நோக்கியா 6030-முகங்கள் -part -II,

நோக்கியா 6030 திருச்சியில் இருந்து மெட்ராஸ்க்கு ஜாகை மாறும் சமயத்தில்  என் சக உடன் பிறப்புகள் உட்பட மூன்று பேருக்கும்  நோக்கியா 1108...

நோக்கியா 6030


திருச்சியில் இருந்து மெட்ராஸ்க்கு ஜாகை மாறும்
சமயத்தில் 
என் சக உடன் பிறப்புகள் உட்பட மூன்று பேருக்கும் 
நோக்கியா 1108 மொபைல் போனை அம்மா வாங்கித் 
தந்தார். அதற்கு முன்பு ரிலையன்ஸ் 501 சிடிஎம்ஏ 
போன் வைத்திருந்தாலும் முதல் ஜிஎஸ்எம் 
மொபைல் சாதனம் என்றால் அது அம்மா 
வாங்கித்தந்த 1108 தான்! 
மெட்ராஸ் வந்த சில நாட்களில் வேலை 
மாறி வங்கி தொடர்புடைய பணிக்குள்
 நுழைந்த போதும் அந்த 1108 மொபைல் தான். 
அலுவலகத்தில் நான் மஞ்ச மாக்கானாக வளைய 
வருகையில் என்னுடன் பணியாற்றிய மெட்ராஸ் வாசிகள் 
வித விதமான அலைபேசிகளுடன் வளைய வந்தார்கள்.
 “நீ பேஸிக் மாடல் வெச்சுருக்க” என்று சமயம் கிடைக்கும் 
போதெல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். 
ஒரு தனியார் வங்கியில் அடமானக் கடன் 
தொடர்பான வேலை. எக்ஸிகியூட்டிவ் கேடர்.
 சம்பளம், பெட்ரோல் அலவன்ஸ், இன்சென்டிவ்
 போன்றவை பிரச்சனை இன்றி நடுத்தரக் குடும்பத்தின் 
வாடகை வீட்டு வாழ்கையை ஜீவிக்க உதவியது. 
இன்சென்டிவைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம்
 நம்முடைய வாடிக்கையாளரின் லோன் டிஸ்பர்ஸ் 
செய்யப்பட்டு விட்டால் அதற்குரிய ஊக்கத்தொகை 
ஜூன் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். நேரடிக் கடனாக 
இல்லாது டேக் ஓவர் என்றால் சிக்கல்! ஏற்கனவே 
கடன் நிலுவையில் உள்ள வங்கிக்கு அவுட்ஸ்டாண்டிங் 
தொகைக்காண வரைவோலையைத் தந்து, அந்த வங்கி 
அதை கிளியர் செய்து நோ டியூ சான்றிதழ் தந்து ஒரிஜினல்
 சொத்து பத்திரங்களையும் எங்கள் வங்கியிடம் சமர்ப்பித்து 
அவற்றைப் பெற்று சரி பார்த்து மீதித்தொகைக்குரிய டிடியை 
வாடிக்கையாளாரிடம் தந்த பிறகே
இன்சென்டிவ் கணக்கிடப்படும். 
உதாரணத்திற்கு வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட வங்கியில்
 எழுபது லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் அதை டேக் 
ஓவர் செய்து நாங்கள் ஒரு கோடியாக கடன் தொகையை 
நாங்கள் வழங்குகிறோம் எனில் சம்பிரதாயங்களை
 ஏப்ரல் மாதம் முடித்து மே மாதம் அந்த வங்கி டிடி வாங்கி 
(மாதக் கடைசியில் எந்த வங்கியும் கடன் முடிப்பது 
தொடர்பான பரிவர்த்தனைகளை ஏற்காது) மே மாத மத்தியில் 
கடன் கணக்கை முடித்து, எங்கள் வங்கி இறுதிப் பணிகளை 
செய்து மீதி முப்பது லட்சத்தை மே மாத இறுதியில் 
வாடிக்கையாளருக்கு தந்து விட்டால்
ஜூலை மாதம் இன்சென்டிவ் கிடைக்கும். 
தொடர்ந்து இன்சென்டிவ்களை வாங்கி கொஞ்சம் 
நிம்மதியாக மூச்சு விடும் போது தான் கலர் மொபைல் 
வாங்க ஆசை வந்தது, 2005 ஆம் வருடம் நோக்கியா 6030 
மொபைல் வாங்கியே தீர வேண்டும் என்ற ஆசை 
கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. 
நோக்கியா 1108 ல் கலர் டிஸ்ப்ளே கிடையாது,
 பாலிஃபோனிக் ரிங் டோன் கிடையாது. 
இப்படி ஏகப்பட்ட கிடையாதுகள்... 
போரூர் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தை கிளப்பி 
முகலிவாக்கம் சாலையில் பயணித்து கேதார் மருத்துவமனை 
தாண்டி ட்ரங்க் ரோட்டில் பயணிக்க வலது புறம் திரும்பி 
மெயின் ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி 
ஹெட் செட் மாட்டி எஃப் எம் வானொலியை 
ஆன் செய்து மீண்டும் வண்டியை ஓட்டிக் கொண்டு 
ராயப்பேட்டை சென்றால்... மனம் அடிக்கடி
 இப்படி கற்பனை செய்து பார்த்தது. 
என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் சக பணியாளனான 
“வான்” (அவனின் செல்லப் பெயர்) என்பவன் ஆவடியில் 
இருந்து வேலைக்கு வந்து போய் கொண்டிருந்தான். 
மொபைல் தொடர்பான பல சங்கதிகளை அடிக்கடி 
பேசுபவனாக இருந்தான். என்னுடைய 6030 காதலை அறிந்தவன் 
“குறைந்த விலையில் வாங்கித் தருகிறேன்” 
அவசரப்படாதே என்றான். 
ஒரு நல்ல நாளில் விலை சொன்னான். வெளியே விற்பதை 
விட சுமார் 300/- ரூபாய் குறைவு. 
நானும் பணத்தைத் தந்தேன். ஈவ்னிங் ஃபீல்ட் வொர்க் 
முடித்து ஆபீஸ் திரும்பும் போது அலைபேசியைத் 
தருவதாக சொன்னான். 
மாலை ஏழரை மணியளவில் அலுவலகத்தில் 
அவனுக்காக காத்திருந்தேன். திடீரென கால் மணி நேரம் 
மழை வெளுத்து வாங்கியது. சீதோஷ்ணம் அநியாயத்திற்கு 
குளிர்ந்தது. ஆபீஸ் உள்ளே ஏசி தேவைப்படாத நிலை. 
மழை விட்ட பின்பும் “வான்” வரவில்லை. 
அருகில் உள்ள மாமா கடைக்குப் போய் கடலைப்பருப்பு 
தாளித்த கட்லெட், சூடான உண்மையான சமோஸா,
 ஃபில்டர் காஃபி குடித்து ரிலாக்ஸ் செய்து அலுவலகம்
 வந்த பின்பும் வான் மொபைல் போனுடன் வரவில்லை. 
மணி எட்டரை. அவனுக்கு போன் செய்தால் எடுத்துப் பேசியவன்
 “இங்க நல்ல மழை, சார் கிட்ட சொல்லிட்டு நான் வீட்டுக்கு கிளம்பி 
போய்கிட்டு இருக்கேன். போன் வாங்கிட்டேன். 
ப்ளாக் கலர் கிடைக்கல நாளைக்கு காலைல எடுத்துட்டு வரேன்” 
வான் பேச்சு எரிச்சலை மூட்டியது. 
“முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல, பரவால்ல 
நான் ஆவடி வந்து போனை வாங்கிக்கறேன்” 
வண்ணப் பித்து பேச வைத்தது. 
“ஒன்னும் பிரச்சனை இல்லை வா, பூந்தம்மல்லி வழியா 
போரூர் ரிட்டர்ன் போகலாம், அது ஷார்ட் ரூட், 
நான் உனக்கு வழி சொல்றேன்” 
கிளம்பிவிட்டேன், என்னிடம் இருந்த இரு சக்கர வாகனம்
 டிவிஎஸ் எக்ஸ் எல் சூப்பரில் ராயப்பேட்டையிலிருந்து 
ஆவடிக்குப் பிரயாணம். 
அவன் சொன்ன ரூட்டில் செல்லாது நடுவே வழி தவறி, 
மீண்டும் ஒரு மழையில் சிக்கி ஆவடிக்கு போய் சேர்ந்த 
போது மணி இரவு பத்தே முக்கால். அவனுக்கு போன்
 செய்ய ஐந்து நிமிடங்களில் ஒரு வாகனத்தில் வந்தவன்
 வீட்டிற்கு அழைத்து சென்றான். வீட்டில் மின்சாரம் இல்லை. 
பவர் கட். மீண்டும் மழை பெய்ய
ஆரம்பித்தது இம்முறை வலுவாக. 
“இவ்வளவு லேட்டா போரூர் போகாத, மழை வேற எப்போ 
நிக்கும்னு தெரியல காலைல காபி குடிச்சுட்டு கிளம்பு,
 கை கழுவிட்டு வா சாப்பிடலாம்”
 வான் எமர்ஜென்ஸி லைட்டை எடுத்துக் கொண்டு 
அம்மாவுக்கு போன் செய்து “மழை, காலைல தான் 
வீட்டுக்கு வருவேன், பத்திரமா இருக்கேன், 
நீங்களும் வீட்டைப் பூட்டிட்டு தூங்குங்க” சுருக்கமாக சொன்னேன். 
ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வான் கண் அசந்தான். 
நானும் தூங்கிப் போனேன். சடாரென விழிப்பு வந்தது, 
மின்விசிறி வேகமாக சுற்றிக் கொண்டிருந்தது. 
என் 1108 போனை ஆன் செய்து மணி பார்த்தேன்
. 4.37 am. வீட்டில் யாரும் எழுந்ததற்கான அறிகுறிகள் இல்லை. 
அருகே வான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். 
முதல் முறை நண்பன் வீட்டிற்குப் போயிருக்கிறேன். 
அதிகாலை அனைவரும் தூங்கும் போது லைட்டைப் 
போட்டு ப்ளக் பாயிண்ட் தேடி... மொபைலை சார்ஜ் செய்யும் 
ஆசையை விட்டொழித்தேன். தூக்கம் வராது புரண்டு புரண்டு 
படுத்தபடி இருந்தேன். சிறிது நேரத்தில் ஜனம் புழங்கும்
 சப்தம் கேட்டது ஹால் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 
எழுந்து போனேன். வான் அம்மா விழித்துக் கொண்டு 
விட்டார் போல அன்றாடப் பணிகளுக்கு தயார் 
ஆகிக் கொண்டிருந்தார். ஃப்ரிட்ஜைத் திறந்து 
பால் பாக்கெட்டை எடுத்தவர் என்னைப் பார்த்து
 “வாப்பா” என்று சிரித்தார். 
“அம்மா மொபைல் சார்ஜ் பண்ணிக்கவா?” 
“என்னப்பா கேள்வி பண்ணிக்கோ சார்ஜர் இருக்கா. 
உன்னுது என்ன மாடல் என் கிட்ட 1100 சார்ஜர் இருக்கு, வேணுமா?” 
“கைல இருக்கற போனுக்கு இல்லைம்மா, புது போனைத் 
தான் சார்ஜ் போடுவேன்” 
மளமளவென பேக் பிரித்து மொபைலை எடுத்து, சார்ஜர் 
பேக் பிரித்து... சார்ஜ் ஏறத் துவங்கியது. 
அம்மா வானை எழுப்பி விட்டார். அவன் தூக்க கலக்கத்துடன் 
என்னைப் பார்த்து சிரித்து 
நான் தயங்கி “பிரஷ் பண்ணனும்” என்றேன் 
 ““அவ்வளவு தானே? வா”
ஒரு கப்போர்டில் இருந்து புது டூத் பிரஷ் எடுத்துத் தந்தான், 
வாஷ் பேசின் பக்கத்துல பேஸ்ட் இருக்கு வா” உடன் வந்தான். 
புது மொபைலைப் பாசத்துடன் பார்த்தேன். 
வானும் கவனித்து, 
“சார்ஜ் போட்டியா? செக் பண்ணிடு எல்லாம் சரியா இருக்கான்னு”
ஆறு மணி நேரம் சார்ஜ் ஆவட்டும் அதுக்கு அப்புறம் தான் 
ஆன் பண்ணுவேன்” – என்னுள் இருந்த
மஞ்ச மாக்கான் தீர்க்கமாக பதிலளித்தான். 
காபி சாப்பிட்டு கிளம்பினோம். 6030  மொபைலை 
அட்டை பெட்டிக்குள் வைத்து பக்கவாக இரு கவர்கள் 
கொண்டு சுற்றி அதை ஒரு கேரி பேக்கில் போட்டு ரப்பர் 
பேன்ட் கொண்டு கட்டி அதை ஒரு திக்கான பிளாஸ்டிக் 
பைக்குள் போட்டு வான் தந்தான். அப்படித்தான் 
மொபைலை எடுத்து வந்ததாக சொன்னான்.  
அம்மாவிடம் வழியனுப்பிவிட்டு வருவதாக சொன்னவன் 
என்னுடன் கிளம்பினான் நானும் அம்மாவிடம் சொல்லிக் 
கொண்டு கிளம்பினேன். என் வண்டியில் ஏறிக் கொண்டான். 
அவன் வாகனத்தை எடுக்கவில்லை. மூன்று நிமிடப் பயணத்தில் 
மெயின் ரோடு வந்தது. அங்கே ஒரு டீக்கடை,
நான்கைந்து ஆசாமிகளுடன்
 இயங்கிக் கொண்டிருந்தது. கடைக்குப் போனோம்.
ரிலாக்ஸ் செய்தோம். 
டீ குடித்தோம். போரூர் செல்ல வழி சொன்னான். கவனமாக
 கேட்டுக் கொண்டேன். 
“ரிட்டர்ன் எப்படிப் போவ? நான் வீட்ல விட்றவா?”  
“நடந்து போக பத்து நிமிஷம் ஆகும், புரிஞ்சுக்கடா 
காரணத்தோட தான் வண்டி எடுக்கல”                 
புரிந்து கொண்டேன்.   
வேகமாக வீட்டிற்கு போய் சேர்ந்த போது
மணி ஆறே முக்கால். போன உடனே 6030 மீண்டும் சார்ஜில்! 
மேலதிகாரிக்கு போன் செய்து லீவ் சொன்னேன். 
குளித்தேன் டிபன் சாப்பிட்டேன். பன்னிரெண்டரை மணிக்கு 
பாய்ந்து 6030 போனை சார்ஜில் இருந்து விடுவித்து ஆன் 
செய்தேன். திரையில் வண்ணம் படர்ந்தது. திருப்தியாக 
இருந்தது. வெளியே வெயில் இல்லை சற்று மேக மூட்டத்துடனே
வானம் காணப்பட்டது. உஷாராக ரெண்டு பிளாஸ்டிக் கவர் சு
ற்றி மொபைலை எடுத்துக் கொண்டு ஹெட் போனை காதில் 
பொருத்தி வண்டியைக் கிளப்பினேன். எஃப் எம் ரேடியோவை
 ஆன் செய்து முகலிவாக்கம் சாலையில் வழக்கம் போல்
 செல்லத் துவங்கினேன்.  கேதார் மருத்துவமனை தாண்டி 
இடது புறம் திரும்பி ட்ரங்க் ரோட்டில் சென்று போரூர் 
ரவுண்டானாவுக்கு முன்பு இடது புறம் திருப்பி ராமநாதீஸ்வரர் 
கோயிலைக் கடக்கையில் சிவனை வணங்கி குன்றத்தூர் 
மெயின் ரோடுக்கு சென்று வண்டியில் மதனந்தபுரம் 
பேருந்து நிறுத்தத்தை நோக்கி பயணிக்கையில் தூறல் 
மேலே விழுந்தது, இடி சத்தம் எஃப்.எம் சத்தம் தாண்டி 
கேட்டது. சொல்லி வைத்தது போல் ஒலித்த பாடல் வரிகள்  
... யார் அந்த வானிலே ஹோ ஹோ..
பட்டாசு வெச்சது  ..
ஹா ஹா மழை சொட்டும் போதிலே
டும்மென்று வெடிக்குது
வெளியே ஓர் நீர் மழை
ஜோராகப் பெய்யுது
உள்ளே ஓர் நிஜ மழை
சந்தோஷம் செய்யுது
மழைப்பெண்ணே உன்மை சொல்லு  
எனக்காகத்தான் நீ வந்தாயா... 
டெயில் பீஸ் : முகங்கள் என்றாலே உயிருள்ள முகங்கள் மட்டுமல்ல
 சில உயிரற்ற பொருட்களின் முகமும் மறக்க முடியாததே!

























































































































































































































































































































































































































































              
















































































































































































































































































































              































                












                
Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: நோக்கியா 6030-முகங்கள் -part -II,
நோக்கியா 6030-முகங்கள் -part -II,
https://1.bp.blogspot.com/-2aYNCQ60k3g/Xr0Y-oOfzLI/AAAAAAAAA18/kTs2pz4V4oY0fS3yF5NKEhUnO_jCfZC2wCPcBGAYYCw/s320/6030.png
https://1.bp.blogspot.com/-2aYNCQ60k3g/Xr0Y-oOfzLI/AAAAAAAAA18/kTs2pz4V4oY0fS3yF5NKEhUnO_jCfZC2wCPcBGAYYCw/s72-c/6030.png
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/nokiyo-6030-mugangal-part-ii.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/nokiyo-6030-mugangal-part-ii.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy