ராதையின் நெஞ்சமே. -21

21 காலைக் காபியுடன் அனுராதா வந்த போது கட்டில் காலியாக இருந்தது.. எப்போதும் அவள் காபியும்.. பேப்பருமாக வந்து எழுப்பி விட்ட பின்புதான் முரள...

21

காலைக் காபியுடன் அனுராதா வந்த போது கட்டில் காலியாக இருந்தது.. எப்போதும் அவள் காபியும்.. பேப்பருமாக வந்து எழுப்பி விட்ட பின்புதான் முரளிதரன் எழுந்திருப்பான்.. அன்று அந்த வழக்கம் மாறிப் போனதில் அவள் மனதில் கேள்வி எழுந்தது..
'அதுக்குள்ள எழுந்துட்டானா..?'
அவள் அவனைத் தேடிப் போனாள்.. அறையை ஒட்டியிருந்த பால்கனியில் முரளிதரன் நின்றிருந்தான்.. செல்போனை காதுக்கு கொடுத்திருந்தான்.. அவன் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில் அனுராதா துணுக்குற்றாள்.
"நோ ஸ்ரீதர்.. இது சரியான ஆன்ஸரில்ல.. தப்பு எங்கே நடந்திருக்கு..? உடனடியா எனக்கு இது தெரிஞ்சாகனும்.."
"......"
"ஈஸியா சொல்றீங்களே.. லாஸ் ஆகப் போறது எத்தனை கோடின்னு தெரியுமில்ல.. அதை மனதில வைத்துக்கிட்டுப் பேசுங்க.."
"......"
"நோ.. நோ.. இதைப்பத்தி டாடிக்குத் தெரிய வேண்டாம்.."
"......"
"சொன்னதைச் செய்ங்க ஸ்ரீதர்.. இது என் தன்மானப் பிரச்னை.. நான் எம்.டி யாப் பொறுப்பேத்துக்கிட்ட நாளில இருந்து இப்பவரைக்கும் கம்பெனிக்கு புராபிட்டை மட்டும் தான் கொடுத்திருக்கேன்.. லாஸ் வர விட்டதில்லை.. இப்பப் போய் லாஸ் வருகிறதைப் போல இருக்கு.. என்னால இதை சரிபண்ண முடியும்னு தோணலை.. நீங்க சரி பண்ணிக் கொடுங்க டாடின்னு கேட்கச் சொல்கிறீங்களா.. நெவர்.."
"......"
"எனக்குத் தெரியும்.. நான் பார்த்துக்கறேன்.."
கோபத்துடன் செல்போனை அணைத்து விட்டுத் திரும்பியவனை கவலையுடன் பார்த்தாள் அனுராதா.. அந்தக் கவலையில் முரளிதரன் ஓர்கணம் அசையாமல் நின்றான்.. அவர்களின் பார்வைகள் பின்னின..
"என்ன ஆச்சு..?"
"நத்திங்.. காபியைக் கொடு.."
முரளிதரன் பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்தான்.. அனுராதா நீட்டிய பேப்பரை வாங்கிப் புரட்டியபடி காபியை உறிஞ்ச ஆரம்பித்தபோது.. அனுராதா மெல்லிய குரலில் கேட்டாள்..
"என்னன்னு என்கிட்டக்கூடச் சொல்ல மாட்டிங்களா..?"
முரளிதரனின் பார்வை உயர்ந்தது.. அவளைத் துளைப்பதைப் போல பார்த்தது.. நிதானமாக அவள் மீது பாய்ந்த அந்த கூரிய பார்வையின் வீரியம் தாங்காமல் அனுராதாவின் பார்வை தழைந்தது.. ஒரு பெருமூச்சுடன் அவள் திரும்பப் போனாள்..
"நில் ராதா.." என்றான் முரளிதரன்..
அவள் நின்றாள்.. அவனை ஏறிட்டுப் பார்த்தாள்..
"உன்கிட்டச் சொல்லாததுன்னு எதுவுமே இல்லை.. சொல்லக்கூடாததுன்னும் எதுவுமே இல்லை.. ஏன்னா இந்த முரளியின் நெஞ்சம் என்னைக்குமே ராதைக்கு மட்டும் தான் சொந்தம்.."
அனுராதா உதட்டைக் கடித்தபடி தலைகுனிந்தாள்.. அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.
"ராதையின் நெஞ்சம் எனக்குச் சொந்தமாகாமல் இருக்கலாம்... அதுக்காக... நான் ராதையை வெறுத்திருவேனா..?"
அவன் கேள்வியில் அவள் மனதில் துயரம் கவிந்தது.. அவள் கழுத்தில் தாலி கட்டிய நாள் முதலாய் அவன் அவளுக்கு மட்டுமே உரிமையானவனாக.. உண்மையானவனாக இருப்பதை அவள் அறிவாள்.. இருந்தும் அவள் மனதின் தடையை விலக்கி அவனுடன் கலக்க அவளால் முடியவில்லை..

மற்றவர்களின் முன்னிலையில் முரளிதரனின் மனைவியாக செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்தாள்.. அவனைக் காலைக் காபி.. பேப்பர் சகிதம் எழுப்பி விட்டாள்.. அவன் குளிப்பதற்காக வெந்நீர் சுவிட்சைப் போட்டு.. டவலை தொங்கவிட்டாள் அவன் குளித்து வருவதற்குள் மாற்றுடைகளை தயராக எடுத்து வைத்தாள்.. அவன் முகம் பார்த்து பரிமாறினாள்.. அவனுடைய அழுக்குத் துணிகளை சேகரித்து வேலையாள்களிடம் துவைக்கக் கொடுத்து விட்டாள்.. சலவை செய்து.. பெட்டி போடப்பட்டு வரும் உடைகளை அவனது அலமாரியில் அடுக்கி வைத்தாள்.. அவர்களின் அறையை ஒழுங்கு பண்ணி அழகாக வைத்துக் கொண்டாள்.. அவன் வரும் வரைக் காத்திருந்து பரிமாறினாள்.. இரவில் உறங்க வரும்போது பால் தம்ளருடன் வந்து அவனைப் பருக வைத்தாள்..

அவள் செய்த இதமான பணிவிடைகளில் மனம் லயித்துப் போயிருந்தான் முரளிதரன்.. அவளுடனான அந்த வாழ்வை அவனுக்குப் பிடித்துப் போய் விட்டது.. அவளின் அருகாமை.. அவள் மேலிருந்து வரும் மல்லிகைப்பூவின் வாசனை கலந்த பிரத்யேக நறுமணம்.. இங்கும் அங்கும் நடமாடும் அவளின் தேனியைப் போன்ற சுறுசுறுப்பு..
என்று அவன் ரசித்து மகிழ ஆயிரம் விசயங்கள் அவளிடம் இருந்தன..
முதலிரவில் சொன்ன வார்த்தையை மீறி அவன் அனுராதாவை தொட முயன்றதே இல்லை.. ஆனால்.. அவனது பார்வை அவளைத் தொட்டது.. அதில் அவளின் மேனி சிலிர்ப்பதை அவள் உணர்ந்துதான் இருந்தாள்..
"பிஸினெஸில் பிராப்ளம்.."
"சால்வ் பண்ணிருவீங்கள்ல..?"
"முடியும்ன்னு நம்பறேன்.. பார்க்கலாம்.."
முரளிதரன் தீர்க்கமாக ஓர்முறை அவளைப் பார்த்து விட்டு பேப்பரில் ஆழ்ந்து விட்டான்.. அதுவரை அவனைக் கவலை முகத்துடன் கண்டறியாத அனுராதாவுக்கு அங்கிருந்து நகர மனம் வரவில்லை.. ஏனோ.. அவன் முகத்தைப் பற்றிக் கவலைப்படாதே என்று சொல்லி.. தலைகோதி தைரியம் கொடுக்க அவள் மனம் துடித்தது..
தளர் நடையுடன் கீழே வந்தாள்.. தேவகி சமையலறையில் இருந்தாள்.. இவளும் போய் சங்கமித்தாள்.. காலை உணவுக்கு டைனிங் டேபிளை தயார் செய்து விட்டு.. முரளிதரன் கிளம்பி விட்டானா என்பதைக் கவனிக்க மாடிக்குப் போனாள்.. முரளிதரன் குளிக்கப் போயிருந்தான்.. அவனுக்கான உடைகளை எடுத்து வைத்து விட்டு... படுக்கை விரிப்புகளை மாற்றினாள்.. குளியலறையின் கதவு திறந்த சப்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.. வெற்றுடம்பில் நீர்த் திவலைகள் படிந்திருக்க.. முரளிதரன் வெளியே வந்தான்.. அவனது கவர்ச்சியில் மயங்கிப் போனவளாக தடுமாறிப் போனாள் அவள்.. சடுதியில் தலையணையின் உறையை மாற்றுகிறவளைப் போல தலையைக் குனிந்து கொண்டவளைப் பார்த்தபடி ஒர்நொடி அசையாமல் நின்றான் முரளிதரன்.. அவள் முகச் சிகப்பில் அவன் பார்வை படிந்தது.. அவளைப் பார்த்தபடி உடைமாற்ற ஆரம்பித்தான்..
அனுராதா கீழே போனாள்.. மைத்ரேயி சாப்பிட வந்திருந்தாள்.. அவளுடைய கல்லூரியில் நடந்த கலாட்டா ஒன்றை அவள் சொல்ல அனுராதா ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்த போதுதான் அது நடந்தது..
"தேவகி.. எங்கே உன் பிள்ளை..?"
கங்காதரன் கோபமாக வந்தார்.. அதுவரை அப்படியொரு கோபத்துடன் அவரை அனுராதா பார்த்ததே இல்லையென்பதால் அவள் பயந்து போனாள்.. அருகில் நின்ற மைத்ரேயி.. அவள் கையை இருக்கிப் பிடிக்க.. பதிலுக்கு அவள் கையைப் பற்றிக் கொண்ட அனுராதாவின் கை நடுங்க ஆரம்பித்தது..
"முரளியையா கேட்கறிங்க..? ஏங்க.. என்ன விசயம்..?" தேவகி பதறினாள்..
"முதல்ல அவனைக் கூப்பிடு.. அவன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்..?"
கங்காதரன் போட்ட சப்தத்தில் வீட்டில் வேலை செய்த வேலையாள்கள் முதற்கொண்டு எட்டிப் பார்க்க.. முரளிதரன் மாடியிலிருந்து இறங்கி வந்தான்.. கங்காதரனின் கோப முகத்தைப் பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கின..
"என்ன டாடி..?" என்றான்..
"என்னன்னு உனக்குத் தெரியாதா..? முரளி.. இவ்வளவு பெரிய பிராப்ளத்தில் நம்ம கம்பெனி மாட்டியிருக்கு.. நீ அதைப் பத்தி என்னிடம் இன்பர்ம் பண்ணலை.. சொல்ல வந்த ஸ்ரீதரையும் சொல்ல விடலை" கங்காதரன் சீறினார்..
முரளிதரனின் முகம் மாறிவிட்டது..
"யார் சொன்னது..? ஸ்ரீதரா..?" என்றான்..
"அதைப் பத்தின ஆராய்ச்சி உனக்கு எதுக்கு..? நீ எப்படி கம்பெனி பேஸ் பண்ண இருக்கிற இந்த ஹெவி லாஸைப் பத்தின உண்மையை என்கிட்ட இருந்து மறைக்கலாம்..?"
"டாட்.. நான் கம்பெனியின் எம்.டி.."
"உன்னை எம்.டி யாக்கினதே நான்தான்.. அதை மறந்திராதே.. இது நான் உருவாக்கின கம்பெனி.. நீ உருவாக்கியதில்லை.."
கோபத்தில் சிதறவிட்ட கங்காதரனின் வார்த்தைகளை அனுராதாவே ரசிக்கவில்லை.. சுற்றிலும் நின்ற வேலையாள்களை கடைக்கண்ணால் பார்த்தவளின் முகம் சிறுத்து விட்டது.. அவளுக்கே இப்படியிருக்கும் போது.. முரளிதரனின் மனம் என்ன பாடுபடும் என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது..
அடிபட்ட பார்வை பார்த்தான் முரளிதரன்.. தேவகிக்கு அழுகை வந்து விட்டது..
"முரளி.." என்றாள் அவள்..
"டேக் இட் ஈஸிம்மா.. இது டாடி உருவாக்கின கம்பெனிதான்.. பட்.. நான் இதை வளர்த்திருக்கேன்.."
"அதுக்காக என் கம்பெனியை இவன் அழிக்க நான் விடமாட்டேன்னு சொல்லு தேவகி.."
"இல்லேம்மா.. நான் கம்பெனியை அழிக்க மாட்டேன்.. எப்படி டாடி என்னிடம் கம்பெனியை ஒப்படைச்சாரோ.. அப்படியே திருப்பி ஒப்படைப்பேன்.. சொல்லிருங்க.. இந்த ஹெவி லாஸை வரவிடாம நான் சமாளிப்பேன்.. இதைக்கூட செய்யலைன்னா நான் ஒரு தேர்ந்த பிஸினெஸ் மேனா இருக்க முடியாது.."
"இப்ப என்னதான் சொல்றான் தேவகி.."
"கம்பெனியின் எம்.டி நான்தான்.. அதனால முடிவெடுக்கிற அதிகாரம் என்னிடம் மட்டும் தான் இருக்கு.. நான் பார்த்துக்கறேன்... ஜெயிச்சுக் காட்டறேன்ம்மா.. அதுக்குப் பின்னாலே டாடியிடம் பேசிக்கறேன்..."
முரளிதரன் சாப்பிடாமலே போய் விட்டான்.. அனுராதா ஓடிப் போய் பார்த்தபோது அவன் போர்டிகோவில் நின்றிருந்த கார் கதவைத் திறந்து ஏறிக் கொண்டிருந்தான்.. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கார் பறந்து விட்டது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -21
ராதையின் நெஞ்சமே. -21
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy