மௌனமான நேரம். -16

16 "சிப்பிக்குள்ளே முத்து - அது சிப்பிக்கென்ன சொந்தம்..? தென்னையிலே இளநீர் - அது தென்னைக்கென்ன சொந்தம்..? ஓங்கி வரும் ம...

16


"சிப்பிக்குள்ளே முத்து - அது
சிப்பிக்கென்ன சொந்தம்..?
தென்னையிலே இளநீர் - அது
தென்னைக்கென்ன சொந்தம்..?
ஓங்கி வரும் முல்லை - அது
ஒரு கொடியின் பிள்ளை..
எடுத்துக் கொண்டு போனால் - அது
கொடிக்கு என்ன சொந்தம்..?"
நிறைமாத கர்ப்பிணியாக.. சோபாவில் அமர்ந்திருந்த வைவாலி.. இந்தப் பாட்டைக் கேட்டதும்.. அதிர்ந்து போய் டிவியைப் பார்த்தாள்.. அந்த பாடலின் வரிகள் அவளுக்குள் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தின.. அவள் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது..
"அண்ணி.. என்னாச்சு அண்ணி.."
அப்போதுதான் காலேஜிலிருந்து வீடு திரும்பிய கல்பனா பதறிப் போனவளாக அவளருகே ஓடி வந்தாள்..
"குழந்தை என் குழந்தை.." வைசாலி கதறி அழ ஆரம்பித்து விட்டாள்..
மாடியிலிருந்து தடதடவென்று படிகளில் இறங்கி வேகமாய் அவளருகே வந்த கௌசிக்.. மனைவியின் பார்வை போன திக்கைப் பார்த்தான்.. பாடல் காட்சியைக் கண்டதும்.. அவனது முகம் மாறியது..
"என்னம்மா.. வைசாலி இங்கே என்னைப் பாரு.."
மருமகளின் அருகே அமர்ந்து தேற்ற முயற்சித்துக் கொண்டு இருந்த சியாமளா பரிதவிப்புடன் மகனைப் பார்த்தாள்..
"என்னடா.. இப்படி அழுகிறா..."
"அது ஒன்னமில்லைம்மா.. நீங்க நகருங்க சொல்றேன்.."
"எதுக்கு அழுகிறான்னு தெரியலையேடா.."
"இவ ஒரு லூசும்மா.. நீங்க வேற.. இதுக்கெல்லாம் போயி கவலைப்பட்டுக்கிட்டு.."
அவன் குனிந்து வைசாலியின் இடுப்பில் கை கொடுத்து தூக்கிக் கொண்டான்.. மாடிப்படியில் ஏற ஆரம்பித்தான்..
"கௌசிக்.." சியாமளா கவலையாய் அழைத்தாள்..
"நான் பார்த்துக்கிறேன்ம்மா.." அவன் திரும்பாமல் பதில் அளித்தான்..
அறைக்கதவை காலால் எட்டி உதைத்து திறந்தவன்.. அவளை கட்டிலில் கிடத்திட்டு.. கதவைத் தாழிட்டான்.. அவளருகே அமர்ந்தான்.. விழிகளுக்குள் பார்த்தான்..
"என்னடி..?"
"குழந்தை.. என் குழந்தை.."
"உன் குழந்தைதான்.. யாரு இல்லைன்னா..?"
"அது எனக்குத்தான் சொந்தம்.."
"நமக்குச் சொந்தம்.."
"இல்லை.. என் குழந்தை.. எனக்குத்தான் சொந்தம்.. நான்தானே பத்து மாதம் சுமக்கிறேன்..? கௌசிக்.. ப்ளீஸ் கௌசிக்.. நிஷா வந்தவுடன் என் குழந்தையைப் பிடுங்கி அவகிட்ட கொடுத்துராதீங்க.. என் குழந்தையை என் கூட நான் கூப்பிட்டுக் கொண்டு போக அலவ் பண்ணுங்க கௌசிக்.."
"நினைச்சேண்டி.. அந்தப் பாட்டைப் பார்த்த போதே நினைச்சேன்.. இப்படித்தான் எதையாவது யோசித்து வைப்பாய்ன்னு நினைத்தேன்.. ஏண்டி எப்படியெப்படி யெல்லாம் உன்னை வேதனைப்படுத்திக் கொள்ளனும்னு ரூமுக்குள் உட்கார்ந்து யோசித்துக்கிட்டே இருப்பியா.."
"கௌசிக் ப்ளீஸ் கௌசிக்.."
"என்னத்தை சொல்லப்போற.. உன் குழந்தை உனக்குத்தான் சொந்தம்ன்னு சொல்லப் போற.. அதுதானே.."
"ஆமாம்.."
"இங்கே வா.."
அவன் கைகளை விரித்துக்கொள்ள அவள் அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.. அவளது முதுகைத் தடவிக் கொடுத்தபடி அவன் அவளது காதோரமாக பேசிக் கொண்டே இருந்தான்..
"உன்னை எனக்குப் பிடிக்கும் வைசாலி.."
"ம்ம்ம்.."
"உன் காதல் பிடிக்கும்.."
"ம்ம்ம்.."
"உன்னை விருப்பத்தோடு தான் தொட்டேன்.."
"ம்ம்ம்.."
"உன் வயிற்றில் இருக்கும் நம் குழந்தையை உன்னை விட்டு பிரிக்கவே மாட்டேன்.. போதுமா.."
"ம்ம்..."
"அலட்டிக்கொள்ளாதேம்மா.. இந்த நிலையில் அலடிக்கலாமா.."
"ம்ம்..."
வைசாலி மெல்ல மெல்ல அந்த பயத்திலிருந்து விடுபட்டு.. அப்படியே அவன் மார்பில் தலைவைத்து உறங்கிவிட்டாள்..
உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கள்ளம், கபடம் இல்லாத பிள்ளை முகத்தைப் பார்த்து கொண்டிருந்த கௌசிக்கின் மனதில் துயரம் மண்டியது..
"இன்னும் ஒருவாரத்திற்குள் குழந்தை பிறந்து விடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கிறாங்க.. இவ இப்படி தைரியமில்லாமல் இருக்காளே.."
மனைவி எப்படி பிரசவத்தை எதிர்கொள்வாள் என்று அவன் அதிகமாக கவலைப்பட்டான்.. அவன் கவலைக்கு காரணம் இருந்தது..
வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்குப் போனவள் அடுத்த நாளே திரும்பி வந்துவிட்டாள்..
"என்னம்மா.." அன்று ஆச்சரியப்பட்ட சியாமளாவிடம்..
"உங்கள் மகன்தான் வரச் சொன்னார் அத்தை.. அவருக்கு என்னை டெலிவரிக்காக அம்மா வீட்டுக்கு அனுப்புவதில் இஷ்டமில்லையாம்.." என்று கதை பிணைந்தாள்..
இந்த திரைக்கதை வசனம் எதற்காக என்ற யோசனையுடன் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கௌசிக்கிடம்..
"என்னடா.." என்று வினவினாள் சியாமளா..
"நான் என்னத்தை சொல்லம்மா..?" என்று உண்மையாகச் சொன்னவன்..
"ஏய்ய்.. ரூமுக்கு வாடி.." என்று மனைவியை அழைத்துக் கொண்டு போய் விசாரித்தான்..
"என்னடி விசயம்..?"
அதற்கு அவள் சொன்ன பதிலைக் கேட்ட கௌசிக்கிற்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை..
அவன் அழமாட்டாத குழந்தையாய் மனைவியை வெறித்துப் பார்த்தான்..
"பிரசவம்ங்கிறது பெண்களுக்கு மறுபிறப்பாமே.."
"இதை யாருடி உனக்குச் சொன்னது.."
"காமுப் பாட்டி.."
"அந்தப் பாட்டியை எங்கேயிருந்து பிடிச்சே..?"
"எங்கேயும் பிடிக்கலை.. அது எங்க பக்கத்துவீட்டுப் பாட்டி.."
"பாட்டின்னா.. வைத்தியம் தான் சொல்வாங்க.. இப்படி பேதியைக் கரைச்சு ஊற்றுவாங்களா.."
"அது என்னவோ எனக்குத் தெரியாது.. நான் இருக்கும் காலம் வரைக்கும் உங்கள் பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படறேன்.."
இதைச் சொன்னவளை கனிவுடன் பார்த்தான் கௌசிக்.. எப்போதும் போல.. அப்போதும் அவளது காதல் அவனை ஈர்த்தது.. பிரதிபலனை எதிர்பார்க்காத அவளின் அன்பு அவனை அலைக்கழித்தது.. அவளின் துன்பம் கண்டு.. அவன் மனம் துயரம் கொண்டது.
அன்று முழுவதும் கம்பெனியை மறந்துவிட்டு.. அவளருகே அமர்ந்து பிரசவத்தை பற்றி பாடம் நடத்தினான் கௌசிக்..
"அந்தக் காலத்தில் பிரசவம் வீட்டிலேயே நடக்கும் வைசாலி.."
"அப்படியா..?"
"என்ன அப்படியா..? இல்லாததையும், பொல்லாத தையும் சொன்ன அந்த காமுப்பாட்டி.. இதைச் சொல்லலையா..?"
"பாட்டியைத் திட்டாதீங்க.."
"அதைச் சொல்லு.. உன்னைத்தான் திட்டனும்.. பாட்டியை ஏன் திட்டனும்.. எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கியே.."
"பார்த்தீங்களா.. உங்களுக்கு நிஷாவின் ஞாபகம் வந்து விட்டது.."
அவனுக்கு கோபம் வந்துவிட்டது.. அவளை உஷ்ணமாக பார்த்தான்.. அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்..
"எதுக்கு அப்படிப் பார்க்கறீங்களாம்.."
"நிச்சயம்.. ஆசையாய் பார்க்கவில்லை.. போதுமா.."
"அதுதான் எனக்குத் தெரியுமே.."
"அறைந்து பல்லைக் கழட்டி விடுவேன்.. பிள்ளைத் தாய்ச்சிப் பெண்ணாச்சேன்னு பார்க்கறேன்.."
"எதுக்கு இப்படி கோவிச்சுக்கறீங்க..?"
"லுக் வைசாலி.. நீ இன்ஜினியரிங் படித்தவள்.. டெலிவரியைப் பற்றி இப்படி அபத்தமாக எதையும் யோசிக்கக் கூடாது.. ஆர் யு எ சைல்ட்..?"
"அதில்லை கௌசிக்.."
"விளக்கம் வேண்டாம்.. சொன்னதைக் கேளு.."
"ம்ம்ம்.."
"நீ டெலிவரிக்காக.. உன் அம்மா வீட்டுக்கு போகணும்னு ஒன்னும் அவசியமில்லை.. நம் வீட்டிலேயே என் கூடவே இருக்கலாம்.. ஆனால் அமைதியாய் இருக்கனும்.. மனதை அலைபாய விடக்கூடாது.."
"ம்ம்ம்.."
"குட் கேர்ள்.."
அவன் அவளுடைய கன்னத்தில் தட்டிவிட்டு பாடம் முடிந்துவிட்ட நிம்மதியுடன் எழுந்துகொள்ளப்போன போது அவள்..
"கௌசிக்.." என்று அழைத்தாள்..
அவளது அழைப்பைக் கேட்டதும்.. அவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.. இப்போது என்னத்தை சொல்லப் போகிறாளோ..?
"என்னடி.." என்று பயத்துடன் கேட்டான்..
"எப்படியும் நான் உங்களை விட்டுப் போய்த்தானே ஆக வேண்டும்..? கூடவே இருக்க முடியாதே.. நிஷா வந்து விடுவாளே.."
"வைசாலி.."
அவன் கையெடுத்து கும்பிட்டே விட்டான்.
"நிஷாவை மற.. வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி மட்டும் நினை.. என் மேல் உண்மையிலேயே உனக்கு காதல் இருந்தால் கருணை காட்டு.. இப்படி அழிச்சாட்டியம் பண்ணி என்னை அலைக்கழிக்காதே.."
அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்திருக்க வேண்டும்.. ஆனால் அவள் சிரிக்கவில்லை.. அவளிடம் சமீபகாலமாக சிரிப்பு மறைந்து விட்டதை கௌசிக் உணர்ந்து தான் இருந்தான்.. பழைய வைசாலியாக அவள் இருந்திருந்தால்.. இந்நேரம் வாய் பொத்தி சிரித்திருப்பாள்.. அவள்தான் பழைய வைசாலியாக இல்லையே..
எந்த நேரமும் ஏதேனும் ஓர் ஆழ்ந்த சிந்தனையுடனே இருந்தாள்.. அப்படி அவள் சிந்தித்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டாலே.. கௌசிக்கின் மனதில் கவலை மேகம் சூழ ஆரம்பித்துவிடும்..
என்ன பூதம் கிளம்பப் போகிறதோ..
அவள் கண்ணில் படாமல் அவன் நழுவ முற்படும் போதே அவளது குரல் பின்னாலிருந்து அழைக்கும்..
"கௌசிக்.."
"என்னடி..?" அவன் அழமாட்டாத குறையாய் வினவுவான்,
"நேற்று நீங்க லேட்டா வந்தீங்களே.. யாரைத் தேடிக்கிட்டு போயிருந்தீங்க.."
"ஏன்டி.. இது உனக்கே நல்லாயிருக்கா..? லேட்டா வந்தால் என்ன வேலைன்னு கேட்பியா.. அதை விட்டுட்டு யாரைத் தேடிட்டு போனேன்னு கேட்கிற.. இது நல்லாயில்லை வைசாலி.."
"இல்லை.. ஒருவேளை நிஷாவைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்துப் போயிருந்தீங்களோன்னு கேட்டேன்.."
"இவள் தூக்கத்தில் கூட அந்த நிஷாவை மறக்க மாட்டாள் போல.."
அவனுக்கு சலிப்பு ஏற்பட்டது.. இப்படியொரு நிலை உருவாகும் என்று அவன் நினைத்துக் கூட பர்க்கவில்லை..
கோபமாக பேசலாம் என்று பார்த்தால் அவள் மிரள மிரள விழித்தாள்.. அவனுக்குப் பாவமாகப் போய்விட்டது..
"கம்ப்யூட்டருக்குள் வைரஸ் வந்துவிட்டதுடி.. புராஜெக்ட் முடியனும்.. அதனால் அதோடு மல்லுக்கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.. லேட்டாயிடுச்சு.. போதுமா.."
அவளுக்குத்தான் எந்த விளக்கமும் போதாதே..

வீட்டின் முன் ஹாலில் ஹோமம் வளர்க்கப் பட்டிருந்தது.. அய்யர்கள் மந்திரங்கள் ஓதிக் கொண்டிருந் தார்கள்.. ஹோமத்தின் முன்னால்.. பட்டு வேட்டி கட்டி வெற்று மார்புடன் கௌசிக் அமர்ந்திருந்தான்.. அவனருகே தழையத் தழைய பட்டுப் புடவை கட்டி திருட்டுத்தனமாக கணவனின் மேனியழகை ரசித்தபடி மடியில் குழந்தையோடு வைசாலி அமர்ந்திருந்தாள்..
'ராஸ்கல்.. என்னமாய் அழகாய் இருந்து தொலைக்கிறான்..'
மனைவியின் கள்ளப் பார்வையை.. கண்டும் காணாதவனாக கௌசிக் அய்யர் கூறிய மந்திரங்களை செவிமடுத்துக் கொண்டிருந்தான்.. அவன் உதடுகளில் ரகசியப் புன்னகை தவழ்ந்தது..
'சைக்கிள் கேப்பில் சைட் அடிக்கிறா.. அப்படி என்கிட்ட என்னத்தை கண்டுவிட்டாள்னு இப்படி பருகுவதைப் போல பார்த்து வைக்கிறா..'
மகளையும் மாப்பிள்ளையையும் கண் குளிர ரசித்தபடி நரசிம்மன் சுப்பிரமணியன் அருகில் அமர்ந்திருந்தார்.. சியாமளாவிற்கு உதவியாக ஜானகி குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்..
இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்குப் போக ஆரம்பித்திருந்த வைசாலியின் தம்பி சைட் அடிப்பதை உணராதவள் போல.. அவ்வப்போது பதில் பார்வையை அவன் பக்கம் வீசியபடி... அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு.. வைசாலியின் தங்கை ஷாலினியிடம் பேசிக் கொண்டிருந்தாள் கல்பனா..
இவர்கள் அனைவரையும் தொட்டில் போட்டு பெயர் சூட்டும் விழாவில் ஒன்று சேர வைத்திருந்த கௌசிக்கின் மகன் வாயில் விரலை சுவைத்துக் கொண்டு.. தாயின் மடியிலிருந்து கொண்டே.. பிஞ்சுக் கால்களால்.. தந்தையை உதைத்துக் கொண்டிருந்தான்..
"உதைக்கிறாயா.. படவா.."
ஒருமாதமே ஆன மகனைப் பார்த்து பெருமையுடன் சிரித்துக் கொண்டான் கௌசிக்..
"குழந்தையோட பெயரை நெல்லில் எழுதுங்கோ.."
"சொல்லு கௌசிக் என்ன பெயர் வைக்கலாம்ன்னு நினைச்சிருக்க.. நீயும்.. வைசாலியும் டிசைட் பண்ணியிருப்பீங்க இல்லையா.." சுப்பிரமணி வினவினார்..
"என்ன சம்பந்தி இது.. நீங்களும்.. தங்கையும்.. எந்தப் பெயரையும் யோசிக்கலையா...?" நரசிம்மன் வியப்புடன் கேட்டார்..
"அது சரி வராதுங்க.. என் மகனுக்கு கௌசிக்குன்னு நான் பெயர் செலக்ட் பண்ணி வைக்கலாம்.. ஆனால்.. கௌசிக்கின் மகனுக்கு அவன்தான் பெயர் செலக்ட் பண்ணி வைக்கனும்.. அதுதான் முறை.."
சுப்பிரமணி.. வீட்டிலும் தான் ஒரு நீதிபதி என்பதை நிரூபித்தார்..
"சொல்லுடி.. என்ன பெயர் வைக்கலாம்.." கௌசிக் சன்னக்குரலில் வைசாலியிடம் வினவினான்..
"ஏன் நீங்க பெயர் செலக்ட் பண்ணலையா..?" அவள் அதே போல மெதுவான குரலில் பதிலளித்தாள்..
"தேவையாடி எனக்கு..? நான் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வேன்.. நீ எதையாவது நினைத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விடுவாய்.. பத்துமாதமாக  நீ பாடாய் படுத்தியது போதாதா.. ஆளை விடுதாயே.. நீயே ஏதாவது ஒரு பெயரைச் சொல்லு.."
அவன் வெற்றிகரமாக பின் வாங்கிக் கொள்ள... அவள் மெதுவான குரலில் அவனிடம் தான் தேர்வு செய்து வைத்திருந்த பெயரைச் சொன்னாள்.. அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது..
"ஏண்டி.. என்னை ஒரு வழி பண்ணியே தீருவதுங்கிற முடிவோடு நீ இருக்கிறாயா.."
"ஏனாம்.."
"ஏனா..? ஒன்றும் தெரியாதவள் போல கேட்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.. உன்னை அடித்துப் பல்லைக் கழட்டினால்தான் என் மனம் ஆறும்.. பெயரா வைக்கிற..? பெயர்..! ஏண்டி.. தினமும் என்னை வம்புக்கு இழுத்தால் தான் உனக்குத் தூக்கம் வருமா..?"
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்.. குட்டிப் பையனுக்கு 'நிஷாந்த்'ன்னு பெயர் வைக்கலாம்ன்னு சொன்னேன்.. அது தப்பா..?"
அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்ததை மந்திரம் சொல்ல மறந்துவிட்டு அய்யர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க..
"என்ன கௌசிக்.. பெயரை செலக்ட் பண்ணி விட்டாயா..?" என்று கேட்டார் சுப்பிரமணி..
"ம்ம்.. செல்க்ட் பண்ணிட்டோம்ப்பா.."
"என்ன பெயர் கௌசிக்.."
"அபிஷேக்.."
மனைவியை முறைத்துக்கொண்டே பதில் சொன்னான் கௌசிக்..
"நல்ல பெயர்டா.."
"அருமையான பெயர் மாப்பிள்ளை.."
"வாவ்.. சூப்பர் நேம் அண்ணா.."
"கௌசிக்.. அபிஷேக் பொருத்தமாய் பெயர் வைத்திருக்கீங்க அத்தான்.."
"நைஸ் நேம் அத்தான்.."
எல்லோரும் பாராட்ட வைசாலி மட்டும் உம்மென்று இருந்தாள்..
"என்னடி.. இதுக்கு என்ன சொல்லலாம்ன்னு ரூமில் உட்காரமலேயே யோசித்துக் கொண்டிருக்கிறாயா.."
"அபிஷேக்குன்னு யாரை நினைத்துக் கொண்டு பெயரை வைத்தீங்க.."
"அதுதான பார்த்தேன்.. அடி அறிவுக் கொழுந்தே.. உன் தங்கை எவ்வளவு கரெக்டா கண்டு பிடித்தாள்.."
"என்னத்தை கண்டு பிடித்தாள்.."
"கௌசிக்கின் மகன்.. அபிஷேக்குன்னு கண்டு பிடித்தாள்.."
"அதற்கென்ன இப்ப..?"
"நீ அவளுக்கு அக்காதானே.. அவளோட அறிவில் பாதியாவது உனக்கு இருக்கனுமா.. இல்லையா.."
"இப்ப எதுக்கு அவளை சைட் அடிக்கறீங்க..?"
"சைட் அடிக்கிறேனா..? அடிப்பாவி உன்னைத் தவிர ஊரில் இருக்கிற பெண்களையெல்லாம்.. என்னோடு சேர்த்து வைத்தே நினை.. நீ மட்டும் தள்ளித் தள்ளி உட்காரு.. எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கியே.."
அவனுக்கென்று வாய்த்த வைசாலி.. தாய்மையான பூரிப்போடு கொள்ளை அழகாய் இருந்தாள்.. அவளை தாகத்துடன் பார்த்த கௌசிக்.. வெகு நாள்களுக்கு பின்னால் அன்றைய இரவில் அவளை நாடினான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம். -16
மௌனமான நேரம். -16
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy