மௌனமான நேரம். -15

15 "டயர்டாக இருக்கிறாய்.. வீட்டுக்குப் போ.." கௌசிக் கண்டிப்பான குரலில் கூறினான்.. "ஐ கேன் டாலரேட்... இந்த புராஜெக்ட் வொர்...

15

"டயர்டாக இருக்கிறாய்.. வீட்டுக்குப் போ.." கௌசிக் கண்டிப்பான குரலில் கூறினான்..
"ஐ கேன் டாலரேட்... இந்த புராஜெக்ட் வொர்க்.. இன்னும் இரண்டு நாளில் முடிந்தாக வேண்டும் கௌசிக்.." வைசாலி கம்ப்யூட்டர் திரையில் இருந்து விழிகளை அகற்றாமல் பேசினாள்..
"அது என் வேலை.. நீ வீட்டுக்குப் போ.."
"ஐ ஆம் ஆல்ரைட்.."
"நோ.. இதுவரை நீ பத்து தடவையாவது வாமிட் பண்ணிட்ட.. போதாத குறைக்கு.. கம்ப்யூட்டரக் கட்டிப் பிடித்துக் கொண்டு மயக்கம் வேறு போடுற.. வீட்டுக்குப் போ.."
"இந்த மாதிரி சமயங்களில்.. வாந்தியும்.. தலை சுற்றலும் வருவது இயற்கைதானாம்.."
"யார் சொன்னது.."
"என் அம்மாவும், உங்க அம்மாவும் சொன்னாங்க.."
"ஓஹோ.. இதைச் சொன்னவங்க.. உன்னை ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லவே இல்லையா.."
"அது.. அது வந்து.."
"கெட் அப்.. கெட் அப்.."
"நான் இங்கேயே இருக்கிறேன் கௌசிக்.."
அவள் மனம் அவனது அருகாமையை நாடியது.. அவன் காட்டும் அக்கறை வாய் வார்த்தையாக இல்லாமல்.. செயலில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது..
அவன் அதை உணர மறுத்தான்.. அவள் நாடியதைத் தராமல் ஒதுங்கிச் சென்றான்..
ஹாஸ்பிடல் வாசலில் காருக்குள் அமர்ந்து வைசாலி பேசியதை கேட்டபின்பு.. கோபத்துடன் வீட்டுக்கு வந்தவன்.. அதற்கு பின்னால்.. அவளிடமிருந்து விலக ஆரம்பித்தான்..
'குழந்தை பெற்றுக் கொள்வது.. அவனுக்கு பிடிக்க வில்லையோ..'
அவள் தவித்தாள்.. அவனது பாராமுகம் கண்டு மனம் சோர்ந்தாள்.. ஒரு பார்வை அவன் பார்க்க ஏங்கினாள்..
அவனுக்கு அவளது தவிப்புத் தெரியும்.. தெரிந்தும் அவளைப் புறக்கணித்தான்.. மற்றவர்களின் முன்னால் பேசுகிறவன்.. தனியறையில் அவளுடன் பேசுவதை தவிர்த்தான்.. வைசாலி.. அங்கு இருப்பதையே உணராதவன் போல.. அவள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்து விடுவான்..
வைசாலி அவனுடைய புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள்.. அவளிருப்பதையே மறந்தவனாக அவன் கம்பெனிக்கு கிளம்பிப்போய் விட.. பின்னாலேயே விரைந்தாள்..
'ஏன் வந்தாய்..?' என்பது போல அவன் புருவம் உயர்வதை கண்டு கொள்ளாதவளாய் அவள் வேலையில் மூழ்கினாள் அவள் தேவையற்றுப் போனதுபோல ஓர் உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது..
அப்படியாவது இவன் கம்பெனியில் வந்து ஒட்டிக் கொள்ளவேண்டுமா என்று மனம் முரண்டினாலும் கண்ணெதிரே அவனது நடமாட்டத்தைப் பார்ப்பதற்காக வாவது அந்த அலட்சியத்தை சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் வைசாலி...
அன்று அதற்கும் வேட்டு வைத்தான் அவன்..
"உனக்கு முடியலை வைசாலி.. வீட்டுக்கு போ.."
"ப்ளீஸ் கௌசிக்.. ஐ ஆம் ஆல்ரைட்.."
"போன்னு சொன்னால் போய் விடு.."
'எப்படி விரட்டுகிறான்..' அவளுக்கு மனம் வலித்தது..
அதற்கு மேலும் அங்கு உட்கார அவளது சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை..
அவள் எழுந்து கொண்டாள்.. கதவருகே போனவள் திரும்பி கௌசிக்கைப் பார்த்து..
"ஸோ.. உங்களை விட்டு.. என்னைத் தூரமாக துரத்துவதிலேயே குறியாய் இருக்கறீங்க.. குட்.." என்று சொன்னாள்..
வைசாலியை நிமிர்ந்து பார்த்த கௌசிக்கின் கண்கள் தீப்பிழம்பாய் வலித்தன..
"வில் யு ஷட் அப்.. அன்ட் கெட் லாஸ்ட்.."
அவன் இறைந்தான்... அவள் அறைக்கதவை திறக்க முயற்சிக்கும் போது தலை சுற்றல் வந்துவிட தள்ளாடினாள்..
அவசரமாக எழுந்த கௌசிக்.. நான்கே எட்டில் அவளை நெருங்கினான்.. தொய்ந்து விழப்போன வைசாலியை கையில் தாங்கிக் கொண்டான்..
"இதற்குத்தான் படித்துப் படித்து கிளிப் பிள்ளைக்குச் சொல்வதைப் போல சொன்னேன்.. நீ கேட்கவில்லை.."
கடிந்து கொண்டே அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு.. வெளியே வந்தான்..
"வாட்ஸ் த பிராப்ளம் சார்.." கேள்வி கேட்டவர் களிடம்..
"நத்திங்.. ஜஸ்ட்.. மார்னிங் சிக்னஸ்.." என்று கதவைத் திறந்து அவளை அமரவைத்து விட்டு.. சுற்றி வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினான்..
வைசாலிக்கு தலை பாரமாக இருந்தது.. கண்மூடி.. கதவில் தலை சாய்த்தாள்.. ஒரு கையால் காரை ஓட்டியபடி.. மறுகையை நீட்டி.. அவளைத் தன் பக்கம் இழுத்து கொண்டான் கௌசிக்..
"கௌசிக்.." நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அவனை விழி விரிய பார்த்தாள் வைசாலி..
"சாய்ந்து கொள்ள என் தோளிருக்கு வைசாலி.." அவன் கை அவளது கூந்தலை அன்புடன் வருடியது..
"இத்தனை நாளா என்னை பனிஷ் பண்ணிட்டிங்களே.." அவள் விம்மினாள்..
"த்சு.. இந்த நிலையில் அழக்கூடாது.." அவன் சமாதானப் படுத்தினான்..
"ஆனாலும் கௌசிக்.."
"வேண்டாம்.. எதையும் நினைத்து மனதைப் போட்டு உழட்டிக் கொள்ளாதே.. அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல.. எனக்காக வேண்டி நீ பார்க்கலைன்னாலும் குழந்தைக்காக பார்.."
அவன் குரல் கண்டிப்புடன் ஒலித்தது.. அவனது அருகாமை திரும்பவும் கிடைத்துவிட அமைதியுடன் அவள் அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள்..
'சாய்ந்து கொள்ள தோள் கொடுக்கிறாயே.. கடைசி வரை தோள், கொடுப்பாயா..' நினைத்ததை வாய்விட்டுக் கேட்க முடியாமல் அவளது மனம் தேம்பியது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம். -15
மௌனமான நேரம். -15
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy