வந்தாள் மகாலட்சுமியே. -11

11 அன்று இரவும் அவளுக்கு கனவு வந்து தொலைத்தது.. இந்தக் கனவில் அவன் உடற்பயிற்சி செய்தபடி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.. அவள் வெட்கிச் சி...

11

அன்று இரவும் அவளுக்கு கனவு வந்து தொலைத்தது.. இந்தக் கனவில் அவன் உடற்பயிற்சி செய்தபடி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.. அவள் வெட்கிச் சிவந்த போது.. கால்பந்தாட்ட வீரனாய் கையில் வெற்றிக் கோப்பையுடன் வந்து அவளைத் தூக்கிச் சுழற்றி சந்தோசம் கொண்டாடினான்..
விழித்துக் கொண்ட மீராவுக்கு தூக்கம் போனது.. அவள் மிரண்டாள்.. தினமும் அவனைப் பற்றி எதை நினைத்தாலும்.. அதைப் போலவே அவள் கனவில் அவன் வந்து சேர்வதில் பயம் கொண்டாள்..
நீ எதுவாக நினைக்கிறாயோ.. அதுவாகவே நான் ஆவேன் என்கிறாராம் மாயக் கிருஷ்ணன்..
இவனும் மாய யதுநந்தனோ..?
அடுத்தநாள் எதிர் வீட்டுப் பக்கமே போகக் கூடாதென்று சங்கல்பம் செய்து கொண்டாள் மீரா.. மாலை வரை அந்த வைராக்கியம் நீடித்தது.. கல்லூரி விட்டு வந்தவள் வீட்டிலிருந்த உறவினர் கூட்டத்தில் அரண்டு போனாள்.. அத்தனையும் அறுபதுகளைத் தாண்டிய முதியவர்களின் கூட்டமாக இருந்ததில் அவளுக்கு எங்கே போய் ஒளிந்து கொள்வதென்றே தெரியவில்லை.. முதியவர்களை அவளுக்குப் பிடிக்கும்தான்.. சடகோபனைப் போலவே அறிவுரைகளை அவர்களும் அள்ளி வழங்குவது தான் அவளுக்கு அலர்ஜி..
"இதோ மீரா வந்திட்டாளே.."
"வாம்மா மீரா.. எதில வந்த..? காரிலதான..?"
"பின்னே.. பஸ்ஸிலேயா வருவா..? சடகோபன் மகள் பஸ்ஸில் ஏறுகிறதாவது.."
'ஏறினால் என்ன..?' மீராவுக்கு தலையை வலித்தது..
சடகோபன் மகள் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா..? இல்லை சாஸ்திரம் ஏதாவது சொல்கிறதா..?
'நான் ஏறினா பஸ் என்னாகும்..?'
பரிட்சித்துப் பார்த்து விட முடிவு செய்தாள் மீரா..
'நாளைக்குப் பஸ்தான்.. என்னதான் நடக்குதுன்னு பார்த்து விடலாம்..'
அவளது எண்ணவோட்டத்தை அறியாத பாட்டிகள் அவளை தங்களின் மத்தியில் அமரவைத்து தங்களின் கதா காலேட்சபத்தைத் தொடர்ந்தார்கள்..
"காதில என்ன போட்டிருக்க..?"
"ஸ்டட் பாட்டி.."
"வைரம்தானே.."
"ஊஹீம்.. கோல்டு.."
"நம்ம பொண்ணுக.. வீட்டிலகூட வைரமும் பட்டுமா இருந்து பழகினவங்க.. நீ ஏண்டி இப்படி இருக்க..?"
"எப்படி பாட்டி..?"
"கழுத்தில சின்னச் செயினும்.. காதில திருகாணியப் போல தோடுமா.."
"ஏன் பாட்டி.. இதுக்கென்ன..?"
"இதுக்கென்னவா..? ஜானகி இப்படியா பெண்ணை வளர்த்து வைச்சிருப்பா..? கொஞ்சம் கூட நம்ம பக்கத்து வளமை தெரியலையே.."
அந்தப் பாட்டி என்ன வளமையைச் சொல்கிறாள் என்று மீராவுக்குப் புரியவில்லை.. தலையை வலிப்பதைப் போல உணர்ந்தாள்.. குளித்து உடை மாற்றி வந்தால் தேவலாம்.. எங்கே.. அதற்கு இந்த பாட்டி குழாம் விடாது போல இருக்கிறதே..
"கழுத்தில் வைர அட்டிகையும்.. காதில வைரத் தொங்கட்டானும் கையிலே வைர வளையல்களுமா இருக்கனுடி.."
'சுத்தம்..' மீராவுக்கு சிரிப்பு வந்தது..
அந்தப் பாட்டி சொல்வதைப் போல அலங்கரித்துக் கொண்டு கல்லூரிக்குப் போனால்.. இது திருமண மண்டபம் இல்லையம்மா என்று சொல்லி வீட்டைப் பார்த்து பற்றி விட்டு விடுவார்கள்..
"என்னடி இது.. சாயம் போன உடுப்பைப் போட்டிருக்க..?"
"இது லைட்கலர் சுடிதார் பாட்டி.."
"என்ன கலரோ.. பருத்தித்துணியப் போலயில்ல இருக்கு.."
"யெஸ் பாட்டி.. இது காட்டன் சுடிதார்தான்.."
"ஏண்டாப்பா சடகோபா.. உனக்கென்ன வசதி வாய்ப்பு இல்லையா.. கோடிஸ்வரன் வீட்டில பிறந்திட்டு உன் பொண்ணு பட்டை உடுத்தாம பருத்தியை உடுத்திக்கிட்டு இருக்காளே.."
அந்தப் பாட்டியின் அதட்டலில் தாத்தாக்களின் மத்தியிலிருந்த சடகோபன் திரும்பிப் பார்த்து புன்னகை செய்தார்..
"மீரா இங்கே வாம்மா.." என்றார்..
தப்பித்து பிழைத்து விட்டோம் என்று மீராவுக்கு ஒன்றும் மகிழ்வு வந்து விடவில்லை.. அவளுக்குத் தெரியும்.. பாட்டிகளின் படையெடுப்புக்கு சற்றும் சளைத்ததில்லை தாத்தாக்களின் சொல்வீச்சு என்பது..
'இங்கே என்ன காத்திருக்கோ..'
கால்கள் பின்னப் போனாள்.. சடகோபன் பக்கத்தில் மகளை உட்கார வைத்து பெருமையுடன் தாத்தாக்களைப் பார்த்தார்..
"பிளஸ் டூ படிக்கிறப்பவே கோச்சிங் கிளாஸீக்கு அனுப்பிச்சிட்டேன்.. டெய்லி நியூஸ் பேப்பரும், நியூஸ் சேனலும் பார்க்கச் சொல்லிட்டேன்.. மீராவும் அதையெல்லாம் விடாம ஃபாலோ பண்ணிக்கிட்டு வருகிறா.. நிச்சயமாச் சொல்றேன் பெரியப்பா.. என் மக முதல் அட்டெம்ட்டிலேயே ஸ்டேட் பர்ஸ்ட்டில் ஐ ஏ எஸ் எக்ஸாமை பாஸ் பண்ணிருவா பாருங்களேன்.."
"நீ சொல்லனுமா சடகோபா.. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா..?"
அந்த முதியவரின் பாராட்டுதலில் முகம் விகசித்தார் சடகோபன்.. இந்தப் பழமொழியையே இன்னும் எத்தனை ஆண்டுகாலம்தான் கட்டிக் காப்பாற்றப் போகிறார்களோ என்றிருந்தது மீராவுக்கு..
'ஏன்.. எலிக்குப் பிறந்தது யானையாகுமான்னு கேட்க வேண்டியதுதானே.. புலியை விட எலி எந்தவகையில் மட்டமாம்..? அதாவது ஆளை அடிக்கும்.. எலி அப்படியா..? மசால்வடையோடு சமர்த்தா நின்று விடுமே..'
மகளின் எண்ணவோட்டத்தை அறியாமல் வாஞ்சையுடன் அவள் தலையை வருடிக் கொடுத்தார் சடகோபன்..
பட்டத்து இளவரசியை நாடாளும் சக்கரவர்த்தி வாஞ்சையுடன் முடி கோதுவதைப் போன்ற தோரணையுடன் இருந்தது அவர் செயல்..
மீராவுக்கு அந்த இளவரசி கோலத்தை கலைய வேண்டும் போல இருந்தது.. எந்தவிதத் தளைகளு மில்லாமல் விட்டுச் சிறகடிக்கும் அந்தச் சிட்டுக் குருவியைப் போல அவள் சிறகடிக்க விரும்பினாள்.. சுதந்திர வானத்தைத் தேடி அவளது பறவை மனம் தேம்பியது..
"இப்பவே நாட்டு நடப்பை இவ விரல் நுனியில வைச்சிருக்கான்னா பாருங்களேன்.."
"ஐ ஸீ..."
சடகோபனின் பீற்றலில் அந்தப் பெரியவர் சொன்ன 'ஐ ஸீ' மீராவின் வயிற்றில் புளியைக் கரைத்தது.. அவள் பயந்ததிற்கு ஏற்ப.. அவர் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டார்.. இந்தியாவின் தேசியப் பறவையைக் கேட்டிருந்தால் மீரா மிக சந்தோசமாக.. 'மயிலே.. மயிலே..' என்று பாட்டுப் பாடியே காண்பித்திருப்பாள்..
அந்த மனிதர் அப்படியில்லாமல் உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளின் தேசியப் பறவைகளையும் கேட்டு வைத்தார்..
மீரா இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.. சடகோபனின் முகம் சுருங்கியதில் அவளுக்குள் பயம் வந்தது..
"அதுப்பா.. காலேஜ் விட்டதும் குளித்து டிரஸ் சேன்ஜ் பண்ணி டிபனை வயிற்றுக்குள் போட்டுக்கலை.. வந்ததும் தாத்தா பாட்டி மத்தியிலே உட்கார்ந்துட்டேன்.. மதியமும் லன்ச் சாப்பிடலைப்பா.. பசிக்குது.."
தப்பிக்க அவள் சொன்ன காரணங்களில் சடகோபனின் முகச் சுருக்கம் அகன்று விட்டது.. தந்தையின் அக்கறையுடன்..
"மை காட்..! காலையில் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டதோட இருக்கிறாயா..? என்ன பெண்ணம்மா நீ.. முதல்ல பிரஷ்ஷாகிட்டு டிபன் காபி சாப்பிட்டுட்டு வா.. மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்.. இல்லையா பெரியப்பா.."
"யெஸ்.. யெஸ்.. ஐ அக்ரி வித் யுவர் வெர்டுஸ் சடகோபா.."
அந்தத் தாத்தா ஓய்வு பெற்ற நீதிபதியென்ற மிடுக்குடன் இருப்பவர்.. அவர் மட்டுமல்ல.. அங்கேயிருந்த அத்தனை தாத்தாக்களுமே ஏதாவது ஒரு துறையில் வல்லுனராக இருப்பவர்கள்..
'இப்படியா தாத்தா பாட்டிகளின் கூட்டம் ஒட்டு மொத்தமாக எங்க வீட்டை முற்றுகையிடனும்..?'
வெறுத்துப் போனவளாக குளிக்கப் போனாள் மீரா.. குளித்து உடை மாற்றியவள் செல் போனில் ஜானகியை அழைத்து மாடிக்கே அவளின் டிபன் காபியை அனுப்பி வைக்கச் சொன்னாள்..
"ஏண்டி.." என்ற ஜானகி..
"ம்மா.. கையெடுத்துக் கும்பிட்றேன்.. என்னைத் திரும்பவும் தாத்தா பாட்டிக மத்தியிலே மாட்டி விட்டுராதீங்க.." என்ற மகளின் இறைஞ்சலில்..
"சரி.. சரி.." என்று டிபன் காபியோடு மாடியறைக்கு வந்தாள்..
ஆசுவாசமான மீரா.. பசியாறிவிட்டு.. எதற்காக ஒட்டு மொத்த தாத்தா பாட்டிகளின் கூட்டமும் அவர்களின் வீட்டை நோக்கிப் படையெடுத்திருக்கிறது என்று விசாரித்தாள்..
"கூட்டாப் போயி கங்கையில குளிக்கப் போகிறாங்களாம்.." ஜானகியின் தகவலில்..
"கங்கையைக் கலக்கப் போகிறாங்கன்னு சொல்லுங்க.." என்று எடுத்துக் கொடுத்தாள் மீரா..
"பெரியவங்க.. அவங்க காலத்திலே இருந்துதான் பேசுவாங்க.."
"பேசட்டும்.. தாராளமா பேசட்டும்.. என்னை மட்டும் கேட்கச் சொல்லாதீங்க.. அப்பாவும், நீங்களும் கேட்டுக்கங்க.."
"என்னவோ செய்.."
"எதிர் வீட்டுக்கு ஓடப் போறேன்.."
"எப்படிப் போவ..? கீழே வந்தா மாட்டிக்குவ.."
"மாடியில பின் பக்க வழின்னு ஒன்னு எதுக்கு இருக்கு..?"
"நீ பிழைச்சுக்குவடி மகளே.."
"ம்மா.. இப்பத் தப்பிப் பிழைக்கனும்.. அதுதான் ரொம்ப முக்கியம்.."
மீராவின் பயத்தில் ஜானகி வாய் விட்டுச் சிரித்தாள்.. அவள் அந்தப் பக்கம் போனதும்.. மீரா இந்தப்பக்கமாக எழுந்து பின்பக்க வழியாக தோட்டத்துக்குள் இறங்கினாள்.. வாசல் பக்கமும் தாத்தாக்களின் தலைகள் தெரிந்ததில்.. செடி மறைவில் பதுங்கிப் பதுங்கி.. கேட்டை நோக்கி நகர்ந்தாள்.. ஒருவழியாக கேட்டை அணுகியதும்
விட்டுச் சிறகடித்து எதிர் வீட்டை நோக்கி பறந்தோடி விட்டாள்..
'ஹப்பாடி...'
நெஞ்சில் கை வைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே நின்று விட்டாள்..
அங்கே.. வாகீசன் வீட்டுப் போர்டிகோ தூணில் சாய்ந்து நின்று முன்னங்கைகளைக் கட்டியபடி அவளையே குறும்பும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் யது நந்தன்..
அவனைக் கண்டதும் முதல் நாள் இரவில் அவனை இருளில் மறைந்து நின்று அவள் பார்த்ததை.. அவன் பார்த்து விட்ட நினைவுதான் மீராவுக்கு முதலில் வந்து தொலைத்தது.. அடுத்து அவள் கண்ட கனவு.. கனவில் வந்த அவனது உடற்பயிற்சித் தோற்றத்தில்..
'ச்சீ..' என்று அவள் வெட்கிச் சிவந்தாள்..
அவன் கண்களில் மின்னல் வந்தது.. என்ன என்று கேட்கும் விதமாக புருவங்களை உயர்த்தினான் அவன்..
அடுத்து அவன் கால் பந்தாட்ட வீரணாக வெற்றிக் கோப்பையுடன் அவள் இடைபற்றித் தூக்கிச் சுழற்றியதை நினைத்துப் பார்த்தவளுக்கு..
'இவன் ஜெயிச்சா என்னைத் தூக்கிச் சுற்றுவானாமா..?' என்ற கேள்வி வந்தது.. அந்த கோபத்தில் அவனது புருவ உயர்த்துதலுக்கான பதிலாக..
"என்ன..?" என்றாள்..
"என்ன..?" அவனும் கேட்டான்..
இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் வீட்டுப் பக்கம் நகரப் போனாள் மீரா..
"உனக்கு ஒளியறதுன்னா ரொம்பப் பிடிக்குமோ.." என்றான் அவன்..
மீரா அப்படியே நின்று விட்டாள்.. அவன் கண்களின் புன்னகை முதல் நாளைய இரவை நினைவுறுத்தியதில் அவனை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தாள்.. இருளின் மறைவில் அவள்தான் ஒளிந்து மறைந்து அவனைத் தேடினாள் என்பதை அவன் எப்படி நிருபிப்பான் என்ற தைரியம் வந்ததில்..
"யார் ஒளிஞ்சு மறைஞ்சு உங்களைப் பார்த்தது..?" என்று படபடத்தாள்..
அவன் பதில் சொல்லாமல் அவளையே குறுகுறுவென பார்த்ததில் அவளின் படபடப்பு அதிகரித்தது..
"இவர் பெரிய ஹீரோ.. அழகிலே மன்மதன்.. இவரை ஒளிஞ்சு மறைஞ்சு நான் பார்க்கிறேன்.. நினைப்புத்தான்.." என்றாள்..
"யாருக்கு.. யாரைப் பற்றிய நினைவு..?" அவன் நிதானமாக கேட்டான்..
'திமிரைப் பாரேன்..' அவளின் கோபம் அதிகரித்தது..
"நிச்சயமா எனக்கு உங்களைப் பற்றின நினைவில்லை.. போதுமா..?" வலது உள்ளங்கையை விரித்துக் காண்பித்து கோபம் கொப்பளிக்கச் சொன்னாள்..
"அப்படின்னா எனக்கு உன்னைப் பற்றின நினைவு இருக்குங்கறியா..?" அதே நிதானத்துடன் அவன் கேட்டான்..
"யாருக்குத் தெரியும்..?" அவளும் பட்டென்று சொல்லி விட்டாள்..
"ஓ.." அவன் கண்களின் மின்னல் அவளைத் தாக்கியது..
"நான் என்னவோ நீ தோட்டத்திலே செடி மறைவிலே ஒளிஞ்சு மறைஞ்சு வெளியில் வந்ததைப் பார்த்து விட்டுத்தான் சொன்னேன்.. நீ வேற எதையோ சொல்கிறயே.." கண்களில் சிரிப்புடன் அவன் சொன்னதில் அவளுக்கு வெட்கமாகி விட்டது..
'நான்தான் வாயை விட்டு மாட்டிக்கிட்டேனா..?'
அவன் முகம் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி அவள்..
"ஸாரி.." என்று முணுமுணுத்தபடி நகரப் போனாள்..
"எதுக்கு ஸாரி..?" அவன் மீண்டும் புருவங்களை உயர்த்தினான்..
அத்துடன் நில்லாமல் அவள் அருகில் வேறு நெருங்கி நின்றான்..
"நேத்து மகேஷிடம் என்ன கேட்ட..?" என்று வினவினான்..
"என்ன கேட்டேன்..?" அவள் குழம்பினாள்..
"உங்க வீட்டு அத்தான் எங்கேன்னு கேட்கலை..?"
"ஆமாம்.. கேட்டேன்.. அதுக்கென்ன..?"
"உங்க அத்தான் எங்கேடான்னு கேட்டிருந்தா அதில ஒரு அர்த்தமிருக்கு.. அதை விட்டுட்டு உங்க வீட்டு அத்தான் எங்கேடான்னு கேட்டா அதுக்கு என்ன அர்த்தம்..?"
"என்ன அர்த்தம்..?"
மீரா அவனிடமே திருப்பிக் கேட்டாள்.. அந்த வார்த்தையில் என்ன அர்த்தம் பொதிந்திருக்கக் கூடும் என்று அறியும் ஆவல் அவளுக்கே வந்து விட்டது..
"நான் மகnஷீக்கு மட்டும் அத்தானில்ல.. உனக்கும் அத்தான்தான் என்று அர்த்தம்.."
"என்னது..?!..."
அவனின் அசாத்திய தைரியத்தில் அவள் சிலையாகி விட்டாள்.. அவளுக்கு அவன் அத்தானா..?
"பின்னே இல்லையா..?" என்றான் அவன்..
"ஹலோ மிஸ்டர் அத்தான்.." கோபத்தில் மீரா மீண்டும் வார்த்தையை விட்டு விட.. அவன்..
"அஃது.." என்றான் கண்களில் மின்னலுடன்..
"நேத்து ராத்திரி விளக்கை அணைச்சுட்டு இருட்டுக்குள் நின்னுக்கிட்டு எதிர்வீட்டில் நான் எங்கேயிருக்கேன்னு ஒளிஞ்சு மறைஞ்சு தேடினது யாராம்..? நீதானே..?"
அவனது அடுத்த கேள்வியில் அவளுக்கு மயக்கம்.. மயக்கமாக வந்தது



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே. -11
வந்தாள் மகாலட்சுமியே. -11
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy