வந்தாள் மகாலட்சுமியே..17

17 பஸ் ஸ்டாப்பில் கூட்டமாக இருந்தது.. 'இந்தக் கூட்டத்தில் எப்படி பஸ்ஸேறுவது..?' நகத்தைக் கடித்தபடி யோசித்தாள் மீரா.. முதலில் வந...

17

பஸ் ஸ்டாப்பில் கூட்டமாக இருந்தது..
'இந்தக் கூட்டத்தில் எப்படி பஸ்ஸேறுவது..?'
நகத்தைக் கடித்தபடி யோசித்தாள் மீரா.. முதலில் வந்த இரு பஸ்களை தவற விட்டாள்.. அடுத்து வந்த பஸ்ஸில் கூட்டமே இல்லை.. சந்தோசமாக ஏறி உட்கார்ந்தாள்..
"டிக்கெட்.. டிக்கெட்.."
அருகில் வந்த கண்டக்டரிடம் இறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி டிக்கெட் வாங்கினாள்.. சுற்றிலும் இருந்தவர்களை வேடிக்கை பார்த்ததில் அவள் மனதில் எதையோ சாதித்து விட்டதைப் போன்ற பெருமிதம் எழுந்தது..
ஜன்னல் வழி கடந்த தெருக்களின் தூசிகள் அவளுக்கு ஆனந்தத்தை அளித்தது.. மூடப்பட்ட கண்ணாடி கதவின் வழியாக தூசு தும்பு அண்டாமல் பயணித்தவளுக்கு.. பேருந்தின் பயணம் இனிமையானதாக இருந்தது.. கண்மூடி ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தாள்..
          'விட்டுச் சிறகடிப்பாய் - அந்த
சிட்டுக் குருவியினைப் போல..'
மனதுக்குள் பாரதியின் கவி வரிகள் ஓடின.. சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காது..
"டமால்.." என்ற சப்தத்துடன் பஸ் நின்று விட்டது..
"என்னப்பா.." பின்னாலிருந்த கண்டக்டர் குரல் கொடுத்தார்..
"இரு.. பார்க்கறேன்.." குதித்து இறங்கின டிரைவர் பஸ்ஸை சுற்றி வலம் வந்து விட்டு உதட்டைப் பிதுக்கினார்..
"டயர் பங்க்சர்.. பஸ் நகராது.."
பயணிகள் கோப சலசலப்பும்.. அலுப்புமாக பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.. மீராவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. இறங்கிய பயணிகளை மாற்று பேருந்துகளில் கண்டக்டர் அனுப்பி வைத்தார்.. கூட்டம் அதிகமான அந்த பஸ்களில் ஏறுவதற்கு மீராவுக்கு விருப்பமில்லை..
'டிரைவருக்கு போன் பண்ணி காரை வரச் சொல்லலாமா..?'
யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவளருகில் கார் வந்து நின்றது.. எட்டி முன்பக்க சீட்டின் கதவை அவளுக்காக திறந்து விட்ட யதுநந்தன்
"ஏறிக்க.." என்றான்..
'இவன் எங்கே இங்கே..' என்று தோன்றிய போதும் மீரா மறுக்காமல் காரில் ஏறிவிட்டாள்..
கார் கிளம்பியதும் 'அப்பாடா..' என்ற நிம்மதி உணர்வு ஏற்பட்டது..
"இது யாரோட கார்..?" என்று அவனிடம் கேட்டாள்..
"யாருக்குத் தெரியும்..?" என்றான் அவன்..
"அப்படின்னா..?"
"காபி ஷாப்புக்குப் போனேனா.. அங்கே நின்னுக்கிட்டு இருந்த காரில ஒன்னைக் கிளப்பிக்கிட்டு வந்திட்டேன்.."
சிரிக்காமல் வெகு உண்மையைப் போல அவன் சொல்லி வைத்தான்.. மீரா அவனை கித்தாய்ப்பாக பார்த்து வைத்தாள்.. அவள் பார்வை..
'போடா.. டேய்..' என்றது..
யதுநந்தன் புருவங்களை உயர்த்தி இறக்கினான்.. வசீகரம் மிகுந்த அந்த செய்கையில் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு சாலையை வேடிக்கை பார்த்தாள்..
'இது யாரோட காரா இருக்கும்..?'
அவளுக்கு வாகீசனின் காரை அடையாளம் தெரியும்.. இந்தக் கார் வாகீசனின் காரல்ல..
'உண்மையிலேயே சுட்டுட்டுத்தான் வந்திருப் பானோ..'
அவள் நினைத்து முடிப்பதற்குள் காபி ஷாப்பின் முன்னால் கார் நின்றது.. யதுநந்தன் சாவியை எடுத்துக் கொண்டு இறங்கினான்..
"என்ன..?" என்றாள் மீரா..
"இங்கேதான் காரைச் சுட்டேன்.. சுட்ட இடத்திலேயே விட்டுட்டுப் போகலாம்ன்னு ஞானோதயம் வந்தது.. அதான் நினைப்பு மாறுகிறதுக்குள்ள ஓடோடி வந்துட்டேன்.." விளக்கம் சொன்னவன்..
"இறங்கு.." என்றான்..
"எதற்கு..?" என்றாள் அவள்..
"சுட்ட காரில உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணப் போற..? காருக்குச் சொந்தக்காரன் உன்னைப் பார்த்தான்னா.. காரோடு உன்னையும் சேர்த்து ஓட்டிக் கிட்டுப் போயிடுவான்.." யதுநந்தன் பயமுறுத்தினான்..
'இதென்னடா வம்பாப் போச்சு..' மீரா காரை விட்டு இறங்கி விட்டாள்..
எதற்கு வம்பு..? யதுநந்தன்தான் எந்தக் கணிப்புக் குள்ளும் அகப்படாத ஜாலக்காரனாக இருக்கிறானே.. அவன் சொன்னதைப் போல செய்து வைத்திருந்தால்.. காரின் சொந்க்காரன் காரோடு மீராவையும் கவர்ந்து சென்று விட மாட்டானா..?
"இப்ப என்ன செய்கிறது..?"
"ம்ம்ம்.. காபி ஷாப்பில் காபி குடிக்கிறது.." இலகுவாக  சொன்னான் அவன்..
மீரா அவனை முறைத்துவிட்டு.. சாலையில் பார்வையை ஓட்டினாள்.. ஏதேனும் ஆட்டோ கிடைத்தால் தேவலை என்றிருந்தது அவளுக்கு.. அவனோ அவளை விசித்திரமாகப் பார்த்தபடி..
"காபி அங்கே கிடைக்காது.. ஷாப்பில்தான் கிடைக்கும்.." என்றான்..
'இவன் இருக்கானே..' அவளுக்கு கோபம் கோபமாக வந்தது..
"உங்களை யார் லிப்ட் கேட்டது..?" எரிந்து விழுந்தாள்..
"கேட்டால்தான் கொடுக்கனுமா..?"
"ஆமாம்.. பெரிதா கார் வைத்திருக்கிறவரைப் போல படு ஸ்டைலிஷா காரைக் கொண்டுவந்து நிப்பாட்டி ஏறுன்னு சொல்லிட்டு.. காபி ஷாப்பில இருந்து தள்ளிக்கிட்டு வந்ததா கதை சொல்கிறிங்க.."
"இது கதையில்லம்மா.. நிஜம்.."
அவனுடைய விளக்கத்தில் மீராவுக்கு சுள்ளென்று கோபம் வந்து விட்டது..
"எது நிஜம்..?" கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டாள்..
"நான் எதைச் சொன்னேனோ அதுதான் நிஜம்.."
"அதாவது.. என்னை அம்மான்னு சொன்னீங்கள்ல.. அதுதான் நிஜமா..?"
"கதையையே மாத்தறியே.. நீ எனக்கு அம்மாவா..? காது கொடுத்துக் கேட்க முடியல.."
"வாய் விட்டுச் சொல்ல முடிஞ்சதோ..?"
"ஓ.. உனக்கு அதுக்குத்தான் கோபம் வந்துச்சா..?"
அவன் கண்கள் மின்னியதில் போடா என்றிருந்தது மீராவிற்கு..
"நான் வீட்டுக்குப் போகனும்.." என்றாள்..
"போயிட்டாப் போகுது.. அதுக்கு முன்னாலே சூடா ஒரு கப் காபி குடிக்கலாம் வா.." என்றான் யதுநந்தன்..
"நான் எதுக்காக உங்ககூட காபி குடிக்கனும்..?"
"காபி வித் யதுநந்தன்னு சொல்லிக்கலாமில்ல.. அதுக்குத்தான்.."
அவன் சுவராஸ்யமாக அவளைப் பார்த்தான்.. முதன் முதலாக அவனுடன் தனிமையில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.. மீராவுக்கு அதை நழுவ விட மனமில்லை.. வீட்டை மறந்து விட்டு.. முகத்தை உம்மென்று வைத்தபடி காபி ஷாப்புக்குள் போனாள்..
"என்ன சாப்பிடற..?"
டேபிள் தேடி அமர்ந்ததும் யது நந்தன் கேட்டான்.. மீரா முறைத்தாள்..
"ஒரு கப் காபி சாப்பிடலாம்ன்னுதானே சொன்னீங்க..?"
"இல்லேன்னு யார் சொன்னது..? அதுக்காக கூட ஒரு கட்லெட்டைச் சாப்பிடக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா..?"
அவளிடம் கேட்டு விட்டு.. பேரரிடம் ஆர்டர் செய்தான் யதுநந்தன்.. பேரர் நகர்ந்ததும்..
"காபி, அதுக்கப்புறம் கட்லெட்.. இப்ப ரசகுல்லாவா..?" என்று அதற்கும் ஒரு பிடிபிடித்தாள் மீரா..
"எந்த ஒரு நல்ல காரியத்தை செய்ய ஆரம்பிச்சாலும்.. ஸ்வீட்டோடதான் ஆரம்பிக்கனும்னு எங்கம்மா சொல்லுவாங்க.." மென்மையாக சொன்னான் யதுநந்தன்..
யதுநந்தனின் அம்மாவைப் பற்றிய பேச்சு வந்ததும்.. மீராவும் அமைதியாகி விட்டாள்.. அவளால் யதுநந்தனுடன் சண்டை போட முடியவில்லை..
"இப்ப என்ன நல்லகாரியம் செய்யப் போறிங்களாம்..?" என்று கேட்கத்தான் முடிந்தது..
"ஸ்வீட் வரட்டும்.. அதைச்சொல்றேன்.." என்றான் யதுநந்தன்..
'என்னச் சொல்லப் போறான்..?' எதிர்பார்ப்பில் மீராவின் மனம் குறுகுறுத்தது..
ஆர்டர் செய்த டிபன் வகைகள் வந்து விட்டன.. ரசகுல்லா கிண்ணத்தை அவள் முன்னால் நகர்த்திய யதுநந்தன்..
"சாப்பிடு.." என்றான்..
ஸ்பூனால் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் மீரா.. அவள் முகத்தில் பரவிய இனிப்பின் ருசியை ஆழ்ந்து பார்த்தபடி ரசகுல்லா விள்ளலைத் தானும் சுவைத்தான் யதுநந்தன்.. தொண்டைக்குள் இறங்கிய இனிப்பின் உணர்வுடன் மீராவின் முகம் பார்த்து..
"ஐ லவ் யு.." என்றான்..
மீரா ஸ்பூனை நழுவ விட்டாள்.. இதுதான் என்று நிச்சயமாகியிருந்த போதிலும்.. அவன் வாய் வழியாக நேரடியாக அந்த வார்த்தைகளை அதுவரை கேட்காமலிருந்ததில் அவள் மனதுக்குள் பத்திரமாக இருப்பதைப் போன்ற பயமற்ற தன்மை இருந்தது.. அப்போது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதில் மீரா திகிலடைந்தாள்..
'சொல்லிட்டானே..' அவளுக்கு பதட்டமாக இருந்தது..
யதுநந்தனுக்கு அந்த பயமெல்லாம் இல்லை.. அவள் விழிகளுக்குள் ஊடுறிவிப் பார்த்தபடி பேச்சைத் தொடர்ந்தான்..
"நீ யார்.. உன் பெயர் என்ன.. இப்படி எதுவுமே தெரியாம உன்னைப் பாத்த அந்த வினாடியிலேயே எனக்கு உன்னைப் பிடிச்சுப் போயிருச்சு.. என்னை நீ அட்ராக்ட் பண்ணினதைப் போல வேற எந்தப் பெண்ணும் அட்ராக்ட் பண்ணினதில்ல.." அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது..
"ப்ளீஸ்.." மீராவின் குரல் நடுங்கியது..
"ஏன்..?" யதுநந்தனின் புருவங்கள் சுருங்கின..
"நீங்க நினைக்கிறதைப் போல இது அவ்வளவு ஈஸியான விசயம் இல்லை.." குரல் உடையச் சொன்னாள் மீரா..
"ஈஸின்னு நானும் நினைக்கலை மீரா.. இமய மலையைப் புரட்டுகிறதைப் போல கடினமாவே இருக்கட்டுமே.. அதுக்காக காதலைச் சொல்லாம விட்டு விட முடியுமா..?"
புருவம் சுளிக்க அவன் பேசிய பேச்சில் மீரா ஈர்க்கப் பட்டாலும்.. அவள் மனதில் இன்ப உணர்வுடன் கூடிய துன்பம்தான் ஏற்பட்டது.. யது நந்தனின் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை..
"உங்களுக்கு என் அப்பாவைப் பற்றித் தெரியாது.." அவள் கண்களில் அப்பட்டமான பயம் இருந்தது..
"தெரியாதுங்கிறதை நானும் சொல்லிட்டேனே.. நீ யார்.. உன் அப்பா யார்ன்னு தெரியாமல்தான் உன்னிடம் என் மனசை விட்டேன்.."
'கடவுளே..' கண்மூடி பரிதவித்தாள் மீரா..
இதோ அவள் முன்னால்.. கம்பீரமான ஆண்மகன் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான்.. அவனை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. அவனாவது அவளை நேரில் பார்த்தபின்னாலதான் காதல்வயப் பட்டான்.. அவளோ அவனை புகைப்படத்தில் பார்த்தபோதே வசீகரிக்கப் பட்டு விட்டாள்..
'இருந்தாலும்..' ஏக்கப் பெருமூச்சு விட்டாள் அவள்..
அவனைப் போல மனதிலிருக்கும் காதலைச் சொல்லிவிட அவளால் முடியுமா..?
"உனக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும்.."
அவன் குரலில் கர்வம் இருந்தது.. அது ஆண்மையின் கர்வம்.. பெண் மனதை வென்று விட்ட கர்வம்..
"இல்லை.." பொய்யுரைத்தாள் மீரா..
"என்ன இல்லை..?" அவன் பார்வை கூர்மையானது..
"என் மனதில் நீங்கள் இல்லை.." அவள் முகம் திருப்பிக் கொண்டாள்..
அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொல்ல அவளால் முடியுமா..?
அவன் புருவங்களைச் சுளித்தான்.. கண்கள் இடுங்க அவளையே வெறித்தான்.. மீரா அவன் பக்கம் திரும்பவேயில்லை..
"பொய்.." ஆணித்தரமாக அவன் சொன்னான்..
"உண்மை.." அவள் மறுத்தாள்..
"ஆர் யு ஷ்யூர்..?" அவன் கண்கள் அவளைத் துளைத்தன..
"யெஸ்.. ஐ ஆம் ஷ்யூர்.." அவனது துளைக்கும் பார்வையை உணர்ந்தும் அவனைப் பார்க்காமல் அவள் சொன்னாள்..
"அப்படியா..?" நிதானமாக கேட்டவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து அவன் தலையில் வைத்துக் கொண்டான்..
"இப்போச் சொல்லு.. உன் மனதில் நான் இல்லை..?"
அவன் குரலில் ஆவேசம் இருந்தது.. எதிர்பாராத அவன் செய்கையில் நிலை குலைந்தாள் மீரா.. கையை உறுவிக் கொள்ள முயன்றாள்.. அவன்பிடி இரும்புப் பிடியாக இருந்தது.. அவளால் கையை உறுவிக் கொள்ள முடியவில்லை..
"சொல்லு.." அவன் உறுமினான்..
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.. தவித்தாள்..
"என் மேல் ஆணை.. பதில் சொல்லு.." அவனது கோபத்தில் துடித்துப் போய் நிமிர்ந்தாள்..
அவன் முகத்தை நேருக்கு நேராக பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது..
"ஆமாம்.." கண்ணீருடன் தலை அசைத்தாள்..
அவன் முகத்தில் வெளிச்சம் பரவினாலும் அவள் கையை அவன் விடவில்லை.. அவனுக்கு உறுதியான.. தெளிவான அவளின் பதில் வேண்டியிருந்தது..
"என்ன ஆமாம்..?"
"என் மனதில் நீங்கதான் இருக்கீங்க.." மீரா சொல்லி விட்டாள்..
"அஃது.." சிரிப்புடன் அவள் கையை விட்டு விட்டான் யதுநந்தன்..
அவன் முகத்தில் பழைய குறும்பும்.. ஆர்வமும் மீண்டிருந்தது..
"அப்படின்னா 'ஐ லவ் யு' சொல்லு.." உல்லாசமாக கேட்டான்..
"ஐ லவ் யு.." என்றாள் மீரா..
"இதை இப்படியா அழுது வடிஞ்சுக்கிட்டே சொல்லுவாங்க.. கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொல்லுறது..?" அதட்டினான்..
"ஐ லவ் யு.." மீரா சிரிக்க முயன்றாள்..
யதுநந்தன் அவளை நெருங்கி அமர்ந்தான்.. அவள் பாதத்தில் அவன் பாதம் படிந்தது.. அவளது தோளைச் சுற்றி அவன் கை விழுந்து அணைத்தது.. மீராவின் பயம் பறந்தோடியது.. முதன் முதலாக உணர்ந்த ஆணின் ஸ்பரிசத்தில் அவளின் தொண்டை உலர்ந்து போனது.. தன்னை மறந்து அவன் தோளில் சாய்ந்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..17
வந்தாள் மகாலட்சுமியே..17
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy