மௌனமான நேரம். -21

21 " மௌனத்தில் விளையாடும்.. மனச்சாட்சியே.. ஆயிரம் நினைவாகி.. ஆனந்தக் கனவாகி.. காரியம் தவறானால்.. கண்களில் நீராகி...

21


"மௌனத்தில் விளையாடும்..
மனச்சாட்சியே..
ஆயிரம் நினைவாகி..
ஆனந்தக் கனவாகி..
காரியம் தவறானால்..
கண்களில் நீராகி..
மௌனத்தில் விளையாடும்..
மனச்சாட்சியே.."

அவளுக்குப் பிடித்த பாடல்தான் அது.. என்றும் அதை சாதாரணமாக ரசிப்பவள்.. இன்று குருதி கொட்டும் மனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்..
அவள் செய்த காரியம் தவறோ..? அவனிடம் அப்படி ஒரு வாக்குறுதியை அவள் கொடுத்திருக்கக் கூடாதோ..?
மாற்ற முடியாதது திருமண பந்தம்.. இது என் வீடு இவன்தான் என் கணவன், இது என் பிள்ளை.. இவர்கள் என் மாமனார்.. மாமியார்.. இவள் என் நாத்தனார்..
இப்படி வாழ்ந்த வாழ்க்கையை விட்டுக் கொடுத்து இனி இவர்கள் யாரோ.. அவள் யாரோ என்று எப்படி அவளால் போக முடியும்..?
கண்களில் வழியும் கண்ணீரோடு அசையாமல் உட்கார்ந்திருந்தவள்.. அறைக்குள் புயல் வேகத்துடன் வந்த கௌசிக்கை கவனிக்கவில்லை..
அவன் வந்த வேகத்தில் அறைக்குள் இருந்த டீப்பாயை காலால் ஓங்கி உதைத்தான்.. அது பெரும் சப்தத்துடன் மூலையில் போய் கவிழ்ந்தது.. அந்த சப்தத்தில் எழுந்து கொண்ட அபிஷேக்.. அழ ஆரம்பித்தான்..
அவசரமாய் எழுந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டாள் வைசாலி.. அதை சமாதானப்படுத்தியபடி அவனை வெறுமையாகப் பார்த்தாள்.. அந்தப் பார்வையில் எதைக் கண்டானோ.. ஒரு நொடி அவன் அசையாமல் நின்றான் பின்னர்..
"நேற்று நைட் என்னடி நடந்தது.." என்று கேட்டான்..
வைசாலிக்குப் புரிந்துவிட்டது.. நிஷாவின் போனை அவள் எடுத்துக் கேட்டுவிட்டாள்.. அதுதான் இப்படி கோபமாய் ஆடுகிறான்..
அவள் முகச் சுளிப்புடன் திரும்பிக் கொண்டாள்.. அதைக் கண்ட கௌசிக்கின் முகம் கருத்து விட்டது..
"உன்கிட்டதாண்டி கேட்கிறேன்.."
"....."
"நேற்று நைட் நிஷா போன் பண்ணியிருந்தாளா..?"
"....."
"அடுத்தவர்களின் போனை அட்டெண்ட் பண்ணுவது இன்டீஸன்டான விசயம்.. அதை நீ செய்கிறாயே.. ஆர் யூ அஷேம் ஏபௌட் இட்..?"
"....."
"நிஷா கேட்கிறாள்.. ஏன் என் போனுக்கு பதில் சொல்லலைன்னு.. எனக்கு எப்படியிருந்தது தெரியுமா..?"
"....."
"தெரிந்துதானேடி வந்தாய்..? அவள் என் வாழ்க்கையில் இருந்தது உனக்குத் தெரியும்தானே.. அப்போ என்னவோ பெரிய இவளைப் போல டயலாக் பேசினாயே.. நான் விட்டுக் கொடுத்துவிடுகிறேன் உங்களின் வாழ்க்கையில் குறுக்கே நிற்காமல் விலகி விடுகிறேன்னு டயலாக் பேசினாயே.. இதுதான் நீ விட்டுக் கொடுக்கிற லட்சணமா..?"
"....."
"இனியொரு முறை இப்படி நடக்கக் கூடாது சொல்லிட்டேன்.."
அவன் போனதும்.. அறைக்குள் புயலுக்குப் பின் தோன்றும் அமைதி தோன்றியது..
வைசாலி மௌனமாக அறை மூலையில் கிடந்த டீப்பாயை நிமிர்த்தி வைத்தாள்.. செல்போனை கையில் எடுத்தாள்..
"ஜென்னி.. வைசாலி பேசறேன்.. ம்ம்.. நான் நன்றாக இல்லை.. என்னவா..? நிறைய நடந்து விட்டது.. எனக்கு ஒரு வேலை வேண்டும்.. நானே வேலை கொடுப்பவளா..? அது அப்போ.. இப்போது நான் தெருவில் நிற்பவள்..
பெரிய வீட்டு மருமகளா..? மேடையில் மகாராணி வேசம் போடுகிறவளைப் போய் நிஜ மகாராணின்னு நினைத்து விட்டாயே.. இதை போனில் சொல்ல முடியாது நேரில் சொல்கிறேன்.. எனக்கு ஒரு வேலையை மட்டும் பார்த்துக் கொடு.. அப்புறம் வீடு வேண்டும்... உன் வீட்டில் தங்கிக்க வா..? என்னுடன் என் குழந்தை இருப்பானே.. இருக்கட்டுமா.. தேங்க்ஸ்.. ஜென்னி.."
மனதில் இருந்த உளைச்சல்கள் மறைந்து.. ஓர்வித நிச்சலனம் பரவியது.. அவளுக்கு தான் உருவாக்கிய கம்பெனியை ஓர் முறை பார்க்க வேண்டும் என்று தோன்றியது..
"அத்தை.. கோவிலுக்குப் போய் விட்டு வந்து விடுகிறேன்.. கொஞ்ச நேரம் அபிஷேக்கை பார்த்துக் கிறீங்களா.."
சியாமளாவிடம் குழந்தையை விட்டுவிட்டு.. காரில் ஏறி அமர்ந்தாள்.. இந்த சுகவாசம் இன்னும் எத்தனை நாள் நிலைக்கும் என்ற விரக்திப் புன்னகை பூத்தபடி.. கம்பெனிக்கு காரை விடச் சொல்லி டிரைவரிடம் கூறினாள்..
"கௌசிக் கம்ப்யூட்டர்ஸ்.."
நியான் எழுத்துக்கள் பளபளத்த கட்டிடத்திற்குள் கார் சென்றபோது அவளது உடலுக்குள் ஒருவிதமான மின்சாரம் பாய்வதைப் போல இருந்தது..
'சென்டிமெண்ட் வேண்டாம் வைசாலி..' அவள் தனக்குள் அறிவுரை சொல்லிக் கொண்டே உள்ளே நடந்தாள்..
"குட்மார்னிங் மேம்.."
எதிர்படும் நபர்கள் எல்லோரும் கையாட்டினார்கள்.. பதிலுக்கு கையாட்டிக் கொண்டே நடந்தபோது.. அவள் மனதில் இருந்த பாசம் கூட சிறிதளவு விலகுவதை அவள் உணர்ந்தாள்..
"ஹாய் அண்ணி.. என்ன சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கறீங்க.." கல்பனா வியப்புடன் சிரித்தாள்..
"ரொம்ப நாளாச்சே.. அதுதான் வந்தேன்.." வைசாலி சோகையாய் புன்னகைத்தாள்..
"அண்ணன் அவருடைய பிரண்டோட பேசிக்கிட்டு இருக்கார்.. போங்க.. காபியோட வரேன்.." கல்பனா போய் விட்டாள்..
கௌசிக்கின் அறைக்குள் நுழைந்த வைசாலி திடுக்கிட்டு பின் வாங்கினாள்.. அங்கே கௌசிக்கின் சுழல் நாற்காலியில் அமர்ந்து சுழன்று திரும்பியது கௌசிக் இல்லை.. நிஷா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம். -21
மௌனமான நேரம். -21
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy