வந்தாள் மகாலட்சுமியே..-10

10 "என்னடா யது.. எம்.ஜி.ஆர் போல டூயட் பாடற..?" பாகீரதியின் கேள்வியில் மீராவுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவனைக் கண்ட நொடி முதல...

10

"என்னடா யது.. எம்.ஜி.ஆர் போல டூயட் பாடற..?"
பாகீரதியின் கேள்வியில் மீராவுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவனைக் கண்ட நொடி முதல் அடிக்கடி அவளுக்கு தூக்கிவாரிப் போடுவதை அவள் உணர்ந்தாள்..
'இதே போல்தானே நேத்து நைட்டில வந்த கனவிலயும் இவன் போஸ் கொடுத்து நின்னான்..'
மீரா பதறி விலகினாள்.. அவளுக்கும் யதுநந்தனுக்கு மான ஈர்ப்பு விசை என்னவாக இருக்கக் கூடும் என்று அவளுக்கு பதட்டமாக இருந்தது.. அது எப்படி அவள் கனவில் ஆடிய அதே போஸில் நனவிலும் அவன் அவளுடன் சேர்ந்து நிற்கிறான்..?
"அது என்ன பாட்டுடா யது.. ம்ம்.. ஞாபகம் வந்திருச்சு.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்ன்ன பாட்டுத்தான.. அதைப் போலவே இருந்துச்சுடா.."
"போதும் ஆண்ட்டி.."
மீரா சங்கடத்துடன் இடைமறித்தாள்.. அதை உணர்ந்தவனைப் போல சற்றுத் தள்ளி நின்ற யதுநந்தன்..
"தெரியாம என்மேல மோதிட்டாங்க அத்தை.. கீழே விழப் போனாங்க.. தாங்கிப் பிடிச்சேன்.. தட்ஸ் ஆல்.. இதுக்குப் போயி எம்.ஜி.ஆரை எதுக்காக டிஸ்டர்ப் பண்றிங்க..?"  என்றான்..
"என்னவோ போடா யது.. எனக்கென்னவோ அந்த டூயட்டை நேரில பாத்ததைப் போலவே இருந்துச்சு.." பாகீரதி உள்ளே போய் விட்டாள்..
'அதே பாடல்..!'
அதே கண்கள் என்ற ரீதியில் மீராவின் உடல் சிலிர்த்தது.. அவளையே பார்த்தபடி நின்றிருந்த யது நந்தனின் மனதில் என்ன எண்ண ஓட்டம் ஓடுகிறது என்று அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. அவன்தான் உணர்வுகள் துடைக்கப்பட்ட முகமாக சலனமின்றி நிற்கிறானே..
'கல்லுளி மங்கன்..'
மனதுக்குள் அவனுக்கு பெயர் சூட்டும் வைபவத்தை நடத்தினாள் மீரா.. அதை அவளது முகக்குறிப்பு உணர்த்தி விட்டது போல..
"அத்தானுக்கு என்ன பெயர் அக்கா..?" என்று படு உற்சாகமாக கேட்டான் மகேஷ்...
"டேய்.. டேய்.." மீரா அலறிவிட்டாள்..
அவள் மகேஷின் வாயைப் பொத்துவதற்குள் யதுநந்தன் அவன் சொல்வதைக் கேட்டு விட்டான்..
"பெயரா..?" அவன் புருவங்கள் உயர்ந்தன..
இனி மகேஷின் வாயை மூடி என்ன பண்ண என்று மீரா கையை விலக்கித் தொலைக்க.. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட மகேஷ்...
"ஆமாம் அத்தான்.. அக்கா எல்லோருக்கும் பெயர் வைப்பாங்க.." என்று சொல்லி விட்டான்..
"ஏனாம்..? உன் அக்கா என்ன கட்சித் தலைவரா..?" யதுநந்தன் கேலியாக வினவினான்..
"அதுக்கும் மேலே.." என்றான் சுரேஷ்..
"பாருடா.. என் அத்தை பெத்த ரத்தினங்கள் இரண்டும் அக்காவுக்கு கும்மியடிக்கிறதை.. அப்படி யார்.. யாருக்கு உங்க அக்கா என்ன என்ன பெயர் வைத்தாங்க..?" யதுநந்தன் சிறுவர்களின் வாயைக் கிளறினான்..
"எனக்கு ரெட்டை வால் ரெங்குடுன்னு பெயர் வைத்திருக்காங்க.."
மீரா வாயைப் பொத்துவதற்குள் அவளிடமிருந்து நாலடி தள்ளி நின்று 'கிரேட் எஸ்கேப்' ஆன மகேஷ் பெருமையுடன் சொன்னான்..
"இதில உனக்கு இத்தனை பெருமையாடா அத்தை மகனே..?" என்றான் யதுநந்தன்..
"இது மட்டும் இல்லை அத்தான்.."
"இன்னொன்னும் இருக்காடா..?"
"யெஸ் அத்தான்.."
"அது என்னடா அத்தை மகனே..?"
"பதினாலு வயசுப் பிசாசு.."
மகேஷ் சட்டைக் காலரைத் தூக்கி விட்டான்.. அவனை ஓர் பார்வை பார்த்த யதுநந்தன் மீராவையும் ஓர் பார்வை பார்த்தான்.. அவளுக்குள் படபடப்பு வந்து தொலைத்தது.. அவன் பார்வைக்கும்.. அவளது படபடப்பிற்கும் உள்ள கனெக்சன் என்னவாக இருக்கும் என்று அவள் மண்டை காய்ந்தது..
"உனக்கொன்னும் பெயர் வைக்கலையாட சுரேஷ்..?"
யதுநந்தன் பாவம் போல பார்த்தபடி வினவினான்.. அவனுக்குத் தெரியாமல் சொல்லாதே என்று கை  அசைத்து அவனைத் தடுக்கப் பார்த்தாள் மீரா.. அவனோ சட்டென்று திரும்பி அவள் கை அசைப்பதை நிதானமாக பார்வையிட்டான்..
"என்ன..?" அவன் புருவங்கள் ஏறி இறங்கின..
"கொசு.." மீரா பல்லைக் கடித்தாள்..
"ம்ம்ம்..? கொசுத் தொல்லை தாங்கலைதான்.."
பூடகமாக பேசிய யதுநந்தனின் பேச்சிலிருந்து அவன் கொசுத்தொல்லை என்று யாரைக் குறிப்பிடுகிறான் என்று மீராவால் அனுமானிக்க முடியவில்லை.. அவள் கையாட்டியும் கவனிக்காமல்..
"ஏன் இல்லை..?" என்று யதுநந்தன் விரித்த வலையில் சிக்கினான் சுரேஷ்...
'போச்சுடா..' மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் மீரா..
எதற்கோ தப்பி எதுவிலோ விழுந்த கதையாக.. சடகோபனுக்கு பயந்து அவள் புரவிவீரனிடம் வந்தா மாட்டிக் கொள்ள வேண்டும்..?
அவன் கடைந்தெடுத்த கில்லாடியாக இருந்தான்..
"அப்படின்னா உனக்கும் பெயர் சூட்டியிருக் காங்களா..? பலே.. பலே.. எங்கே.. என்ன பெயர்ன்னு வரிசை கட்டிச் சொல்லு பார்க்கலாம்.." என்று சுரேஷை ஊக்குவித்தான்..
"ரௌடின்னு சொல்லுவாங்க.. அப்புறம் வஸ்தாது.."
"ஆஹா.. நம்ம குடும்பத்துக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கேடா கண்ணா.. கேட்கும் போதே உள்ளம் பூரிச்சுப் போகுது.."
"இன்னொரு பெயரும் இருக்கே.."
"எங்கே.. சொல்லு.."
"பத்து வயது குட்டிச்சாத்தான்.."
சுரேஷ் மகா பெருமையுடன் யதுநந்தனைப் பார்த்து விட்டு சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.. யதுநந்தனின் பார்வை மீராவின் மீது படிந்ததில் அவள் உதட்டைக் கடித்தாள்..
"பரவாயில்லை.. எங்க வீட்டு சுட்டிப் பயல்களுக்கு அருமையருமையாய் பெயர் சூட்டியிருக்கீங்க.. பிசாசு..! குட்டிச்சாத்தான்..! இதுக்கே என் அத்தை உங்களுக்கு கோவில் கட்டலாம்.."
அவனின் வஞ்சகப் புகழ்ச்சியில் ஏண்டா இங்கே வந்தோம் என்று ஆகிவிட்டது மீராவுக்கு..
"டேய் மகேஷ்.. சுரேஷ்.. வாங்கடா தோட்டத்துக்குப் போகலாம்.."
அவள் சிறுவர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் போக முனைந்தாள்..
"ஆமாண்டா.. போயி.. உங்களுக்கெல்லாம் பெயர் வைத்த அக்காவை ஊஞ்சலில் உட்கார வைச்சு ஆட்டி விடுங்க.." சிரிக்காமல் சொன்னான் யதுநந்தன்..
"டேய் மகேஷ்.. சுரேஷ்.."
சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் பாகீரதி.. சிறுவர்கள் அங்கே ஓடி விட்டார்கள்.. தனித்து விடப்பட்ட யதுநந்தன் மீராவை கூர்ந்து பார்த்தான்.. அவன் பார்வையில் அவளது கன்னி மனதில் சலனம் வந்தது..
"அத்தான்னு சொல்லக் கண்டிருக்கிறேன்.. அது என்ன உங்க வீட்டு அத்தான்ங்கிறது..?"
யதுநந்தன் சந்தேகம் கேட்டான்.. அவனது பார்வை அவளது ரோஜா மலர் முகத்தைச் சுற்றி வட்டமிட்டது.. மீராவின் மனம் தடுமாறியது.. வித்தியாசமான அவன் பார்வையில் அவள் குழம்பித் தவித்தாள்... அவன் விழிகளில் தெரிந்த ரகசியபாஷையை புரிந்து கொள்ள முடியாமல் பின் வாங்கினாள்..
"மீரா.."
அதற்குள் பாகீரதி அங்கே வந்து விட்டாள்.. அவளுக்கும் யதுநந்தனுக்குமான தனிமை கலைந்ததில் மீரா பாதுகாப்பாக உணர்ந்தாள்.. அவள் முகத்தில் தெரிந்த நிம்மதியில் யதுநந்தனிடம் லேசான கடுமை வந்தது..
"நான் வில்லனில்லை.."
அவன் தாழ்ந்த குரலில் மீராவுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தான்.. அதில் மீரா மீண்டும் தடுமாறினாள்..
"தனியா நின்னா உன் கையைப் பிடிச்சு நான் இழுத்திருவேனா என்ன..?"
இயல்பாக அவளை ஒருமையில் விளித்து உறுமினான் அவன்.. மீராவின் முகம் கூம்பி விட்டது..
"இந்தா.. காபி சாப்பிடு.."
பாகீரதி விச்ராந்தியாக மீராவுடன் பேசியபடி தோட்டத்துக்கு வந்தாள்.. காபியை உறிஞ்சியபடி யதுநந்தனும் கூட வந்தான்.. அவர்கள் தோட்டத்தில் கிடந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.. மகேஷீம்.. சுரேஷீம் அங்கே கிடந்த பந்தை காலால் உதைத்து விளையாட ஆரம்பித்தார்கள்.. யதுநந்தனின் பக்கமாக வந்த பந்தை அவன் லேசாக உதைத்ததில் அது வானத்தில் எழும்பிப் பறந்தது..
"வாவ்.." என்று தன்னையுமறியாமல் சொல்லி விட்டாள் மீரா..
அதில் யதுநந்தன் அவளை ஆழ்ந்து பார்த்து வைத்தான்.. அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.. இதுபோன்ற பார்வைகளை அவன் தவிர்த்தால் தேவலாம் என்றிருந்தது அவளுக்கு..
அதை அவனிடம் யார் சொல்வது..?
"இவன் புட்பால் சேம்பியனாக்கும்.." பெருமையுடன் சொன்னாள் பாகிரதி..
அப்படியா என்று கேட்கப் பயந்து தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் மீரா..
அவள் அப்படியா என்று கேட்டு வைத்துத் தொலைத்தால்.. அவன் அதுதான் சாக்கென்று அவள் கனவில் வந்து புட்பால் விளையாடிவிட மாட்டானா..?
'எதுக்கு வம்பு..?'
அவன் சார்ந்த எந்த ஒன்றிற்கும் நன்றாக இருக்கிறதே என்று சொல்லித் தொலைத்து விடக் கூடாது என்ற விழிப் புணர்வுடன் இருந்தாள் மீரா..
"அது மட்டுமில்லை.."
'இன்னும் வேற இருக்கா..?'
"உன்னைப் போல இவனும் பாட்டு பைத்தியம் மீரா.. அருமையா பாடுவான் தெரியுமோ.."
'ஏன் தெரியாது..?'
முதல்நாள் இரவில் அவன் பாடிய மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்ற பாடலை நினைத்துக் கொண்டாள் மீரா.. அவன் இதழ்களில் மர்மப் புன்னகை வந்தது..
'பெரிய மர்ம யோகி..'
மீரா அவனுக்கு அடுத்த பெயரை சூட்டினாள்.. அவன் கண்களில் அதையறிந்து கொண்ட மின்னல் வந்தது..
'மின்னல் வீரனாக்கும்..'
மூன்றாவது பெயர் வந்ததில் மீராவுக்கே பயம் பிடித்துக் கொண்டது.. இப்படிச் சங்கிலித் தொடரைப் போல வேறு எவருக்கும் அவள் பட்டப் பெயர்களைக் குடுத்ததில்லை..
"டேய் யது.. ஒரு பாட்டுப் பாடுடா.."
பாகீரதி வேண்டுகோள் வைத்தாள்.. அத்தான் பாடப் போகிறான் என்று மகேஷீம்.. சுரேஷீம் பந்தை மறந்து மீராவின் பக்கத்திற்கொருவராய் நின்று பாட்டுக் கேட்கத் தயாரானார்கள்..
"நீங்க என்ன இவங்களுக்கு பாடிகார்டா..?" யதுநந்தன் கேட்டு வைத்தான்..
'இப்ப மட்டும் இவங்கன்னு மரியாதை கொடுப் பானாக்கும்..?' மீராவும் மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்..
       "காதில் மெல்ல..
காதல் சொல்ல..
சாச்சாச்சா.. அந்தக் காலம்
வந்தாச்சா..?"
அவன் சப்தமின்றி மெதுவான குரலில் பாடியதில் மீராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
அந்தப் பாடல்.. முதல் நாள் இரவில் அவள் கட்டிலில் குப்புறப் படுத்து காலை ஆட்டியபடி பாடிய பாடல் அல்லவா..?
'இவன் இருக்கானே..' அவள் முகம் சிவந்தது..
   "கன்ணைத் தொட்டு.. நெஞ்சைத்தொட்டு..
  பெண்ணைத் தொட்டது ஆசை..
    ஆசைக் கனவில் யாரோ பாட..
காற்றில் வந்தது ஓசை..
   என்றுமில்லாமல்.. என்னோடு ஒன்றும் சொல்லாமல்..
ஓராயிரம் கேள்விகள் தோன்றியதோ..
   லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்..
  லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்..
   தக்கத்திமிதா.."
யதுநந்தன் பாடி முடித்ததும் பாகிரதியும் சிறுவர்களும் கை தட்டினார்கள்.. மீரா உதட்டைக் கடித்தபடி பேசாமல் இருந்தாள்.. அவளையே ஊன்றிப் பார்த்த யதுநந்தனின் விழி சொல்லும் மொழிகளில் அவளது இளம் மனது சிக்கித் தவித்தது..
"நீங்கதான் பாராட்டறிங்க அத்தை.. அவங்களுக்கு என் பாட்டு பிடிக்கலைபோல.." என்றான் யதுநந்தன்..
"போடா.. உன் பாட்டைப் பிடிக்கலைன்னுன்னு யாராவது சொல்வாங்களா என்ன..?" பாகீரதி அண்ணன் மகனை செல்லமாக கோவித்தாள்..
அன்று இரவு மீரா அவளறைக்கு வந்தவுடன் விளக்கைப் போடாமல் அறைக்கதவை தாழிட்டு விட்டு.. ஜன்னலோரமாக சென்று மறைந்து நின்று பார்த்தாள்.. எதிர் வீட்டில் அவன் அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.. முதல்நாளைப் போல ஜன்னலோரமாக அவனில்லை..
'எங்கே போயிட்டான்..?'
மீரா.. மறைவிலிருந்து வெளியே வந்து ஜன்னல் கம்பிகளின் மீது சாய்ந்து எதிர் வீட்டை உற்று உற்றுப் பார்த்தாள்.. அவன் அறையில் அவனைக் காணவில்லை என்றவுடன் மனதில் மெலிதான ஏமாற்றம் சூழ்வதை திகிலுடன் உணர்ந்தவள் திரும்பிவிட முனைந்த போதுதான் அவனைக் கவனித்தாள்..
எதிர்வீட்டு பால்கனியில் மெலிதான வெளிச்சத்தில் கைப்பிடியில் சாய்ந்து நின்றபடி.. அவளது அறையின் மெலிதான வெளிச்சத்தில் அவள் நடமாடுவதை அவன் பார்த்தபடி நின்றிருந்தான்..
மீராவுக்கு மூச்சே நின்று விடும் போல ஆகிவிட்டது.. அவனை அவள் தேடுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதில் அவளுக்கு என்னவோ போல ஆகிவிட படுக்கைக்கு ஓடிவிட்டாள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..-10
வந்தாள் மகாலட்சுமியே..-10
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy