ராதையின் நெஞ்சமே..-16

16 "போர்.. ஃபைவ்.. சிக்ஸ்.." எண்ணிக்கை முடிந்தவனாக முரளிதரன் அவளையே கூர்மையாகப் பார்த்தபடி மேடையை நோக்கி நகரப் போனான்.. "...

16

"போர்.. ஃபைவ்.. சிக்ஸ்.."
எண்ணிக்கை முடிந்தவனாக முரளிதரன் அவளையே கூர்மையாகப் பார்த்தபடி மேடையை நோக்கி நகரப் போனான்..
"வேண்டாம்.."
பதறிப் போன அனுராதாவின் கை அவனுடைய கையை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.. அவன் கையின் மீது படிந்திருந்த அவளின் கையை ஓர் பார்வை பார்த்தான் முரளிதரன்.. அடுத்ததாக அவள் முகத்தைப் பார்த்து வைத்தான்..
"என்ன வேண்டாம்..?"
"ப்ளீஸ்.. கல்யாணத்தை நிறுத்திராதீங்க.. அண்ணன் மாட்டேன்னுதான் சொன்னான்.. நான் பாவி.. சம்மதிக்க மாட்டேன்னு சொன்னவனை சம்மதிக்க வைச்சு.. ரிசப்சன் மேடை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திட்டேன்.. இது நின்னு போனா அந்தப் பாவமெல்லாம் என்னைத்தான் சேரும்.."
"அது உன் பிரச்னை.. எனக்கென்ன வந்தது.."
"உங்களுக்குப் புண்ணியமாப் போயிரும்.."
"உன்னைப் பாவம் சேரக் கூடாது.. எனக்கும் புண்ணியம் சேரனும்ன்னா.. இரண்டுக்கும் சேர்த்து ஒரேயொரு வழிதான் இருக்கு.. அது நீயும்.. நானும் மேரேஜ் பண்ணிக்கிறது.."
முரளிதரனின் தீர்மானத்தை மீறி அணுவளவும் அசைய முடியாது என்று அனுராதாவிற்குப் புரிந்து
போனது.. அவன் கண்ணி வைத்து அவளைச் சிறை பிடித்திருக்கிறான்.. அதிலிருந்து தப்ப அவளால் இனி முடியாது..
"ஆகட்டும்.." விரக்தியுடன் சொன்னாள் அனுராதா..
அவளுடைய அந்த விரக்தி முரளிதரனை அசைக்கவில்லை.. அவன் இரும்பு மனம் கொண்டவனாக.. அசையாமல் அவளைப் பார்த்து..
"நம்பலாமா..?" என்று கேட்டான்..
"நம்பலாம்.."
"பிராமிஸ்..?"
"பிராமிஸ்.."
அவர்கள் தாழ்ந்த குரலில் வழக்கடித்துக் கொண்டிருக்க.. முரளிதரனைத் தேடி அங்கே வந்த ரங்கநாதன் அவர்களை வியப்புடன் பார்த்தார்..
"இது மாப்பிள்ளையின் தங்கை.."
"தெரியுமே.."
"ஏற்கனெவே தெரியும் போல இருக்கே.."
"ரொம்பத் தெரியும் ரங்கநாதன் சார்.. ராதா என் செகரட்டரியா வேலை பார்த்தா.. நாங்க ரொம்ப குளோஸ்.."
இயல்பாக அவன் பேசிய சொந்தத்தில் அனுராதா திகிலடைந்தாள்.. ரங்கநாதனின் புருவங்கள் சுருங்கின.. அதைக் கவனிக்காததைப் போல பிசிறில்லாத குரலில் பேசிக் கொண்டே போனான் முரளிதரன்..
"ஒருவகையில் உங்க பெண்ணை அஜித் மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு ராதாதான் காரணம் ரங்கநாதன்.."
"ஓ..."
"நாங்க லவ்வர்ஸ்.. மேரேஜ் பண்ணிக்க டிசைட் பண்ணினோம்.. காதலனின் ஆபிஸில் வொர்க் பண்ண வேண்டாம்ன்னு ராதா நினைத்தா.. வேலையை ரிஸைன் பண்ணிட்டா.. மேரேஜீக்கு நான் ஃபோர்ஸ் பண்ணினப்ப இவனோட அண்ணனுக்கு இவதான் தாய்போலன்னு சொன்னா.. அவர் இவங்களோட அப்பா.. சித்தி குடும்பத்தோட ஒட்ட மாட்டாராம்.. அவருக்கு முன்னாலே.. இவ மேரேஜ் பண்ணிக்கிட்டா அவர் தனிமைப் பட்டு விடுவாரோன்னு கவலைப்பட்டா.. அஜித் என் மைத்துனனாகப் போகிறவரு.. எங்க தகுதிக்கேத்த இடத்தில பெண் பார்க்கனுமில்லையா..? எனக்கு உடனே உங்க நினைவு வந்தது.. சொல்லிட்டேன்.."
முரளிதரன் உறவுக்காரனாக மாறப்போகிறான் என்ற செய்தியில் ரங்கநாதனின் முகத்தில் கோடி வாட்ஸ் பல்புகள் எரிந்தன.. அதுவரை ஒப்புக்கு அவளிடம் பேசி வைப்பவர்.. உடனடியாக..
"எங்க பிரதிபாவுக்கு நாத்தனார் மேல கொள்ளைப் பாசம்.. மாப்பிள்ளையைப் பத்திக்கூடப் பேச மாட்டா.. நாத்தனாரைப் பற்றித்தான் ஓயாம பேசிக்கிட்டே இருப்பா.. நாங்க கூட உனக்கு வாய் வலிக்காதான்னு கிண்டல் பண்ணுவோம்.." என்று அள்ளி விட்டார்..
எப்போது அவளின் மகள் பாசத்தைப் பிழிந்து பழரசம் வைத்தாள் என்று பிரமித்துப் போய் விட்டாள் அனுராதா..
அஜித்தின் முன்னிலையில் ஏதேனும் ரெண்டு வார்த்தைகளை உதிர்த்து வைத்து பேசுவதைப் போல பாவனை செய்யும் பிரதிபா அஜித் இல்லாவிட்டால் அனுராதாவைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாள்.. ரங்கநாதனும் மகளைப் போலத்தான்.. நளினியோ அவர்கள் இருவரையும் தூக்கி விழுங்கி விடுவாள்.. பிரதிபாவிற்கு அவளின் பெற்றோர்தான் இந்த விசயத்தில் டியூசன் மாஸ்டர்களாக இருக்கிறார்கள் என்பது அனுரதாவின் கணிப்பு..
அப்படிப்பட்ட ரங்கநாதன்.. அவர் அண்ணாந்து பார்க்கும் உயரத்திலிருக்கும் முரளிதரனின் மனைவியாக அனுராதா ஆகப்போகிறாள் என்ற விவரம் காதில் விழுந்த அடுத்த நொடியிலேயே அன்பைப் பிழிகிறார் என்றால் பணத்தின் மகத்துவத்தை அனுராதா என்னவென்று சொல்லுவாள்..!
"இன்னும் அஜித்துக்கு நாங்க விவரம் சொல்லலை.. சொன்னா தங்கை கல்யாணம் முடிந்த பின்னாலதான் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் பிடிப்பார்.."
"யெஸ்.. அஃப் கோர்ஸ்.."
"ராதாவுக்கு எங்க மேரேஜில் அஜித் தன் வொய்போடு நின்று அட்சதை தூவி வாழ்த்தனும்கிற எண்ணம்.."
"குணமான பெண்கள் அப்படித்தான் நினைப்பாங்க.."
'இவரின் மகளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னதினால நான் குணவதியா..? இல்லைன்னா அந்தப் பட்டத்தை இவர் கொடுக்க மாட்டாரா..?'
ரங்கநாதனின் நாடகத்தில் அனுராதாவுக்கு உண்மையாகவே தலை வலிக்க ஆரம்பித்து விட்டது.. நெற்றிப் பொட்டை அவள் நிரடியதைப் பார்த்த முரளிதரன்..
"இங்கே ஹெட்ஏக் டேப்லெட் இருக்கா ரங்கநாதன் சார்..?" என்று வினவினான்..
"ஓ.. ஷ்யூர்.. யாருக்கு ஹெட் ஏக் சார்..? உங்களுக்கா..?" ரங்கநாதன் பரபரத்தார்..
"நோ.. நோ.. ராதாவுக்குத்தான் ஹெட் ஏக்.. இப்படி உட்கார் ராதா.. ரங்கநாதன் சார்.. ஸ்ட்ராங்கா ஒன் கப் ஆஃப் காபியும் வேணுமே.."
"இதோ சார்.."
ரங்கநாதன் ஏறக்குறைய ஓடினார்.. அவர் காட்டிய பரபரப்பில் அயர்ந்து போனாள் அனுராதா.. காபியும்.. தலைவலி மாத்திரையும் வந்தன.. ராஜ உபசாரம் என்றால் என்னவென்பதை அப்போதுதான் அனுராதா அறிந்தாள்..
"அஜித் மேரேஜ் முடியட்டும் ரங்கநாதன் சார்.. அதற்கப்புறம் நானே அவருக்குச் சொல்லிக்கறேன்.." என்ற முரளிதரனின் யோசனையை பலமாக ஆதரித்தார் ரங்கநாதன்..
'நல்ல வேளை..! இந்த மேட்டர் வெளியே கசியல.. முரளிதரனின் மைத்துனனுக்கு பெண் கொடுக்கிறதுன்னா சும்மாவா..? எத்தனை பேர் போட்டிக்கு வருவாங்களோ.. மேரேஜ் முடிஞ்சதும் நான் முரளிதரனுக்கு ரிலேடிவ் ஆகிட்டேன்னு எத்தனைபேர் வயிறெரியப் போறாங்களோ.. ரங்கநாதா.. நீ ஜாக்பாட் அடிச்சிட்டடா..'
அவர் பெருமை அவருக்கு.. முரளிதரனின் மைத்துனன் அவர் வீட்டின் மாப்பிள்ளை என்பதில் அவருடைய தொழில் வட்டாரத்தில் உயரப் போகும் அவரின் மதிப்பைக் குறித்த இனிமையான கனவுகளில் அவர் அமிழ ஆரம்பித்தார்..
பிரதிபாவின் காதுகளில் அவர் என்ன சொன்னாரோ.. அதுவரை அலட்சியமாக நாத்தனாரைப் பார்த்து வைத்த பிரதிபாவின் முகம் மாறிவிட்டது.. பொறாமை கலந்த பிரமிப்புடன் அவள் அனுராதாவைத் திரும்பிப் பார்த்தாள்..
'போடி..' என்றிருந்தது அனுராதாவுக்கு..
'என் அண்ணன் ராமன்.. நீ கொடுத்து வைத்தவ.. உன்மேல இருக்கிற பிரியத்தில.. கூடப் பிறந்து.. தாயில்லாமல் போன பின்னாலே உனக்கு நான்.. எனக்கு நீ..ன்னு கூட வளர்ந்த தங்கையையே மறந்தவன் அவன் எனக்கு அப்படியில்ல...'
அனுராதா மனம் வலிக்க அன்று இரவு முழுவதும் தூக்கமில்லாமல் விழித்திருந்தாள்.. மறுநாள் காலையில் திருமணம் எந்தவிதத் தடையுமில்லாமல் நல்லபடியாக நடந்து முடிந்த பின்னால்தான் அவளால் நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது..
பிரதிபாவுடன் பாலும்.. பழமும் சாப்பிட அஜித் விலகிப் போய்விட அனுராதா தமையனை விட்டு விலகித் தனியறைக்கு வந்தாள்.. அவளுக்கு அழுவதற்கான அவகாசம் அப்போதுதான் கிடைத்தது.. பொங்கி அழுதாள்.. இடையூறில்லாமல் அழுது முடித்து முகம் கழுவி அவள் வெளியே வந்தபோது.. அஜித் பிரதிபாவுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.. ரங்கநாதனின் வீட்டிற்குப் போக வேண்டுமாம்.. அனுராதா மாடியின் கைப்பிடி வளைவைப் பிடித்தபடி அவளிடம் சொல்லி விட்டுப் போக அண்ணன் அவளைத் தேடுகிறானா என்று காத்திருந்தாள்..
இல்லை.. அஜித் அவளைத் தேடவில்லை.. பிரதிபாவுடன் பேசியபடி ரங்கநாதன் குடும்பத்தார் புடைசூழ மண்டபத்தை விட்டுப் போய் விட்டான்..
அனுராதா அசைவற்று நின்றாள்.. யாருமில்லாத தனிமை அவளைச் சூழ்ந்தது.. அவளைப் பெற்ற அன்னை பிரிந்து போன போதுகூட இந்த அளவுக்கு அவள் துயரப் படவில்லை.. அப்போது ஆதரிக்க அவள் அண்ணன் இருந்தான்..
இப்போது..?
"அனு.." அவள் தோளில் ஒரு கரம் படிந்தது..
திரும்பினாள்.. அங்கே சிவராமன் நின்றிருந்தார்..
"உன்னை எங்கேயெல்லாம் தேடறது..? பந்தியே முடிஞ்சிருச்சு.. உன்னைக் கானோம்.. வா.. சாப்பிடப் போகலாம்.."
அவரின் கனிவில் உடைந்து விட்டாள் அனுராதா..
"அப்பா.."
அவர் தோளில் காய்ந்து அவள் கேவி அழுதாள்.. சிவராமனால் அவள் மனதைப் புரிந்துகொள்ள முடிந்தது..
"அழுகாதேம்மா.. நீதானே அஜித்துக்கு தைரியம் கொடுத்து அவனுக்கு ஒரு வழியைக் காண்பிச்சே.. நீயே தைரியமில்லாம அழுதா எப்படிம்மா.. அவனுக்குத் தெரிஞ்சா சங்கடப்பட மாட்டானா..?"
இதமாகப் பேசியபடி அனுராதாவைச் சாப்பிட அழைத்துக் கொண்டு போனார் சிவராமன்.. அழுது அழுது.. அனுராதாவின் இமைகள் வீங்கியிருந்தன..
"என்னடி இது.. அண்ணன்காரன் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனா தங்கைகாரி இப்படித்தான் அழுது வைப்பாளா..? எங்கேயும் இந்தப் பாசத்தை நாங்க காண்கலை பாரு.." பிரேமா முகவாயை தோள் பட்டையில் இடித்துக் கொண்டாள்..
அனுராதா என்ன செய்வாள்..?
அவளது அந்த அழுகை அஜித்தை விட்டுப் பிரிந்திற்காக மட்டுமா..? முரளிதரனை மணக்க வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு வந்துவிட்டதாலும் தானே.. அதை பிரேமா அறிவாளா..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே..-16
ராதையின் நெஞ்சமே..-16
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy