ராதையின் நெஞ்சமே.. -10

10 அடுப்பைப் பற்ற வைத்தாள் அனுராதா.. நீலக்கலரில் எரிந்த தீயின் ஜ்வாலையில் கலந்திருந்த மஞ்சள் நிறம் அவள் மனதுக்கு பயத்தைக் கொடுத்தது... &...

10

அடுப்பைப் பற்ற வைத்தாள் அனுராதா.. நீலக்கலரில் எரிந்த தீயின் ஜ்வாலையில் கலந்திருந்த மஞ்சள் நிறம் அவள் மனதுக்கு பயத்தைக் கொடுத்தது...
'கேஸ் தீர்ந்திருச்சா..'
அரிசி டப்பாவை எடுத்தாள்.. அடியில் கிடந்த அரிசி.. அன்று ஒருநாள் மட்டும்தான் சமையலுக்கு வருவேன் என்று ஆச்சுறுத்தியது.. சோர்வுடன் குக்கரை அடுப்பில் ஏற்றி விட்டு.. மற்ற சாமான்களை ஆராய்ந்தாள்.. சில பொருள்கள் தீர்ந்திருந்தன.. மற்றவை இழுத்துக் கொள்.. பறித்துக் கொள் என்ற ரீதியில் பற்றாக்குறையாய் இருந்தன..
'இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் ஓட்ட முடியும்..?'
அவளுக்கு மலைப்பாக இருந்தது.. இருப்பதைக் கொண்டு சமைத்து முடித்தவள்.. வேலைக்குக் கிளம்புவதைப் போலக் கிளம்பினாள்.. அஜித்திற்கு கையாட்டி விட்டு நடந்தவள் சற்றுத் தொலைவிலிருந்த பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..
என்று முரளிதரன் சவால் விட்டானோ.. அன்றே வேலையை ரிஸைன் பண்ணி விட்டாள் அனுராதா.. அதை வீட்டில் சொல்ல முடியாமல் தினமும் அலுவலகம் செல்வதாக போக்குக் காட்டிவிட்டு பூங்காவிற்கு வந்து பொழுதைக் கழிப்பாள்..
கையிருப்பு பணமெல்லாம் அஜீத்திற்குத் தேவையான புத்தகங்களை வாங்குவதில் கழிந்து போக.. கை கொடுத்தது அவளின் டைப்பிங் தொழில்.. யானைப் பசிக்கு சோளப் பொறி போதுமா..? அதிகரித்து விட்ட பணத் தேவையை அந்த வருமானத்தால் ஈடு கட்ட முடியவில்லை..
என்ன ஆனாலும் சரி.. முரளிதரனிடம் மட்டும் வேலைக்குத் திரும்பி விடவே கூடாது என்ற முடிவுடன் வீட்டுக்குத் திரும்பியவளை வாயெல்லாம் பல்லாக.. கையெல்லாம் ஸ்வீட் பாக்ஸாக எதிர் கொண்டான் அஜித்..
"குட் நியூஸ் அனு.."
"சொல்லுண்ணா.."
சிரிப்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டாலும்.. அவன் எந்த பணத்தேவையை இழுத்து விடப் போகிறானோ என்று ராதாவின் மனம் பயந்து தவித்தது.. நல்ல வேளையாக அப்படியெல்லாம் இல்லை..
"சீப் ஆடிட்டர் ரங்கநாதனைத் தெரியுமா அனு..?"
"தெரியாதே.."
"அவர்தான் இப்ப ஆடிட்டிங்கில நம்பர் ஒன்னா இருக்கார்.."
"எனக்கு அவரை எப்படியண்ணா தெரியும்..?"
"போகுது போ.. அவர் என்னை வரச்சொல்லிருந்தார்.."
"எதுக்காம்..?"
ஏதாவது வேலைக்காக இருக்கக் கூடாதா என்று அனுராதாவின் மனம் ஏங்கியது.. அந்த ஏக்கத்தைப் பற்றி அஜித்திடம் அவள் சொன்னால் போதும்.. அவன் படிப்பை நிறுத்தி விட்டு வேலை தேட ஆரம்பித்து விடுவான்.. சொல்ல மனமில்லாமல் தனக்குள்ளே மறுகித் தவித்துக் கொண்டிருந்தாள் அனுராதா..
"தெரியலை அனு.. நான் போயிருந்தேன்.. ரொம்ப இம்பார்டண்ட் கொடுத்தார்.. கடல போல பெரிய வீடு.. அவங்க பேமிலிக்கெல்லாம் என்னை இன்ட்ரொடுயுஸ் பண்ணி வைச்சார்.. அவரோட டாட்டர்.. பிரதீபான்னு பெயர்.. அவளும் சி.ஏ தான் படிக்கிறாளாம்.. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா..? ஒரே பெண் போல.. என் படிப்பைப் பற்றியெல்லாம் விசாரித்தார்.."
"நீ அவரை ஆபிஸில் மீட் பண்ணலையா அண்ணா..?"
"இல்லை அனு.. அவர் என்னை வரச் சொன்ன போதே வீட்டுக்குத்தான் வரச் சொன்னார்.. எதுக்குன்னுதான் தெரியலை.."
"பெரிதா எதுவும் இருக்காது.. விடு.."
"என்னவோ போ அனு.. அவர் என்னிடம் பேசினதை விட.. அவர் மகள் பேசினதுதான் அதிகம்.. அவங்க வீட்டிலேயே சாப்பிடச் சொல்லிட்டாங்க.."
"சாப்பிட்டயா..?"
"வேற வழி.. வடை.. பாயாசம்ன்னு செம விருந்து அனு.. கூப்பிட்டு விருந்து கொடுக்கிற சீப் ஆடிட்டரை இப்போத்தான் பார்க்கிறேன்.. அப்புறம் அனு.. நான் கிளம்பும் போது அவர் ஒன்னு சொன்னார்.."
"என்னவாம்..?"
வேலை வாய்ப்புமில்லாமல்.. படிப்பைப் பற்றியு-மில்லாமல் அஜித்தை கூப்பிட்டு விருந்து கொடுத்த அந்த சம்பவத்தில் அனுராதாவிற்கு எந்தவிதமான சுவராஸ்யமும் ஏற்படவில்லை.. அதனால் விளைந்த அசுவராஸ்யத்தோடு கேட்டு வைத்தாள்..
'இதுக்குப் போயா ஸ்வீட் பாக்ஸை வாங்கிட்டு வந்தான்..?'
இல்லையென்றான் அஜித்.. அந்த ஸ்வீட் பாக்ஸை அனுராதாவுக்காக ரங்கநாதனின் பேமிலி கொடுத்து விட்டதாம்..
"நாளைக்கு ஈவினிங்ல ரங்கநாதன் சார் உன்னை பார்க்கனும்னு சொன்னார் அனு.."
அனுராதாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.. அவளைப் பார்க்க ரங்கநாதன் ஏன் விரும்புகிறார்..?
"என்னை எதுக்காகண்ணா பார்க்கனும்..?"
"தெரியலையே.. இதை அவர்கிட்டத்தான் கேட்கனும்.."
"யார் கேட்கிறது..?"
"நீதான்.."
அஜித் வெகு சுலபமாக அவளை ரங்கநாதனைப் பார்த்து வர கிளப்பி விட்டு விட்டான்..
"அவர் எவ்வளவு பெரிய மனிதர்ன்னு தெரியுமா..?"
"அதுக்கு..?"
"அவரோட பேமிலியே என் மேல் அன்பா இருந்தாங்க அனு.. அதிலயும் அந்தப் பொண்ணு பிரதீபா..! சான்ஸே இல்லை..."
"அதுக்கு இப்ப என்னாங்கிற..?"
"எனக்கு விருந்தெல்லாம் பரிமாறினாங்க.. ஒவ்வொரு அயிட்டமும் எவ்வளவு டேஸ்டா இருந்துச்சு தெரியுமா..?"
"என்னை என்னதாண்ணா செய்யச் சொல்ற..?"
"ஒரே ஒருதரம் அவங்க பேமிலியை மீட் பண்ணிட்டு வாயேன்.."
"பேமிலியை மீட் பண்ணனுமா..?"
"ஊம்.. ரங்கநாதன் சார் அப்படித்தான் சொன்னார்.."
"நீ தான் சிஏ படிக்கிற.. அவர் உன்னை மீட் பண்ணினா அதில ஒரு அர்த்தமிருக்கு.. என்னை எதுக்காகண்ணா மீட் பண்ணனும்..?"
"தெரியலையே.."
"உனக்கே தெரியாதாப்ப.. எதுக்காக அவங்க வீட்டுக்கு என்னைப் போகச் சொல்ற..?"
"என்ன அனு..? அவங்க எனக்கு எவ்வளவு தூரத்துக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுத்தாங்கன்னு இவ்வளவு தூரத்துக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ஒரு மரியாதைக்கு அவங்க பேமிலியை நீ மீட் பண்ணிட்டு வரக்கூடாதா..? எனக்காக இதைக் கூட செய்ய மாட்டியா..? நீ தனியாப் போக வேணாம்.. நானும் உன்கூட வர்றேன்.."
அவன் பொறுப்பாக அண்ணனாக கூட வந்தான்.. ரங்கநாதன் என்னதான் சொல்கிறாரென்று பார்க்கலாமே என்ற நினைவில் அனுராதாவும் கிளம்பிப் போனாள்.. அஜீத் சொன்னதைப் போலதான் அங்கே நடந்தது.. அந்தக் குடும்பம் அவர்களை மரியாதையாக வரவேற்று உபசரித்தது.. ரங்கநாதனும் சரி.. அவர் மனைவி நளினியும் சரி.. வெகு காலமாக பழகியவர்களைப் போல வெகு பாந்தமாக பேசிப் பழகினார்கள்.. அவர்கள் பெற்ற பெண்ணான பிரதீபாவோ.. அஜித்தை விட்டு அகலாமல் பக்கத்திலேயே உட்கார்ந்து தாழ்ந்த குரலில் அவனிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தாள்..
அஜித்தின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியையும்.. மகிழ்வையும் அதற்கு முன்னால் அனுராதா கண்டதே இல்லை.. என்று அவர்களைப் பெற்ற தாயான அவந்திகா இறந்து போய் அவர்களின் சொந்த வீட்டிலேயே அவர்கள் அனாதை ஆனார்களே.. அன்று அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தே போனது.
அனுராதா அப்படியில்லை.. தனக்கென்று ஒரு வட்டத்தையும்.. சூழலையும் அவளால் அமைத்துக் கொள்ள முடிந்தது..
அவந்திகா சொல்லித் தந்திருந்த வீணையை வாசிப்பாள்.. மனம் குளிரப் பாடல்களைப் பாடுவாள்.. இருக்கும் சொற்ப சமையல் பொருள்களிலும் ருசியாக சமைத்து அஜித்தை சாப்பிட வைப்பாள்.. வேலை செய்தபடி படிப்பாள்.. மறுமணம் செய்து கொண்ட சிவராமனிடம் பாசம் காட்டுவாள்.. அவர் பெற்ற குழந்தைகளை தங்கைகளாக ஏற்றுக் கொள்வாள்..
அவளால் வாழ்வின் சூழலை தனக்கேற்ப மாற்றிக் கொண்டு வாழ முடிந்திருந்தது.. அஜித் அவளைச் சார்ந்திருந்தான்.. அனுராதாவிடம் தென்பட்ட உயிர்ப்பும்.. தைரியமும் அவனுக்கு வாழ்வின் பாதையைக் காட்டின..
அனுராதா ரோசப்பட வேண்டிய நேரத்தில் ரோசப் பட்டாள்.. தணிந்து போக வேண்டிய நேரத்தில் தணிந்து போனாள்.. அஜித்தின் குணத்தை அறிந்து மாடியில் தனிச் சமையலை ஆரம்பித்தாள்.. அவனுக்கான நிம்மதியான சூழலை அமைத்துக் கொடுத்தாள்..
அப்படிப்பட்ட அனுராதாவினால் கொடுக்க முடியாத மலர்ச்சியையும்.. சந்தோசத்தையும் ரங்கநாதனின் வீடு அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்ததில் அவளுக்குள் ஆச்சரியம் பெருக்கெடுத்தது...
அவளால் அவளுடைய அண்ணனுக்கு படிப்பைக் கொடுக்க முடிந்தது.. நிம்மதியான சூழலைக் கொடுக்க முடிந்தது.. இதுபோன்ற ஆனந்தமயமான குடும்பச் சூழலைக் கொடுக்க முடிந்ததில்லையே...
நிம்மதியும் ஆனந்தமும் ஒன்று சேர்ந்ததுதான் வாழ்க்கை.. அஜித்தின் நிம்மதி அனுராதா உருவாக்கிக் கொடுத்தது.. அதில் ஆனந்தமும் சேர்ந்து கொண்டால் அவன் எப்படி மலர்ந்து சிரிப்பான் என்பதை அன்றுதான் அனுராதா கண்டாள்..
"உன்னிடம் பேசனும்மா.."
ரங்கநாதன் எழுந்தார்.. அனுராதா தமையனைக் கவனித்தாள்.. அவன் பிரதீபாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் மும்முரமாக இருந்தான்.. அவனின் அந்த மகிழ்வை கலைக்க விரும்பாதவளாக அவள் ரங்கநாதனைப் பின் தொடர்ந்தாள்.. அவரின் அலுவலக அறைக்குள் போனதும் ரங்கநாதன் பேச்சை ஆரம்பித்தார்..
"எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு.."
"பார்த்தேனே சார்.. பிரதிபா இஸ் ஸோ கிளவர்.."
"ம்ம்ம்.. அவளும் சிஏ தான் படிக்கிறா.."
"அண்ணன் சொன்னார் சார்.."
"அவளுக்கு மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருக்கோம்.. வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கனும்ங்கிறது எங்களோட எதிர்பார்ப்பு.."
"அப்படியா சார்.."
"மாப்பிள்ளையும் சிஏ படிச்சிருந்தா பெட்டர்ன்னு நினைக்கிறோம்.."
"வாஸ்தவம்தானே சார்.."
"அப்பத்தான் தரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டி மிஸ்டர் முரளிதரன் உன்னோட அண்ணனைப் பத்திச் சொன்னார்.."
'என்னது..?'
அனுராதாவினால் அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. அவ்வளவு பெரிய பணக்கார குடும்பம்.. அவர்களின் ஒற்றை மகளுக்கான மாப்பிள்ளையாக அஜித்தை தேர்ந்தெடுத்திருக்கின்றது.. அதற்கு முரளிதரன் மூலகாரணமாக இருந்திருக்கிறான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே.. -10
ராதையின் நெஞ்சமே.. -10
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy