மௌனமான நேரம். -12

12 "வைசாலி.." கம்ப்யூட்டரில் கவனமாக இருந்த கௌசிக் அழைத்தான்.. "யெஸ்.. கௌசிக்.." அவன் எதிரே வந்து அமர்ந்தாள் வைசாலி.....

12

"வைசாலி.." கம்ப்யூட்டரில் கவனமாக இருந்த கௌசிக் அழைத்தான்..
"யெஸ்.. கௌசிக்.." அவன் எதிரே வந்து அமர்ந்தாள் வைசாலி..
"புராஜெக்ட் வொர்க் சப்மிட் பண்ண இன்னும் டென் டேஸ்தான் இருக்கு.. நினைவிருக்கில்ல.."
"டோன்ட் வொர்ரி.. அதுக்கு முன்னாலே முடிச்சிடலாம்.."
"நீ செம பாஸ்ட் வைசாலி.. இதுக்குத்தான் நான் அந்த ஐடியாவைச் சொன்னேன்.." என்றான் கௌசிக்..
'எந்த ஐடியா..?' என்று வைசாலி கேட்கவில்லை..
அவளுக்கே கௌசிக் எதைச் சொல்கிறான் என்று தெரியும்..
தேநிலவு முடிந்து அவர்கள் சென்னை திரும்பிய மறு நாள்.. சியாமளா வைசாலியிடம் ஒரு நகைப்பெட்டியை நீட்டினாள்..
"என்னது இது ஆன்.. அத்தை.."
'ஆண்ட்டி..' என்று சொல்லிப் பழகிய வாய் சுலபத்தில் 'அத்தை' என்று அழைக்க மறுத்தது.. ஆனாலும் சியாமளா 'அத்தை' என்றுதான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தாள்.. வைசாலி அவளை 'அத்தை' என்று கவனமாக அழைத்துப் பழகினாள்..
'அம்மாவும்.. மகனும்.. என்னை அவர்களின் வழியில் பழக்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்..'
வைசாலியின் மனம் புழுங்காமல் இல்லை.. ஆனாலும் அவள் மாமியாரின் சொல் பேச்சைக் கேட்டுத்தான் நடந்தாள்..
"இது உன்னைச் சேர வேண்டியது வைசாலி.."
பெட்டியைத் திறந்து பார்த்த வைசாலி திகைத்துப் போனாள்.. வைர நகைகள் ஜொலித்தன.. தங்கத்தைத் தவிர வேறு நகைகளை பார்த்து அறியாத வைசாலி மருட்சியுடன் பெட்டியை மூடிவிட்டாள்..
"இது பரம்பரையாய் வரும் குடும்ப நகைகள்ம்மா.. இந்த வீட்டு மருமகளைச் சேர்ந்தது.. இனி இவை உனக்குச் சொந்தம்.."
வைசாலியின் மனதில் நிஷாவின் நினைவு வந்து உறுத்தியது.. தாலிகட்டிய கணவனே அவளுக்கு சொந்தமில்லை என்று இருக்கும்போது.. இந்த வைர நகைகள் மட்டும் எப்படி அவளுக்கு சொந்தமாகி விடும்..
மனதில் இருப்பதை மாமியாரிடம் சொல்ல முடியாமல் பெட்டியை எடுத்துக்கொண்டு.. மாடிக்குச் சொன்றாள்.. அவர்களின் அறைக்குள் நுழைந்தபோது முன் பக்க அலுவலக அறைக்குள் இருந்த கௌசிக் கம்ப்யூட்டரில் தலையைக் கொடுத்திருந்தான்.. வைசாலி அவனருகே அமர்ந்தாள்.. தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான்..
"என்ன.. மாமியாரும்.. மருமகளும் மாநாடு போட்டு முடிச்சாச்சா..?" என்று கேட்டான்..
'வெறும் பேச்சை வெல்லக்கட்டி போல இனிக்க இனிக்கப் பேசுவதில் இவனை மிஞ்ச ஆளில்லை..' என்ற நினைவுடன் அவள் பெட்டியை அவனிடம் நீட்டினாள்..
"இது உன்னுடைய புராபர்டி.. இதை என்னிடம் ஏன் கொடுக்கிற..?" அவன் மீண்டும் கம்ப்யூட்டரில் கவனமானான்..
"இந்த பெட்டியில் என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா..?" மனம் குறுகுறுக்க அவள் வினவினாள்..
"தெரியுமே.. டைமன்ட் ஜூவல்ஸ்.."
"இது இந்த வீட்டின் மருமகளுக்கு சேரவேண்டியது கௌசிக்.."
"அதனால்தானே உன்னிடம் கொடுத்திருக்காங்க.."
"கௌசிக் ப்ளீஸ்.. இதை நான் சொந்தம் கொண்டாட முடியாது.." வைசாலி கண்டிப்பான குரலில் சொன்னாள்..
"வொய்..?" அவன் புரியாமல் பார்த்தான்..
'இவனுக்கு எப்படி புரிய வைப்பேன்..' வைசாலி நீண்ட நாள்களுக்குப் பிறகு கண் கலங்கினாள்..
அதைக்கண்ட கௌசிக் கம்ப்யூட்டரை 'அம்போ..' என்று விட்டு விட்டு எழுந்துவிட்டான்..
"ஹேய் வைசாலி.. வாட் ஹேப்பண்ட்..?"
"வேண்டாம் கௌசிக்.. இனியும் இந்த விளையாட்டு வேண்டாம்.. என்னால் தாங்க முடியவில்லை.."
"என்னன்னு சொல்லிட்டு அழு.."
"இந்த வீட்டில் நான் யார் கௌசிக்..?"
கண்ணீர் வழியும் முகத்துடன் கௌசிக்கை துளைப்பது போல பார்த்துக் கொண்டே வைசாலி கேட்டாள்..
"என் வொய்ப்.. என் பேரண்ட்ஸிற்கு மருமகள்.. என் தங்கைக்கு பிரியமான அண்ணி.."
"ம்ச்சு.. இந்த உறவுகள் எல்லாம் பெயரளவில் தானே கௌசிக்..?"
"உளராதே.."
"நானா உளருகிறேன்..? வெறும் சீட்டுக்கட்டு மாளிகையில் குடியிருக்கிறேன் கௌசிக்.. எந்த நேரம் இந்தக் கோட்டை சரிந்து விடுமோ என்ற பயத்துடன்.. ஒவ்வொரு வினாடியையும் நகர்த்துகிறேன்.."
வைசாலி இப்போது உடைந்த போய் அழுதாள்.. அதுவரை அவளை ஒரு தோழி என்ற ஸ்தானத்தில் தள்ளி வைத்திருந்த கௌசிக் அரண்டு போனான்.. அவளது கண்ணீரைத் தாங்க முடியாதவனாக அவளது கைபிடித்தான்.. பஞ்சு போன்ற மென்மையுடன் இருந்த அந்த தளிர் விரல்கள் நடுங்குவதை உணர்ந்தவன்.. அந்த நடுக்கத்தைப் போக்க அவள் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்..
"வேண்டாம் வைசாலி.."
"அது எனக்குத் தெரியும் கௌசிக்.. உங்களுக்கு நான் வேண்டாம்.. நிஷாதான் வேண்டும்.. இது நிஷா இருக்க வேண்டிய வீடு.. நான் தற்காலிக மனைவி.. என்றைக்கு உங்களுடைய நிஷா இந்த வீட்டில் அடியெடுத்து வைக்கிறாளோ.. அன்றைக்கு நான் அநாதைபோல இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டியவள்.."
அவளது துக்கத்தைக் காண கௌசிக்கிற்கு சகிக்க வில்லை..
"நான் என்றைக்காவது அப்படிச் சொல்லியிருக் கிறேனா..? நீயாக கற்பனை செய்து கொண்டு பேசாதே.."
"சொன்னால்தானா..? அதுதானே உண்மை.."
"பெரிய உண்மையைக் கண்டுவிட்டாய்.. வாயை மூடுடி.."
கோபத்துடன் கௌசிக் அதட்டியதும்.. தன் காதில் விழுந்த வார்த்தையை நம்பமாட்டாமல் கண்கள் விரிய அவனை நோக்கினாள் வைசாலி..
"கௌசிக்.."
அவன் கைகள் அவள் தோள் மேல் பரவி.. தன்னுடன் சேர்ந்து அணைத்துக் கொண்டன.. அவளது காதோரம் அவன் முணுமுணுத்தான்..
"கௌசிக்கா..? அத்தான்னு சொல்லுடி.. புருசனின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்னு வை... பல்லைத்தட்டிக் கையில் கொடுத்துவிடுவேன்.."
அவனது மீசை காதோரமாக உராய்ந்ததில் இன்ப அவஸ்தைக்கு ஆளான வைசாலி.. கிறக்கத்துடன் கண்மூடி அவன் கைகளில் தொய்ந்து சரிந்தாள்..
அவளை பூமாலை போல.. கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலை அடைந்த கௌசிக்.. அவள்மேல் படர்ந்து பரவினான்..
அன்றைய இரவில் அவன் வைசாலி விரும்பிய புருசனாக மாறிவிட.. அவள் மனதில் குடிகொண்டிருந்த அவநம்பிக்கை கொஞ்சம் விலகியது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம். -12
மௌனமான நேரம். -12
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy