ராதையின் நெஞ்சமே. -22

22 "ஏன் இப்படிச் செய்தீங்க ஸ்ரீதர்..?" முரளிதரனின் நேரடியான கேள்வியில் தடுமாறிப் போனான் ஸ்ரீதர்.. அவன் சொன்னதாக முரளிதரனிடம் ...


22

"ஏன் இப்படிச் செய்தீங்க ஸ்ரீதர்..?"
முரளிதரனின் நேரடியான கேள்வியில் தடுமாறிப் போனான் ஸ்ரீதர்.. அவன் சொன்னதாக முரளிதரனிடம் சொல்லக்கூடாது என்று கங்காதரனிடம் அவன் சொல்லியிருந்தும் அவர் மகனிடம் அவனைக் காட்டிக் கொடுத்து விட்டாரே என்று மனம் புழுங்கினான்..
"டாடி நீங்க சொன்னதாச் சொல்லலை.. ஆனா.. எனக்குத் தெரியும்.. இதை நீங்கதான் சொல்லியிருப்-பீங்கன்னு.. பிகாஸ்.. இந்த விவரம் எனக்கும்.. உங்களுக்கும் மட்டும்தான் தெரியும்.. மத்தயாருக்கும் தெரியாது.."
"சார்..."
"இது காட்டிக் கொடுக்கும் வேலை ஸ்ரீதர்.. முதுகில் குத்துவது.. இதுவரைக்கும் இதைப் போல நீங்க செய்ததில்லை.. இப்ப ஏன் செய்தீங்க..?"
"கம்பெனி ஹெவி லாஸை பேஸ் பண்ணிருமோன்னு பயந்து போனேன் சார்.."
"அது என் கவலை ஸ்ரீதர்.. டாடியிடம் சொல்லிட்டா மட்டும் அந்தக் கவலை தீர்ந்திருமா..?"
"அவர் ஏதாவது வழி சொல்வார்ன்னு நினைச்சேன் சார்.."
"நோ.. உங்க நினைப்பு அது இல்லை ஸ்ரீதர்.. டாடியும்.. நானும் மோதிக்கனும்னு நீங்க நினைச்சிருக்கீங்க.. ஏன் அந்த நினைவு உங்க மனதில வந்தது ஸ்ரீதர்..? இதுக்கு முன்னாலே நீங்க இப்படிச் செய்ததில்லையே.."
"சார்.."
"இதைவிட அதிகமான நெருக்கடிகளை நான் பேஸ் பண்ணியிருக்கேன்.. அதைப்பத்தி டாடிக்கு தகவல் கொடுத்ததில்லை.. என்னால் எதையும் சரி பண்ண முடியும்ன்னு நினைக்கிறவன் நான்.. இதைச் சரி பண்ணவா என்னால முடியாது..?"
"சார்.."
"உங்க மனசில வேற ஏதோ இருக்கு ஸ்ரீதர்... அது என்ன..? இப்ப என் முன்னால இருக்கிற மில்லியன் டாலர் கேள்வி இதுதான்.. வேற கம்பெனிக்கு விலை போயிட்டிங்களா..?"
ஸ்ரீதர் முகம் கருத்துப் போனான்..
"உங்க கேபினை நான் பார்க்கனும் ஸ்ரீதர்.."
அவனின் பதிலை எதிர்பார்க்காமல் விரைவாக நடந்து விட்டான் முரளிதரன்.. பதட்டத்துடன் ஸ்ரீதர் போவதற்குள் அவனுடைய டேபிளில் இருந்த அனைத்துப் பொருள்களையும் பரப்பி ஆராய ஆரம்பித்து விட்டான்.. அவற்றின் நடுவிலிருந்த அனுராதாவின் புகைப்படத்தில் முரளிதரனின் பார்வை பதிந்தது.. மனைவியின் படத்தைக் கையில் எடுத்தவனின் முகம் ரௌத்ரமானது.. ஸ்ரீதரை நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் சிவந்திருந்தன...
"என்ன இது..?" என்று கேட்டான்..
"இது இப்ப எடுத்த படமில்லை சார்.. அவங்க செக்கரட்டரி வேலைக்கு அப்ளை பண்ணியிருந்த அப்ளிகேசனில் ஒட்டியிருந்த போட்டோ.."
"இது எப்படி உங்க கைக்கு வந்தது..?"
"இப்ப வரலை சார்.. அப்பவே வந்திருச்சு.."
"எப்ப..?"
"அவங்க வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தப்பவே என் மனசில அவங்க மேலே காதல் வந்திருச்சு.."
"ஸ்ரீதர்.. யாரைப் பற்றி யராரிடம் பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியுமா..? ராதா என்னோட வொய்ப்.."
"அது இப்ப.. அப்ப இல்லையே.. என் மனசில காதல் வரக்கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா..? அனுராதாவை நான் காதலிச்சேன்.. அவங்களிடம் என் மனசைத் திறந்து சொல்கிறதுக்குள்ள நீங்க அவங்களைத் துரத்தி விட்டுட்டீங்க..."
"ஸ்ரீதர்.."
"எல்லாம் எனக்குத் தெரியும் சார்.. நீங்க கொடுத்த லவ் டார்ச்சரிலதான் அவங்க வேலையை ரிஸைன் பண்ணிட்டுப் போனாங்க.. அவங்க வீட்டுக்குப் போய் மீட் பண்ணனும்னு நினைச்சேன்.. அவங்க மேல இருக்கிற காதலைச் சொல்லனும்.. அவங்க சம்மதத்தோட பெண் கேட்டுப் போகனும்.. கல்யாணம் பண்ணிக்கனும்.. அவங்களை என் கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துக்கனும்.. இப்படி எத்தனையோ கனவு என் மனசில இருந்தது.. எங்கே..? அதுக்கெல்லாம் டைம் கொடுக்காம நீங்க அவங்க வீடு வரைக்கும் துரத்திக்கிட்டுப் போய் அவங்களைக் கவர்ந்துக்கிட்டுப் போயிட்டிங்களே.. உங்க மனதைத் தொட்டுச் சொல்லுங்க சார்.. அனுராதா முழுமனதா.. விருப்பப் பட்டுத்தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா..?"
ஸ்ரீதரின் கேள்வியில் முரளிதரனின் அந்தரங்கம் அதிர்ந்தது.. அவனுடைய வாழ்வின் அந்தரங்கத்தைப் பற்றிய அந்தக் கேள்வியை முரளிதரன் விரும்பவில்லை.. அதே சமயத்தில்.. அந்தக் கேள்வியில் இருந்த உண்மை அவனை உறுத்தியது..
"நீங்க பணக்காரர்.. உங்களுக்கேத்த இடமாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போகாம.. நான் காதலிச்ச பெண்ணின் மேலே ஏன் சார் கண் வைத்தீங்க..? நான் எனக்கேத்த பெண்ணைத்தானே காதலிச்சேன்..? அதையும் இடையில வந்து நீங்க தட்டிப் பறிச்சுக்கிட்டுப் போனதில நியாயம் இருக்கா சார்..?"
ஸ்ரீதரின் கண்களும் சிவந்திருந்தன.. அவனிடம் எந்த நியாயத்தையும் பேசித் தெளிவு படுத்த முடியாது என்று முரளிதரனுக்குப் புரிந்து விட்டது...
அவன் காதலை இழந்தவன்.. அந்த இழப்பின் வெறியில் முரளிதரனைப் பழிவாங்கத் துடித்திருக்கிறான்.. அதற்கான முதல் அடியாக கங்காதரனிடம் முரளிதரனைப் பற்றிப் போட்டுக் கொடுத்திருக்கிறான்..
முரளிதரன் அனுராதாவின் புகைப்படத்தை அவனுடைய சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.. ஸ்ரீதர்..
"அது என்னோட படம்.." என்று கை நீட்டினான்..
"கையை மடக்கிக்க ஸ்ரீதர்.. இல்லேன்னா உன்கை உன்னிடம் இருக்காது.." எச்சரித்தான் முரளிதரன்..
"இது என் மனைவியின் படம்.. இன்னொருத்தனிடம் இது இருப்பதை நான் விரும்பலை.. பழய கதையை நான் பேச விரும்பலை.. உன் மனசில் என்ன இருந்தாலும் சரி.. என் மனைவியைப் பத்தின நினைப்பு மட்டும் அதில் இருக்கக் கூடாது.. மீறி இருந்ததுன்னு வை.. உன்னை கொலை பண்ணக்கூட நான் யோசிக்க மாட்டேன்.."
ஸ்ரீதர் வெலவெலத்துப் போய் விட்டான்.. முரளிதரன் முகம் இறுக.. அவனைப் பார்த்தான்..
"நீ பெர்சனல் மேனேஜர்தான் ஸ்ரீதர்.. அதில் மாற்றமில்லை.. பட்.. கம்பெனியோட சீக்ரெட் மேட்டரை நீ இனிமே டீல் பண்ண வேண்டாம்.. அதையெல்லாம் நான் பார்த்துக்குவேன்.."
"சார்.."
"உன் மேல இருந்த நம்பிக்கை போன பின்னால்.. உன்னை என்கூட நான் வைத்துக்க முடியாது ஸ்ரீதர்.."
முரளிதரன் அவனுடைய கேபினுக்குத் திரும்பினான்.. லேப் டாப்பை உயிர்ப்பித்தான்.. ஸ்ரீதரின் பொறுப்பில் இருந்த கணக்கு வழக்குகளை அவன் பொறுப்பிற்கு கொண்டு வந்தான்.. அந்த கணக்கு வழக்குகளில் ஸ்ரீதர் உள்புக முடியாதபடி பாஸ்வேர்டை மாற்றி அமைத்தான்..
அடுத்து வந்த நாள்களில் முரளிதரன் பேயாய் உழைத்தான்.. அவன் எந்த நேரம் வீடு திரும்புகிறான்.. எந்த நேரம் கம்பெனிக்குப் போகிறான் என்பது அனுராதாவிற்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது.. அவள் மட்டுமே அவனுக்காக விழித்திருந்து கதவைத் திறந்து விட்டாள்.. அவனுக்கான உணவை மாடிக்கே கொண்டு வந்தாள்.. அவனை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.. விடிவதற்குள் கிளம்புகிறவனை நிறுத்தி.. காபி டிபன் கொடுத்து அனுப்பி வைத்தாள்..
முரளிதரன் தன்னைச் சுற்றிக் கோட்டைப் போட்டுக் கொண்டான்.. அந்தக் கோட்டை உடைத்து உள்ளே போய்வர அனுராதாவால் மட்டுமே முடிந்தது.. அவனுடைய இடைவிடாத உழைப்பில் அவள் துயரம் கொண்டாள்.. அந்த வேதனையுடன் வளைய வந்தவளைத் தேவகியால் காண முடியவில்லை...
"இந்தப் பெண்ணோட முகத்துக்காகவாவது நீங்க பொறுமையாப் பேசியிருக்கலாம்.." கணவனிடம் முறையிட்டாள்..
"என் மேல தப்பிருக்குன்னா நினைக்கிற தேவகி..? அவனுக்குத் தொழில் சொல்லிக் கொடுத்த குரு நான் தான்.. அவன் குருவை மிஞ்சின சிஷ்யன் ஆகிட்டான்.. அதுக்காக இவ்வளவு பெரிய விவரத்தை என்னிடமிருந்து மறைக்கலாமா தேவகி..?"
அவளால் என்ன பதிலைச் சொல்ல முடியும்..? ஒரு புறம் கணவரின் பக்கம் இருந்த நியாயம்..! மறுபுறம் மகன் படும் அவதி..! இவை இரண்டுக்கும் நடுவில் அல்லல் பட்டாள் தேவகி..
ஒருநாள் காலையில் அதிசயத்திலும் அதிசயமாக டைனிங் டேபிளுக்கு சாப்பிட வந்தான் முரளிதரன்.. அவன் அவசரமில்லாமல் எழுந்து கிளம்பியதில் ஆறுதலடைந்திருந்த அனுராதா அவனுக்கான தட்டைப் போட்டுப் பரிமாறினாள்.. அவன் சாப்பிட உட்காராமல் கங்காதரனிடம் சிறு பெட்டியை நீட்டினான்.. அவரின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தன..
"கம்பெனிக்கு வரவிருந்த ஹெவிலாஸை தடுத்து நிறுத்திட்டேன் டாடி.. கம்பெனி இப்ப ஷேஃபா இருக்கு.. இதில அது சம்பந்தமான அத்தனை ஃபைல்ஸீம் இருக்கு.. கூடவே நான் எம்.டி பதவியை ரிசைன் பண்ற லெட்டரும் இருக்கு.."
"வாட்..?"
கங்காதரன் அதிர்ந்து நோக்கினார்.. தேவகி வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்.. மைத்ரேயி..
"என்ன அண்ணா இது..?" என்று ஆட்சேயித்தாள்..
"இல்லை மைத்ரேயி.. டாடி என் செல்ப் ரெஸ்பெக்டைச் சீண்டிப் பார்த்துட்டார்.. எம்.டி பதவி இவர் கொடுத்ததாகவே இருக்கட்டும்.. அதை சொல்லிக் காண்பிக்க இடம்.. பொருள்.. ஏவல்ன்னு இருக்கில்ல.. அதை நினைச்சுப் பார்த்தாரா..? வேலை செய்கிறவங்க முன்னாலே அந்தப் பேச்சு பேசிட்டாரே.. அதுக்கப்புறமும் அந்த எம்.டி சீட்டில் உட்கார்ந்தா எனக்கு முள்ளின் மேல உட்கார்கிற பீலிங்ஸ்தான் வரும்.. புரிஞ்சுக்க.."
"இதை ரிஸைன் பண்ணிட்டு..? என்ன அண்ணா செய்யப் போற..? உனக்குன்னு பிஸினெஸ் வேணாமா..?"
"எனக்குன்னு படிப்பிருக்கு.. அதுக்குத் தோதான வேலையைத் தேடிக்கிட்டேன்.. வாடகைக்கு வீடும் பார்த்துட்டேன்.. இன்னைக்கே கிளம்பப் போறேன்.."
முரளிதரன் சொல்லச் சொல்ல.. தேவகியின் அழுகை அதிகரித்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -22
ராதையின் நெஞ்சமே. -22
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy