ராதையின் நெஞ்சமே. -19

19 அவள் அழகாக இருந்தாள்.. எப்போதையும் விட.. அப்போது அதிக அழகுடன் அவள் இருந்ததிற்கான காரணம் எதுவாக இருக்கக்கூடும் என்று அந்த நிலையிலும் அவ...

19

அவள் அழகாக இருந்தாள்.. எப்போதையும் விட.. அப்போது அதிக அழகுடன் அவள் இருந்ததிற்கான காரணம் எதுவாக இருக்கக்கூடும் என்று அந்த நிலையிலும் அவன் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது..
வழக்கமாக காட்டன் சேலைகளிலும்.. சுடிதார்களிலும் அலுவலகத்திற்கு வருபவள் அன்று பட்டுப் புடவையில் இருந்தாள்..
அதனால் அவளது அழகு அதிகரித்திருக்கக் கூடும் என்பதை அவன் மனம் ஒப்ப மறுத்தது.. ஏனென்றால் அவன் அவளிடம் தடுக்கி விழுந்ததிற்கான முதல் காரணமே.. எளிமையான உடையிலும் வெளிப்பட்ட அவளின் பேரழகில்தானே..
கழுத்தில் மெல்லிய செயினும்.. காதுகளில் சிறிய வளையமும்.. ஒரு கையில் ஒற்றை வளையலும்.. மறுகையில் கைக்கடிகாரமுமாக இருப்பவள்.. அன்று வைர நகைகளில் ஒளிர்ந்தாள்..
அதனாலும் அவளின் அழகு ஒளிர் விடுகிறது என்று அவனால் நினைக்க முடியவில்லை.. நகைகளே இல்லாமல் அவள் ஒளிர்விடும் அழகோடுதான் இருந்தாள்.. குத்து விளக்கின் சுடர் போல மனதை அமைதிப்படுத்தி அடிமைப் படுத்தும் அழகு.. அவளின் அழகு..
என்றேனும் ஒர் நாளில் சிறிதளவு மலர்ச்சரத்துடன் வருபவளின் தோள்களில் வழிந்த மல்லிகைச் சரத்தில் அவளது அழகு அதிகரித்துத் தெரிகிறதா என்றால் அதற்கும் அவன் மனம் இல்லையென்ற பதிலைச் சொன்னது..
'பூவுக்கு பூவால் அழகு சேர்த்துவிட முடியுமா..?' அவன் மனம் கவிதை சொன்னது.. பூப்போன்ற அவள் முகத்தை முகர்ந்து சுகிக்க வேண்டுமென்று எத்தனை நாள் அவன் துடித்திருப்பான்..?
வேறு எதனால் அவளின் அழகு கூடியிருக்கிறது..?
அவளை உற்றுப் பார்த்தவனுக்கு விடை தெரிந்து விட்டது..
அவளின் நெற்றி வகிட்டில் தீற்றியிருந்த குங்குமமும்.. அவள் கழுத்தில் மின்னிய புத்தம்புதுத் தாலிச் சரடும் அவளின் அழகை பன்மடங்காய் அதிகரித்துக் காட்டின..
'என் பெண்டாட்டி..'
நினைவே இனிக்க.. தேன் குடிக்கத் துடிக்கும் சிங்கமாக அவள் முகத்தில் கவிழ்ந்தான் முரளிதரன்..
"அத்தான்னா சொல்ற..."
அவனின் வேகத்தில் அவளின் மூச்சுத் திணறியது.. நீண்ட முத்தம் அவனது தாபத்தை தணித்து விடவில்லை.. மாறாக அதிகரித்துத் தொலைத்ததில் அவள் முகம் பற்றிக் கேட்டான்..
"ஏண்டி அத்தான்னு சொன்ன..?"
"இது என்ன வம்பாப் போச்சு..? உங்க அம்மாதான் சொன்னாங்க.. உங்க வீட்டில் வழிவழியாய் எல்லாப் பெண்களும்.. அவங்க ஹஸ்பெண்டை அத்தான்னுதான் கூப்பிடுவாங்களாம்.. அதனால நானும் அப்படித்தான் கூப்பிடனும்னு ஆர்டர் போட்டாங்க.."
"அவங்க அதை மட்டும்தான் சொன்னாங்களா..?"
அவன் கேள்வியில் அனுராதா உதட்டைக் கடித்துக் கொண்டு மௌனமாகி விட்டாள்..
தேவகி அதைப்பற்றி மட்டும் சொல்லவில்லை.. அனுராதாவின் முகத்தை அன்புடன் பற்றி.. முரளிதரனின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையைச் சொன்னாள்..
"உன் அம்மா இருந்திருந்தா எனக்கு இந்த வேலை இருந்திருக்காது.. உன் அம்மா ஸ்தானத்தில இருந்து இதை நான் சொல்ல வேண்டியதாப் போயிருச்சு.. எனக்கு மைத்ரேயியும் நீயும் ஒன்னுதான் அனு.. அவளைப் போல நீயும் எனக்கு மகள்தான்.."
மாமியாரின் இந்த வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்து போனாள் அனுராதா.. எட்டு வயதிலேயே தாயன்பை இழந்து விட்டவளுக்கு.. தேவகி காட்டிய பாசத்தில் மனம் நெகிழ்ந்தது.. அவளுக்கு மாமியாரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.. அப்படியே அவள் மடியில் முகம் புதைத்து மனதில் உள்ளதைக் கொட்டி அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.. அடக்கிக் கொண்டாள்.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்ற உண்மையை அறிந்தால்.. தேவகி தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதில் அவள் மனதில் குற்றஉணர்வு எழுந்தது..
"முரளி கொஞ்சம் அப்படி.. இப்படின்னுதான் இருந்தான்.. அவங்க அப்பா என்னிடம் அதையெல்லாம் மறைச்சிட்டதா நினைச்சாரு.. ஆனா எனக்கு அது தெரியும்.."
'இது வெறும் 'அப்படி.. இப்படி'ன்னு இரண்டே வார்த்தைகளில் அடங்கற சாதாரண விசயமா..?'
அனுராதா மனம் கசந்தாள்.. காலம் காலமாக.. தறிகெட்டு அலையும் ஆண்குலத்தின் அந்த அலைச்சலை ஒருமனதாக ஏற்றுக் கொண்டு.. ஆம்பளைகள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று பொதுவாக சொல்லப்படும் நியாயத்தில் அவள் மனம் அதிர்ந்தது.. போட்டு வைத்திருக்கும் அத்தனை கோடுகளும் பெண்களை மட்டும் சிறைபிடிப்பதாக இருக்க.. ஆண்குலத்திற்கு என்று எந்தக் கோடுகளும் போடப்படாமல் அவர்களின் அத்துமீறல்களை இந்த உலகம் மௌனமாக அங்கீகரிப்பதற்கான தாத்பர்யம் எதுவாக இருக்கக்கூடும் என்ற வினாவிற்கான விடை அவளுக்குக் கிடைக்கவேயில்லை..
பெண்களின் கழுத்தை இறுக்கும் நெறிமுறைகளின் சுருக்குக்கயிறுகள் ஆண்களின் கழுத்தில் மலர் மாலைகளாக விழுந்து அலங்கரிப்பது ஏன்..? கற்பு என்பதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்ற பாரதியின் அறை கூவலை அவர் பிறந்த ஆண்குலமே கண்டு கொள்ளாதது ஏன்..?
இவை அத்தனைக்கும் மேலாக.. ஒருவனுக்கு ஒருத்தியென்ற உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு அளித்து அதன்படி வாழ்ந்து காட்டிய ராமனைப் போன்ற கணவன் கிடைக்க வேண்டும் என்று தவமிருந்த அனுராதாவிற்கு.. மனம் போல வாழ்ந்த முரளிதரன் கணவனாக வாய்த்திருப்பது ஏன்..?
அவள் சொத்து சுகத்தைக் கேட்டாளா..? அவளை மட்டும் நினைக்கும் கணவன் வேண்டுமென்றுதானே கேட்டாள்..? அதற்குக் கூட அவளுக்கு உரிமையில்லையா..?
அவளின் மனப் போராட்டங்களை அறியாதவளாக தேவகி அவள் கன்னம் வழித்துத் திருஷ்டி கழித்தாள்..
"அழகா இருக்கேம்மா.. என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.. கல்யாணமே வேணாம்ன்னு இருந்த முரளி உன்னிடம் மயங்கிப் போனதில ஆச்சரியம் எதுவுமில்ல.. அவன் ரொம்ப நல்லவன்ம்மா.."
'அப்படியா..?'
அனுராதா இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டாள்.. மனதுக்குப் பிடிக்கவில்லையென்று அவர் வாய் விட்டுச் சொன்ன பின்பும் பிடிவாதமாக அவள் கழுத்தில் தாலியைக் கட்டிச் சிறை பிடித்திருப்பவன் ரொம்ப நல்லவனா..? அதை தேவகியிடம் சொல்ல அவளால் முடியுமா..?
"அவன் மனசு உன்னிடம் இருக்கு.. அதைப் பத்திரமா பார்த்துக்க.. அவன் மனசு கோணாம நடந்துக்கிட்டாப் போதும்.. அவன் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்... இதுக்கு மேலே புருசனை எப்படிக் கைக்குள்ள போட்டுக்-கிறதுங்கிற வித்தையை உனக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்... நீயாப் புரிஞ்சு நடந்துக்கம்மா.. உன் வாழ்க்கை... உன் கையில்தான்.."
'உங்க மகனைக் கைக்குள்ள போட்டுக்கிறனும்கிற எண்ணம்தான் எனக்கு இல்லையே..'
இதையெல்லாம் முரளிதரனிடம் சொல்ல முடியுமா..? அவன் சரியான இடத்தைப் பிடித்து விட்டதில்..
'இவன் கெட்டிக்காரன்..' என்று அவள் நினைத்துக் கொண்டாள்..
'பெண்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருக்-கிறான்.. அவர்களின் மனங்களைத் தெரிந்து வைத்திருக்- கிறான்.. மகனின் புதுமனைவியிடம் ஒருதாய் எந்த அறிவுரையைச் சொல்லுவாள் என்று இவனுக்குத் தெரியாதா என்ன..?'
"என்னடி.. பதிலைக் காணோம்.."
"என்ன பதிலைச் சொல்ல அத்தான்..."
அவளின் 'அத்தான்..' அவள் மீதான அவனின் போதையை அதிகப்படுத்தித் தொலைத்ததில் 'கொல்றாளே..' என்று அவன் கொதித்துப் போனான்..
"எனக்குப் பிடிச்ச பதிலைச் சொல்லுடி.. என் பெண்டாட்டி.."
"அதுக்குத்தான் நிறையப் பேர் இருக்காங்களே அத்தான்.. என்னால உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பேசமுடியாது.. பதிலைச் சொல்ல முடியாதுன்னு தெரிஞ்சுதானே என் கழுத்தில் தாலியைக் கட்டினிங்க.. இதுக்கு மேலேயும் நடக்காத ஒன்னை நடத்த நினைச்சா என்ன நியாயம் அத்தான்..?"
"ராதா.. முடிவா என்னதான் சொல்ற..?"
"முடிவெடுக்கிற அதிகாரம் இப்ப என் கையில் இல்லை அத்தான்.. அது உங்களிடம் இடம் மாறிருச்சு.. எனக்கு புருசனாப் போயிட்டிங்க.. இப்ப எனக்கான முடிவை நீங்கதானே எடுத்தாகனும்.. என் உடல் உங்களுக்குத்தானே சொந்தம் அத்தான்..?"
முரளிதரன் விழித்துக் கொண்டான்..
'என் உடல் உனக்குச் சொந்தம்..'
அவள் திரும்பத் திரும்ப இதையே அறிவுறுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் மனம் நினைத்துப் பார்த்தது.. அந்த வார்த்தைகள் அவளைப் புசிப்பதற்கான தடையற்ற அனுமதியை அவனுக்குத் தாராளமாக அள்ளித் தந்தன.. பசித்த அவன் உடல் அதில் வேட்கை கொண்டு அவளை வேட்டையாடத் துடித்தது..
'ஆனால்.. இவளின் மனம்..? அது எனக்குச் சொந்தமில்லையா..?'
முரளிதரன் அவள் அறிவுறுத்தியதன் பொருளைக் கண்டு கொண்டான்.. அவளை உற்றுப் பார்த்தவனின் கோபத்தில் அவன் அதை கண்டு கொண்டான் என்பதை அவளும் இனம் கண்டு கொண்டாள்..
உதட்டை அவள் சுழித்த சுழிப்பு அவனை சவாலுக்கு அழைத்தது..
"'நீ'ங்கிறது உன் உடம்பு மட்டும் தானா ராதா..? மனசில்லையா..?" நிதானமாக அவன் வினவினான்..
"நான் சொல்லலை.. நீங்க புத்திசாலி.. எதையெதையோ கண்டு பிடிக்கிறவருக்கு.. இதைக் கண்டு பிடிக்க முடியாதா என்ன..?" அவள் மெச்சிப் போனாள்..
"நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லு.."
"நான்ங்கிறது முக்கியமா என் மனசு.. அதுக்குப் பின்னாலேதான் உடம்பு.. என் உடம்புக்குத் தாலி கட்டியிருக்கீங்க.. மனசு..? அது உங்களை ஏத்துக்கலையே.. ஸோ.. என் உடல் உங்களுக்குத்தான் சொந்தம்.. அதில் மாற்றமில்லை.. மனசு..? எனக்குச் சொல்லத் தெரியலை.. இந்த ராதையின் நெஞ்சம் உங்களுக்கு என்னைக்குமே சொந்தமாகாதுன்னுதான் தோணுது.."
"பிடிவாதமா..?" ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்டான்..
"சேச்சே.." அவள் மறுத்தாள்..
"இதில் பிடிவாதம் பிடிக்க என்ன இருக்கு..? பிடிவாதம்ங்கிறது வலிய வரவழைச்சுக்கிறது... இங்கே அப்படியில்லை.. உங்களை விரும்பனும்னு நான் நினைச்சாலும் என்மனசு உங்களை விரும்ப மாட்டேங்குது.. நானே நினைச்சாலும் என் நெஞ்சம் உங்களுக்குச் சொந்தமாகாது.."
அனுராதா நிறுத்தி.. நிதானமாக.. கோர்வையாகப் பேசினாள்... ஆனால் அழுத்தம் திருத்தமாக அவளின் முடிவான கருத்தை வெளிப்படுத்தினாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -19
ராதையின் நெஞ்சமே. -19
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy