புலர்கின்ற பொழுதில் -38

38 புலர்கின்ற பொழுதில்.. வயலோரம் நடந்தேன்.. பசும் நாற்றுக்கள் மேலே.. உன் முகம்தான் கண்டேன்.. நிகழும் மங்களகரமான ஆண்டில் சுபயோக சுபதின...

38
புலர்கின்ற பொழுதில்..
வயலோரம் நடந்தேன்..
பசும் நாற்றுக்கள் மேலே..
உன் முகம்தான் கண்டேன்..

நிகழும் மங்களகரமான ஆண்டில் சுபயோக சுபதினத்தில் பெரியோர்கள் நிச்சயித்த நேரத்தில்.. ஊர்.. உறவை அழைத்து.. அவர்கள் முன்னிலையில் அர்ச்சனாவின் கழுத்தில் தாலி கட்டினான் பார்த்திபன்..
அவன் கரம் பற்றி அக்கினியை வலம் வந்தபோது விரக்தியுடன் இருந்த அர்ச்சனாவிற்கு கூட மேனி சிலிர்த்தது.. அவளுடைய கரத்தை.. தன் இரும்புக் கரத்தால் இறுக்கிப் பிடித்திருந்தவனின் மேல் காதல் பொங்கியது..
'கடைசியில் என் பிருத்விராஜன் எனக்கு மாலையிட்டு விட்டானே..'
அவளது மனம் பொங்கிய அதே வினாடியில்.. அவனது கை.. அவளது கையை அழுத்த.. பொங்கிய மனம் உடனே தணிந்தது..
'மாலையிடுவதற்கு முன்னாலேயே தொட்டு விட்டானே..'
அதற்கடுத்து நடந்த திருமண சடங்குகளில் அவள் மனம் லயிக்கவில்லை.. இயந்திரத்தைப் போல்.. நிற்கச் சொன்னால் நின்று.. உட்காரச் சொன்னால் உட்கார்ந்தாள்.
அதை சட்டென்று உணர்ந்து கொண்ட பார்த்திபனின் மனம் கோபம் கொண்டது.. கடினமான முகத்துடன் மற்றவர்கள் அறியாமல் அவளை உறுத்துப் பார்த்தான்..
ஆனால்.. அவன் விழிகளை அவள் விழிகள் சந்தித்தால்தானே தன் அதிருப்தியை அவன் உணர்த்த முடியும்..? அவள்தான் நிமிர்ந்து அவன் முகம் பார்ப்பதையே தவிர்த்தாளே..
பார்த்திபனின் சினம் அதிகரித்தது.. அன்று இரவு அவர்கள் தனியறையில் சந்தித்துக் கொண்டபோது.. அது உச்சத்தில் இருந்தது..
சந்தன நிறத்தில் மெல்லிய உடலை உறுத்தாத ஜரிகை வேலைப்பாடுகள் செய்த சேலையில்.. குறைவான நகைகளுடன்.. தளர்வான பின்னலில் மல்லிகைச்சரத்தை இரு தோள்களிலும் வழியுமாறு சூடி.. அறைக்குள் வந்து நின்றவளின் அழகு.. அவனது ஆவேசத்தை அதிகப் படுத்தியதேயொழிய தணிக்கவில்லை..
அப்போதும் முகம் நிமிர்த்தி அவனைப் பார்க்காமல் அவள் நின்றிருக்கவும்.. அவன் பல்லைக் கடித்துக் கொண்டே அவளருகில் சென்றான் முரட்டுத்தனமாக அவளது முகம் உயர்த்திப் பார்த்தான்..
அவனது கனல் கக்கும் விழிகளோடு கலக்க முடியாமல் அவளது பார்வை மீண்டும் நிலத்தின் மீது படிய அவன் கோபாவேசமானான்..
"உன் திமிர் இன்னும் அடங்கலைடி.."
'அதை அடக்கத்தான் எனக்கு தாலி கட்டினாயா..'
"எதுக்குடி இப்ப முகத்தை முழ நீளத்துக்கு தூக்கி வைச்சுக்கிட்டு இருக்க..? எது கொள்ளை போயிருச்சு.."
'எதை நீ கொள்ளையடித்தாயோ.. அதுதான் கொள்ளை போய்விட்டது..'
"பேசேண்டி.. நீயென்ன ஊமையா..?"
'ஆமாம்.. வாயிருக்கிற ஊமை..'
"இவனோடெல்லாம் என்ன பேச்சுன்னு நினைக்கறியா..?"
'உன்னோடு பேசிச் சிரிப்பதிலே சந்தோசம் கண்டவள்நான்.. உனக்குத்தான் அது மறந்துவிட்டது..'
பார்த்திபன் பேசப் பேச.. அர்ச்சனா மௌனமாக.. தன் மனதிற்குள் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவள் பேச மறுப்பதைக் கண்ட பார்த்திபன் அவளது முகத்தை இன்னும் இறுக்கிப் பிடித்தான்.. அவனது பிடி அழுத்தமாக இருந்ததால் வலியை உணர்ந்தவள்.. அதை முகத்தில் பிரதிபலித்தபடி அசையாமல் நின்றாள்..
வலியின் வேதனையை அவள் முகத்தில் கண்ட பார்த்திபன் சட்டென்று அவளை விட்டுவிட்டு.. ஜன்னலோரம் போய் நின்றான்.. வலித்தும் வாய் திறக்காமல் நின்ற அவளின் போராட்டம் அவனை பாதித்தது.. அவளைத் திரும்பிப் பார்த்தான்.. அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்த பெண்மையின் நளினம் அவனை 'வா'வென்று அழைத்தது.. அவளிடம் சுடர்விட்டு பிரகாசிக்கும் அழகைக் கண்டு அவனது உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன..
'இந்த பூமியிலே எப்பவந்து
நீ பிறந்தே..
என் உச்சிக்குள்ளே தீப்பொறியை
நீ விதைச்சே..
அடி தேக்குமரக்காடு பெரிசுதான்..
சின்னத் தீக்குச்சி உசரம் சிரிசுதான்..
ஒரு தீக்குச்சி விழுந்து பிடிக்குதடி - கடும்
தேக்கு மரக்காடு வெடிக்குதடி..'
அவன் மனதில் பாடல் சுழன்றாடியது.. அவளது அழகை ஆள அவன் மனம் துடித்தது.. அவளருகே நெருங்கினான்.. அழுத்தமான அவனது காலடியோசை நெருங்குவதை முகத்தை நிமிர்த்தாமலே உணர்ந்த அர்ச்சனா பின்னால் நகர்ந்தாள்.. அவன் முகம் கடுத்தான்..
அவளது முகத்தை கைகளில் ஏந்திக் குனிந்தான்.. முரட்டுத்தனமாக அவளது இதழ் மீது முத்தமிட்டான்.. அவள் உதட்டைச் சுழித்தாள்..
   "உசிரே போகுது.. உசிரே போகுது..
    உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே..
    மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன்..
    மனசைத் தாடி என் மணிக்குயிலே..
     அக்கரைச் சீமையில் நீயிருந்தும்..
  ஐவிரல் தீண்டிட நினைக்குதடி..
     அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்..
   அடிக்கடி நாக்கு துடிக்குதடி.."
அவன் தாபத்துடன் அவளது காதோரம் பாடினான்.. அவள் தவிப்புடன் கண்மூடிக் கொள்ள.. அவளை அணைத்து கழுத்தில் முத்தம் பதித்தான்.. அவள் விலக முயன்றாள்.. அவன் பிடி உடும்புப் பிடியாக இறுகியது..
"உடம்பும்.. மனசும்.. தூரம்தூரம்..
ஒட்ட நினைச்சும் ஆகலை..
மனசு சொல்லும் நல்ல சொல்லை
    மாய உடம்பு கேட்கலை.."
அவளது துடிப்பைக் கண்டும்.. அவன் விட்டு விலகாமல்.. வெறியோடு அவள் மேல் படர்ந்தான்.. அர்ச்சனாவிற்கு 'அந்த நாள்..' ஞாபகம் வந்து விட்டது.. ஆளில்லாத தோப்பில்.. காருக்குள் அவளை அவன் ஆக்கிரமித்த பொழுது நினைவுக்கு வந்து தொலைக்க.. அவள் முரண்டினாள்.. விலகினாள்.. பார்த்திபனின் கரங்கள் அவளை விடவில்லை..
"இந்த மன்மதக் கிறுக்கு தீருமா..
அடி.. மந்திரிச்சு விட்ட கோழிமாறுமா..
என் மயக்கத்தை தீர்த்து வைச்சு
மன்னிச்சுருமா.."
அவனது பாடலில் தெரிந்த அழைப்பு அவளை மயக்கியது.. ஆனால் அன்று அவன் முறையில்லாமல் தொட்டு விட்ட நினைப்பு அவளை அலைக்கழித்தது.. அவள் தனக்குள்ளே போராடிக் கொண்டிருக்க.. அதை அலட்சியம் செய்து.. ஆக்டோபஸ் போல கரங்கள் வளைக்க பார்த்திபன் அவளை ஆக்ரமித்தான்..
உடலில் பரவும் அவன் கரங்களை விலக்க வேண்டு மென்று ஒரு மனம் துடிக்க.. அவனது தொடுகைக்கு ஆட்பட்டு மயங்கிக் குழைந்தது மறுமனம்.. அர்ச்சனா அவன் ஜெயித்துக் கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் உணர்ந்தாள்.. அவனது ஸ்பரிசத்தில் குழைந்து அவனுடன் இழைந்த உடலைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அவளது கன்னத்தில் கண்ணீர் கோடிட்டு இறங்கியபோது. அவன் அவளை ஆண்டு முடித்திருந்தான்.. அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன்.. விலகிச் செல்லாமல்.. அவளுடன் நெருங்கிப் படுத்ததைத்தான் அவளால் தாங்க முடியவில்லை..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -38
புலர்கின்ற பொழுதில் -38
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-38.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-38.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy