ராதையின் நெஞ்சமே -9

9 "நான் தாயில்லாதவளா இருக்கலாம்.. ஏழ்மையில் இருக்கலாம்... இதுக்காக என்னைக்குமே கலங்கி நின்னதில்லை..." அனுராதாவின் படபடப்பி...

9

"நான் தாயில்லாதவளா இருக்கலாம்.. ஏழ்மையில் இருக்கலாம்... இதுக்காக என்னைக்குமே கலங்கி நின்னதில்லை..."
அனுராதாவின் படபடப்பில் முரளிதரனின் இமைகள் சுருங்கின.. அவன் என்ன அவளை நிர்கதியானவள்.. ஏழை.. என்றா சொல்லி விட்டான்..? காதல் சொன்னதற்கு இப்படியொரு பதிலா..?
"வெயிட் ராதா.. இதில உங்க ஏழ்மை எங்கே வந்தது..?"
"அந்தத் திமிர்தானே சார் உங்களுக்கு.." அனுராதாவின் அஞ்சாமையில் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
"எந்தத் திமிர்..?" புருவங்களை உயர்த்தினான்..
"பணத்திமிர்.." ராதா கோபத்தில் மூச்சிரைத்தாள்..
"ஓ.. நீ அப்படி வர்றியா..?" அவன் ஏகவசனத்திற்கு தாவினான்..
"மரியாதை குறையுது சார்.. அப்பவே சொன்னாங்க.."
"யாரு..?"
"என் பிரண்ட்ஸ்தான்.."
"என்ன சொன்னாங்க..?"
"தரன் குருப் ஆஃப் கம்பெனியின் எம்.டி. பெண் பித்துப் பிடிச்சவனாச்சேன்னு சொன்னாங்க.."
"ராதா.."
முரளிதரன் இரைந்தான்.. அவனுடைய சப்தம் ஏஸி அறையை விட்டுக் கடக்காமல் அறையின் நான்கு சுவர்களையும்.. தொட்டுத் திரும்பி எதிரொலித்தது..
"சும்மா கத்தாதீங்க.. எங்கே.. நான் சொன்னதில் உண்மையில்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்.."
ராதாவின் சிவந்த முகத்தில் கோபம் கனன்றது.. முரளிதரனைப் பற்றி அப்படிப்பட்டப் பேச்சுக்கள்தான் உலவிக் கொண்டிருந்தன.. அவனுக்கும் அது தெரியும்.. தெரிந்தாலும் அதுவரை அவன் அதைப்பற்றி அலட்டிக் கொண்டதில்லை...
"என் பாஸ்டைப் பத்திப் பேசாதே.."
"இதையே நான் சொன்னா.. நீங்க கேட்டுக்கு வீங்களா..? இல்லை அப்படி ஒரு பாஸ்ட் எனக்கிருந்திருந்தா இந்தக் காதல் வசனத்தைத்தான் என்னிடம் சொல்லியிருப்-பீங்களா..? நீங்க ஆம்பளைங்க.. எப்படி வேண்டும்னாலும் சுத்துவீங்க.. ஆனா உங்களைக் கை பிடிக்கிற பொண்ணு மட்டும் பச்சை வாழை மட்டையைப் பற்ற வைக்கிற பத்தினித் தங்கமா இருக்கனும்.. வாஹ்ரே.. வா.. எவ்வளவு கெட்டிக் காரத்தனமா யோசிக்கறிங்க.."
"யாரையும் நான் தேடிப் போனதில்லை ராதா.."
"நீங்கதான் குழலூதூம் கண்ணனாச்சே.. உங்களைத் தேடித்தான் அவங்க வருவாங்க.. இதைப் போல நானும் சொல்லலாமில்ல..? ஏன்னா உங்களுக்கு முன்னாலேயே ஏகப்பட்ட ஆப்ளிகேசன்ஸ் வெயிட்டிங்கில இருக்கு.. அதுகளையும் கன்சிடர் பண்ணிப் பழகிப் பார்த்துட்டு அப்புறமா உங்களுக்குப் பதில் சொல்லறேனே.."
எகத்தாளமாக பேசிய அனுராதா மறு நொடியில் கன்னத்தில் அறையை வாங்கினாள்..
"பிய்ச்சுப் புடுவேன் பிய்ச்சு.." விரல் நீட்டி எச்சரித்தான் முரளிதரன்..
"விட்டா ஓவராப் பேசற.. என்னைப் பேசனும்ங்-கிறதுக்காக உன்னையே நீ தாழ்த்திக்குவியா...? இதையெல்லாம் நீ பேசலாமா..?"
அவனின் கோபத்தில் அவள் அசையாமல் நின்றாள்..
"நான் அப்படி.. இப்படி இருந்தவன்தான்.."
"இருக்கிறவர்.."
"இப்ப இல்லை.."
"இது ஒன்னும் மிகப் பெரிய தகுதியில்லை.."
"ஓகே.. மன்னிச்சுக்க.. பழசை மறந்துட்டு என் காதலை ஏத்துக்க.."
"முடியாது.."
"ராதா.."
"எனக்கும் ஒரு மனசிருக்கு... அதில ஆயிரம் கனவிருக்கு.. அந்தக் கனவில வர்ற கதாநாயகன் நிச்சயமா நீங்களில்ல.."
"ஏன்..? எனக்கென்ன குறை..? அழகில்லையா..? படிப்பில்லையா..? பணமில்லையா..? அந்தஸ்தில்லையா..?"
"இது அத்தனையும் எனக்கு வேண்டாம்.. ஒருத்தனுக்கு ஒருத்தின்னு என்னை மட்டுமே நேகிக்கிற ராமனைப் போல புருசன் வேணும்.. அது நீங்க இல்ல.."
"ராதா.."
"எங்க அம்மா செத்துப் போனப்ப என் அண்ணனுக்கு பத்து வயசு.. எனக்கு எட்டு வயசு.. அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த அருமையான வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்தவங்க நாங்க.. அப்படிப் பட்ட பெண்டாட்டி கூட வாழ்ந்த எங்க அப்பா.. அம்மா போன ஐந்தாவது மாசத்திலேயே மறுகல்யாணம் பண்ணிக்கிட்டார்.. புதுசா வாழ்க்கையைத் தொடங்கிக்கிட்டார்.. ரெண்டாவது பொண்டாட்டி.. அவங்க பெத்த பிள்ளைகன்னு தனியா ஒரு குடும்பத்தை அமைச்சுக்கிட்டார்.. நானும் அண்ணனும் அப்பா இருந்தும் அநாதைகளா நின்னோம்.. இதுவே அப்பா போய் அம்மா மட்டும் இருந்திருந்தா எங்க கதி இப்படியாகி இருக்குமா..?"
"நான் அப்படி இல்லை ராதா.."
"எதை வைச்சு நம்பச் சொல்கிறிங்க.. எங்க அம்மா உயிரோடு இருந்தப்ப.. எங்க அப்பாவை இந்த உலகம் ராமர்ன்னுதான் சொல்லுச்சு.. அவரே இப்படி மாறிப் போயிட்டார்.. நீங்களோ ராமனில்லை.. கிருஷ்ணன்..! தெரிந்தே பள்ளத்தாக்கில் குதிக்க நான் தயாரா இல்லை.."
"வேண்டாம் ராதா.. ரொம்பவும் சீண்டாதே.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.. நான் உண்மையாகவே உன்னைக் காதலிக்கிறேண்டி.."
"வாடி.. போடின்னா நடக்கிறதே வேற.. என்னையும் உங்க பணத்துக்கு ஆசைப்படறவங்க லிஸ்டில் சேர்த்துட்-டிங்களா..? இந்த அனுராதா பணத்தைப் பார்க்க மாட்டா.."
"மனசைப் பாரேண்டி..."
"அது இருக்கா உங்ககிட்ட..?"
"இருக்கப் போய்த்தானே உன்கிட்ட காதலைச் சொல்லியிருக்கேன்.."
"எனக்கு உங்கமேல காதல் வரலை மிஸ்டர் முரளிதரன்.."
"பெயரையெல்லாம் சொல்ற.. காதல் வராமலா என் பெயர் மட்டும் உன் வாயில வருது..?"
"கனவு காணாதீங்க முரளிதரன்.. உங்களிடம் வேலை பார்த்தால்தான் உங்களை பெயர் சொல்லிக் கூப்பிடாம 'சார்'ன்னு கூப்பிட வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கும்.. எனக்குத்தான் அந்தத் தேவையே இல்லையே.. இனிமேலும் உங்க கம்பெனியில வேலைபார்க்க என்னால முடியாது.."
"இப்ப என்ன நடந்திருச்சு..?"
"இனிமேலயும் என்ன நடக்கனும்..? உங்க மனசில என்னைப் பத்தின எண்ணம் வந்திருச்சா.. இல்லையா..?"
"ஸோ.. வாட்..?"
"இதுக்கு மேலேயும் இங்கே வேலைபார்க்கிறது எனக்கு நல்லதில்லை மிஸ்டர் முரளிதரன்.."
"சும்மா.. மிஸ்டர்.. மிஸ்டர்ன்ன.. அடித்துப் பல்லைக் கழட்டிருவேன்.. இந்த அளவுக்கு ஏன் ரியாக்ட் பண்ற..? ஐ வாண்ட் டு மேரி யு ராதா.."
"இங்கே விருந்துக்கே அழைக்கலைங்கிறேன்.. நீங்க இலை சரியாய் இருக்குன்னு வியாக்கினம் பேசறிங்க.. இல்லை மிஸ்டர் முரளிதரன்... எந்த நாளிலயும் நான் உங்களுக்கு மனைவியா ஆக மாட்டேன்.."
"ஆக்கிக் காட்டிட்டா..?"
"பணக்காரங்கிற திமிர்..? பணத்தினாலே எதை வேண்டும்னாலும் நீங்க வாங்கலாம்.. என் மனசை வாங்கி விடமுடியாது.."
"உன் முன்னாலே என் மனசைத்தான் காட்டினேன்.."
"அதில என்னைப் போல எத்தனை பெண்களை குடி வைச்சிருக்கீங்க மிஸ்டர் முரளிதரன்..?"
அனுராதாவின் குத்தலான பேச்சில் அசையாமல் நின்றான் முரளிதரன்.. அவளையே பார்த்த அவன் பார்வையில் எதுவோ இருந்தது.. அனுராதா அவன் விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.. பிடிவாதமாக வேறு திசையில் பார்த்தாள்..
அவனும்.. அவளும் மட்டும் இருந்த அந்த அறையின் சூழல் அவள் மனதில் பயத்தை விதைத்தது..
இருந்தாலும் கதவுக்கு அந்தப் பக்கமாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் அவள் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்..
"இல்லை ராதா.." அவன் நிதானமாகச் சொன்னான்..
"என் மனசில யாருமில்ல.. அதில யாரையும் நான் குடிவைச்சதில்ல.. உன்னை மட்டும்தான் குடி வைச்சிருக்கேன்.."
"நான் வேற மனசைத் தேடிக்கிட்டு இருக்கேன் மிஸ்டர் முரளிதரன்.. உங்க மனசில குடியிருக்க நான் வரப் போறதில்ல.."
"ஆல்ரெடி.. நீ குடியேறியாச்சே..."
"சீக்கிரமா காலியாகிரும்... நீங்க அடுத்த டேனன்டைத் தேடிப் பிடிங்க.."
"ஊஹீம்.. ஒருத்திக்கு மட்டும்தான் என் மனசில இடம்.."
"இந்த டயலாக் உங்களுக்கு ஷூட் ஆகலை.. மிஸ்டர் முரளிதரன்.. வேற பேசுங்களேன்.. வேணும்னா மன்மத லீலை.. மயக்குது ஆளைங்கிற டயலாக்கை பேசிப் பாருங்களேன்.. அதுதான் உங்களுக்கு ஷூட் ஆகும்.."
"எனக்குத் திமிர்ன்னு சொல்லிட்டு நீதாண்டி திமிர் பிடிச்சுப் பேசிக்கிட்டு இருக்க.."
"இது நேர்மையோட திமிர் மிஸ்டர் முரளிதரன்.. காட்டமாத்தான் இருக்கும்.. எங்கே.. நீங்கதான் என்னைப் போல யாரையும் மீட் பண்ணியிருக்க மாட்டிங்களே.. நீங்க மீட் பண்ணியதெல்லாம் உங்க பணத்துக்கு விலை போகிற கூட்டம்தானே.."
"அதனாலதாண்டி உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.."
"அதனாலதான் உங்களை எனக்குக் கொஞ்சும் கூடப் பிடிக்கலை மிஸ்டர் முரளிதரன்.."
"பிடிக்க வைச்சுட்டா..?"
"உங்களால் அது முடியாது.."
"முடிச்சுக் காட்டறேன்.. இதுவரைக்கும் நான் ஆசைப்பட்ட எதையும் அடையாம விட்டதில்லை.."
"அது ராதையின் நெஞ்சமா இருந்திருக்காது முரளிதரன்.."
"என்னடி சொல்ற..?"
"நீங்கதானே என்னை ராதா.. ராதான்னு கூப்பிட்டிங்க..? உங்க பாசையிலேயே உங்களுக்குப் பதிலைச் சொல்றேன்.. அப்பத்தானே உங்க மரமண்டையில ஏறும்..?"
"ஓ.. சொல்லு.. சொல்லு..."
"இந்த ராதையின் நெஞ்சம்.. ராமனுக்குத்தான் சொந்தம்.."
"ஆனா.. ராதை கண்ணனின்.. அதாவது இந்த முரளிதரனின் காதலியாச்சேடி..."
"எனக்குக் கண்ணன்.. ஐ மீன்.. இந்த முரளிதரன் வேணவே வேணாம்.. இந்த ராதை ராமனைத் தேடறவ.. முரளிதரனைத் தேடறவ இல்லை.."
"தேட வைக்கிறேண்டி... இந்த ராதையின் நெஞ்சத்தை எனக்குச் சொந்தமாக்கிக் காட்டறேன்..." முரளிதரன் சூளுரைத்தான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே -9
ராதையின் நெஞ்சமே -9
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy