புலர்கின்ற பொழுதில் -39

39 புலர்கின்ற பொழுதில்.. உன் கானம் கேட்டேன்.. பறந்தோடி வந்தும்.. நீ தொலைதூரம் சென்றாய்.. பார்த்திபன் அர்ச்சனாவின் மறுகலை கண்டு கொள்ளவ...

39
புலர்கின்ற பொழுதில்..
உன் கானம் கேட்டேன்..
பறந்தோடி வந்தும்..
நீ தொலைதூரம் சென்றாய்..

பார்த்திபன் அர்ச்சனாவின் மறுகலை கண்டு கொள்ளவதாகவே இல்லை.. அவளது மனப் போராட்டத்தை அலட்சியம் செய்தான்.. அவள் விலக முயன்றாலும் விடாமல் ஆக்கிரமித்தான்.. இமைப் பொழுதும் அவளைப் பிரியாமல் சுற்றிச் சுற்றி வந்தான்..
"ஏண்டா பேராண்டி.. முன்னேயெல்லாம் நீ வீடு தங்கவே மாட்ட.. இப்ப என்ன.. குட்டி போட்ட பூனையைப் போல வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிற..?" துளசிராமன் கேலி செய்தார்..
அவருக்கு காபி தம்ளரை கொண்டு வந்து கொண்டிருந்த அர்ச்சனாவின் முகம் சிவந்து விட்டது.. அந்த முகச்சிரிப்பை ரசித்தபடி அமர்ந்திருந்த பேரனை மனநிறைவுடன் பார்த்துக் கொண்டே குணவதி கணவருக்கு பதிலடி கொடுத்தாள்..
"விதையொன்னு போட்டா.. சுரையொன்னா முளைக்கும்..?"
"எதுக்குடி இப்ப வந்து இந்த பழமொழியைச் சொல்லுறவ..?"
"அப்பனும்.. தாத்தனும் எப்படியோ.. அப்படித்தான் என் பேரனும் இருப்பான்.. நீங்க கல்யாணமான புதுசுல.. கழனிப் பக்கம் எப்பப் போனீங்கன்னு நினைப்பிருக்கா..?"
"அதையேண்டி.. இப்ப கிண்டி கிழங்கெடுக்கிற.."
"நீங்க எதுக்கு பெரிய நியாயக்காரரைப் போல என் பேரனை சீண்டிப் பார்க்கறீங்க.. நீங்க கழனிப் பக்கம் போக ஆரம்பிச்சப்போ சுந்தரம் பிறந்துவிட்டான்.."
"விடுடி.. விடுடி.."
"அதெப்படி விடறது.. அடுத்து உங்க மகனுக்கு கல்யாணமானப்போ அவன் உங்களைத் தாண்டி விட்டான்.."
அங்கே ஏதோ வேலையாக வந்த வேதநாயகி.. மாமியாரின் பேச்சைக் கேட்டதும்.. அவசரமாக அடுக்களைக்குள் ஓடிவிட்டாள்.. அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே குணவதி அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டாள்..
"நீங்களாவது.. சுந்தரம் பிறந்த பின்னால கழனிப் பக்கம் போனாப் போகுதுன்னு போக ஆரம்பிச்சீங்க.. உங்க மகன் பாரதி பிறந்தப்புறம் கூட கழனிப் பக்கம் எட்டிப் பார்க்கலையே.. இன்னும் பெண்டாட்டி முந்தானையை பிடிச்சுக் கிட்டு.. வீட்டுக்குள்ளதானே சுத்திக்கிட்டு இருக்கான்..?"
குணவதி கேட்டு வாயை மூடு முன்னால்.. அங்கு வந்த சுந்தரமூர்த்தி.. யதார்த்தமாக..
"வேதா எங்கேம்மா..?" என்று கேட்டு வைத்தார்..
"பார்த்துக்கம்மா.." குணவதி கண் சிமிட்ட.. அர்ச்சனாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.. அதை அடக்கிக் கொள்ள தலைகுனிந்து கொண்டாள்..
"அவ அடுப்படியில இருக்காப்பா.. என்னா விசயம்..?"
"அதை உன்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது.. அவகிட்டேயே சொல்லிக்கறேன்.."
சுந்தரமூர்த்தி மனைவியைத் தேடி சமையலறைக்குள் சென்றுவிட குணவதி நொடித்தாள்..
"ம்ஹூம்.. கல்யாணமான புது மாப்பிள்ளை.. வீட்டுக்குள் இருந்தால் குத்தமாம்.. பேரன் பேத்தி எடுத்த கிழடுகள் வீட்டுக்குள்ளேயே சுத்தலாமாம்.. இதை எங்கே போய் சொல்லுறது.."
அதற்கு மேலேயும் அங்கேயிருந்தால்.. குணவதி.. கிழித்து கேப்பையை நட்டுவிடுவாள் என்று துளசிராமனுக்கு தெரியாதா என்ன..?
வீட்டிற்கு வந்திருக்கும் புது மருமகளின் முன்னால் தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான துளசிராமன்.. அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினார்..
"அடேய்.. சுந்தரமூர்த்தி.."
அடுத்த குறியை நோக்கி.. அழைப்பு விடுத்தாள் குணவதி.. தாக்குதலை எதிர்பார்க்காமல் வெள்ளந்தியான மனிதராக..
"என்னம்மா.." என்று வினவியபடி சுந்தரமூர்த்தி அங்கே வந்து நின்றார்..
"ஏய்யா.. காடு கரையைப் போய் சுத்திப் பார்க்கணுமுன்னு எண்ணமிருக்கா.. இல்லையா..?"
"அது.. வந்தும்மா.."
அவர் அனிச்சையாக அடுக்களைப் பக்கம் பார்த்து வைக்க.. அர்ச்சனாவிற்கு மீண்டும் சிரிப்பு வந்தது..
"அங்கே என்ன பார்க்கிற..?"
"ஒன்ணுமில்லைம்மா.. வேதாகிட்ட காபி கேட்டேன் அதான்.."
"அதை காடுகரையை சுத்திப் பார்த்துட்டு வந்தப்புறம் குடிச்சிக்கலாம்.. இப்ப நீ போ.. உன் காபியும் எங்கேயும் போயிராது.. வேதாவும் எங்கேயும் தொலைஞ்சிற மாட்டா.. புரியுதா.."
புரியவில்லை என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்று குணவதியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள சுந்தரமூர்த்திக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?
அவர் ஓட்டமும்.. நடையுமாக.. இடத்தை காலி செய்தார்.. அவர் போன சிறிது நேரத்தில்.. காபியும் கையுமாக அங்கே வந்த வேதநாயகி.. கணவரை காணாமல் திகைத்தாள்..
"என்ன மருமகளே.. அது என்ன கையில..?"
"உங்க மகன் காபி கேட்டாரேன்னு கொண்டு வந்தேன்.. அவர் எங்கே போனார்..?"
"பொழைப்பைக் கவனிக்கப் போயிருக்கான்.. அதை உன் மகனுக்குக் குடு.."
"இந்தக் கிழவிக்கு.. என் புருசன்.. என் கையால காபி வாங்கிக் குடித்தால் பொறுக்காதே.."
எரிக்கும் பார்வையை மாமியாரின் மேல் செலுத்திய வாறு வேதநாயகி.. காபியை மகனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள்..
"குடிடா தம்பி.."
பேரனை ஆதுரமாய் பார்த்தபடி.. கூறிய குணவதியை.. அர்ச்சனாவிற்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.. சும்மாவே குணவதியிடம் ஒட்டிக் கொள்ளும் அர்ச்சனா.. இப்போதெல்லாம் குணவதியிடம் பசை போட்டு ஒட்டாத குறையாய் ஒட்டிக் கொள்வதை பார்த்திபனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்..
"என்னடி பாட்டிகிட்ட பாசமழையைப் பொழியறே.." என்று மனைவியை வம்புக்கு இழுக்க வேறு செய்தான்..
"ஏன்.. அது உங்களுக்குப் பொறுக்கலையா..?" குணவதியின் பேச்சென்பதால் அர்ச்சனா உடனே பதில் பேசிவிட.. பார்த்திபன் உற்சாகமானான்..
"எப்படிப் பொறுக்கும்..? அங்கே மழையைப் பொழியறது.. என் பக்கம் கொஞ்சமாவது சாரலைத் தெறிச்சா நானும் பேசாமல் இருப்பேனில்ல.."
"யாரு..? நீங்க.. பேசாம இருக்கிற ஆளு..?"
"அப்படி என்னத்தைடி உன்கிட்ட பேசிட்டேன்..? நீதான் நான் பேச வந்தாலே வாயை இறுக்கி மூடிக் கொள்கிறாயே.."
"நான் வாயை மூடிக்கிட்டா.. நீங்க வம்பிழுக்காம போயிருக்கீங்களா..?"
"அது ஏண்டி நான் அப்படிப் போகணும்..? உடந்தைப் பட்டவன் உறவாடத்தான் செய்வான்.."
"இப்பத்தான் நீங்க உரிமைப்பட்டவர்.. அன்னைக்கு..?"
அர்ச்சனா முகம் இறுக வினவி விட்டு எழுந்து கொள்ளமுயல.. பார்த்திபன் புருவங்கள் முடிச்சிட அவள் கைபற்றி நிறுத்தினான்..
"அப்பவும் நான் உடந்தைப் பட்டவன்தாண்டி.. என் உரிமையைத்தான் நான் நிலைநாட்டினேன்.. எவன் சொத்தையும் கொள்ளையடிக்கலை "




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -39
புலர்கின்ற பொழுதில் -39
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-39.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-39.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy