ஒற்றையடிப்.. பாதையிலே. -2

2 ஒற்றையடிப்  பாதையிலே..... உன்மனசை  நான்  படிச்சேன்..... ஊரையெல்லாம்  எதுத்து நின்னு.... உன் கையை  நான்  பிடிச்சேன்... "வேண்ட...

2

ஒற்றையடிப்  பாதையிலே.....
உன்மனசை  நான்  படிச்சேன்.....
ஊரையெல்லாம்  எதுத்து நின்னு....
உன் கையை  நான்  பிடிச்சேன்...


"வேண்டாம் ஜானகி.. உன் அப்பாவே சொன்னது போல... நீ மகாராணியாய் இருக்க வேண்டியவள்.. மண் குடிசை உனக்கு வேண்டாம்.."
"மாளிகையில் கிடைக்காத நிம்மதியும்.. சந்தோசமும்.. உங்களின் மண்குடிசையில்தானே எனக்குக் கிடைக்கும்..?"
"கையகல நிலத்தையும்... மோட்டார் தண்ணியில்.. நாலில் ஒரு பங்கும் வைத்திருக்கிறவன்.. பேராசைப் படக்கூடாது..."
"அடுத்தவரின் பொருள்மேலதான் ஆசைப்படக்கூடாது.. உங்களின் பொருளை விட்டுக் கொடுக்கவும் கூடாது..."
"உன் மாமன் மகன்.. மோகனரங்கம்.. உன் மேல் கொள்ளை ஆசை வைத்திருக்கிறதாய்.. ஊரில் பேசிக்கிறாங்க..."
"நான் யார் மேல் ஆசை வைத்திருக்கிறேன்...? இல்லை... நீங்கள் யார் மேல் ஆசை வைத்திருக்கிறீங்க...?"
ஜானகி கண்ணீருடன் கேட்டு விட்டுப் போய் விட்டாள்.. அவள் பாதத் தடங்கள் பட்ட.. ஒற்றையடிப் பாதையில்.. ஒற்றையாய் நடந்தவனின் மனம். கனத்தது... பாடியது...
"உன்  மேல  ஆசை  வைச்சேன்...
உத்தமியே  மெத்தையுண்டு...
சத்தியமாகச்  சொல்லுறேண்டி
தங்க  ரத்தினமே...
தாள  முடியாது  கண்ணே!
பொண்ணு  ரத்தினமே...!"
அவள் மேல் வைத்த ஆசை அவனை உருக்குலைத்தது.. வேண்டாம் என்று வாய் சொன்னாலும்.. அவனது மனம் அதைச் சொல்லாமல் தவித்தது.. மறுநாள் மீண்டும் ஒற்றையடிப் பாதைக்கே அவனுடைய கால்கள் சென்றன...
அவள் காத்திருந்தாள்.. அவனைப் பார்த்ததும்.. அவளது கண்கள் பூத்தன... நீர்த்துளிகளை உதிர்த்தன.. அவன் மௌனமாக நின்றான்.. அவள் அந்த மௌனத்தைக் குலைத்து வார்த்தைகளை உதிர்த்தாள்..
"நாளைக்கு காலையிலே.. என் மாமன் வீட்டிலிருந்து எனக்கு பரிசம் போட வருகிறாங்க.. அவங்க பரிசம் போட்டுவிட்டால்.. அதற்குப் பின்னால் நீங்க தலைகீழாய் நின்னாலும்.. நான் உங்களுக்கு கிடைக்கமாட்டேன்..."
அவள் போய் விட்டாள்..  அவள் உதிர்த்த வார்த்தைகள் காற்றோடு கலந்து.. கோதண்டராமனின்.. காதுகளில்.. ஒளித்தன..
மறுநாள் காலையில்... ஜானகியின் வீடு.. விழா நாளின் குதுகலத்தோடு.. தயாராக இருக்க... ஜானகியின் தாய் மாமாவின் குடும்பம் சீர்வரிசைகளோடு.. ஊர்வலமாய்.. வந்தது.. கெட்டி மேளமும்.. நாதஸ்வரமும் களைகட்ட.. ஊர்வலத்தின் முன்னால்.. மோகனரங்கம்.. முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க.. வந்தான்...
வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்ற.. ஜானகியின் அப்பா.. எல்லோரையும்.. உள்ளே வரும்படி அழைத்தார்.. முறைப்படி அவர்கள் நிச்சயதாம்பூல தட்டை மாற்றிக் கொள்ளப் போகும்.. கடைசி வினாடியில்.. தாம்பூலத் தட்டின் மேல் வீச்சறுவாள் ஒன்று பறந்து வந்து விழுந்தது.. தாம்பூலத்தட்டு கீழே விழுந்து சிதற... கிருஷ்ணமூர்த்தி மீசை துடிக்க எழுந்தார்...
"எவன்டா.. அவன்..?"
"நான்தான்..."
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோதண்டராமன் வந்து நின்றான்.. சபையில்.. உயிரற்ற பொம்மை போல் அமர்ந்திருந்த ஜானகி.. உயிர் பெற்று எழுந்தாள்.. அவளுடைய கையை பிடித்துக் கொண்ட கோதண்டராமனின் முகத்தை ஆனந்தத்துடன் பார்த்தாள்..
"வா.. என்னுடன்..."
மறுக்காமல் கோதண்டராமனை அவள் பின் தொடர.. . அருவாளைத் தூக்கப் போன கிருஷ்ணமூர்த்தியை.. மோகனரங்கம் தடுத்தான்..
"மாமா.. யாரை வெட்டப் போகிறீங்க..?"
"எவ்வளவு தைரியமிருந்தால்.. அவன் என் வீட்டுக்குள்ளேயே வந்து என் கண் முன்னால்.. என் மகளின் கையைப் பிடித்துக் கூப்பிட்டுக் கொண்டு போவான்..?"
"அது யார் கொடுத்த தைரியம்..?"
"மோகனரங்கம்..!"
"உங்களுக்கும் அது தெரிகிறது.. எனக்கும் அது புரிகிறது... அவன் கையைப் பிடித்தால்.. ஜானகி கையை உருவியிருக்க வேண்டாமா? அவன் பிடித்த கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு.. அவன் பின்னாடியே இவளும் போகிறாள் என்றால்.. அதுக்கு என்ன அர்த்தம்...?"
"அதுக்காக... அவனை அப்படியே விட்டுவிடுவதா..?"
"விட்டு விடுங்க மாமா... ஜானகி மனசுக்குப் பிடித்தவனுடன் சந்தோசமாக வாழட்டும்.. அவன் மேல் எவ்வளவு ஆசையிருந்தால்.. என் பணம்.. சொத்து.. அந்தஸ்து.. இதையெல்லாம் துச்சமாக மதித்து... உழைத்துப் பிழைக்கும் அவன் பின்னாலே.. இவள் போயிருப்பாள்..? இதிலிருந்தே அவளுடைய ஆசையின் அளவு தெரியவில்லையா...?"
காதல் என்பது எது...? காதலிப்பவருக்காக... காதலையே விட்டுக்கொடுப்பது... மோகனரங்கம் அதைச் செய்தான்.. ஊரே கொந்தளித்து எழுந்து நின்றபோது.. அவன் அதை அடக்கினான்..
"ஏம்ப்பா... ஊருவிட்டு ஊருவந்து.. ஒருத்தன் நம்ம ஊரு பெண்ணைத் தூக்கிட்டுப் போவான்..?  அதைப் பார்த்துக்கிட்டு எங்களை சும்மா இருக்கச் சொல்கிறயா...?"
"ஊருவிட்டு ஊரு வந்தால் என்ன...? நாம்.. அயலூரில் பெண் கொடுத்தது இல்லையா..? பெண் எடுத்ததும் இல்லையா..?"
"அதெல்லாம் முறைப்படி நடந்த சமாச்சாரம்ம்பா.."
"இவனும் முறைப்படி பெண் கேட்டு வந்தானா... இல்லையா..?"
"பெண்னைக் கொடுக்கமாட்டேன்னு.. பெண்ணைப் பெத்தவர் சொல்லி விட்டாருல்ல..?"
"அப்புறம்.. அவன் வேறு என்னதான் செய்வான்...?"
"அதுக்காக வீடு புகுந்து பெண்ணைத் தூக்குவதா...?"
"அந்தப் பெண்ணின் இஷ்டமில்லாமல் தூக்கினானா...?"
ஊர் மௌனமானது... மோகனரங்கத்தின் வீட்டில்.. அவனின் தங்கை மேகலா கொதித்தாள்..
"பெண்ணை விட்டுக் கொடுத்ததுமில்லாம... ஊரைக் கட்டுப்படுத்திவைத்து விட்டு வந்து நிற்கிறாயே அண்ணா.."
"புரியாமல் பேசாதே மேகலா.. அவளுக்கு நான் பரிசம் போட்டபின்னால் இது நடந்திருந்தால்.. நீ கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கு.. அதுக்கு முன்னாலேயே நடந்ததுக்கு.. நாம ஏன் கவலைப்படனும்..?"
மோகனரங்கம் ஜானகிக்காக வாதாடினான்.. தான் காதலித்தவளின் காதலைக் காக்க.. அவன் தன்னுடைய தங்கையையே எதிர்த்து நின்றான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஒற்றையடிப்.. பாதையிலே. -2
ஒற்றையடிப்.. பாதையிலே. -2
https://1.bp.blogspot.com/-WHzKgL7VU9I/XsaLOazdoKI/AAAAAAAAA2s/Wv_faORn_8Ew6xKXn_bXcsDnUS2vTbBiQCPcBGAYYCw/s320/Othaiyadipathai.jpg
https://1.bp.blogspot.com/-WHzKgL7VU9I/XsaLOazdoKI/AAAAAAAAA2s/Wv_faORn_8Ew6xKXn_bXcsDnUS2vTbBiQCPcBGAYYCw/s72-c/Othaiyadipathai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/orraiyadippaathaiyile-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/orraiyadippaathaiyile-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy