மௌனமான நேரம்.. -20

20 தொலைக்காட்சியின் எல்லா சேனல்களிலும் மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன.. எல்லா மெகா சீரியல்களிலும் இரண்டு பொண்டாட்டிகள் கட்ட...

20

தொலைக்காட்சியின் எல்லா சேனல்களிலும் மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன.. எல்லா மெகா சீரியல்களிலும் இரண்டு பொண்டாட்டிகள் கட்டாயமாக இருக்கின்றனர்..
இது ஒரு மாற்ற முடியாத மெகாசீரியல் கலாச்சாரமாகி விட்டது.. என்று நினைத்துக் கொண்டாள் வைசாலி..
இது ஒருவகையான பிரச்சாரம்.. மீண்டும் மீண்டும் அதை பார்ப்பவர்களின் மனதில் இது இயல்பான ஒன்று என்ற எண்ணத்தை நாளடைவில் ஏற்படுத்தக்கூடிய பிரச்சாரம்.. பலதாரம் என்பது தவறானதல்ல என்று மறைமுகமாக மக்களின் மூளையில் திணிக்கும் கெட்டிக்காரத்தனமான பிரச்சாரம்..
அவற்றை திரையில் பார்க்கும்போதே.. ஒருவிதமான மன அவஸ்தைக்கு ஆளாவாள் வைசாலி..
'அது எப்படி.. ஒருத்தியின் கண் முன்னாலேயே.. இன்னொருத்தியுடன்.. அவளுடைய கணவனால் குடும்பம் நடத்த முடிகிறது..'
இந்த நிலை என்றாவது ஒருநாள் தனக்கு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வந்தவளுக்கு.. இன்று நிஜமாகவே அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடும் அபாயம் வந்துவிட்டது..
'நடந்தது நடந்து போச்சு.. வைசாலி ஒரு பிள்ளைக்கு தாயாகிட்டா.. அவளையும் வெளியே போகச் சொல்ல முடியாது.. நிஷாவை என்பிள்ளை வருசக் கணக்காய் லவ் பண்ணுகிறான்.. அவளையும் உள்ளே வராதேன்னு சொல்ல முடியாது.. அதனால்.. இரண்டு பேரும் ஒற்றுமையாய் ஒரே வீட்டில் இருந்துவிட வேண்டியதுதானே..'
சியாமளா இப்படிச் சொல்லிவிட்டாள் என்ன செய்வது..?
ஒரே வீட்டில் ஒற்றுமையாய் குடும்பம் நடத்த அண்ணன் தம்பியால் முடியும்.. ஒரே கணவனை மணந்து கொண்ட இரு மனைவியரால் எப்படி முடியும்..? அவர்கள் கணவனை எப்படி பகிர்ந்து கொள்வார்கள்..?
யோசிக்கும்போதே வைசாலிக்கு குமட்டிக் கொண்டு வந்தது.. எதுவாக இருந்தாலும் கௌசிக்கிடம் பேசிவிட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்..
எதுவாக இருந்தாலும்..!
அன்று இரவு அவள் தூங்கவில்லை.. நள்ளிரவைத் தாண்டிய வேளையில் ஜன்னல் கம்பியை இறுக்கிப் பிடித்தாள்.. அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.. வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தன..
கௌசிக்கின் கார் வரும் ஓசை கேட்டது.. வருகிறவன் அவளுக்குத் தாலி கட்டிய கணவன்.. அவளுடைய குழந்தைக்கு தகப்பன் என்ற விவரம் அவளுக்கு மறந்துவிட்டது.. என்னவோ.. அறியாத ஒருவனின் வரவுக்காக காத்திருப்பதைப் போல அவளது நெஞ்சம் பதைத்தது..
அறைக்குள் அவன் வருவதற்காக காத்திருந்தாள்.. அழுத்தமான காலடியோசை கேட்டது.. அறை வாசலை சமீபித்தது.. அவன் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.. தூங்காமல் நின்று கொண்டிருந்த வளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.. ஏன் தூங்க வில்லையென்று கேட்பானென்று எதிர்பார்த்தாள்.. அவன் கேட்கவில்லை.. மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துவிட்டான்..
வைசாலிக்குள் துக்கம் பொங்கியது.. கதறியழ வேண்டும் போன்ற தனிமையை அவள் உணர்ந்தாள்.. உதட்டைக் கடித்து அடக்கிக் கொண்டாள்..
'இதை எதிர்பார்த்தேன் தானே..' தனக்குள் சொல்லிக் கொண்டாள்..
'என்றாவது ஒருநாள் நிஷா வந்தால் நான் வெளியே போய் விடுகிறேன் என்று நான் வாக்கு கொடுத்தேன் தானே.. அவனுடைய உளறல் எல்லாம்.. இளமையின் வேகத்தில் வந்தது.. என் மேலிருந்த காதலில் வந்த தில்லையே.. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது..?'
என்னதான் ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் குளியலறைக்குள் இருந்து வெளிப்பட்டவன் பார்த்த போது.. அவளுக்குள் ஏதோ பொங்கியது.. அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவளால் முடியவில்லை..
அவன் அவளைப் பார்க்கக்கூட இல்லை.. தொட்டிலின் அருகே போய் மகனைப் பார்த்தான்.. கட்டிலில் படுத்து விட்டான்..
இனியும் பொறுமை காத்தால்.. அவள் தூங்கி விடுவான் என்று தோன்ற அவள் அவசரமாகப் பேசினாள்..
"கௌசிக்.."
"ம்ம்ம்.."
"உங்களுடன் பேசனும்.."
"ஐ ஆம் ஸோ டயர்டு.."
"இது முக்கியமான விசயம்.."
"என் டயர்ட்னெஸ் அதைவிட முக்கியமான விசயம்.."
அவன் தூங்க ஆரம்பித்துவிட்டான்.. வைசாலி செய்வதறியாது திகைத்து நின்றாள்.. இப்படியே போனால் நிச்சயம் தனக்கு பைத்தியம் பிடித்து விடும் என்று நினைத்தபடி தலையைப் பிடித்துக் கொண்டாள்..
அவள் யோசனையுடன் அமர்ந்திருந்தபோது.. அவனது செல்போன் ஒலித்தது.. அவனைப் பார்த்தாள்.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. போனைப் பார்த்தாள்.. 'நிஷா அழைக்கிறாள்..' என்றது போனில் மின்னிய எழுத்துக்கள்..
சட்டென்று ஒன்று தோன்ற அவசரமாகப் போனை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தபடி பால்கனிக்கு போனாள்..
"ஹாய் கௌசிக்.. பத்திரமாய் வீடு போய் சேர்ந்துட்டியா.." என்று மறுமுனையில் நிஷா கேட்டாள்..
பதட்டத்துடன் போனை அணைத்துவிட்டாள்.. அவளது உடல் நடுங்கியது.. ஆக இவன் நிஷாவுடன் தான் தினமும் பொழுதைக் கழித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான்.. எப்படி அவளை மீண்டும் சந்தித்தான்..? அன்று தோளைக் குலுக்கியபடி அலட்சியமாக போன நிஷா.. திரும்பவும் எப்படி அவனுடன் பேசினாள்..
அன்றே கல்பனா சொன்னாளே..
"அண்ணன் அப்படியொன்றும் ஆபீஸில் உட்கார்ந் திருப்பது இல்லை அண்ணி.. வெளியிலேயே அலைகிறான்.."
எங்க அலைகிறான் என்று இப்போதுதானே தெரிகிறது.. வைசாலி.. விடிய விடிய தூங்காமல்
நடை பழகிக் கொண்டிருந்தாள்.. அதிகாலையில் எழுந்து கௌசிக் அவளை கட்டிலில் காணாமல் புருவத்தை உயர்த்தினான்.. அறைக்கதவு தாழிடப் பட்டிருக்கவும்.. அவனது பார்வை அறைக்குள் தேடியலைந்து பால்கனியில் வந்து நின்றது..
"இங்கே என்ன செய்கிற..."
இப்போது அவள் மௌனமானாள்.. அவனுக்கு கோபம் அதிகமாகியது..
"உன்னைத்தாண்டி கேட்கிறேன்.. இங்கே என்ன செய்கிற..?" வைசாலி.. மௌனத்தை தொடர்ந்தாள்..
"பேயாடி நீ..? விடிய விடிய தூங்காமல் பால்கனியில் நடைபழகுறயே.. கொஞ்சமாவது என் பிள்ளையைப் பத்தி நினைச்சுப் பார்த்தியாடி.."
"என் பிள்ளை.." வைசாலிக்கு உடல் குலுங்கியது..
'ஆஹா.. கடைசியில் இங்கே வந்து நின்னுட்டானா..? இது நாள் வரை 'நம் பிள்ளை'யாக இருந்தவன்... நிஷாவைக் கண்டதும் என் பிள்ளையாகிவிட்டானா...
இது என் பிள்ளையை கைப்பற்றும் முயற்சி.. விடமாட்டேன்..'
"என்னடி இந்த முழி முழிக்கிற.."
வைசாலி விசுக்கென்று உள்ளே போய் பிள்ளையைத் தூக்கி தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டாள்.. அவனை அணைத்தபடி விழி மூடிக் கொண்டாள்..
"வைசாலி.." கௌசிக் அவளது தலைமாட்டின் அருகே நின்று அழைத்துப் பார்த்தான்..
அவள் பதில் பேசவில்லை.. மௌனம்.. மௌனம்.. மௌனம்.. வாய் பேசாத அவளின் மௌனத்தை ரசித்தவன் அவன்..
இன்று அந்த மௌனத்தைக் கொண்டு அவள் தன்னைச் சுற்றி வேலி போட்டுக் கொண்டபோது உடைக்கும் வழி தெரியாமல் திகைத்தான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம்.. -20
மௌனமான நேரம்.. -20
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy