மௌனமான நேரம். -7

7 ஆட்டோவை விட்டு இறங்கிய வைசாலி.. ஆட்டோக் காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு.. பூங்காவுக்குள் நடந்தாள்.. தொலைவில் புல்வெளியின் அருகே போடப் ப...

7

ஆட்டோவை விட்டு இறங்கிய வைசாலி.. ஆட்டோக் காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு.. பூங்காவுக்குள் நடந்தாள்.. தொலைவில் புல்வெளியின் அருகே போடப் பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது கௌசிக் அமர்ந்திருப்பது தெரிந்தது..
பெஞ்சின் மீது சாய்ந்து.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு தோரணையாக அமர்ந்திருந்தான் அவன்..
'சக்கரவர்த்தியைப் போல போஸ் கொடுக்கிறான்..' அவள் இதழ்களில் இளநகை அரும்பியது..
எதையும் அலட்சியமாய் எதிர் கொள்ளும் அவன் சுபாவத்தை ரசிப்பவள்தானே வைசாலி..
அவனை முதன்முதலாக சந்தித்தபோது கூட.. அவன் யாரோ ஒரு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அலட்சியமாக முடியை ஒதுக்கிவிட்டு நகர்ந்தான்..
'உன்னை நான் சந்தித்தேன் - நீ
ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் - என்
ஆலயத்தின் இறைவன்..'
அவளது மனம் பாடியது.. அவனைப் போன்ற ஓர் ஆண்மகனை அவள் அதற்கு முன்னால் சந்தித்ததில்லை.. பின்னாளிலும் சந்திக்கப் போவதில்லை என்று அவள் மனம் கூறியது..
'எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன்..
         ஒரு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்..
சொல்லத்தான் அன்று நினைத்தேன்..
       வந்த நாணத்தால் அதை மறைந்தேன்..'
மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்து.. அவனருகே அவள் செல்ல.. அவனது பார்வை அவள் மேல் படிந்து நிலை கொண்டது.. துளைக்கும் அந்தப் பார்வையைக் கண்டதும்.. வைசாலியின் கால்கள் பின்னின.. மனம் படபடக்க. அவனருகே சென்றாள்.. அவன் பார்வையை விலக்கிக் கொள்ளாமலிருக்க.. அவனருகே நடுக்கத்துடன்  அமர்ந்தாள்..
'மன்னவா.. உன்னை நான்..
மாலையிட்டால் மகிழ்வேன்..'
அவன் முகத்தை ஏக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்த அவளது மனம் பாடியது.. அதை உணர்ந்தவனைப் போல.. அவனது முகம் ஏதோவொரு சிந்தனைக்கும் போனது.. கடினமான முகத்தோற்றம் மென்மையுற..
"என்ன வைசாலி.. ஏன் என்னை வரச் சொன்னாய்..?" என்று மிருதுவான குரலில் வினவினான் கௌசிக்..
"கௌசிக்.." வைசாலி தடுமாறினாள்..
"சொல்லு வைசாலி.. என்னிடம் என்ன தயக்கம்..?" கௌசிக் ஊக்குவித்தான்..
"நம் மேரேஜ் புரொபசலைப் பற்றித் தெரியும்தானே.."
அவன் முகம் பார்க்க முடியாத சங்கடத்துடன் புல் வெளியைப் பார்த்தபடியே வைசாலி வினவினாள்..
"தெரியும்.."
அவனது வழக்கப்படி அவன் இயல்பாக பதில் கூறினான்.. வைசாலிக்குத்தான் பேச்சை எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை.. அவள் திணறிப் போனாள்..
விரல் நடுங்க.. வியர்த்துப் போன முகத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து..
"என்னம்மா..?" என்றான் அவன் கனிவாக..
அந்தக் குரலில் தைரியம் வரப் பெற்றவளாக அவன் முகத்தைப் பார்க்காமல்..
"நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கொடுங்க கௌசிக்.." என்று வைசாலி சொல்லிவிட்டாள்.
"வாட்..?" அவன் குரலில் அப்பட்டமான ஆச்சர்யம் தெரிந்தது..
'எழுந்து ஓடி விடலாமா..' என்று வைசாலி யோசித்தாள்..
"வைசாலி.. என் மனது உனக்குத் தெரியும்தானே..?"
"தெரியும்.."
"தெரிந்துமா இப்படிக் கேட்கிறாய்..?"
"உங்களுக்கும் என் மனது தெரியும்தானே..?"
"தெரியும்.."
"தெரிந்துமா நீங்களும் இப்படி கேட்கறீங்க..?"
"வைசாலி.."
"நிஷா உங்களுடைய கடந்தகாலம்.. நான்உங்களின் நிகழ்காலம்.."
"நான் கடந்த காலத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.."
"தேடுங்க.. நான் அதைத்தடுக்கப் போவதில்லை.. தேடுகின்ற அந்த வாழ்வில் எனக்கும் ஒரு இடத்தைக் கொடுங்க.."
"என்னால் உனக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது.."
"பரவாயில்லை.. நான் காத்திருக்கிறேன்.. உங்கள் மனம் என்பக்கம் திரும்பும்வரை நான் காத்திருக்கிறேன்.."
"ஒருவேளை.. நிஷா எனக்குக் கிடைத்துவிட்டால்..?"
"நான் விலகிக் கொள்வேன் கௌசிக்.. இந்த உறுதியை உங்களுக்கு நான் கொடுக்கிறேன்.. ஒரு வேளை நிஷாவை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால்.. உங்கள் வாழ்க்கைக்கு குறுக்கே நான் நிற்கமாட்டேன்.. உங்கள் வாழ்க்கையை விட்டு விலகிப் போய்விடுகிறேன்.."
வைசாலியின் குரல் தேம்பியது.. கௌசிக்கின் மனம் அவளது துயரத்தைக் கண்டு விசனப்பட்டது..
"இந்த ரிஸ்க்கை ஏன் நீ எடுக்க வேண்டும் வைசாலி..?" அவன் இரக்கத்துடன் கேட்டான்..
"வேறு வழியில்லை கௌசிக்.. இதை நீங்க மறுத்தால்.. என்னை வேறு யாருக்காவது மேரேஜ் பண்ணிக் கொடுத்து விடுவாங்க.."
"பண்ணிக் கொள்.."
அவனது வார்த்தையைக் கேட்ட வைசாலியின் இதயம் வலித்தது.. எவ்வளவு இலகுவாகக் கூறுகிறான்..
'இன்னொரு கைகளிலே..
யார்.. யார்.. நான்..?
எனை மறந்தாயா..?
ஏன்.. ஏன்.. ஏன்.. என்னுயிரே..'
அவளது மனம் கதறியது.. அவளது முகம் அதை பிரதிபலிக்க..
"வேண்டாம் வைசாலி.. வேதனைப்படாதே.." என்றான் கௌசிக்..
"உன் நன்மைக்குத்தான் சொன்னேன்.. அதைக் கேட்டுக்கொள்வது உன் விருப்பம்.. நீ எதில் குறைந்தவள்..? நான் தான் ஏற்கனவே சொல்லியிருக் கிறேனே.. நிஷாவைப் பார்ப்பதற்கு முன்னால்.."
"போதும் கௌசிக்.."
அவனது பேச்சை இடைமறித்து பொங்கி வெடித்தாள் வைசாலி..
"போதும்.. இதையே சொல்லி.. என்னை உயிரோடு கொல்ல வேண்டாம்.."
"வைசாலி.."
"நானும் பெண்தான்.. எனக்கும் மனம் வலிக்கும்.. அது என் உயிரைக் குடிக்கும்.." அவளது விழிகளில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம். -7
மௌனமான நேரம். -7
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy