ராதையின் நெஞ்சமே. -12

12 "இப்படி வாம்மா.." சிவராமன் கை நீட்டி மகளை அழைத்தார்.. அனுராதா மறுக்காமல் அவர் பக்கத்தில் அமர்ந்து அவர் தோள் சாய்ந்து கொண்ட...

12


"இப்படி வாம்மா.."
சிவராமன் கை நீட்டி மகளை அழைத்தார்.. அனுராதா மறுக்காமல் அவர் பக்கத்தில் அமர்ந்து அவர் தோள் சாய்ந்து கொண்டாள்.. அவள் விழிகளில் வழிந்த கண்ணீர் துளிகள் அவர் தோளை நனைத்த போது சிவராமன் தன்னைத் தானே வெறுத்துக் கொண்டார்..
அவர் மகளின் இந்தத் தனிமைத் துயருக்கு அவர் தானே முக்கிய காரண கர்த்தா.. உனக்கு நானிருக்கிறேன் மகளே என்று சொல்லி மகளைத் தேற்ற அவரால் முடியவில்லையே..
"அடேங்கப்பா.. அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில பாசம் பொங்கி வழியுது.. இந்தப் பாசத்தில கொஞ்சத்தையாவது சிவரஞ்சனி மேலேயும் கலரஞ்சனி மேலயும் காட்டியிருக்கீங்களா..? வஞ்சனை.. அத்தனையும் ஓர வஞ்சனை.. பாசமெல்லாம் மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு.. பேருக்கு குடும்பம் நடத்த இந்த பிரேமான்னு இருக்கிற மனுசன் கிட்ட என்னைக் கொண்டு வந்து விதி தள்ளிருச்சே.."
"பிரேமா.."
"இத்தனை நாளா இது தெரியாத இளிச்ச வாச்சியா நான் பிழைப்பு நடத்திட்டேனே சாமி.."
"நிறுத்துடி.."
"ஒருநாள்.. ஒரு பொழுதாவது.. என் பிள்ளைகளோட இப்படி உட்கார்ந்து.. பாசமா.. அன்பா.. பதவிசா இந்த மனுசன் பேசியிருப்பரா..?"
பிரேமா வைத்த பிலாக்கணத்தில் அனுராதா ஊஞ்சலை விட்டு இறங்கினாள்.. அதற்கு மேலும் தகப்பனின் ஆறுதல் கிடைக்காது என்பதை புரிந்து கொண்டவளாக..
"வரேன்பா.." என்று மாடியேறினாள்..
"அனு.."
"என்னப்பா.."
"நீ சொன்னதில் எனக்கு முழு சம்மதம்மா.. அஜித்திடம் பேசிரு.. இந்த வாரம் வெள்ளிக்கிழமை நல்ல நாளா இருக்கு.. அன்னைக்கே பெண் பார்க்க வரோம்ன்னு ரங்கநாதன் வீட்டுக்குத் தகவல் சொல்லிரு.."
"ஆகட்டும்ப்பா.."
அனுராதா போய் விட்டாள்.. பிரேமா அக்கினிப் பிழம்பாக நின்று கொண்டிருந்தாள்..
"நான் ஒருத்தி இங்கே குத்துக் கல்லாட்டம் நின்னுக்கிட்டு இருக்கேன்.. என்னை மதிக்காம நீங்க உங்க முத தாரத்து பிள்ளைக வீட்டுக்கு நாட்டாண்மை பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. என்ன விசயம்..?"
"அஜித்துக்கு கல்யாணம் கூடியிருக்கு.."
"ஆச்சரியமா இருக்கு.. இவனே அடுத்த வேளைச் சோத்துக்கு வழியில்லாம இருக்கான்.. இவனுக்கு பொண்ணு கொடுக்க யாரு தவ்விக்கிட்டு வாராங்களாம்..?"
"ஆடிட்டர் ரங்கநாதன் வீட்டிலே தவ்விக்கிட்டு வர்றாங்களாம்.. அவங்க எப்பேற்பட்ட பணக்காரங்கன்னு தெரியுமா..? ஒற்றைப்பெண்ணைக் கொடுத்து அஜித்தை வீட்டோட மாப்பிள்ளையாக்கிக்கப் போறாங்களாம்.. அதனால..."
"அதனால..?"
"அடக்கி வாசி.. கோடிஸ்வரன் வீட்டு மாப்பிள்ளையாகப் போகிறவன்கிட்ட வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக்காதே.."
'இவனுக்கு இப்படி ஒரு வாழ்வா..?'
பிரேமா பொறாமைக் கடலில் மூழ்க ஆரம்பித்ததை வெகு திருப்தியுடன் பார்த்தபடி வீட்டுக்குள் போய் விட்டார் சிவராமன்..
பிரேமா அங்கேயே பித்துப் பிடித்தவளைப் போல அமர்ந்து விட்டாள்..
அனுராதா சொன்னதை அஜித்தால் நம்ப முடியவில்லை.. அவன் ஆனந்த அதிர்ச்சியில் இருந்தான்..
"நிஜமாவா சொல்ற..? ரங்கநாதன் சாரா அப்படிச் சொன்னார்..?"
"ஆமாம் அண்ணா.. அவர்தான் சொன்னார்.. உன்னை பெரிய ஆடிட்டரா ஆக்குவேன்னு சொன்னார்.. பிரதீபாவை உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையா ஆக்கிக்கப் போகிறதா சொன்னார்.. உனக்கு விருப்பமான்னு கேட்டுச் சொல்லச் சொன்னார்.."
"இது அருமையான வாய்ப்பு அனு.." பரவச மடைந்தான் அஜித்..
"ரங்கநாதன் சார்தான் எனக்கு ரோல் மாடல்.. அவரைப் போல ஒரு திறமையான ஆடிட்டரா வரனும்னு தான் இத்தனை நாளா கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்.. அவருக்கே மருமகனாகி.. அவர் தொழிலுக்கு வாரிசாகனும்னா.. வாட் எ கிரேட் ஆப்பர்சுனிட்டி..! அதிலும் பிரதிபா..! சான்ஸே இல்லை அனு..! அவ எனக்கு வொய்ஃபா வரப் போகிறாளா..?" கண்கள் மின்னச் சொல்லிக் கொண்டே வந்தவன் திடிரென்று பேச்சை நிறுத்தி விட்டு வானத்தைப் பார்த்தான்..
அவர்களுக்கு மட்டும் சொந்தமான அந்த மொட்டை மாடியின் குளிர்காற்று இதமாக வீசியது.. வானத்திலிருந்த நட்சத்திரங்கள் கண்சிமிட்டி என்னை எண்ணிப் பாரேன் என்று சவால் விட்டன.. எட்டாத தொலைவின் வட்ட நிலாவை ஏக்கத்துடன் பார்த்தாள் அனுராதா.. இதைப் போலதானே அவளின் அண்ணனும் எட்ட முடியாத தொலைவிற்கு உயர்ந்து பிரிந்து விடப் போகிறான் என்ற நினைவில் அவள் மனம் கலங்கியது...
"ஆனா அனு.. இதில் எனக்கு சம்மதமில்லைன்னு ரங்கநாதன் சார்கிட்டச் சொல்லிரு.." நிதானமாகச் சொன்னான் அஜித்..
"அண்ணா.." நம்ப முடியாமல் திகைத்துப் போனாள் அனுராதா..
"ஆமாம் அனு.. எனக்கு இதில் விருப்பமில்லை.."
"இப்பத்தானே அண்ணா உனக்கு இது கிரேட் ஆப்பர்சூனிட்டின்னு சொன்ன..?"
"ஆமாம் அனு.. இது எனக்கு கிரேட் ஆப்பர்சூனிட்டி தான்.. பட் அனு.. நான் தனி மனுசன் இல்லையே.. தனி மனுசனா இருந்தா கிடைச்சிருக்கிற இந்த வாய்ப்பை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு அவர் சொன்னதுக்கு உடனடியா சம்மதம் சொல்லிருவேன்.. நான் உனக்கு அண்ணன் அனு.. உன்னை தனியா விட்டுட்டு நான் மட்டும் அவங்க வீட்டோடு மாப்பிள்ளையா போகிறதா..? நெவர்.."
அஜித் அனுராதாவின் அண்ணன் என்பதை நிருபணம் செய்துவிட்டான்..
"அண்ணா.." அனுராதா உடைந்து அழுதாள்..
அவளுக்காக அவள் அண்ணன் தன் எதிர்காலத்தை தியாகம் செய்யத்துணிகிறானா..? அனுராதாவுக்குத் தெரியும்.. அந்த வீட்டின் மாடியில் ஒட்டாமல்தான் அஜித் வசித்தான்.. அவனைப் போன்ற வளர்ந்த ஆண்பிள்ளைக்கு சரியான உணவளிக்க முடியாத அனுராதாவின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு இரண்டு இட்லிகளுடன் பலமுறை அரைப் பட்டினியாய் இருந்திருக்கிறான்.. போட்டுக் கொள்ள உயர்ந்த ரக உடைகளில்லாமல் எளிமையான உடைகளையே எப்போதும் உடுத்தியிருக்கிறான்.. அவனுடன் படித்தவர்கள் அப்பாச்சி.. பல்சர்.. கார்.. என்று அலப்பறை காட்டிக் கொண்டிருந்த போது பஸ்ஸில் பயணம் செய்தே கல்லூரிக்குப் போய் வந்திருக்கிறான்.. பல சமயங்களிலும் அதற்கும் பணமில்லாமல் அவன் நடக்க நேர்ந்திருக்கிறது..
இப்போது அவன் பட்ட அனைத்துக் கஷ்டங்களுக்கும் நிவாரணம் வந்திருக்கிறது.. அவன் ஆசைப்பட்ட குடும்பச் சூழல்.. யாரைப் போல் ஆக வேண்டும் என்று கனவு கண்டானோ.. எவரை தன் மானசீக குருவாக மனதில் வரித்திருக்கிறானோ.. அவரின் சீடனாக.. அவரது அன்பு மருமகனாக.. மற்றொரு மகனாக.. வாழ்நாள் முழுவதும் அவருடன் சேர்ந்திருக்கும் வாய்ப்பு.. மனதுக்குப் பிடித்த அழகான பெண்ணே மனைவியாக கிடைக்கப் போகும் அதிர்ஷ்டம்.. இவை அனைத்திற்கும் மேலாக.. அள்ள அள்ள குறையாத பணம்.. இந்த அத்தனையும் அவனுக்காக அணி வகுத்துக் காத்திருக்கின்றன..
இருந்தும் அவள் அண்ணன் அதை மறுக்கிறான்.. ஏற்றுக் கொள்ள யோசிக்கிறான்.. எதற்காக..? அவனுடைய தங்கைக்காக..
"எப்படி அனு.. உன்னைத் தனியா விட்டுட்டு நான் மட்டும் வளமான வாழ்க்கையைத் தேடிப் போகிறதா..? வீட்டோடு மாப்பிள்ளைன்னு நினைக்கலை.. அது எனக்கு கொடுப்பினைன்னுதான் நினைக்கிறேன்.. ரங்கநாதன் சாரும்.. நளினி மேடமும் தங்கமானவங்க.. என்னை மருமகனா நினைக்காம மகனா நினைப்பாங்க.. பிரதிபாவைப் பத்திச் சொல்லவே வேண்டாம்.. அவ அழகுக்கும்.. அந்தஸ்துக்கும்.. பணத்துக்கும் பெரிய இடத்து மாப்பிள்ளை எத்தனையோ பேர் கிடைப்பாங்க.. இருந்தும் என்னை எனக்காக மதிச்சுப் பேசினவ.. அவளுக்கும் விருப்பம் இருக்குன்னா.. அதுக்கு நான் கொடுத்து வைச்சிருக்கனும்.. ஆனா அனு.. அங்கே உன்னையும் என்னால கூப்பிட்டுக் கிட்டுப் போக முடியுமா..? அதுசாத்தியமாகுமா..? வீட்டோடு மாப்பிள்ளையா என்னை அழைச்சுக்கிறவங்க.. உன்னையும் சேர்த்து அழைச்சுக்குவாங்களா..? அப்படியே அவங்க அழைச்சுக்கிட்டாலும் நீ அங்கே வந்து இருக்கச் சம்மதிப்பியா..? இத்தனை விசயங்கள் இருக்கு அனு.. இந்த இடம் நமக்குச் சரிப்படாது.. விட்டுரலாம்.."
முடியுமா..? இழக்கப் போகும் இந்த எதிர்காலத்தைப் பற்றிய நினைவின் சுவடுகளை மறக்க அஜித்தால் முடியுமா..?
முடியும் என்பதை அஜித்தின் முகம் சொல்லியது.. அந்த நொடியில் மனம் தெளிந்தாள் அனுராதா..
பாசம் என்பது எது..? சிறை பிடிப்பதா..? இல்லவே இல்i..
அது விட்டுச் சிறகடிக்க வைப்பது.. அனுராதா தன் மீதான அண்ணனின் பாசத்தை விலக்கி வைக்க முடிவு செய்தாள்.. அவன் மீதான பாசத்தை விட்டுக் கொடுத்து அவன் விட்டுச் சிறகடிக்க வகை செய்தாள்..
"முட்டாளா நீ..?"
"அனு.."
"நாமளே கடலில் மூழ்கிக்கிட்டு இருக்கோம்.. நம்ம ரெண்டு பேரில் யாருக்கு உதவி கிடைச்சாலும்.. நீட்டின கையை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு கரையேறிரனும்.. அதுதுhன் புத்திசாலித்தனம்.. அதை விட்டுட்டு நீ மட்டும் கடலில கிடக்கறியே.. நான் எப்படி கரையேறுகிறதுன்னு அறிவாளி கேட்க மாட்டான்.. முதலில் கரையேறுகிறவங்க அடுத்தவங்களுக்கு கை கொடுத்து தூக்கி விடலாமில்ல..? அத விட்டுட்டு ரெண்டு பேரும் மூழ்கிச் சாவோம்ங்-கிறதுக்குப் பெயர்தான் பாசமா..?"
"அனு.."
"உனக்குத் தெரியுமா..? நான் இப்ப வேலையில் இல்லை.. எனக்கு வேலை போயிருச்சு.. உன்னிடம் அதைச் சொன்னா நீ படிப்பை நிறுத்திருவியோங்கிற பயத்திலே சொல்லாம மறைச்சிட்டு உனக்குத் தெரியாம வேலை தேடிக்கிட்டு இருக்கேன்.. நம்மகிட்ட இருக்கிற பணத்தை வைச்சு இந்த ஒரு மாசத்துக்கு கஞ்சியும் கீரையும் சாப்பிடலாம்.. அதுக்கு மேலே..? என்ன செய்கிறது..? அப்பாகிட்டக் கேட்கலாம்.. அவரும் கொடுப்பார்.. அதை நான் வாங்கிக்குவேன்.. நீ வாங்கிக்குவியா..?"
"அனு.."
"போண்ணா.. கல்யாணம் பண்ணிக்கிட்டு கிடைச்சிருக்கிற ராஜவாழ்க்கையில செட்டிலாகிற வழியைப் பாரு.. என்னைப் பத்திக் கவலைப் படாதே.. என்னை நான் பார்த்துக்குவேன்.. உதவிக்கு அப்பா இருக்கார்.. நீ போய் செட்டிலானதும் எனக்கும் ஒரு ராஜகுமாரனைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணி வை.. அதை உன் மாமனார் வீட்டிலே வேண்டாம்ன்னு சொல்லிருவாங்களா..? நானும் சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிருவேனா..? மருமகனின் கடமையை அவங்க கடமையா உன் மாமனார் வீட்டிலே நினைப்பாங்க.. இப்படி இரண்டு பேருமே வாழ வழி பண்ணுவியா.. அதை விட்டுட்டு எதையெதையோ பினாத்திக்கிட்டு இருக்க.. போயி பிழைக்கிறதுக்கான வழியைப் பாரு.."
மனதை கல்லாக்கிக் கொண்டு அஜித் விரும்பும் மார்க்கத்தில் அவனை பயணப்பட வைத்தாள் அனுராதா..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -12
ராதையின் நெஞ்சமே. -12
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy