ராதையின் நெஞ்சமே..20

20 முரளிதரன் அவளையே இமைக்காமல் பார்த்தான்..  அனுராதா முகம் திருப்பவில்லை.. நிதானமாக அவன் பார்வையை எதிர்கொண்டாள்... அதில் தெரிந்த தீர்மானத...

20

முரளிதரன் அவளையே இமைக்காமல் பார்த்தான்..  அனுராதா முகம் திருப்பவில்லை.. நிதானமாக அவன் பார்வையை எதிர்கொண்டாள்... அதில் தெரிந்த தீர்மானத்தில் அவன் முகம் சுருங்கியது.. கைநீட்டி அவள் தோளைத் தொட்டான்.. அவள் விலகவில்லை.. ஆனால் பிடிக்காத நிகழ்வை எதிர்கொள்ளும் வெறுப்பை அவள் முகம் பிரதிபலித்தது.. முரளிதரன் கையை விலக்கிக் கொண்டான்.. எழுந்தான்.. யோசனையுடன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.. நின்றான்.. அவளிடம் திரும்பினான்..
"உன் முடிவை நீ சொல்லிட்ட.. என் முடிவையும் நான் சொல்லியாகனுமில்ல..?"
"நான் கேட்கலையே.."
"நீ கேட்க மாட்டேடி.. எதையும் கேட்க மாட்ட.. ஆனா சொல்கிற கடமை எனக்கு இருக்கே.."
"சொல்லுங்க.."
"எனக்குத் தேவை உன் உடலில்லடி.. மனசு.. அது என்னைக்கு எனக்குச் சொந்தமாகுதோ.. அன்னைக்குத்- தான் உன்னைத் தொடுவேன்.. உன் நெஞ்சத்திலே எனக்கு இடமில்லைன்னா.. கடைசிவரைக்கும் உன்னைத் தொட மாட்டேன்.."
அனுராதா பேசவில்லை.. அவனிடம் இதுபோன்ற உறுதியான வார்த்தைகளை அவள் எதிர் பார்க்கவில்லை.. பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்..
"இது உனக்கும் எனக்கும் நடுவில இருக்கிற போராட்டம்.. இந்த ரூமைத் தாண்டி இது வெளியே போகக் கூடாது.."
"போகாது..."
"என் பேமிலியில நான் உன்னைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க.. அவங்க நினைவு பொய்யாகி விடக் கூடாது.."
"நான் எதையும் சொல்ல மாட்டேன்.."
"குட்.. இப்பப் படு.. இரண்டு நாளா ரெஸ்ட் இல்லை.. எனக்குத் தூக்கம் வருது.."
அனுராதா கட்டிலில் கிடந்த போர்வை தலையணையை உறுவப் போனாள்.. முரளிதரன் தடுத்து நிறுத்தினான்.. அவன் முகம் சுளித்திருந்தது..
"என்ன செய்ற..?" அதட்டினான்..
"சோபாவில் படுக்கப் போறேன்.." தயக்கத்துடன் சொன்னாள் அனுராதா..
அவனின் இன்னொரு முகத்தை அறிந்த பின்பு அவனிடம் நிமிர்வாகப் பேச அவளால் முடியவில்லை.. அவனது உறுதியில் அவளிடமிருந்த நிமிர்வு இடம் பெயர்ந்து அவனிடம் போய் விட்டதைப் போல அவளுக்குத் தோன்றியது..
"முட்டாள்தனமா எதையும் செய்து வைக்காதே.. இந்தக் கட்டில் ஒன்னும் ஒற்றை ஆள் படுத்து உறங்குகிற சிங்கிள் காட் இல்லை.. நான்கு பேர் படுத்து உறங்கலாம்.. ஸ்பெசலா ஆர்டர் பண்ணி ரோஸ் வுட்டில் செய்த கட்டில.. நீ இந்தபக்கம் படு.. என் விரல்கூட உன் மேல் படாது.."
"பட வேணாம்ன்னு நான் சொல்லலை..."
அவள் முணுமுணுத்ததில் அவனுக்கு ரௌத்திரம் வந்து விட்டது..
"திமிர்..!" பல்லைக் கடித்தான்..
"அப்படியெல்லாம் இல்லை.." மறுத்தாள் அனுராதா.
"நீ வேண்டாம்ன்னு சொல்லலைன்னாலும் நான் உன்னைத் தொட மாட்டேன்.. பேசாம படுத்துத் தூங்கற வழியைப் பாரு.. இந்த ரூமுக்குள்ளதான் நாம் வாழ்ந்தாகனும்ங்கிறப்ப.. கட்டிலை விட்டு ஓடுகிறதால மட்டும் நீ எதில இருந்து தப்பிக்க முடியும்ன்னு நினைக்கிற..? நீ என் பெண்டாட்டிங்கிறது மாறப் போகுதா..?"
'இல்லை'யென்ற துயரத்துடன் அனுராதா கண்மூடி.. ஒடுங்கி.. கட்டிலின் ஓரமாக ஒதுங்கிப் படுத்தாள்.. ஏதேதோ நினைவுகள் வந்தன.. அவளுடைய அம்மாவின் நினைவு வந்தது.. அதையடுத்து அஜித்தின் நினைவு வந்தது.. அப்படியே தூங்கிப் போனாள்.. தூக்கத்திலே கனவு வந்தது.. கனவில் அஜித் வந்தான்..
"எழுந்திரு அனு.. சூடா காபி குடி.." என்றான்..
"நீ போட்டியா அண்ணா.." அனுராதா கண்ணைக் கசக்கியபடி எழுந்தாள்..
"உன் அண்ணன் போடலை.. எங்க வீட்டு சமையல்காரம்மா போட்டுக் கொடுத்து விட்டிருக்காங்க.."
முரளிதரன் எதிரே நின்றபடி சொன்னதில் அவளின் தூக்கம் பறந்து விட்டது.. சுற்று முற்றும் பார்த்தவள்..
"அண்ணன் எங்கே..?" என்று முரளிதரனிடம் கேட்டாள்..
"அவன் பிரதிபாவை எழுப்பிக் காபி கொடுத்துக்கிட்டு இருப்பான்.."
இலகுவாக முரளிதரன் சொன்னதில் அனுராதாவுக்கு வெட்கமாகி விட்டது.. இப்படியா தூங்குவாள்..? லஜ்ஜையுடன் காபிக் கப்பைப் பார்த்தபடி பல்தேய்த்து முகம் கழுவி விட்டு வந்தாள்.. முரளிதரன் முகம் மாறாமல் காபிக் கப்பை எடுத்துக் கொடுக்க.. சங்கடத்துடன் வாங்கிக் கொண்டாள்..
"வேற எதுவும் வேணுமா..?" அக்கறையுடன் அவன் விசாரித்தான்..
"வேற எதுவும்ன்னா..?" அவளுக்குப் புரியவில்லை..
"பேப்பர்..?"
"வேணாம்.."
"உனக்கு குளிக்க வெந்நீர் சுவிட்சைப் போட்டு வைக்கவா..?"
"ஊஹீம்..."
"சோப்..? டவல்..?"
"ஸ்ஸ்.. தேவையே இல்லை.."
"தலை துவட்டிவிட வரனுமா..?"
"சேச்சே..."
அனுராதாவுக்கு இம்சையாக இருந்தது.. இவன் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறான் என்று அவனை முறைத்துப் பார்த்தாள்.. அவனோ சாதுபோல முகத்தை வைத்துக் கொண்டு..
"இதையெல்லாம் எங்கம்மா.. எங்க டாடிக்கு செய்வாங்க.. இங்கேதான் எல்லாமே உல்டாவா இருக்கே.. அதான்.. நானாவது அந்தப் பொறுப்பை எடுத்துக்கலாம்ன்னு பார்க்கறேன்.." என்றான்..
அவன் சொல்ல வருவது என்னவென்பது அனுராதாவுக்கு புரியத்தான் செய்தது.. அவள் பேசாமல் குளிக்கப் போய் விட்டாள்.. ஈரக் கூந்தலுடன் தேவகியிடம் போன போது.. அவள் பூஜையறையில் கண்மூடி அமர்ந்திருந்தாள்.. அங்கேயிருந்த வீணையின் மீது ஆசையுடன் அனுராதாவின் பார்வை படிந்தது.. எடுத்து சுருதி கூட்டி.. மீட்ட ஆரம்பித்தாள்.. கண்கள் தாமாக மூடிக் கொள்ள அவள் வாய் தன்னிச்சையாக பாட ஆரம்பித்து விட்டது..
"கொண்டைமுடி அலங்கரிக்க..
கொஞ்சும் கிளி கையில் வைத்து..
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்..
    அந்த அழகிய மாநகர் மதுரையிலே..
மதுரையிலே.. மதுரையிலே.."
தேவகி ஆச்சரியத்துடன் கண் விழித்தாள்.. அவள் காதுகளில் விழுந்த தெய்வீக கானத்தில் அவள் உள்ளம் பரவசமடைந்தது.. ஹாலில் அமர்ந்திருந்த கங்காதரன் பேப்பரைக் கடாசிவிட்டு பூஜையறையின் பக்கமாக வந்து நின்றார்.. மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த முரளிதரனின் முகம் வியப்புக்குப் போனது.. மைத்ரேயி.. பாடப்புத்தகங்களை எடுத்துக் கொள்ளும் நினைவின்றி அங்கே வேகமாக ஓடி வந்தாள்..
இவை எதையும் அறியாத மோன நிலைக்குள் மூழ்கியிருந்தாள் அனுராதா.. அவள் மனதிலிருந்த அழுத்தம் எல்லாம் இசையின் வழியாக கரைந்து ஓடிக் கொண்டிருந்தது.. அவள் இசையென்னும் வர்ண உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்..
"வெள்ளைக் கமலத்திலே - அவள்..
வீற்றிருப்பாள்.. புகழ் ஏற்றிருப்பாள்..
கொள்ளைக் கனியிசைதான் - கொட்டும்
நல்யாழினைக் கொண்டிருப்பாள்..
வெள்ளைக் கமலத்திலே.."
அவள் பாடிய பாடலில் அலைமகள்.. மலைமகள்.. கலைமகள்.. மூவரும் எழுந்து வந்து விடுவார்கள் போல அவளது இன்னிசை மழை இருந்தது.. சிலநாள்களாக வாசிக்காமல் இருந்தவள்... அந்தப் பிரிவினை ஈடுகட்டுவதைப் போல.. இசையினில் அமிழ்ந்திருந்தாள்..
அசையாத பொருள்களைக்கூட அசைத்து விடும் இசைவரம் பெற்றிருந்தவளை ஆச்சரியத்துடன் கங்காதரன் பார்த்தார்.. இது போன்ற ஒரு இசைத்திறன் அவளிடம் இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை..
'இந்தப் பெண்ணுக்கு வீணையும்.. பாட்டும் தெரியுமா..?'
சொல்லவே இல்லை பார்த்தியா.. என்ற ரீதியில் அவர் மகனைப் பார்த்து வைக்க.. அவனோ.. எனக்கே இது இன்றைக்குத்தான் தெரியும் என்பதை வெளியில் சொல்லாமல் அழுத்தமாக நின்றான்..
மனம் விட்டுப் பாடி முடித்த அனுராதா கண் திறந்த போது.. அங்கே குடும்பமே நின்றிருப்பதைப் பார்த்ததும் வெட்கிப் போனாள்.. அவசரமாக வீணையை வைத்து விட்டு எழுந்து நின்றவளை அன்புடன் அணைத்துக் கொண்டாள் தேவகி..
"எவ்வளவு அருமையாப் பாடறேம்மா.. எல்லாத்துக்கும் இந்தக் குடுப்பினை அமைஞ்சிராது.. உனக்கு சரஸ்வதியின் வரம் வந்து வாய்ச்சிருக்கு.."
தேவகியின் வார்த்தைகளை கங்காதரனின் முகம் பிரதிபலித்தது.. மைத்ரேயி..
"சூப்பர் அண்ணி.." என்று அனுராதாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்...
அந்த நொடியில் அனுராதா அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிப் போனாள்.. அதுவரை தாயில்லாமல்.. தகப்பன் இருந்தும் அவரின் நிழலும்.. பாதுகாப்பும் இல்லாதவளாய்.. அண்ணன் மட்டுமே உலகமென வாழ்ந்திருந்தவளுக்கு.. அதுபோன்ற குடும்பத்தில் வாழ்வது புதுமையாகவும்.. இனிமையாகவும் இருந்தது..
அவள் தேவகியிடம் சமையல் செய்யக் கற்றுக் கொண்டாள்.. அவளுக்குத் தெரிந்த சமையலோடு.. கற்றுக் கொண்டதையும் சேர்த்து புதுப்புது வகையான சமையல் வகைகளை செய்து பரிமாறினாள்.. மைத்ரேயிக்கு வீணை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தாள்.. மாலை நேரங்களில் மகளுக்கு வீணை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மருமகளைப் பார்க்கும் போது கங்காதரனுக்கு வெகு பாந்தமாக இருக்கும்.. தோட்டத்தை மாற்றி அமைத்தாள்.. வீட்டை அழகு படுத்தினாள்.. தேவகியுடன் கோவிலுக்குப் போய் வந்தாள்.. மைத்ரேயியுடன் சினிமாவுக்கு போய் வந்தாள்..
கங்காதரன் தேவகிக்கு நல்ல மருமகளாகவும்... மைத்ரேயிக்கு தோழமையான அண்ணியாகவும் மாறிவிட முடிந்த அவளால் முரளிதரனுக்கு நல்ல மனைவியாக மாற மட்டும் முடியவே இல்லை..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே..20
ராதையின் நெஞ்சமே..20
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy