வந்தாள் மகாலட்சுமியே -15

15 பாகீரதியின் முகம் கடினப்பட்டிருந்தது.. அவளைத் தொட முனைந்த கணவனின் கையைத் தட்டி விட்டாள்.. "இது அநியாயம் டீ.. உன் சொந்தக்காரனுக்க...

15

பாகீரதியின் முகம் கடினப்பட்டிருந்தது.. அவளைத் தொட முனைந்த கணவனின் கையைத் தட்டி விட்டாள்..
"இது அநியாயம் டீ.. உன் சொந்தக்காரனுக்காக.. நமக்குள்ள பிரிவினை வரக் கூடாது.."
"அவன் வெறும் சொந்தக்காரனில்ல.. என் அண்ணன் மகன்.."
"நம்ம மகனாவே இருந்துட்டுப் போகட்டும்..."
"நான் அப்படித்தான் அவனை நினைக்கிறேன்.."
"வேணாம்ன்னு நான் சொன்னேனா..?"
"சொல்லித்தான் பாருங்ளேன்.."
பாகீரதி வாதுக்கு அழைத்தாள்.. அந்த விசப் பரிட்சைக்குத் வாகீசன் தயாராக இல்லையே.. அவர் வெற்றிகரமாக பின் வாங்கினார்..
"நான் ஏண்டி சொல்லப் போறேன்.. யாரா இருந்தாலும் நமக்கு நடுவில வர வேண்டாம்ன்னுதானே சொல்றேன்.."
"யது ஒன்னும் அடி முட்டாளில்லை.."
'அப்ப நான்தான் அடி முட்டாளா..?' வாகீசனுக்குள் சினம் வந்தது..
"உன் அண்ணன் மகனை முட்டாள்ன்னு யார் இங்கே சொன்னது..? அவன் கெட்டிக்காரனா இருக்கப் போய்த்தான் அவன் வீட்டை விட்டு விட்டு.. என் வீட்டுக்கு எதிர் வீட்டில காதல் பண்ண ஆரம்பிச்சிருக்கான்.."
"அப்படியா..? இது உங்க வீடா..? என் வீடில்லையா..?"
பாகீரதி எழுந்து.. அந்த இரவு நேரத்தில் பெட்டியைக் கட்ட ஆரம்பித்தாள்.. வாகீசன் பெட்டியைப் பிடுங்கினார்..
"ஏண்டி துன்பப் படுத்தற..?"
"யார்..? நானா இல்லை நீங்களா..?"
"சின்னக் குழந்தையைப் போல பிடிவாதம் பிடிக்காதே.. உனக்கும் எனக்கும் எதிர்வீட்டு சடகோபன் எந்த லெவலில் இருக்காருங்கிறதைப் பத்தி நல்லாவே தெரியும்.. நம்மை மதிச்சு அவங்க பேசறதே பெரிய விசயம்..."
"ஏன்..? நமக்கென்ன குறைச்சல்..? அவங்களும் மனுசங்கதான்.. நாமளும் மனுசங்கதான்.. என்னவோ அவங்க தெய்வப் பிறவிகள்.. வானத்தில இருந்து குதிச்சு எதிர்வீட்டில வாசம் செய்கிறாங்கன்னு சொல்லிக்கிட்டு வர்றீங்களே.."
"பிரண்ட்ஷிப்பா பழகறது வேற.. அந்த வீட்டில பெண் எடுக்கிறது வேற.. இரண்டையும் போட்டுக் குழப்பிக்காதே.."
"நான் எதையும் போட்டுக் குழப்பிக்கலை.. தெளிவா இருக்கேன்.. என் அண்ணன் மகன் ஆசைப்பட்டா அந்த தேவலோக கன்னிகையைக் கூட பெண் கேட்கக் கிளம்பிருவேன்.."
"பாகீ.." வாகீசன் திகைத்துப் போனார்..
ஆக.. அவளுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறது.. தெரிந்தும் தெரியாததைப் போல இருந்திருக்கிறாள்..
'அதானே பார்த்தேன்.. இவளோட சூட்சும அறிவுக்கு இந்த விசயம் எப்படி எட்டாமப் போச்சுன்னுல்ல முழிச்சுக்கிட்டு இருந்தேன்..'
"யது மீராவை பார்த்த முதல் பார்வையிலேயே அவளை அவனுக்குப் பிடிச்சிருக்கிறதை கண்டுக் கிட்டேன்.."
"இப்படியொரு வெடிகுண்ட எப்படி பாகீ சாதாரணமாச் சொல்ற..?"
"ஏன்னா.. யது சாதாரணமானவன் இல்லே..."
சூப்பர் ஸ்டாரை விட பெரிதான பில்ட்-அப்பை தனது அண்ணன் மகனுக்குக் கொடுக்கும் மனைவியை என்ன செய்தால் தகும் என்று அவர் யோசித்தார்..
"இது விளையாட்டுத்தனமில்ல பாகீ..?"
"யது விளையாட்டாய் எதையும் செய்கிறவனில்ல.."
"முடிவா என்னதாண்டி சொல்ற..?"
"யது மனசில மீரா இருக்கா.. மீரா மனசிலயும் அவன் மேலே நோக்கமிருக்கு.. அதை வெளிப்படையாக ஒப்புக்க பயப்படறா.."
"அந்த பயம் உனக்கில்லையா..?"
"இல்லை.." அமைதியாக தலையை அசைத்தாள் பாகீரதி..
"என் அண்ணன் எனக்காக எவ்வளவோ செஞ்சாரு.. நான் ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக.. அவர் ஆசைப்பட்ட பணக்கார நண்பனுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாரு.."
"பாகீ.."
"பதிலுக்கு நான் என்ன செஞ்சேன்..?"
"இப்படி நீ நினைச்சா.. உன் அண்ணன் மகனுக்கு ஏற்ற இடமா பெண் தேடலாம்.. கல்யாணம் பண்ணி வைக்கலாம்.."
"அந்தப் பெண் அவன் மனசுக்குப் பிடிச்ச பெண்ணா இருப்பாளா..?"
"பாகீ.."
"எதுக்காக நீங்க கல்யாணத்தைத் தள்ளிப் போட்டிங்க..? எந்த நம்பிக்கையிலே காத்திருந்தீங்க..? எதை மனசில வைத்துக்கிட்டு எனக்கு வேற ஒரு இடத்திலே கல்யாணம் நடந்த பின்னாலே.. வேற ஒரு பெண்ணைப் பார்க்கிறதைப் பற்றி யோசிக்கலாம்ன்னு சொன்னீங்க..?"
வாகீசனின் மனம் நெகிழ்ந்தது.. அவர் மனம் கடந்த காலத்திற்கு பயணித்தது.. பாகீரதி தட்டி எழுப்பிய காதல் உணர்வுகள் அவருக்குள் மோகத்தீயை மூட்டி விட்டன..
"ஏன்னா.. என் மனசில நீ இருந்த பாகீ.."
"அதைப் போலதான் யது மனசில மீராவும் இருக்கா.. அவ கிடைச்சாத்தான் அவன் வாழ்வும் வாழ்வா இருக்கும்.. என் அண்ணன் மகன் காதலில் தோற்று விடக் கூடாது.."
"அறிவோடதான் பேசறியா பாகீ.. கண்டதும் காதல் பொத்துக்கிட்டு வந்துருச்சா..?"
"இதே 'கண்டதும் காதல்' உங்க மனசிலேயும் ஒரு தரம் வந்துச்சே.. அதை மறந்துட்டுப் பேசினா எப்படி..?"
"நான் உன்னைப் பெண் பார்க்க வந்தவன்டி.."
"அதுக்கு முன்னாலே என்னைப் பார்த்திருந் தீங்களா..?"
"இல்லைதான்.."
மனைவியின் மடக்கலில் அகப்பட்டுக் கொண்டாலும் வாகீசன் பிடித்த பிடியில் பிடிவாதமாக இருந்தார்..
"நம்ப கதை வேற பாகி.. இந்தக் கதை வேற.."
"இருந்துட்டுப் போகட்டும்.. என் அண்ணன் மகனுக்கு என்ன குறைச்சல்..? அழகில்லையா..? படிப்பில்லையா..? வேலையில்லையா..?"
இப்படி அடம் பிடிப்பவளுக்கு எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்துப் போனார் வாகீசன்.. அவருக்குத் தலை வேதனையாக இருந்தது..
"அவங்க கோடிஸ்வரங்கடி.. அவங்களுக்கும் உன் அண்ணன் மகனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.. மீரா சாதாரணப் பெண்ணில்லைடி.. அவ மகாலட்சுமி.. ஐஸ்வர்யம் நிறைஞ்சவ.. அவளைக் கட்டிக்க எப்பேற்பட்ட கோடிஸ்வரன் வரப்போகிறானோ.. தேவையில்லாம உன் அண்ணன் மகன் மனசில எதுக்காக வீண் கனவுகளை வளர்த்துக்கனும்..?"
வாகீசன் என்னவோ நியாயமாகத்தான் எடுத்துச் சொன்னார்.. பாகீரதிதான் அதை தவறாக எடுத்துக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டாள்..
"வீண் கனவை நீங்க காணலாம்.. என் அண்ணன் மகன் காணக் கூடாதா..?"
"என்னடி இப்படிப் பேசற..?"
"வேற எப்படிப் பேசச் சொல்றிங்க..? மீராவுக்குத்தான் கோடிஸ்வர மாப்பிள்ளை வருவானா..? எனக்குக் கூடத்தான் கோடிஸ்வர வீட்டு சம்பந்தம் தேடி வந்தது.. நான் வேண்டாம்ன்னு சொல்லலை..?"
"ம்ப்ச்.. எந்த நேரத்தில எதைப் பேசறா பாரு.."
"பேசினாத்தானே உங்க புத்திக்கு உறைக்கும்..? மீரா மனசில யது இருந்தான்னா எப்பேற்பட்ட கோடிஸ்வரனையும் வேண்டாம்ன்னு சொல்லிருவா.. அவ மகாலட்சுமி தான்.. இல்லேன்னு யார் சொன்னது.. அந்த மகாலட்சுமி என் அண்ணன் மகனைத் தேடி வரப் போகிறா பாருங்க.."
பார்வதியின் அதீத நம்பிக்கையில் வாகீசனுக்கு சிரிப்பதா.. அழுவதா என்று தெரியவில்லை..
"இந்தக் காதல் கதையில நம் நிலைமை என்னாகுமோ.." என்று மட்டும் சொல்லி வைத்தார்..
"எதுவானாலும் நான் எதிர் கொள்ளத் தயாராத்தான் இருக்கேன்.. உங்களுக்கு பயமா இருந்தா வேற ஒரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு உங்க பிள்ளைகளையும் கையிலே பிடிச்சுக்கிட்டுப் போயிருங்க.."
"நீ..?"
"என் அண்ணன் மகனுக்கு சென்னையிலே வேலையிருக்கு.. நான் அவனுக்குத் துணையா இங்கேயே இருந்துக்கிட்டு.. அவன் கல்யாணத்தையும் பேசி முடிக்க முடியுமான்னு பார்க்கிறேன்.."
அப்படியென்றால் அவளுக்கு கட்டின கணவனைவிட.. பெற்ற பிள்ளைகளைவிட அவளுடைய அண்ணன் மகன்தான் அதி முக்கியமானவனாக ஆகி விட்டானா..?
நெஞ்சு பொறுக்காமல் அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக இமைக்காமல் அவரையே பார்த்தாள் பாகீரதி.. வாகீசனின் வாக்குவாதம் தூள் தூளானது..
"பாகீ.." அவர் மனைவியை நெருங்கினார்..
"பாகீதான்.. உங்க பாகீதான்.. உங்களுக்கு மனைவியா.. உங்க பிள்ளைகளுக்கு அம்மாவா.. என் கடமையை குறைவில்லாமல் செய்து விட்டேன்.. யதுவுக்குத்தான் எதுவும் செய்யலை.. அவனுக்காக இதைக்கூட நான் செய்யலைன்னா என் அண்ணனுக்கு நான் தங்கைன்னு சொல்லிக்கிறதில எந்தவொரு அர்த்தமும் இல்லைங்க.."
பாகீரதி தேம்பினாள்.. இளகிப் போன வாகீசன் மனைவியை இறுக்கிக் கொண்டார்.. மெல்ல.. அங்கே யதுநந்தனின் காதல் கதை மறக்கப்பட்டு வேறு கதை ஆரம்பமானது..
மறுநாள் விழித்த போது வாகீசனின் கைகள் பாகீரதியைத் தேடின.. அவள் அருகில் இல்லை.. முதல்நாள் இரவின் இனிய நினைவுகளுடன் அவர் எழுந்து உட்கார்ந்தார்..
"டேய்.. மகேஷ்.. சுரேஷ்.. அடிச்சுக்காம டிபன் சாப்பிடுங்க.."
பாகீரதியின் சத்தம் மட்டும் கேட்டது.. அதற்குள் அவரது பிள்ளைகள் பள்ளிக்குப் போக தயாராகி விட்டார்களா..? என்ற நினைவுடன் மணி பார்த்தார்.. எட்டு என்றது..
'இவ்வளவு நேரமா தூங்கிக்கிட்டு இருந்திருக்கேன்..?'
அயர்வோடு சேர்ந்த புளகாங்கிதம் அவர் முகத்தில் வந்தது.. அறைக்கதவைத் திறந்து வெளியில் வந்தார்..
"பாகீ.. காபியும் பேப்பரும் கொண்டு வாடி.."
குரல் கொடுத்தபடி பால்கனிக்கு வந்தார்.. உடற்பயிற்சி உடையோடு யது நந்தன் நின்றிருந்தான்..
'பய இங்கே நின்னா.. பட்சி எதிர் வீட்டில நிற்கனுமே..'
எதிர்வீட்டைப் பார்த்தார்.. அவரது கணிப்பு சரியாக இருந்தது.. அங்கே தோட்டத்தில் உலாவியபடி மீரா இங்கே பார்த்துக் கொண்டிருந்தாள்.. கையில் ஒரு புத்தகம் வேறு. அவள் அதைப் பிரித்துப் படித்ததிற்கான அறிகுறியே தென்படவில்லை..
'கிழிஞ்சது போ..'
அவருக்கு காபியும்.. பேப்பரும் மறந்து விட்டன.. யதுநந்தனின் மோன நிலையைக் கலைக்க வேண்டும் என்பது மட்டுமே நினைவினில் பிரதானமாக இருந்து வைத்ததில் அவர் தொண்டையைச் செருமினார்.. யதுநந்தன் அவரைப் பார்த்தான்.. எதிர் வீட்டுத் தோட்டத்திலிருந்த மீராவும் அவரைப் பார்த்து விட்டு அவசரமாக புத்தகத்தைப் பிரித்தாள்..
'தலைகீழா இருக்கா.. இல்லே.. நேராவே இருக்கா..'
அவருக்கு சந்தேகமாக இருந்தது.. புத்தகத்தை உற்றுப் பார்த்ததார்.. இங்கிருந்து எதிர்வீட்டுத் தோட்டத்தில் மீராவின் கையில் இருக்கும் புத்தகம் தலைகீழாக இருக்கிறதா.. இல்லை.. நேராகவே இருக்கிறதா என்று கண்டறிய அவரால் முடியவில்லை..
"குட்மார்னிங் மாமா.." யதுநந்தன் கர்லாக்கட்டையை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தான்..
மறக்காமல் அவன் எதிர் வீட்டைப் பார்த்துக் கொள்ள.. அதை மறக்காமல் வாகீசனும் பார்த்து வைத்துக் கொண்டார்..
'என்னைப் பார்த்தவுடனே கர்லாக்கட்டை இவன் கைக்குப் போயிருமே..' மனதுக்குள் காய்ந்தார்..
வாகீசனுக்கும் உடற்பயிற்சிக்கும் வெகு தூரம்.. நடப்பதற்குக் கூட அவர் கணக்குப் பார்ப்பார்.. அப்படிப்பட்ட வாகீசனின் முன்னிலையில்தான் யதுநந்தன் கர்லாக் கட்டையைத் துக்கி இலகுவாக சுற்றி வைத்தான்..
'என்னைக் கடுப்பேத்தனும்னா இவனுக்கு அல்வாத் துண்டைச் சாப்பிட்டதைப் போல இருக்குமே..' அடிக் கண்ணால் மைத்துனன் மகனை முறைத்தார்..
அதற்கு முன்னால் யதுநந்தன் உடற்பயிற்சிக் கருவிகளோடு அவர் வீட்டில் மையம் கொண்டதில்லை.. அதிகபட்சமாக ஒருவாரம் தங்குபவன் அவற்றைத் தூக்கிக் கொண்டு வந்ததில்லை..
இப்போதுதான் அப்படியில்லாமல் போய் விட்டதே.. அவனுக்கு சென்னையில்தான் வேலை என்றாகி விட்டதே.. அவன் ஆரம்பித்திருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு என்றைக்கு பூர்த்தியாகுமோ.. அன்றுதானே அவன் சென்னையை விட்டு கிளம்புவான்.. அப்போதும்
கூட அடுத்து ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பை சென்னையிலேயே கட்ட வேண்டி வந்து விட்டால் கிளம்பாமல் தேங்கி விடுவானே..
"என்ன மாமா.. யோசனை பலமாயிருக்கே.."
எதிர்வீட்டின் தோட்டத்தைப் பார்த்தபடி யதுநந்தன் கேட்டு வைத்ததில் வாகீசன் கடுப்பாகி.. மண்டை காய்ந்து போனார்..
'கேள்வி இங்கே.. பார்வை அங்கேயா..?'
வாகீசன் பார்த்தபோது மீரா... அவர் வீட்டு பால்கனியைப் பார்த்தபடி செடி தடுக்கி விழப் போனாள்.. யதுநந்தனின் கை கர்லாக்கட்டையை சுழற்றுவதை நிறுத்திவிட்டது.. அவன் வானத்தில் பறந்து எதிர்வீட்டுத் தோட்டத்தில் போய் இறங்கி விட உத்தேசித்தவனைப் போல பால்கனியின் கைப்பிடிக்கு பக்கத்தில் போனான்..
'இவன் பண்ற அலம்பலைத் தாங்க முடியலையே சாமி..'
வாகீசனுக்கு அதிகாலையிலும் வியர்த்தது.. கலெக்டரின் கழுகுப் பார்வைக்கு இது அகப்படாமல் இருக்க வேண்டுமே என்று கவலை கொண்டார்..
நீ எப்போது கிளம்பப் போகிறாய் என்று யதுநந்தனிடம் கேட்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது..
அப்படி அவர் கேட்டுவிட்டால் ரோசக்கார யது நந்தன் உடனடியாக அந்த வீட்டை விட்டு ஓர் நொடிகூடத் தாமதிக்காமல் கிளம்பிப் போய் விடுவான்தான்.. அதில் அவருக்கு கிஞ்சித்தும் சந்தேகமில்லை.. கூடவே அவனுடைய அன்பு அத்தையான பாகீரதியும் கிளம்பிப் போய் விடுவாளே..
அந்த இடத்தில்தான் அவரால் யதுநந்தனை அசைக்க முடியாமல் போனது.. அவன் மீது பாசம் காட்டி பாகாய் உருகும் பாகீரதியை மனைவியாகப் பெற்ற வாகீசன்.. கலெக்டரின் கடும்பகைக்கு அஞ்சினால் முடியுமா..?
இயலாமையுடன் வாகீசன் பெருமூச்சு விட்ட போது.. யதுநந்தன் எதிர் வீட்டைப் பார்த்து இமைசிமிட்டிக் கொண்டிருந்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே -15
வந்தாள் மகாலட்சுமியே -15
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy