மௌனமான நேரம்.. -22

22 வைசாலியைப் பார்த்த நிஷாவின் முகத்தில் இகழ்ச்சி தெரிந்தது.. 'கௌசிக்கின் சேரில் இவள் எப்படி உட்கார்ந்தாள்..' கொதிப்புடன் வைசாலி ...

22

வைசாலியைப் பார்த்த நிஷாவின் முகத்தில் இகழ்ச்சி தெரிந்தது.. 'கௌசிக்கின் சேரில் இவள் எப்படி உட்கார்ந்தாள்..' கொதிப்புடன் வைசாலி பார்த்துக் கொண்டிருக்கும்போதே..
"எங்கே வந்தே..?" என்று அலட்சியமாக வினவினாள் நிஷா..
'இது என் ஆபீஸ்..' என்று சொல்ல நா துடித்தது..  வைசாலி.. அவளுடைய கேடயமான மௌனத்துடன் நிஷாவை வெறித்துப் பார்த்தவாறு நின்றாள்..
"நீ பாட்டுக்கு மளமளன்னு ரூமுக்குள் வருகிறாயே.. கதவைத்தட்டி பெர்மிசன் கேட்கனும்கிற பேஸிக் மேனர்ஸ் கூடவா உன்கிட்ட இல்லாம போச்சு..?"
'நான் அவருடைய பெண்டாட்டி...' இதையும் மனதிற்குள் தான் சொல்லிக் கொண்டாள் வைசாலி..
"நல்ல வேலையாக கௌசிக் பாத்ரூமில் இருக்கிறான்.. அவன் வெளியே இருந்து என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்தான்னுவை.. இப்படி நீ வருவது எங்களக்கு டிஸ்டர்பா இருக்காது..?"
'இது உனக்குத் தேவையா வைசாலி..'
அவள் மனம் அவளை கடுமையாக கடிந்து கொண்டது..
கன்றிப் போன முகத்துடன் அவள் திரும்பப் போனாள்.. நிஷாவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது..
"ஹேய்.. இனிமேல் இப்படி கம்பெனிப் பக்கம் வருகிற வேலையை எல்லாம் வைத்துக் கொள்ளாதே.. திஸ் இஸ் மை கௌசிக்'ஸ் புராபர்டி.."
'இதில் நான் ஒன் ஆப் தி பார்ட்னர்..'
சொல்லத் துடித்த மனதுடன் அதைச் சொல்லாமல் வெளியேறப் போன வைசாலி.. அதிர்ந்து நின்றாள்.. அந்த அறைக்குள் இருந்த பாத்ரூமின் வாசலில் முகமெல்லாம் கொந்தளிக்கும் கோபத்துடன் கௌசிக் நின்று கொண்டிருந்தான்..
"இங்கே வரவேண்டாம்ன்னு உன்னிடம் சொல்லி யிருந்தேனா இல்லையா.. ஏன் வந்தே..?"
வைசாலியின் காலடியில் பூமி கிடுகிடுத்தது.. கௌசிக் அவளை தனிமையில் கொன்றே போட்டிருந் தாலும் சந்தோஷமாக அவன் கைகளில் உயிரை விட்டிருப்பாள்.. இப்படி நிஷாவின் முன்னால் அவளை கேள்வி கேட்டதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
நிஷாவின் முகத்தில் ஏளனம் வந்ததை ஓர்வித அவமானத்துடன் உணர்ந்தாள் வைசாலி.. தலைகுனிந்த வளாக அங்கிருந்து நகரப் போனாள்..
"நில்.. நான் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லி விட்டுப் போ.. ஏன் வந்தாய்..? என்னை வேவு பார்க்க வந்தாயா..? வீட்டில் போன் வந்தால் நீயே அட்டெண்ட் பண்ணுவது.. ஆபீஸிற்கு பின்னாலேயே வந்து கண்காணிப்பது.. இதெல்லாம் என்ன..? எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. போ.. போய்விடு இங்கேயிருந்து.."
கடைசியில் சொல்லிவிட்டான்.. உன்னை எனக்குப் பிடிக்கவில்லை.. உன் முகத்தில் விழிக்க எனக்கு விருப்பமில்லை.. என்வாழ்க்கையில் இருந்து போய் விடுன்னு சொல்லிவிட்டான்..
'இதைக் கேட்கவா இங்கே வந்தேன்?..' வைசாலி நொந்து கொண்டாள்..
இந்த கம்பெனியை கடைசியாய் ஓர் முறை பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையுடன் அங்கே வந்தாள்.. கடைசியில் இப்படிப்பட்ட கேள்விகளை அவள் சந்திக்க வேண்டியதாகிவிட்டது..
கௌரவமாய் விலகிப் போய் தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் வைசாலிக்குள் எழுந்தது.. அவன் 'போ' என்று சொல்லும் வரை காத்திருந்தது போல.. இப்போது ஆகிவிட்டதே..
துக்கத்துடன் கம்பெனியை விட்டு வெளியேறினாள்.. காரில் ஏறி அமர்ந்தபோது.. டிரைவர்..
"அடுத்து எங்கேம்மா.. கோவிலுக்கா..?" என்று வினவினார்..
வைசாலியின் செவிகளில் அந்தக் கேள்வி விழவேயில்லை.. அவள் மௌனமாக தொலைதூரத்தில் ஏதோ ஒரு சூன்யத்தில் விழி பதித்து அமர்ந்திருக்க, அவளது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினார் டிரைவர்..
"கோவில்.. வந்துருச்சும்மா.."
தன் சிந்தனையில் லயித்துப் போயிருந்த வைசாலி தூக்கிவாரிப் போட்டவளாய் உலுக்கி விழித்தாள்..
எதிரே தெரிந்த கோவில் கோபுரம் 'வா' என்று அவளை அழைத்தது..
தாயின் மடி கிடைத்த மழலை போல் அவள் நெஞ்சம் பொங்கியது.. 'அடைக்கலம் கொடு பெருமாளே..' என்று அவள் மனம் அரற்றியது..
'உன் காலடியின் நிழலை எனக்குக் கொடு.. களைந்து சோர்ந்து வந்திருக்கிறேன்.. நான் இளைப்பாற உன் பாதமடியைக் காட்டு.. அதில் தலைசாய்த்து என் மனபாரம் இறக்க கருணை காட்டு..'
வைசாலி கோவிலுக்குள் புகுந்தாள்.. தீபாரதனை ஒளியில் நட்புச் சிரிப்புடன் நானிருக்கிறேன் உனக்கு... என் பாதங்களில் உன் கவலையைக் கொடு.. அடைக்கலமாகு.. என்று பாதங்களை நோக்கி அபயக் கரம் காட்டிக் கொண்டிருந்த பரந்தாமனை சேவித்தாள்.. அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது..
'நான் அவனை நேசித்தேன்.. அந்த நேசத்தில் என்ன குறை கண்டாய்..? அவனைக் கண்ட நாள் முதல்.. அவனது அன்பு எனக்கு நிலைக்குமா என்று பரிதவித்தேன்.. நிலைக்க வேண்டும் என்று உன்னிடம் வேண்டுதல் வைத்தேனே என் அபயக்குரல் உன் செவிகளில் விழவில்லையா..'
பிரகாரம் சுற்றி வலம் வந்தவள்.. அங்கிருந்த தூணில் சாய்ந்து அயர்ந்து கண்மூடிக் கொண்டாள்.. அங்கேயே இருந்துவிட வேண்டும் போல் அவளுக்கு இருந்தது..
ஆனால் அது முடியுமா..? கோவிலின் கதவுகள் கூட குறிப்பிட்ட நேரம் வரைக்கும்தான் திறந்திருக்கும்..
இனி ஒரு கணம் கூட கௌசிக்கின் வீட்டில் இருக்கக் கூடாது என்று மட்டும் உறுதியாக நினைத்தாள்.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு செல்போனை எடுத்தாள்..
"ஜென்னி.. நான் கிளம்பி வருகிறேன்.. வேலை கிடைக்கும் வரை உன்னுடன் தங்கிக் கொள்கிறேன்.. நானும் என் குழந்தையும் உனக்குப் பாரமாக இருக்க மாட்டோம்.. ஜென்னி என்னால் முடிந்த வீட்டு வேலைகளைச் செய்து அதை ஈடுகட்டி விடுவேன்.. கிளம்பிவரவா ஜென்னி.?."
வைசாலி தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டிருந்த போதே அவள் கையில் இருந்த செல்போன் பறிக்கப் பட்டது.. பதறிப்போய் ஏறிட்டுப் பார்த்தாள்..
அவளெதிரே கோபக் கனல் வீசும் முகத்துடன் கௌசிக் நின்று கொண்டிருந்தான்.. செல்போனை அணைத்து அவனது சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.. அவளருகில் அமர்ந்தான்..
"ஏண்டி, நீ அவசரத்துக்கு பிறந்தவளா..?" என்று பல்லைக் கடித்தான்..
'இவன் எங்கே இங்கே வந்தான்..' என்ற நினைவுடன் வைசாலி முகத்தை திருப்பிக் கொண்டாள்..
"செய்வதையெல்லாம் செய்துவிட்டு என் முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவளைப் போல.. முகத்தை திருப்பிக் கொள்கிறாயா..? ஏண்டி உனக்கு என்னைப் பிடிக்காதா.."
'இவன் ஏன் இப்போது வந்து இப்படி பேசித் தொலைக்கிறான்..'
"வீட்டு வேலை செய்து உன்னையும் என் பிள்ளையையும் பார்த்துக்குவியா..? அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன்.. எவ்வளவு தைரியமிருந்தால்.. இப்படிப் பேசுவ..."
'தைரியத்தைப் பற்றி நீ பேசாதே.. எவ்வளவு தைரியமிருந்தால்.. கட்டின பெண்டாட்டியை கண்ட கழிசடைகளின் முன்னால் நீ அவமானப் படுத்துவ..'
"இதுதான் நீ என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையா..? புரிந்து கொள்ளாத வாழ்க்கையையா நீ வாழ்ந்தாய்..? நினைத்தவுடன் பிரிந்து போவதற்கு நீயும் நானும் என்ன ரயில் சிநேகிதர்களா..? புருசன் பெண்டாட்டி..! சாகும் வரை.. ஏன் செத்த பின்னாலும் நம் உறவு நிலைத்திருக்கும்..."
'இவன் என்ன இப்படிச் சொல்கிறான்..?' தன் செவிகளை நம்ப முடியாமல் விழி விரித்து அதிசயமாக அவனைப் பார்த்தாள் வைசாலி..
"மெல்ல... மொச்சைக் கொட்டை கண்ணை விரித்து ஏண்டி இப்படி பார்த்து வைக்கிற..? நான் என்னத்தை சொல்லிட்டேன்னு உலக அதிசயங்களில் ஒன்னைப் பார்க்கிறதைப் போல.. என்னையும் பார்க்கற..?" கௌசிக் கேட்டான்..
அடக்கி வைத்திருந்த துயரம் பீறிட்டு எழ கதறியழுதாள் வைசாலி..
கௌசிக் அவளை கடிந்து கொள்ளவில்லை.. அவளது அழுகையை தடை செய்யவும் இல்லை.. அவளது முடி கோதி.. மௌனமாக அவளை மனமார அழ விட்டான்..
அழுது ஓய்ந்து நிமிர்ந்தவளின் கண் துடைத்துவிட்டு அவளது விழிகளுக்குள் ஊடுருவி பார்த்தான். அவன் முகம் கனிந்திருந்தது..
"காதல்ன்னா என்ன வைசாலி..? டீன் ஏஜில் தளதளன்னு ஒரு பொண்ணு.. பச்சக்குன்னு கன்னத்தில் முத்தம் கொடுத்ததும் வருவதற்குப் பெயர் காதலா..? இல்லை.. அது இனக்கவர்ச்சி..! நிஷாவின் மேல் எனக்கு வந்தது அதுதான்.. பட்.. நிஷாவுக்கு என்மேல் இருந்தது அது கூட இல்லை.. சிறுவயதிலிருந்தே.. ஆண்களின் சபலத்தை தூண்டிவிட்டு.. அதன் மூலம் வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள்.. இது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.."
களைத்து சோர்ந்திருந்த வைசாலி.. கௌசிக்கின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. அவன் மென்மையாக அவள் விரலில் முத்தமிட்டான்..
"பட் நான் வளர்ந்த விதம் வேறு.. கற்பு என்பது.. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுன்னு நினைகிறவன் நான்.. காதலுக்கும் கற்புண்டுன்னு நினைத்தேன்.. என் அப்பா ஜட்ஜ், என்னை அப்படித்தான் வளர்த்திருந்தார் நிஷாவின் நடவடிக்கைகளும்.. பழக்க வழக்கமும் பிடிக்காமல் போனாலும் மேரேஜூக்குப் பின்னால் மாற்றி விடலாமுன்னு நினைத்தேன்.."
வைசாலி மௌனமாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அவள் மும்பையில் பிறந்து வளர்ந்தவள் என்று அவள் சொன்னது முழுப்பொய் வைசாலி.. இந்த சென்னையைச் சேர்ந்தவள்தானாம்.. மும்பைப் பெண்ணுன்னு சொன்னால்.. சினிமாவில் ஈஸியாக நுழையலாமுன்னு அப்படிச் சொன்னாளாம்.. இதெல்லாம் இப்போது.. டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலம் நான் தெரிந்து கொண்ட விவரங்கள்.."
'இதைப்பற்றி தெரிந்து எனக்கு ஆகப்போவதென்ன..' என்று நினைத்துக்கொண்டாள் வைசாலி..
"என்னிடம் மட்டுமில்லை.. இன்னும் இரண்டு மூன்று சீனியர்களிடமும் இதே காதல் கதையை சொல்லி பழகியிருக்கிறாள்.. ஒருத்தரைப் பற்றி மற்றொருவருக்குத் தெரியாமல் டீல் பண்ணியது அவள் கெட்டிக்காரத்தனம்.. இரவினில் அவளுடன் தங்க மறுத்தது நான் மட்டும் தானாம்.. மற்றவர்கள் மறுக்கவில்லையாம்.."
வைசாலியின் முகம் சிவந்துவிட்டது.. அதை ரசித்தான் கௌசிக்..
"உன்னைக் கண்டவுடன் காதலிக்க ஆரம்பித்து விட்டேன்டி.. உன்னைத்தவிர வேறு ஒருத்தி தாலி கட்டுன்னு சொல்லியிருந்தால் கட்டியிருப்பேனா..? இது ஏன் உன் மரமண்டைக்குப் புரியாமல் போனது.. பர்ஸ்ட் நைட் அன்னைக்கு எனக்கு வேகம்தான்.. ஆனால் பெரிய இவ மாதிரி நிஷாவின் மேல் தெய்வீகக் காதல்ன்னு பிதற்றிவிட்டு உன்னை எப்படித் தொடுவதுன்னு சங்கடமாய் இருந்தது.. அதையும் நீ ஒரு நாள் உடைத்து எறிந்தாய்.. ஏய்ய்.. உன்னைத் தொட்டது காதலோடுதான்.. ஆசையோடுதான்.. போதுமா..?"
"போதுமே.. ப்ளீஸ் இது கோவில்.. அந்த நிஷா இப்போது எப்படி வந்தாளாம்..? நீங்கள் அவளை ஏன் தேடிப் போனீங்களாம்.."
"நானாகப் போகவில்லை.. அவளாக என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்துவிட்டாள்.. நன்றாக டோஸ் கொடுத்து அனுப்பிவிட்டேன்.. வேவு பார்ப்பதை உன்னைப் போன்ற பெண்கள் செய்யக்கூடாதுடி கண்ணம்மா.. அதுதான் கோபித்துக் கொண்டேன்.. சரி வா.. நம் வீட்டுக்குப் போகலாம்.. ரொம்ப நாளாச்சு.. நாம் சேர்ந்து தூங்கி.."
இருவரும் சேர்ந்து பெருமாளை சேவித்தபோது கற்பூர ஒளியில் பெருமாள்.. "எப்புடீ.." என்று கண்சிமிட்டி சிரிப்பதைப் போல இருந்தது.. வைசாலிக்கு.. அவள் நன்றியுடன் பெருமாளை வணங்கினாள்..
அவர்கள் கரம் கோர்த்து நடந்தார்கள்.. பேசிக் கொள்ளவில்லை.. அழகான மௌனம் அவர்களுக்கு இடையே வந்து அமர்ந்தது..

மௌனமான நேரத்தின் அழகுக்கு நிகரேது..?

- முற்றும் -




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம்.. -22
மௌனமான நேரம்.. -22
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy