ராதையின் நெஞ்சமே. -23

23 சின்ன அபார்ட்மெண்ட்தான்.. ஆனால் நேர்த்தியாகவும்.. அழகாகவும் இருந்தது.. அதிக பொருள்கள் இல்லாததால் விசாலமாகவும் தெரிந்தது.. சமையலறையில் ...

23

சின்ன அபார்ட்மெண்ட்தான்.. ஆனால் நேர்த்தியாகவும்.. அழகாகவும் இருந்தது.. அதிக பொருள்கள் இல்லாததால் விசாலமாகவும் தெரிந்தது.. சமையலறையில் அனுராதா வேலை செய்து கொண்டிருப்பதை.. ஹாலில் அமர்ந்த வண்ணம் முரளிதரனால் பார்க்க முடிந்தது.. முரளிதரனின் வீட்டிலிருந்த அவர்களுடைய அறையை விட அளவில் சிறியதாக இருந்த அந்த அபார்ட்மெண்டில் முக மலர்ச்சியுடன் எப்படி அனுராதாவால் வலம் வர முடிந்தது என்று முரளிதரனுக்குப் புரியவே இல்லை..
"நீ இந்த வீட்டின் மருமகள்.. கோடிஸ்வரக் குடும்பத்தில் நீ வாழ்க்கைப் பட்டிருக்கிறாய்ன்னு உன் அப்பாவும்.. அண்ணனும் நினைத்துக்கிட்டு இருக்காங்க.. நீயாவது அவன்கிட்டச் சொல்லு.. இந்தவீட்டை விட்டுப் போக வேணாம்ன்னு சொல்லு.." தேவகி அனுராதாவின் முகவாயைப் பிடித்துக் கெஞ்சினாள்..
"நான் எப்படி சொல்வேன் அத்தை..?" அனுராதா கேட்டாள்..
"இது அவர் எடுத்த முடிவு.. இதில் தலையிட என்னால முடியாது.."
மருமகள் மறுத்துவிட.. மகனிடம் ஓடினாள் தேவகி..
"சொன்னாக் கேளுடா முரளி.. கடல் போல நம்ம வீடிருக்க.. நீ வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினா பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க.. உன் மனசுப் பிரகாரம் நீ வேற கம்பெனியில வேலை பாரு.. எப்ப உன் மனசு ஆறுதோ.. அப்ப நம்ம கம்பெனிக்கு திரும்பி வா... அதுவரைக்கும் அனுராதா நம்ம வீட்டில இருக்கட்டும்டா.. உன் மருமக எங்கேன்னு கேட்கிறவங்களுக்கு நான் என்ன பதிலைச் சொல்ல..?"
தேவகி பேசப்பேச.. முரளிதரன் அனுராதாவையே பார்த்தான்.. அவன் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் அவள் மனம் பதறியது..
'என்ன சொல்லப் போகிறான்..?'
"வீடு பார்த்திருக்கேன்னுதான் சொன்னேன்ம்மா.. உங்க மருமகளையும் கூடக் கூப்பிட்டுக்கிட்டுப் போகிறேன்னு சொல்லலை.. இது என்னுடைய போராட்டம்.. எனக்காக அவ வசதியைக் குறைச்சுக்க வேணாம்.. கோடிஸ்வர வீட்டு மருமகளா அவ இருப்பா.. நான் மட்டும் தான் வெளியே போறேன்.."
அனுராதா அதிர்ந்து விட்டாள்.. அவள் விழிகளில் தெரிந்த அதிர்ச்சியில் முரளிதரனின் பேச்சு நின்று விட்டது.
'சொன்னது.. நீதானா..?' அவள் விழிகள் கேட்டன..
"நான் அவரோட மனைவி அத்தை.. அந்த உறவுக்கு அப்புறமாத்தான் உங்க மருமகள்ங்கிற உறவு வருது.. எங்கே அவர் இருக்கிறாரோ.. அங்கேதான் நானும் இருப்பேன்.. அவருக்கு இல்லாத வசதி எனக்கு மட்டும் எதுக்கு..? போராடறதும்.. போராடாததும் அவர் உரிமை.. ஆனா.. நான் எங்கே இருக்கனும்னு சொல்கிறது அவர் உரிமையா இருக்கக் கூடாது.. அது என் உரிமை.."
அனுராதாவின் தெளிவான பதிலில் முரளிதரனின் கண்கள் மின்னின.. அவன் ஏதோ சொல்ல வந்து.. தோள்களைக் குலுக்கிக் கொண்டு வெளியே போய் விட்டான்.. அவன் திரும்பி வருவதற்குள்.. அவர்கள் இருவருடைய உடைகளையும் பெட்டிகளில் அடுக்கித் தயாராக காத்திருந்தாள் அனுராதா..
"போகலாமா..?" என்ற அவன் கேள்விக்கு முகமலர்ச்சியுடன் தலையை ஆட்டினாள்..
அவளை விசித்திரமாய் பார்த்தபடி பெட்டிகளை அவன் தூக்கிக் கொண்டான்.. மீதியிருந்த பெட்டிகளை எடுத்துக் கொண்ட அனுராதா.. தேவகியிடம் அவளுடைய நகைப் பெட்டியை ஒப்படைத்தாள்..
"இது நீங்க கொடுத்த நகைகள்தான் அத்தை.. வாடகை வீட்டில் இதைப் பத்திரமா வைத்துக்க முடியாது.."
"அதுக்காக நகைகள் இல்லாம நீ இருப்பியா..?"
"கழுத்தில் தாலிச் செயின் இருக்கு.. கைகளில் வளையல் இருக்கு.. இது போதும் அத்தை.."
"நீயும் அவன்கூடக் கூட்டுச் சேர்ந்திட்டல்ல..?"
"அவர் கூடக் கூட்டுச் சேருகிறதுதான முறை அத்தை..?"
அனுராதா தேவகியை வணங்கி எழுந்தாள்.. மைத்ரேயி அவள் கைகளைப் பிடித்துக் கண்கலங்க சிரித்தபடி கையை உறுவிக் கொண்டாள்.. முரளிதரனைப் பின்பற்றி நடந்தாள்..
அந்த சிறிய அபார்ட்மெண்டை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் வித்தை அனுராதாவுக்கு தெரிந்திருந்தது.. முரளிதரன் அவனுடைய சொந்தச் சேமிப்பிலிருந்து வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிப் போட்டான்..
"அதிகமா வாங்க முடியாது.. அவசரத் தேவைக்குன்னு கொஞ்சப் பணம் ஸேவிங்சில் இருக்கனும்.." என்றவனிடம்..
"இதுவே அதிகம்.." என்று சிரித்தாள் அனுராதா..
அவள் சிரிப்பதை வியப்புடன் பார்த்தவனிடம் புருவங்களை உயர்த்தினாள்..
"உனக்கு வருத்தமாயில்லையா..?" என்றான் அவன்..
"எதுக்கு வருத்தப்படனும்..?" இரவு உணவுக்கு ஆயத்தம் செய்தபடி வினவினாள் அனுராதா..
"இல்லை.. என்னை மேரேஜ் பண்ணக்கிட்டதில உனக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லை.. இந்த மேரேஜால உனக்குக் கிடைச்ச ஒரே நல்ல விசயம் என் வீட்டுக்கு மருமகள் என்கிறதுதான்.. என் வீட்டில சின்ன எஜமானியா.. வசதி.. வாய்ப்போட இருந்த.. உனக்கு அதையாவது கொடுக்க முடிஞ்சதேங்கிற சந்தோசம் எனக்குள்ள இருந்தது.. இப்ப அதையும் கெடுத்து உன்னை வெளியே அழைச்சுக்கிட்டு வந்திட்டேன்.. உன் பிறந்த வீட்டில் கஷ்டப்பட்டதைப் போல கஷ்டப் பட வைக்கிறேன்.. இதில என்மேல உனக்கு வருத்தம் வரலையா..?"
தேங்காயை துருவிக் கொண்டிருந்த அனுராதாவின் கை அப்படியே நின்று விட்டது.. நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கண்களில் குளம் கட்டியிருந்தது.. கண்ணீர் குளத்தை இமை சிமிட்டி கட்டுப் படுத்தியவள் அதை அவன் கண்டு கொள்ளாமலிருக்கும் பொருட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.. தடையை மீறிய கண்ணீர் துளிகள் அவள் கைவிரல்களில் விழுந்து சிதறின..
"நான் அப்படி நினைக்கலை.. என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டதாலே என் துரதிர்ஷ்டக் காற்று உங்க மேலேயும் பட்டிருச்சோன்னுதான் வருத்தப்படறேன்.." கண்ணீரைத் துடைத்தபடி மிக்சியை சரி செய்தாள்..
"பைத்தியமா நீ..?" முரளிதரன் அதட்டினான்..
"தெளிவாத்தான் இருக்கேன்.. எட்டு வயசில தாயைத் தொலைச்சேன்.. வளர்ந்த பின்னாலே.. அண்ணனின் வருங்காலத்தை நினைச்சு அவனைப் பிரிஞ்சேன்.. கண்ணுக்கு முன்னாலே என் அப்பா இருந்தும் அவரை சொந்தம் கொண்டாட முடியாம தள்ளி நின்னேன்.. துயரப் பட்டுக்கிட்டே இருக்கனும்ங்கிறது என் தலைவிதி.. நீங்க சிரிப்பும் சந்தோசமுமா இருந்தீங்க. என்னைக்கு என் மேலே மனசை வைச்சீங்களோ.. அன்னைக்கு உங்களையும் துயரம் சூழ்ந்திருச்சு.."
"அறைதாண்டி வாங்கப் போற.. இவ துயரம் என்னைச் சுழ்ந்திருச்சாம்.. பேசறா பாரு பேச்சு.. உன்னால தாண்டி இந்தச் சூழ்நிலையிலயும் நான் சந்தோசமா இருக்கேன்.."
முரளிதரன் வெடுவெடுத்து விட்டு வெளியே போய் விட்டான்.. அனுராதாவுக்குத் தெரியும்.. தெரு முனை வரை நடந்து விட்டு வருவான் என்பது.. அது அவனது வழக்கம்.. அவள் பொறுமையாக இரவு டிபனை செய்து வைத்து விட்டு சமையலறையை ஒழுங்கு செய்தாள்.. வாசலில் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது..
'அவன் வந்துட்டான்...'
முகம் மலர ஹாலுக்குப் போனாள்.. அங்கே ஸ்ரீதர் நின்றிருந்தான்..
"வாங்க சார்.." வரவேற்றவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக..
"அவரைப் பார்க்க வந்தீங்களா..? வெளியே போயிருக்கிறார்.. வருகிற நேரம்தான்.." என்றாள்..
"நான் உன்னைப் பார்க்க வந்தேன் அனு.." என்றான் ஸ்ரீதர்..
அவனது பேச்சிலும்.. பார்வையிலும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்த அனுராதாவின் முகம் மாறியது.. அவள் மனம் துணுக்குற்றது..
"என்னையா..? என்ன விசயம்..?"
"என்னை விட்டுட்டு.. எம்.டியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்ட அனு..? என்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா உன்னை ராணியைப் போல வாழ வைச்சிருப்பேனே..?" ஸ்ரீதர் உருகினான்..
"ஸ்ரீதர்.." அனுராதாவின் குரல் உயர்ந்தது..
"எங்கே வந்து.. என்ன பேச்சுப் பேசறிங்க.. முதல்ல வெளியே போங்க.."
"மனசு கேட்கலை அனு.. நீ எப்படி வாழ வேண்டியவ தெரியுமா..? பணத்தை பெரிதா நினைக்காதவ.. எனக்கு வாழ்க்கைப் பட்டிருந்தா நிம்மதியா வாழ்ந்திருக்கலாமே அனு.. இதை விட வசதியா நான் உன்னை வாழ வைச்சிருப்பேனே.."
"உளராம வெளியே போங்க.."
"மாட்டேன்.. எம்.டி. கண்ணனைப் போல அனு.. கிருஷ்ணலீலை கொண்டாடினவர்... உனக்கு அவர் தகுதியானவரில்ல அனு.. நான் ராமனைப் போல.. நீ ராமனைத்தான தேடின அனு..? நான்தான் உன் ராமன்.. வந்து விடு.. நாம எங்காவது போய் விடலாம்.."
"சொன்னாக் கேட்க மாட்டியா..?"
அனுராதாவின் கையில் காய் நறுக்கும் கத்தி வந்திருந்தது.. கண்களில் சினம் கொப்பளிக்க.. கத்தியை ஆட்டி வாசலைக் காண்பித்தாள்..
"ஓடியே போய்விடு.. உன் உளறல்களை என்னால் சகித்துக்க முடியலை.. நீ என்னோட ராமனா..? ஆனா நான் முரளிதரனோட சீதைடா.."
"அனு..!"
"கோகுலத்தில் சீதைன்னு படம் வந்தது.. கேள்விப் பட்டிருப்பேன்னு நினைக்கிறேன்.. அதைப் போலதான் இதுவும்.. இந்த ராதையின் நெஞ்சம் முரளிதரனுக்கு மட்டும்தான் சொந்தம்டா.."
"அனு.. அவர் கண்டபடி அலைந்தவர்.."
"இருக்கலாம்.. ஆனா.. அடுத்தவன் பெண்டாட்டி பின்னாலே அலையலை.. புரிஞ்சுக்க.. அதைப்போல அவருக்குன்னு பெண்டாட்டி வந்த பின்னால யார் பின்னாலயும் அலயல.. அவரோட பெண்டாட்டி பின்னால தான் அலைஞ்சார்.. இதைப் பத்தி உனக்கென்ன தெரியும்..? அவர்கூட வாழ்கின்ற எனக்குத்தானே தெரியும்..? பேசாம போயிடு.. கொலைவெறியில் இருக்கேன்.. என்னை கொலைகாரியா ஆக்கிராதே.."
அனுராதாவின் கோபத்தில் ஸ்ரீதர் அரண்டு போய் விட்டான்... முகம் வியர்க்க அதைத் துடைத்தபடி திரும்பியவன் அதைவிட அரண்டு போய் பின் வாங்கினான்.
அங்கே.. கதவின் நிலைமேல் சாய்ந்து கைகளை கட்டியவாறு நின்றிருந்தான் முரளிதரன்..
"பா.. பா.. பா.. பா.." தந்தியடித்தான் ஸ்ரீதர்..
"பா.. பா..ன்னா என்ன ஸ்ரீதர்.. பாசமா..?" புருவங்களை உயர்த்தினான் முரளிதரன்..
"பாஸ்.. பாஸ்.."
"பாஸ்தான்.. உனக்குப் பாஸ்தான்.. இப்ப அந்தப் பதவியில இல்லைங்கிறதால உனக்கு குளிர் விட்டுப் போச்சா..? ஆனா ஸ்ரீதர்.. நான் எந்தப் பதவியில் இருந்தாலும்.. இல்லைன்னாலும்.. அதே முரளிதரனாத்தான இருக்கேன்.. என்ன தைரியம் இருந்தா.. நீ என் வீட்டுப் படியேறி உள்ளே வந்து என் பெண்டாட்டிகிட்டயே காதல் வசனம் பேசுவ..?"
"இல்லை பாஸ்.. அது வந்து.."
முரளிதரன் அழுத்தமான காலடிகளுடன் ஸ்ரீதரை நெருங்கி அவன் சட்டையை கொத்தாகப் பிடித்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான்.. ஸ்ரீதர் சுருண்டு விழுந்தான்.. முரளிதரன் அவனைத் துவம்சம் பண்ணத் தயாராகி காலை ஓங்க.. அனுராதா..
"வேண்டாம்.." என்று முரளிதரனை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்..
"விடு ராதா.." முரளிதரன் திமிறினான்..
"ஸ்ரீதர்.. ஓடிருங்க.." அனுராதா கணவனை விடவில்லை...
ஸ்ரீதர் ஓடிவிட்டான்.. முரளிதரன் கோபம் குறையாமல் அனுராதாவை முறைத்தான்.. அவள் கதவை அடைத்து விட்டு எதுவுமே நடக்காததைப் போல..
"சாப்பிடலாமா..?" என்றாள்..
"ஏண்டி என்னைத் தடுத்த..?" முரளிதரனின் கோபம் குறையவில்லை..
அனுராதா அவனை நெருங்கி.. முதன் முறையாக அவன் தோளில் சாய்ந்து அவன் முகம் பார்த்தாள்.. அவன் உடல் சிலிர்த்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -23
ராதையின் நெஞ்சமே. -23
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy