புலர்கின்ற பொழுதில் -34

34 புலர்கின்ற பொழுதில்.. கதிரவனைக் கண்டேன்.. ஒளிர்கின்ற வடிவின்.. முகம் பார்த்து நின்றேன்.. அம்பிகா அதற்குள்ளேயே சங்கரனிடம் ...

34
புலர்கின்ற பொழுதில்..
கதிரவனைக் கண்டேன்..
ஒளிர்கின்ற வடிவின்..
முகம் பார்த்து நின்றேன்..


அம்பிகா அதற்குள்ளேயே சங்கரனிடம் கலந்து பேசிவிட்டாள்..
"அர்ச்சனா.." என்ற அவரின் குரலைக் கேட்டதும்..
"ம்ம்.. உனக்கு அழைப்பு வந்துவிட்டது அக்கா.. ஜட்ஜ் கூப்பிடுகிறார் போ.. விசாரணை மன்றத்தில் ஒழுங்காகப் பதில் சொல்லு.. இது உன் வாழ்க்கை.. ஆனால் ஒன்றுக்கா.. உன்னவரின் வேகத்தை விட அம்மாவின் வேகம்தான் ஜெட் வேகம்.." என்றாள் அபிநயா.. 
அர்ச்சனா.. உதட்டைக் கடித்த வண்ணம் ஹாலுக்கு வந்தாள்.. சோபாவில் சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்த சங்கரன் மகளை உறுத்துப் பார்த்தார்.. அவரது பார்வையில் தெரிந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல் அர்ச்சனா தலைகவிழ்ந்தாள்..
"அம்மா.. என்னவோ சொல்கிறாளே.. நிஜம்தானா அர்ச்சனா.." சங்கரனின் கேள்வியில் வெப்பம் தெரிந்தது..
"ஆமாம்ப்பா.." அர்ச்சனா குனிந்த தலையுடன் உறுதியான குரலில் பதிலளித்தாள்..
சங்கரனின் முகத்தில் அதிர்வு தெரிந்தது.. இவ்வளவு தைரியமாக இதற்கு முன்னால் அர்ச்சனா அவரிடம் பேசிய தில்லை..
"எவ்வளவு தைரியமிருந்தால் என்னிடமே நீ இப்படிப் பதில் சொல்லுவாய்..? உன் அம்மா சொன்னது சரிதான்.. நீ பயங்கரமான துணிச்சல்காரிதான்.. இத்தனை நாளும் சாதுப்பூனைப் போல வேசம் போட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறாய்.. இவ்வளவு தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது..?"
"நான் என்ன தப்பு செய்தேன்ப்பா.."
இதைக் கேட்கும்போதே அர்ச்சனாவின் குரல் நடுங்கியது.. அவளது மனச்சாட்சி உறுத்தியது..
'நீ தப்பு செய்யவில்லையா..' என்று கேள்வி கேட்டது..
"காலையில் கோவிலுக்குப் போவதாகச் சொல்லி விட்டு பார்த்திபனை பார்க்கப் போயிருக்கிறாய்.. அது தப்பு இல்லையா..? அவனுடன் காரில் வந்து நம் வீட்டின் முன்னால் இறங்கியிருக்கிறாய்.. அது தப்பு இல்லையா..? அம்மாவின் முன்னாடியே அவனுக்கு டாட்டா காண்பித்து வழியனுப்பி வைத்திருக்கிறாய்.. அது தப்பு இல்லையா..?"
"நீங்கள் மட்டும்.. காலையில் பெண் கேட்டு வந்தவரிடம் எனக்கு பார்த்திபனின் மேல் விருப்பம் இல்லை.. நீங்கள் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையின் மீதுதான் விருப்பமுன்னு சொல்லலாமாப்பா..? அது தப்பு இல்லையா..?"
மகளின் எதிர் கேள்வியைக் கேட்ட சங்கரன் வாயடைத்துப் போனார்.. அம்பிகாவின் கண்களில் தீப்பொறி பறந்தது..
"நான் சொல்லவில்லை..? இவளுக்கு துளிர்த்து விட்டது.. உங்களிடமே இவ்வளவு தெனாவெட்டாகப் பேசுகிறவள்.. என்னிடம் எப்படிப் பேசியிருப்பாள்ன்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க.."
"நீங்க ஒன்ணும் அப்பாவுக்கு எடுத்துக் கொடுக்க வேண்டாம்மா.."
"அடித்துப் பல்லைக் கழட்டிவிடுவேன்.. யார்கிட்ட பேசுகிறன்னு ஞாபகம் வைத்துக்கிட்டுப் பேசு.."
"நான் அம்மாகிட்ட பேசும் ஞாபகத்தோடுதான் பேசுகிறன்.. நீங்கதான்.. உங்க மகள்கிட்ட பேசுவதைப் போல இல்லாமல் ஒரு அடிமைகிட்டப் பேசுவதைப் போலப் பேசுகிறீங்க.."
அம்பிகா விக்கித்து விட்டாள்..
"அர்ச்சனா.. உன் நல்லதுக்குத்தானேடி சொல் கிறோம்..?" என்று அழமாட்டாத குறையாக கேட்டாள்..
"எனக்கு நல்லது கெட்டது தெரியாதாம்மா..?" அர்ச்சனா நிதானமாகப் பதில் சொன்னாள்..
"அதுக்காக அடிமையைப் போல உன்னை நடத்து கிறேன்னு உன் வாயால் நீ சொல்லலாமாடி.. உன் அப்பாவும்.. நானும் பெற்ற பெண்களை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்க்கிறோமுன்னு இந்த தஞ்சாவூருக்கே தெரியுமேடி.."
"என்னை வளர்த்து என்ன பண்ணம்மா.. கேட்க வேண்டிய கேள்வியை கேட்க வேண்டிய நேரத்தில் கேட்காமல்.. எனக்கான முடிவுகளை நீங்களே எடுக்கலாமா..?"
"எதைடி உன்னிடம் கேட்கவில்லை.. ஒரு துணி எடுக்கனும்னாக்கூட.. உன்னைக் கூப்பிட்டுக் கொண்டு போய்.. கடை கடையாய் ஏறி இறங்கி.. உனக்கு பிடித்த தாகத்தானே வாங்கிக் கொடுப்போம்.."
"ஒருநாள் போட்டால் மறுநாள் மாற்ற வேண்டிய துணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட.. மாற்றவே முடியாத வாழ்க்கைக்கு நீங்க கொடுக்கவில்லையேம்மா.. பிடித்த துணியாய் வாங்கிக் கொடுத்து என்ன செய்ய..? பிடித்த மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டாமா..?"
"என்னடி உளறுகிற.. உனக்கு அந்த பார்த்திபனையா பிடித்திருக்கு..?"
"ஆமாம்.."
"அடிப்பாவி.. உனக்கு எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை யைப் பார்த்து வைத்திருக்கிறோம்.. நீ இப்படி எங்க தலையில கல்லைத் தூக்கிப் போடுகிறாயே.."
"அம்மா.. நான் கல்யாணம்ன்னு ஒன்றைப் பண்ணிக் கொண்டால் பார்த்திபனைத்தான் பண்ணிக் கொள்வேன்.."
"அவன் படிக்காதவன்டி.."
"பட்டம் வாங்காதவர்.."
"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?"
"ஏகப்பட்ட வித்தியாசமிருக்கு.. அவருக்கு இங்கிலீஷ்.. தமிழ் இரண்டுமே எழுதப் படிக்கத் தெரியும்.. அவரா படிக்காதவர்..?"
"அது போதுமா அர்ச்சனா..?"
"எனக்கு அதுபோதும்.."
"என்னங்க.. இவள் சொல்வதைக் கேட்டுக்கிட்டு இப்படி இடிச்ச புளியைப் போல உட்கார்ந்திருக்கீங்களே.. இவளை கன்னத்தில் நாலு அறைவிட்டு.. என்னான்னு நாலு வார்த்தை கேட்க மாட்டிங்களா..?"
"எதுக்கு அம்பிகா.. உன்னையே அடிமை போல நினைக்கறியான்னு கேட்டவ.. என்னையும் அதைப் போல கேட்டு வைக்கவா..?"
"அதுக்காக இவளை இவ இஷ்டப்படி ஆடவிட முடியுமா..?"
சங்கரன் ஒரு பெருமூச்சுடன் மகளைப் பார்த்தார்.. அவரது பார்வையைத் தவிர்க்கும் மகளைக் கண்டு தோளை லேசாக குலுக்கிக் கொண்டார்.. பின் அழுத்தமான குரலில் வினவினார்..
"சொல் அர்ச்சனா.. உன் விருப்பத்துக்கு நாங்க சம்மதிக்காவிட்டால் என்ன செய்வாய்..?"
சங்கரன் வார்த்தையால்தான் கேள்வி கேட்டார்.. அதற்கு அர்ச்சனா செய்கையிலேயே பதிலைச் சொல்லி விட்டாள்..
வேகமாகச் சென்று டைனிங் ஹாலில் இருந்த பழம் நறுக்கும் கத்தியை எடுத்து தன் கையை வெட்டிக் கொண்டாள்..
ரத்தம் பீறிட்டுச் சொட்ட..
"ஐயோ.." என்று கதறியவாறு அம்பிகா.. அவளருகே ஓடினாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -34
புலர்கின்ற பொழுதில் -34
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-34.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-34.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy