மௌனமான நேரம்..-13

13 கௌசிக்கின் தாத்தா அவன் பெயருக்கு எழுதி வைத்திருந்த கட்டிடம் சென்னையின் மத்திய பகுதியில் பிரம்மாண்டமாக இருந்தது.. "ஏன் இதில் நீங்...

13

கௌசிக்கின் தாத்தா அவன் பெயருக்கு எழுதி வைத்திருந்த கட்டிடம் சென்னையின் மத்திய பகுதியில் பிரம்மாண்டமாக இருந்தது..
"ஏன் இதில் நீங்களே சொந்தமாக கம்ப்யூட்டர் கம்பெனியை ஆரம்பிக்கக் கூடாது..?"
வைசாலி கேட்டபோது.. அவள் தோள் மேல் கை போட்டு தன்னருகே இழுத்துக் கொண்டான் கௌசிக்.. அவனது அருகாமை தந்த கிளர்ச்சியில் முகம் சிவந்திருந்தவளின்.. நெற்றியில் விரலை வைத்து.. கோடாக.. தொட்டு இறக்கினான்..
"ஆரம்பிக்கலாம்.. அதற்கு பணம் வேண்டாமா..?"
"உங்களிடம் பணம் இல்லையா..?"
"இருக்கு.. என் ஸேவிங்க்ஸ்.. தாத்தா கொடுத்த பணம் இதெல்லாம் சேர்த்தாலும் துண்டுவிழும்.."
"மாமாவிடம் கேட்கலாமே.."
"ஊஹூம்.. தாத்தா அவருடைய சொத்து முழுவதையும் எனக்குக் கொடுத்துவிட்டார்.. கல்பனாவுக்கு என்று எதுவும் வேண்டாமா..? அப்பாவின் கை வறளக் கூடாது.. அது தப்பு.."
வைசாலி ஒரு கணம் யோசித்தாள்.. பின் எழுந்து சென்று அவளின் கைப் பெட்டியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்..
"என்னடி இது..?"
"ம்ம்.. பார்த்தால் தெரியலையா.. நகைகள்.."
"அதை என்கிட்ட ஏண்டி கொடுக்கிற.. எனக்கு நகை போடும் பழக்கமே கிடையாதே.."
"ஜோக்கா..? சிரிப்பு வரவில்லை.. இதை வைத்துக்கங்க.. துண்டு விழுகிற பணத்தை சரி பண்ணுங்க.."
"இது பரம்பரை நகை வைசாலி.."
"விற்க வேண்டாம்.. அடமானம் வைக்கலாமே.."
"அது ரிஸ்க் இல்லையா..?"
"சவாலை சந்திக்காமல் வாழ முடியுமா..? நீங்கள் ரிஸ்க் எடுக்கப் பயப்படுகிற ஆளில்லையே.."
"இருந்தாலும் வைசாலி.. பொண்டாட்டியின் நகைகளை அடமானம் வைத்து தொழில் ஆரம்பிக்க வேண்டுமா..?"
"புருசனுக்கு உதவாத நகை.. பொண்டாட்டிக்கு எதுக்கு..?"
"கெட்டிக்காரிடி நீ.."
"வாங்கிக்கங்க அத்தான்.."
"என்னடி சொன்னே..?"
அந்த வார்த்தையைக் கேட்டால் அவனுக்கு வேகம் வரும் என்பதை அறிந்தே அதைச் சொன்னாள் வைசாலி.. அவன் வேகத்துடன் அவளை ஆக்கிரமித்தான்.. புயலில் சிக்கிய பூங்கொடியாய் அவள் மாறிப்போனாள்.. இவனா வேறு ஒரு பெண்ணைப் பற்றி அவளிடம் பேசியவன் என்று வைசாலியே வியந்து போகும் அளவிற்கு அவன்.. அவளை நாடினான்..
"இந்த நகைகளை வாங்கிக்கனும்னா ஒரு கண்டிசன் இருக்கு.."
"என்னவாம்.."
"நீயும்.. என் கம்பெனியில் பார்ட்னராகனும்.."
வைசாலி பதில் சொல்லாமல் மௌனித்தாள்.. அவனது வாழ்க்கையிலேயே 'பார்ட்னர்' பதவி ஸ்திரமாக இல்லை.. அதில் கம்பெனியில் 'பார்ட்னர்..' ஆகி என்ன செய்ய..?
"என்ன பதில் சொல்ல மாட்டேங்கிற.."
"பார்க்கலாம்.."
"நீ என்னத்தைடி பார்ப்பது..? நான் சொன்னால்.. சொன்னதுதான்.. நீ வேலையை விடுற.. என் கம்பெனியில் பார்ட்னராக பொறுப்பெடுத்துக்கறே.."
'என்ன இது.. இவன் இப்படிச் சொல்கிறானே..' என்று இருந்தது வைசாலிக்கு..
என்றாவது ஒருநாள் அவன் பாட்டுக்கு நிஷாவைக் கையில் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்துநின்று விட்டால்.. வைசாலி பிழைப்புக்கு என்ன செய்வாள்..?
"என்னடி யோசிக்கற.."
"ஒன்னுமில்லை.."
"இதை என்னை நம்பச் சொல்கிறாயா..? ஒன்னு மில்லாததுக்கு நீ யோசிக்க மாட்டாயே.. அதிகம் யோசித்து மண்டையை குடையாமல் அதைவிட்டுவிடு.. உன்னை யோசிக்க விட்டால் ஆபத்து.."
அவன் பேசியதை கேட்டு அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.. அவள் யோசிக்க ஆரம்பித்தாலே.. அவன் அரண்டுதான் போகிறான் என்பதை அவளும் உணர்ந்துதான் இருந்தாள்..
அவளின் யோசிப்பைத் தவிர்க்கத்தான்.. அவன் அவளைத் தொடுவது.. ஆக்ரமிப்பது.. அவளுக்காக இல்லை.. அவளைத் தேடும் தவிப்பிற்காக இல்லை.. அவள் மனதில் இருக்கும் நிம்மதியின்மையைக் குறைப்பதற்காகத்தான் தொடுகிறான்..
எது எப்படி இருந்தாலும். அவன் தொட்ட நிமிடத்தில் அவளது உடலும்.. மனமும் பாகாய் குழைந்து அவனுடன் ஒன்றிப்போய் விடுவதைத்தான் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..
'எனக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கிறதா..' அவளும் தினமும் தன்னைத் திட்டிக் கொண்டுதான் இருக்கிறாள்...
ரோசம் கெட்ட அவளுடைய மனது.. அவனைக் கண்டதும் பறப்பாய் மறப்பதைத்தான் அவளால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை..
'எப்படியோ போ..' என்று அவள் மனதின் போக்கில் அவனுடன் கலந்துவிட்டாள்..
அவனுடன் வாழ்ந்துவிட வேண்டும் என்ற வேட்கை உடல் முழுவதும் பரவிக் கிடக்கின்றபோது.. அவனை விலக்கி வைத்து உடலை வெல்ல அவளால் முடிய வில்லை..
'என் மனமும்.. உடலும் அவனுக்குச் சொந்தம்.. இந்த நிமிடம் அவனுடைய மனமும் உடலும் எனக்குச் சொந்தம்.. நாளை அதை சொந்தம் கொண்டாட நிஷா வந்தால்.. நான் விலகிக் கொள்வேன்.. மீதியிருக்கும் என் வாழ்நாளை அவனது நினைவுகளுடன் வாழ்ந்து முடித்து விடுவேன்..'
அவள் மனம் தினமும் இதைத்தான் உருப்போட்டுக் கொண்டு இருந்து.. கௌசிக் அவளது மனப்போராட்டத்தை உணர்ந்தவனாகவே இல்லை.. அவள் வரைக்கும் அவன் ஒரு ஆசைக் கணவனாகவே நடந்து கொண்டான்.. நிஷாவைப் பற்றிய பேச்சை வைசாலியை தொட்ட நாளில் இருந்து ஒருநாள் கூட அவன் பேசவில்லை..
'எனக்குத் தெரியாமல் அவளைத் தேடிக் கொண்டிருப்பான்..' அதற்கும் அவள் மனதிற்குள் புலம்பினாள்..
கௌசிக் கம்ப்யூட்டர் கம்பெனியை ஆரம்பித்தான்.. வைசாலி அதில் பங்குதாரராக ஆனாள்.. இருவரும் இரவும் பகலும் வேலையில் மூழ்கினார்கள்.. ஒரே வருடத்தில் அவர்களின் கம்பெனி.. நிலை கொண்டு விட்டது..
இந்த வெற்றிக்கு வைசாலியின் உழைப்பும்.. பக்க பலமுகே முக்கிய காரணம் என்பதை கௌசிக் நன்றாக உணர்ந்திருந்தான்.. அதுவே.. அவள்மேல் அவனுக்கு அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம்..-13
மௌனமான நேரம்..-13
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy