மௌனமான நேரம். -6

6 "என்னைப் பார்க்க வந்தீங்களா..? என்ன விசயம் ஆண்ட்டி.." வைசாலியின் கேள்விக்கு சியாமளா உடனே பதில் சொல்லி விடவில்லை.. அவள் பார்வ...

6

"என்னைப் பார்க்க வந்தீங்களா..? என்ன விசயம் ஆண்ட்டி.."
வைசாலியின் கேள்விக்கு சியாமளா உடனே பதில் சொல்லி விடவில்லை.. அவள் பார்வை வைசாலியிடம் எதையோ இறைஞ்சியது..
அவ்வளவு வசதியான பணக்காரப் பெண்மனி தன்னிடம் எதை யாசிக்கிறாள் என்று அறியாமல் திகைத்தாள் வைசாலி..
"சொல்லுங்க ஆண்ட்டி.."
"வைசாலி.. நாங்க கௌசிக்கிற்காக உன்னைப் பெண் கேட்ட விவரம் உனக்குத் தெரியும்தானே.."
வைசாலிக்குள் துக்கம் பொங்கியது.. சியாமளாவின் சொற்கள் கிளறிவிட்ட மனரணத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. வெகுபாடுபட்டு.. தன் உணர்வுகள் முகத்தில் பிரதிபலித்து விடாமல் பார்த்துக் கொண்டாள்..
"ம்ம்ம்.."
"எங்களுக்கும் கல்பனாவுக்கும் உன்னை எங்கள் வீட்டு மருமகளாக்கிக் கொள்ளனும்னு கொள்ளை ஆசை.."
'எனக்கும் கூட உங்க மகன்மேல் கொள்ளை ஆசைதான்..'
"பட்.. கௌசிக் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை.."
இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்ற நினைவுடன் வைசாலி மௌனித்தாள்.. சியாமளா வைசாலியின் வலக்கரத்தைப் பற்றிக் கொண்டாள்..
"நான் இதைச் சொல்வதற்காக என்னை மன்னித்து விடு வைசாலி.."
எதற்காக கௌசிக்கின் அம்மா அவளிடம் வந்து மன்னிப்புக் கேட்கிறாள் என்று வைசாலிக்கும் புரிய வில்லை.. ஒருவேளை அவளுடைய மகன் வைசாலியை மறுத்துவிட்டான் என்பதற்காக மன்னிப்புக் கேட்கிறாளா..?
வைசாலியின் கணிப்பு தவறென்று சியாமளாவிட மிருந்து அடுத்து வந்த வார்த்தைகள் உணர்த்தின..
"நீ ஏன் கௌசிக்கிடம் இதைப் பற்றி பேசக்கூடாது..?"
'வைசாலிக்கு தூக்கிவாரிப் போட்டது.. அவள் போய் கௌசிக்கிடம் பேசுவதா..? என்ன பேசுவது..? எதைப் பற்றிப் பேசுவது..?'
ஏற்கனவே அவனிடம் காதலைப் பற்றிப் பேசி.. அவனால் புறக்கணிக்கப்பட்டவள் வைசாலி.. இப்போது ஒருபடிமேலே போய் கல்யாணத்தைப் பற்றி அவனிடம் பேசுவதா..?
"ஆண்ட்டி.."
"முடியாதுன்னு மட்டும் சொல்லிவிடாதே வைசாலி.. என் மகன் ஊரைப் போல்.. நாட்டைப் போல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழணும்னு நான் ஆசைப்படாத நாளே இல்லை வைசாலி.. கைநிறைய சம்பாதிக்கிறான்.. அவனுடைய தாத்தாவின் சொத்தை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்   கௌசிக்கின் அப்பா ...இப்ப சொந்தமா பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறான்.. நாங்க முகம் சுளிக்கிறதைப் போல ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.. ஆனால்.. கல்யாணத்தை மட்டும் வேண்டாம்கிறான்.."
"ஒருவேளை.. அவர் மனதில் வேறு யாரும் இருக்கிறாங்களோ என்னவோ.."
வைசாலி தயக்கத்துடன் கூறினாள்..
"அதையும் கேட்டுப் பார்த்துவிட்டோமே.. அப்படி எதுவும் இல்லைன்னு சொல்கிறான்.."
ஏன் கௌசிக்கால் நிஷாவைப் பற்றி வீட்டில் சொல்ல முடியவில்லை என்ற கேள்வி வைசாலியின் மனதில் எழுந்தது..
"இதில் நான் என்ன செய்ய முடியும் ஆண்ட்டி.."
"பேசு வைசாலி.. இதைப்பற்றி கௌசிக்கிடம் பேசு.."
"இல்லை ஆண்ட்டி.. அது சரிவராது.."
"எனக்காக இதைச் செய்ய மாட்டாயா வைசாலி..? உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமிருக்குன்னு தெரிந்ததால்தான் கௌசிக்கிடம் பேசச் சொல்லி நான் கேட்கிறேன்.."
"என்னால் என்ன பேச முடியும் ஆண்ட்டி..?"
"ஏதாவது செய் வைசாலி.. எங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்துவிடு.. உன்னை நான் பூப்போல பார்த்துக் கொள்கிறேன்.."
'நீ என்னை முள்ளாக குத்தினாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டேன்.. உன் மகனுக்கு மனைவியென்ற சொல் ஒன்றே போதும்.. எதையும் தாங்கும் சக்தியை அது கொடுத்துவிடும்.. ஆனால் அவனிடம் எப்படி இதைக் கேட்பேன்..?'
வைசாலி தவித்துப் போனாள்.. அதை வேறு விதமாக புரிந்து கொண்டாள் சியாமளா..
"கஷ்டமாகத்தான் இருக்கும் வைசாலி.. நான் இல்லைன்னு சொல்லவில்லை.. உன்னைப் போல் அழகும் படிப்பும் இருக்கிற பெண்ணுக்கு ஆயிரம் மாப்பிள்ளைகள் வருவார்கள்.. அதனால் நீ சுயமரியாதை பார்க்கிறாய்.."
'சுயமரியாதையெல்லாம்.. காதலின் முன்னால் மாயமாய் மறைந்து விடும் ஆண்ட்டி.. இது உங்களுக்குத் தெரியாது..'
"ஆனால் வைசாலி.. இது மிகப் பெரிய வாய்ப்பு.."
சியாமளா யதார்த்தமாகத்தான் இதைக் கூறினாள்.. ஆனால் அந்த வார்த்தைகளில் ஏதோ செய்தியிருப்பதைப் போல உணர்ந்தாள் வைசாலி..
'வாய்ப்பு..!'
அவள் நெஞ்சம் பொங்கியது.. இது ஒரு வாய்ப்புத்தானே.. இதை ஏன் அவள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது..?
மத்திய வர்க்க குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து விட்டு திருமணத்தை தவிர்ப்பது அவளுக்கு சாத்தியப் படுமா..?
அப்படிவேறு ஒரு இடத்தில் திருமணம் பேசி முடிவாகி விட்டால் கௌசிக்கை மறந்து வேறு ஒருவனுடன் வாழ அவளால் முடியுமா..?
வைசாலி யோசித்தாள்.. அல்லும் பகலும் அவளது மனத்தையும் ஆரோக்கியத்தையும் உருக்கும் அவனது நினைவைத் துறந்து வாழ்தல் அவளால் இயல்கின்ற ஒன்றா..?
கண்ணனை நினைத்துக் கொண்டே மீரா ராஜாவின் மனைவியாக ஆகலாம்.. ஏனென்றால் கண்ணன் தெய்வம்.. அடைய முடியாதவன்..
கௌசிக் அப்படியல்லவே.. சாதாரண மானிடன் தானே.. அவனை அடைய முடியுமென்ற நிலை உருவாகி யிருக்கும்போது.. அதை கை நழுவ விட்டுவிட்டு.. அவனது நினைவுகளுடன்.. இன்னொருவனுடன் வாழ வேண்டிய அவசியம்தான் என்ன..?
வைசாலி முடிவெடுத்துவிட்டாள்..
"நான் கௌசிக்கிடம் இதைப் பற்றிப் பேசுகிறேன் ஆண்ட்டி.."
அவள் குரல் உறுதியுடன் ஒலித்தது.. தனது சந்தோசத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்.. சியாமளா வைசாலியின் கரத்தை இறுக்கிப் பிடித்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம். -6
மௌனமான நேரம். -6
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy