ராதையின் நெஞ்சமே. -15

15 "கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.." திருமண மேடையிலிருந்த யாரோ ஒருவரின் ஓங்கிய குரலில் கெட்டி மேளம் ஒலித்தது.. அஜித் பிரதிபாவின...

15


"கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.."
திருமண மேடையிலிருந்த யாரோ ஒருவரின் ஓங்கிய குரலில் கெட்டி மேளம் ஒலித்தது.. அஜித் பிரதிபாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.. நாத்தனார் முடிச்சை அனுராதா போட்டுவிட்டாள்..
கையிலிருந்த அட்சதையை புதுமணத் தம்பதிகளின் மீது போட்ட அனுராதாவின் கண்களில் இருந்து மடைதிறந்த வெள்ளம் போல அருவியாக கண்ணீர் கொட்டியது.. இனி அவள் தமையன் பிரதிபாவின் கணவனாகி விட்டான்.. ரங்கநாதனின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகி விட்டான்.. இனி அவளுக்கு அவன் துணையாக நிற்கப் போவதில்லை..
அவள் என்ன செய்யப் போகிறாள்..?
முரளிதரனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியின் நினைவு அவள் மனதில் பாறாங்கல்லைப் போல ஏறி அமர்ந்திருந்தது..
அந்த வாக்குறுதியை அவள் கொடுத்த பின்னால் தானே முரளிதரன் வாய் மூடி... பேசாமல் சென்று விட்டான்.. இல்லையெனில் ரிசப்சனின் போதே இரண்டில் ஒன்றைப் பார்த்துத் தொலைத்திருப்பானே..
அனுராதா சோர்வாக மேடையை விட்டு இறங்கினாள்.. மணமக்கள் அக்கினியை வலம் வந்து கொண்டிருந்தார்கள்.. மண்டபத்தில் இருந்தவர்கள் வேலை முடிந்தது என்பதைப் போல வேறு கதைகளைப் பேசியபடி டைனிங் ஹாலைத் தேடிப் போக ஆரம்பிக்க.. அவள் மட்டும் தனிமையைத் தேடிப் போனாள்.. மாப்பிள்ளை வீட்டாருக்காக கொடுக்கப் பட்டிருந்த அறைக்கதவை மூடி விட்டு கட்டிலில் விழுந்தவள்.. கண்மூடிச் சத்தமின்றி அழ ஆரம்பித்தாள்..
'எப்படியெல்லாம் மிரட்டினான்..?'
முரளிதரன் அது போன்ற மிரட்டுதல்களைத்தான் அவள் முன்னால் வைத்தான்.. அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே.. அவளை விட்டு விலகி அவளைக் கவனிக்காததைப் போல தள்ளி நின்று ரங்கநாதனைக் கூப்பிட்டான்...
'என்னத்தைச் சொல்லித் தொலைக்கப் போகிறானோ..'
அனுராதாவின் மனம் நடுங்கியது.. முரளிதரன் கூப்பிட்ட குரலுக்கு தன்வயதையும் மறந்து ஓடி வந்து நின்ற ரங்கநாதனைப் பார்த்த போது அவள் திகைத்து விட்டாள்.. முரளிதரன் ரங்கநாதனிடம் அவனுக்கு இருக்கும் செல்வாக்கை அவளுக்கு உணர்த்த நினைக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்து போனது..
கடைக் கண்ணால் அனுராதாவைப் பார்த்தபடி..
"ஏன் ரங்கநாதன் சார்.. ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன்.. நெருப்புன்னா வாயில சூடு பட்டு விடாது.." என்று ஆரம்பித்தான் முரளிதரன்..
"என்னன்னு சொல்லுங்க சார்.." கைகட்டி நிற்காத குறையாக கேட்டார் ரங்கநாதன்..
"இப்ப மேரேஜை நிறுத்தி விடுங்கன்னு நான் சொல்கிறேன்னு வைத்துக்கங்க.. நீங்க என்ன செய்வீங்க..?"
"என்ன கேள்விசார் இது..? நீங்க மலையுச்சியில இருந்து குதிக்கச் சொல்லிச் சொன்னாக்கூட உடனே குதிச்சிருவேனே.. நீங்க காரணமில்லாம எதையும் சொல்ல மாட்டிங்கன்னு எனக்குத் தெரியாதா..? ஏன்சார்..? எதுக்காக இப்படியொரு வார்த்தையைச் சொல்கிறிங்க..?"
"நத்திங்... நத்திங்... சும்மா... கேட்கனும்னு தோணிச்சு.. கேட்டேன்.. நீங்க தப்பா எடுத்துக்கலையே.."
"நோ சார்.. நீங்க சொன்னதாலதான் அஜித்தையே நாங்க செலக்ட் பண்ணினோம்.. இவர் நீங்க பார்த்துக் கொடுத்த மாப்பிள்ளை சார்.. இவருக்கு நீங்க கேரண்டின்னு சொன்னதினாலதான் எதைப் பத்தியும் யோசிக்காம.. இவரைப் பற்றி விசாரிக்காம மேரேஜை நான் பிக்ஸ் பண்ணினேன்.. முரளிதரன் சார் கேரண்டி கொடுக்கிறதுன்னா சும்மாவா..? அவர் கை காட்டினாலே போதுமே... கண்ணை மூடிக்கிட்டு பெண்ணை மேரேஜ் பண்ணிக் கொடுக்கலாமே.. இங்கே கேரண்டியே கொடுத்திருக்கீங்க.. நான் எதுக்காக சார் கவலைப்படப் போறேன்..?"
"என்மேல வைத்திருக்கிற நம்பிக்கைக்கு நன்றி ரங்கநாதன் சார்.."
"பெரிய வார்த்தையெல்லாம் பேச வேணாம் சார்.. உங்களை நம்பாம வேற யாரை நான் நம்பப் போறேன்..? உங்க அப்பாவைவிட நீங்க பெரிய ஜீனியஸாச்சே.."
ரங்கநாதனுக்கு அழைப்பு வந்து விட... அவர் முரளிதரனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு விரைந்தார்..
"அவர் பேசினது உன் காதில் விழுந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.." அனுராதாவிடம் வந்தான் முரளிதரன்..
"கேட்டுச்சு.. கேட்டுச்சு.." எரிச்சலுடன் சொன்னாள் அனுராதா..
"அவருக்கு என்மேல தேவதா விசுவாசம்.."
"அவரைப் புத்திசாலின்னு நினைச்சேன்.. இப்பயில்ல அது தப்பான கணிப்புன்னு தெரியுது.. உங்களைப் போய் நம்பறாரே.."
"அதனாலதான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கார்.."
"அதுக்கு இப்ப என்னங்கறிங்க..?"
"உன் அண்ணனோட மேரேஜ் நடக்கனுமா... வேண்டாமாங்கிறேன்.. அது இப்ப உன் கையில்தான் இருக்கு.."
அனுராதா மேடையைப் பார்த்தாள்.. பிரதிபாவின் பேச்சுக்கு குனிந்து அவள் முகத்தோடு முகம் இழைய நின்றிருந்தான் அஜித்... அதில் தெரிந்த ரகசியக் கிளுகிளுப்பில் அவள் மனம் பதறியது..
'இந்த சந்தோசம் நிலைக்கனுமே..'
"வேண்டாம் முரளிதரன்.. இது பெரிய பாவம்.."
"அப்ப.. என்னை மேரேஜ் பண்ணிக்க.. என்னைப் பார்த்தா உனக்குப் பாவமாத் தெரியலையா..?"
"உங்களைப் பார்த்துக்கூட யாராவது பாவப் படுவாங்களா..? பயப்படுவாங்க முரளிதரன்.."
"நீதான் அந்த முட்டாள்த்தனத்தைச் செய்வ... என்னைப் போல ஹேண்ட்சம்மா.. ஸ்மார்ட்டா.. இருக்கிற ஹீரோவைப் பார்த்தா வில்லனுக்குத்தான் பயம் வரும்.. ஹீரோயினுக்கு வரலாமா..?"
"நான் ஹீரோயினோ.. இல்லையோ.. நிச்சயமா நீங்க ஹீரோ இல்லை.."
"வேற யாருன்னு நீயே சொல்லு.."
"வில்லன்.. பக்கா வில்லன்.."
அனுராதா வெறுப்புடன் சொன்னாள்.. அவள் முகத்தில் தெரிந்த அதீத வெறுப்பை ஆழ்ந்து நோக்கிய முரளிதரன் தோளைக் குலுக்கிக் கொண்டான்...
"நம்மைப் பத்தி வெளியில பரவியிருக்கிற கதைக்கும்.. உன் முகத்தில தெரியற இந்த வெறுப்புக்கும் பொருத்தமா இல்லையே..."
"கதையா..?"
அடுத்த கதையாக எதை ஆரம்பிக்கப் போகிறான் என்று திகிலடைந்து போனாள் அனுராதா.. முரளிதரன் சொன்ன.. கதையும் திகில் கதையாகத்தான் இருந்தது.. அனுராதா கண்கள் நிலைகுத்த உட்கார்ந்தே விட்டாள்..
"வேற எந்தக் கதைன்னு நினைக்கிற டார்லிங்..? எல்லாம் நம்மோட காதல் கதைதான்.. ஆபீஸ் முழுக்க நீயும் நானும் காதலிச்ச கதை பரவியிருக்கே.. காதலன்கிட்டயே வேலை பார்க்க முடியாம நீ வேலையை ரிஸைன் பண்ணிட்டதா பேச்சிருக்கே.. என்னிடமும் கேட்டாங்க.. நான் ஆமாம்ன்னு சொல்லலைப்பா.. அட் தி ஸேம் டைம்.. இல்லைன்னும் சொல்லலை.. லேசாச் சிரிச்சுக்கிட்டே பேசாம இருந்தேன்.."
"அடப்பாவி..!"
"இந்தப் பெண்கள்கிட்ட இது ஒன்னு இருக்கு.. காதல் அதிகமாகிட்டா.. வாடா.. போடான்னு சொல்றது.. நீ மட்டும் விதிவிலக்காவா இருக்கப் போற..? இப்ப என்ன.. சொல்லிக்க.. யார் சொல்றது..? நீதானே சொல்ற.. என்மேல உனக்கில்லாத உரிமையா..?"
'கிழிஞ்சது.. போ..'
அனுராதாவுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது.. அதைச் சாக்கிட்டு அங்கிருந்து நகர்ந்தால் என்ன என்று தோன்றவும்.. நெற்றிப் பொட்டை அழுத்தியபடி நகர யத்தனித்தாள்..
"அடடா... தலையை வலிக்குது போல.." அக்கறையாக வினவினான் முரளிதரன்..
"ஆமாம்.. ஒரு மாத்திரையைப் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்தாச் சரியாப் போயிரும்.."
"செய்... செய்... எங்கே ரெஸ்ட் எடுக்கப் போற..?"
'ஒரு தலைவலிக்கு இத்தனை கேள்விகளா..?'
அனுராதாவுக்கு செம கடுப்பாக இருந்தது.. அதைக் காண்பித்துவிட முடியாமல் அவள் கைகள் கட்டிப் போடப் பட்டிருக்கிற நினைவுடன்..
"எங்களுக்குன்னு ரூம் கொடுத்திருக்காங்க.." என்று முணுமுணுத்தாள்..
"யெஸ்.. யெஸ்.. மாப்பிள்ளை வீட்டுக்குன்னு ரூம்ஸ் கொடுத்திருப்பாங்கதான்.. பட்.. மேரேஜே நடக்குமா.. நடக்காதாங்கிற நிலைமையில இருக்கு.. இதில எந்த நிம்மதியில நீ இங்கே ரெஸ்ட் எடுக்க முடியும்..? பேசாம உன் வீட்டுக்குப் போய் விடேன்.."
"என்னது..?"
"எதுக்கு இந்த ஷாக்..? நான்தான் கிளிப்பிள்ளைக்கு லெசன் எடுக்கிறதைப் போல லெக்சர் கொடுத்துக்கிட்டே இருக்கேன்.. உன் காதில் ஏறினால்தானே..? நீ என்ன சொல்கிறது.. நான் என்ன கேட்கிறதுன்னு நீ தலையைப் பிடிச்சுக்கிட்டு நழுவப் பார்த்தா.. நான் செய்ய நினைத்தiத் தானே செய்ய முடியும்..? நீ உன் வீட்டுக்குத் திரும்பிடறது தான் பெட்டர்.. முன்னாடி நீ போனா.. பின்னாடியே மேரேஜ் நின்று போன உன் அண்ணனும் வருவான்.. நீ எதிர் கொண்டு கட்டிப் பிடிச்சு அழ தோதா இருக்கும்.."
அனுராதா மனம் பதைக்க மேடையைப் பார்த்தாள்.. ரங்கநாதன் அறிமுகப்படுத்தி வைத்த யாரோ ஒரு பெரிய மனிதருக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தான் அஜித்..
"நீங்கள்ளாம் பெரிய மனுசன்.. கல்யாண வீட்டில நின்னுக்கிட்டு பேசறதைப் போலவா பேசி வைக்கறிங்க..? வாயைத் திறந்தாலே அச்சாணியம்தான்.. இப்படிப் பேசுகிறோமேன்னு கொஞ்சம் கூடவா சங்கடம் வரலை..?"
"வரலையே.. நீ வசப்பட்டா நான் ஏன் இப்படிப் பேசப் போறேன்..? எங்கே..? நீதான் வசப்பட மாட்டேன்னு அடம் பிடிக்கறியே.."
"அதுக்கு வேற ஆளைப் பாருங்க முரளிதரன்.."
"நான் உன்னை மட்டும்தாண்டிப் பார்ப்பேன்.."
"பாருடா.. இவர் கூட காதல் வசனம் பேசறாரு.."
"கண்ணனை மீறிய காதலனில்லை.. நான் இந்த ராதையோட கண்ணன்.."
"குட்ஜோக்.. நான் ராமனுக்காக காத்திருக்கேன்.."
"வீனா எதுக்காக அந்த வெட்டி வேலைiயெல்லாம் செய்கிற..? இப்ப முடிவெடுக்க வேண்டிய நிலையில நீ இருக்க.. எனக்கும் உனக்கும் மேரேஜ் நடந்தாகனும்.. அதுக்கு நீ பிராமிஸ் பண்ணினா வாயை மூடிக்கிட்டு நான் ரிசப்சனில் கலந்துக்குவேன். இல்லைன்னா இந்த ரிசப்சனையே மாத்தியமைச்சு வேற ஒரு மாப்பிள்ளையை ரிசப்சன் மேடையிலே நிறுத்தி வைச்சிருவேன்.. உனக்கு ஆறு நிமிசம்தான் டைம்.. கவுண்ட் டவுன் ஆரம்பிச்சாச்சு.. ஒன் மினிட்.. டூ மினிட்.."
முரளிதரன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி சொல்ல ஆரம்பித்தான்.. அனுராதாவின் உடலும் மனமும் பதறின.. அவள் யாரிடம் அதைப்பற்றி முறையிடுவாள்..? யாரால் அவளுக்கு உதவி செய்ய
முடியும்..?
அண்ணனாகப் பட்டவனோ திருமணம் நடக்கப் போகிறது என்ற மகிழ்வுடன் மாப்பிள்ளையாக மண மேடையில் நிற்கிறான்.. அவனைத் துணைக்கு அழைக்க முடியாது.. ஒரு வேளை அனுராதாவின் மறுப்பால் அவனது திருமணம் நின்று அதைப்பற்றி அவனுக்கும் தெரிய வந்து விட்டால் ஆயுளுக்கும் அவன் அனுராதாவை மன்னிக்கவே மாட்டான்.. பிரதிபாவின் மீது அவனுக்கிருக்கும் காதல் அப்படிப்பட்டது..
தகப்பனாகப் பட்ட சிவராமனோ மூத்ததாரத்தின் பிள்ளைகளிடம் இளைய தாரதத்தின் முன்பாக பேசக்கூட பயப்படுவார்.. அவராவது.. அனுராதாவின் உதவிக்கு வருகிறதாவது..
ரங்கநாதன் அவளுடைய அண்ணனுக்குப் பெண் கொடுக்கப் போகிறவர்தான்.. அவரால் முரளிதரனைத் தட்டிக் கேட்க முடியும்.. ஆனால் கேட்பாரா..? அதற்குப் பதில் அவன் என்ன சொன்னாலும் கேட்டுத் தொலைக்கிறாரே..








Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -15
ராதையின் நெஞ்சமே. -15
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy