப்புக்க வைத்தேன்.. அதனால.. இந்தக் காதலில் ஜெயிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது.. நீ நிம்மதியாய் இரு.." மென்மையாக சொன்னான் யதுநந்தன்..
"யது.." மீரா நாத்தழுதழுத்தாள்..
அவன் பெயரை உரிமையுடன் அவள் சொன்னதில் அவன் முகம் பிரகாசித்தது..
"யதுதாண்டி.. உன் யதுதான்.." என்றான்..
"அப்பான்னா எனக்குப் பயம்..." மீரா கண் கலங்கினாள்..
"உன் அப்பாவிடம் பேசுகிற வேலையை உனக்குக் கொடுக்கமாட்டேன்.. கவலைப் படாதே.. இது முழுக்க.. முழுக்க.. என்னுடைய காதல்.. இதில் ஜெயிக்க வேண்டிய அவசியம் எனக்கு மட்டும்தான் இருக்கு.. நான் போராடிக்கறேன்.. நீ எதையும் செய்ய வேண்டாம்.."
"சும்மா எப்படி இருக்க முடியும் யது..?"
"இருக்கனும்.. நீ அப்படித்தான் இருக்கனும்.. உன் அப்பாவிடம் நான் பேசிக்கறேன்.. கவலைப்படாமல் வீட்டுக்குப் போ.. நான் உன்னை விட்டு விட மாட்டேன்.. அதே சமயம் உன் பெயரை என் காதலில் இழுக்கவும் மாட்டேன்.."
"யது.."
"கிளம்பு கண்ணம்மா.. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ அத்தை வீட்டுக்கு வரத்தான் போற.. அங்கே பார்த்துக்கலாம்.."
"ம்ம்ம்.."
மீரா தலையை ஆட்டி விட்டு காரை விட்டு இறங்கினாள்.. யதுநந்தனின் காரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தாள்.. அவன் மனம் கனிந்தது.. பயம் கலந்த அவளின் நடையைப் பார்த்தவன்..
'ஏன் உனக்கு இத்தனை பயம் மீரா..?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்..
அவன் அவளை சிக்கலில் மாட்டி விடுவானா..?









Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே. -18
வந்தாள் மகாலட்சுமியே. -18
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy