ராதையின் நெஞ்சமே..-18

18 முதலிரவு அறைக்கான அத்தனை அடையாங்களும் அங்கே இருந்தன.. மலர்ச்சரங்கள் சுற்றிலும் தொங்க விடப்பட்ட பூங்குடிலாக கட்டில்.. அதன் தலைப்பகுதியி...

18

முதலிரவு அறைக்கான அத்தனை அடையாங்களும் அங்கே இருந்தன.. மலர்ச்சரங்கள் சுற்றிலும் தொங்க விடப்பட்ட பூங்குடிலாக கட்டில்.. அதன் தலைப்பகுதியின் ஓரமாக இருந்த உயர்ந்த டீப்பாயின் மீது இருந்த தட்டில் இருந்த பழங்கள்.. இனிப்புக்கள்.. பூமணத்துடன் அறையில் சூழ்ந்திருந்த நறுமணம்.. என்று மனதை மயக்கும் அந்தச் சூழ்நிலை அனுராதாவின் மனதை கடுகளவும் அசைக்கவில்லை..
அவள் மனதில் துயரம் பொங்கிக் கொண்டிருந்தது.. தோற்றுப் போன உணர்வுடன் தரையில் சரிந்து அமர்ந்து சுவரில் சாய்ந்தவள்.. கால்களை மடித்து முழங்கால்களில் கைகளை வளையமாகக் கட்டி அதில் முகம் புதைத்தாள்..
எதிலிருந்தோ தப்பிக்க முனைவதைப் போல இருந்தது அவளின் செய்கை.. இப்படி முழங்கால்களில் முத்தைப் புதைப்பதால் தப்பித்து ஓடிவிட முடியுமா..?
அந்த அறைக்குள் அவள் சிறைபட்டது.. சிறைபட்டதுதானே.. அதையறியாத சின்னஞ்சிறு மழலையா அவள்..?
அறைக்கதவு அடைபடும் சத்தம் கேட்டதில் அவள் உடல் அதிர்ந்து நடுங்கியது.. முகம் நிமிர்த்தாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.. அவளை நெருங்கும் அழுத்தமான காலடியோசைகளைக் கேட்ட அவள் செவிகள் அதிர்ந்தன.. அவை நெருங்க.. நெருங்க.. அவள் உடல் பதறியது..
'வந்துட்டான்.. கிட்டத்தில் நெருங்கிட்டான்..'
அவள் மனம் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்க.. அவன் அதையெல்லாம் தாண்டி முன்னேறியவனாய் குனிந்து அவள் தோள்களை அழுந்தப் பற்றினான்..
'என்ன இது..?'
முதன் முதலாய் உணர்ந்த ஆணின் ஸ்பரிசத்தில் அவள் பதறிப்போனாள்.. உடலைக் குழுக்கி விலக அவள் முனைகையில்.. அதை சட்டை செய்யாதவனாக அவன் குனிந்து அவளைத் தூக்கி விட்டான்.. அவன் கைகளில் படர்ந்திருந்தவளுக்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வை நம்ப முடியவில்லை..
அவளிடம் அவன் பேச முனைவான்.. தாலிகட்டி விட்டதால் மட்டும் அவனுக்கு அவள் சொந்தமாகி விட மாட்டாள் என்பதை அவன் முகத்திலடித்ததைப் போலச் சொல்லி விட வேண்டும் என்று அவள் போட்டிருந்த அத்தனை திட்டங்களும் பொடிப்பொடியாகி விட்டன..
"நீ இருக்க வேண்டிய இடம் அது இல்லடி.. இதுதான்.."
முரளிதரன் அவளை கட்டிலில் கிடத்தினான்.. அவள் விலக முனையவில்லை.. அசையாமல் படுத்திருந்தாள்.. அவளின் எதிர்ப்பின்மையில் அவனுக்கு ஆச்சரியம் வந்தது.. அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அவள் கன்னம் தொட்டான்.. முகம் சுளித்தவளின் அந்த வெறுப்பில் இவன் முகம் சுளித்தது..
"ராதா.." அதட்டினான்..
அவள் உதட்டைச் சுழித்தாள்.. பதில் பேசவில்லை.. அவளின் உதட்டுச் சுழிப்பில் வெளிப்பட்ட அலட்சியத்தில் அவன் மனம் கொதித்தது..
'கழுத்தில தாலி ஏறின பின்னாலயும் இப்படி பிஹேவ் பண்றாளே.. இன்னும் இவ திமிர் அடங்கலையே.. இவ மனசில என்னதான் நினைப்பிருக்கு..?'
அவன் மேல் நினைவில்லையா..? அந்த நினைவில் அவன் கண்சிவந்தான்.. அவள் கன்னத்தில் படிந்த அவன் கை அழுத்தமாக பதிந்ததில் அவள் கன்னம் கன்றிச் சிவந்தது..
"நான் உன் புருசன்டி.."
"அப்படியா..? ஸோ.. வாட்..?"
"ஏய்ய்.."
கொதித்துப் போனவன்.. அவள் தோள் பற்றிக் குனிந்தான்.. ஆவேசமான அவனது ஆக்ரமிப்பிலிருந்து விலக அவள் முனையவில்லை.. அதே சமயத்தில் விரும்பி அதை ஏற்கவுமில்லை.. அவளது முகம் போன போக்கு அவள் மனதிலிருந்த ஒட்டு மொத்த வெறுப்பையும் பிரதிபலித்ததில் முரளிதரன் முன்னேற முடியாமல் விலகி எழுந்தான்..
"ச்சை.."
அவன் கோபத்தில் பழத்தட்டு பறந்து அறையின் மூலையில் மோதிச் சிதறியது.. அதனால் துளிக்கூட பாதிப்பில்லாமல் கட்டிலில் அசைவின்றி படுத்திருந்தவளின் மீது அவனுக்குள் கட்டுக்கடங்காத கோபம் பெருகியது..
"இப்ப நீ என் பெண்டாட்டி.."
"இருக்கட்டுமே.."
"இது பர்ஸ்ட் நைட் ரூம்.."
"இல்லேன்னு நான் சொன்னேனா..?"
"ராதா.."
"நான் எதிர்க்க மாட்டேன்.. இந்த உடல் உங்களுக்குச் சொந்தம்தான்.. நான் மறுத்தா ஏன்னு கேளுங்க.. நான் விலகினேனா..?"
அவள் கேள்வியில் இருந்த உண்மையில் அவன் திகைத்துப் போனான்.. அவள் விலகவில்லைதான்.. தரையில் அமர்ந்திருந்தவளைக் குனிந்து தூக்கியபோது தடுக்காமல் எதிர்ப்பின்றி உடன்பட்டவள்தான்.. கன்னத்தில் அவன் கை படிந்த போதும் தட்டி விடாமல் இருந்தவள்தான்.. அவள் மேல் படர்ந்து ஆக்ரமிக்க முனைந்த போது.. எதிர்ப்பின்றி அவனிடம் தன்உடலை ஒப்படைத்தவளாக பேசாமல் இருந்தவள்தான்..
'இது மட்டும் போதுமா..?'
அவள் முகத்திலிருந்த வெறுப்பு.. உதட்டுச் சுழிப்பு.. இவையெல்லாம் அவள் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியல்லவா..?
அவன் தொட்டதில் அவள் முகம் சுழிக்க.. அந்த வெறுப்பை அவள் முகம் காட்ட.. அதைச் சரித்துக் கொண்டு அவளைச் சுகிக்க அவனால் முடியுமா..?
"தொடறவன் உன் புருசன்டி.. எவனோ ஒருத்தனில்லை.."
"எவனோ ஒருத்தனா இருந்திருந்தா இந்நேரத்துக்கு ஒன்று அவன் செத்திருப்பான்.. இல்லேன்னா நான் செத்திருப்பேன்..."
அவளின் பதிலில் அவள் மீதான அவனின் மோகம் பன்மடங்காய் அதிகரித்து அவனை ஆட்டுவித்தது.. இதுபோன்ற மறுமொழியைச் சொல்லும் பெண்களுடன் அவன் சுற்றியதில்லை என்பதை எப்படி அவளுக்கு அவன் எடுத்துரைப்பான்..?""
அவளின் அழகைவிட அவள் பதில் அவனை அதிகமாக இம்சை செய்து ஈர்த்ததில் அவனது உடலின் உஷ்ணம் கூடியது.. அவன் குனிந்து அவள் முகம் பார்க்காமல் அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான்.. பட்டுப் போன்ற கன்னத்தின் வளவளப்பில் அவனது ஈரஉதடுகள் படிந்ததில் அவள் முகம் சுளிக்க.. அதைக் கவனித்தால்தானே பிரச்னை என்று அவளது முகமெங்கும் அவனது ஈரஉதடுகள் வலம் வந்து பதிந்தன.. நெற்றியில் படிந்த அவனது உதடுகள் இறங்கி.. அவள் உதடுகளில் மையம் கொண்டபோது அவன் மனதில் திருப்தி வியாபித்தது..
'இந்த உதட்டைத்தானே சுழித்தா..!'
அவளின் உதடுகளைத் தண்டிக்க அவன் விரும்பினான்.. அழுத்தமாக பதிந்த அவனது உதடுகளும் பல்வரிசையும் அந்தத் தண்டனையை வழங்கிக் கொண்டிருந்ததில் அவள் திக்கு முக்காடிப் போனாள்.. மூச்சுத்திணறலுடன் சிரமப்பட்டவளின் மூச்சுக் காற்றில் அவளை விடுவித்தவன்..
"யாரிடம் சவால் விடற..?" என்று வெற்றி மமதையோடு கேட்டான்..
"யார் சவால் விட்டது..?" அக்கறையுடன் அவள் கேட்டாள்..
"நீ விடல.."
"இல்லையே.. என் எதிர்ப்பை விட்டுட்டேன்.. ஏன்னா நீங்க என் கழுத்தில் தாலியைக் கட்டின புருசன்.. இந்த உடல் உங்களுக்குச் சொந்தம்.. நீங்க தொட்டா நான் மறுக்க முடியாது.."
"மறுக்க முடியாதுன்னா..? என்ன அர்த்தம்..?"
"தட்'ஸ் மீன்ஸ் தட்.. தட்'ஸ் ஆல்.."
"ராதா.."
"இப்பவும் சொல்றேன்.. இந்த ராதை ராமனைப் போல புருசனைத் தேடினவ.. இவ விதி.. கண்ணனுக்கு சொந்தமாகிட்டா.. இதுக்கு மேலே எதிர்ப்பைக் காட்டி என்ன ஆகப்போகுது..? மறுக்க முடியாத சூழ்நிலையில மறுக்கிறதில எதுவும் மாறிப் போகப் போறதில்ல.."
"ஏய்ய்ய்..."
அவளின் பதிலில் கிளர்ச்சி கொண்டவனாக.. முரளிதரன் அவள் மேல் சரிந்தான்.. அவள் உடல் தழுவிப் படர்ந்தான்.. அவள் தோள்தடவிய கைகள் முன்னேறியதில் அவளிடம் எதிர்ப்பில்லாமல் போனதில் அவனது வேகம் அதிகரித்தது.. அவன் உடலின் அனைத்துச் செல்களும் அவளுடன் சுகிக்கத் துடித்ததில்.. அவள் மேல் கவிழ்ந்து அவள் முகம் பார்த்தவனுக்கு.. 'சுரீர்..' என்று சாட்டையடி வாங்கியதைப் போல இருந்தது..
ராதா முகம் சுளித்திருந்தாள்.. அவள் மனதில் ஒட்டு மொத்த வெறுப்பும் அவள் முகத்தில் வந்து கவிழ்ந்திருந்தது..
முரளிதரனின் உடலில் இருந்த அத்தனை மோக உணர்வுகளும் விலகி ஓடி விட்டன.. அவன் அவளை விட்டு விலகி எழுந்து அமர்ந்தான்.. வந்த கோபத்தில் அவன் விட்ட உதையில் இந்தமுறை இனிப்புப் பண்டங்கள் அடங்கிய தட்டுப் பறந்தது.. அறையெங்கும் பழங்களுடன் இனிப்புக்கள் கலந்து சிதறின...
"நீ வேணும்னே பண்றடி..?" குமுறினான்...
"என்ன பண்ணினேன்..? எதுவும் எதிர்க்கலையே.." அப்பாவியாய் அவள் விழி விரித்தாள்..
முரளிதரன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. அவன் பார்வையைச் சளைக்காமல் எதிர்கொண்ட அவள் பார்வையின் திடத்தில் அவன் புருவங்கள் சுருங்கின.. நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன..
"உன் மனசில என்னதான் இருக்கு..?" விசாரித்தான்.
"எதுவும் இல்லையே.." என்றாள் அனுராதா..
"பொய்.. நீ திட்டம் போட்டு ஆட்டம் காட்டற.."
"திட்டம் போடறதெல்லாம் உங்க வேலை.. எனக்கும் திட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. நான்.. நானுண்டு.. என் வேலையுண்டுன்னு இருக்கிறவ.."
"ராதா.. நீ இப்ப என் பெண்டாட்டி.."
"திரும்பத் திரும்ப இதையே சொல்றீங்களே.. ஞாபகம் படுத்திக்கறிங்களா..? தேவைதான்.. ஒருத்தி கூடப் பழகினா பெண்டாட்டிக்கும்.. மத்தவங்களுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்.. நாமதான் கோபியர் கொஞ்சும் ரமணனாச்சே.. யார் ஆசைப்பட்டாலும் அவங்க பின்னாலே நடைபோடறவராச்சே.. உங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில பெண்டாட்டி யார்ன்னு ஞாபகம் வராதுதான்.. எதுக்கும் ஒரு நோட் புக்கில ஸ்ரீராமஜெயம் எழுதுகிறதைப் போல.. ராதா என் பெண்டாட்டின்னு எழுதிக்கிட்டே இருங்க.. மனப்பாடம் பண்ணினதைப் போல மனசில் ஒருவேளை தங்கினாலும் தங்கலாம்..."
கன காரியமாக அவள் யோசனை சொன்னதில் அவனுக்கு வெறி வெறியாக வந்தது.. அவளின் அந்த அட்டூழியத்தையும் அவனைச் செய்த அந்த அடாவடி விமரிசனத்திலும் அவன் மனம் லயித்தது.. அவளை வேட்டையாடிப் புசிக்க வேண்டி அவனின் உடல் துடித்தது.. அது முடியாமல் அவள் முகத்தின் வெறுப்பு அணை கட்டியதில் பசியோடு இருந்தவன் கடுங்கோபம் கொண்டான்..
"பெண்டாட்டி புருசன்கூட இருக்கிறதைப் போல முகத்தை வைச்சுக்கனும்.. இப்படியா.. எவனோ ஒருத்தன்... கற்பை சூறையாட வருகிறதைப் போல முகத்தை வைச்சுக்கிறது..?"
ராதா இகழ்ச்சியாக உதட்டை மடித்துக் கடித்தபடி அவனைப் பார்த்தாள்.. அதில் தெரிந்த உதாசீனத்தில் அவன் கண்கள் இடுங்கின..
"உங்களுக்கு அதைப் பத்தி என்ன கவலை.. அத்தான்..?"
"அத்தானா..?"
முரளிதரனுக்கு இன்பமான இம்சையாக இருந்தது.. அவளின் ஒவ்வொரு சொல் வீச்சும் அவளைப் புசிக்க அவனை அழைத்ததில் அவன்பசி அவனை பாடாய் படுத்தியது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே..-18
ராதையின் நெஞ்சமே..-18
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy