கல்லூரிக் காலத்திலே -8

8 காலுக்கு ஒரு தலையணை.. தலைக்கு ஒன்று.. கைக்கு ஒன்றாக.. கட்டில் பூராவும் தலையணைகளை பரத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்த பிரசாத்தை.. "...

8

காலுக்கு ஒரு தலையணை.. தலைக்கு ஒன்று.. கைக்கு ஒன்றாக.. கட்டில் பூராவும் தலையணைகளை பரத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்த பிரசாத்தை..
"டேய்.. பிரசாத் குட்டி.. எழுந்திருடா செல்லம்.. என் தங்கமில்லை." என்று கொஞ்சியவாறு எழுப்பினாள் ராதா.
கண் விழித்த பிரசாத் எரிச்சல் பட்டான்.
"ஏன் மம்மி இப்படி இர்ரிடேட் பண்றீங்க?"
"நான் என்னடா பண்ணுகிறேன்?"
"இன்னும் சின்னக் குழந்தைபோல் என்னை ட்ரீட் பண்ணாதீர்கள்ன்னு எத்தனை தடவைதான் சொல்வது. நான் எம்.பி.பி.எÞ. மூன்றாவது வருஷம் படிக்கிறேன்ம்மா."
"ஏண்டா.. பெற்ற பிள்ளைக்கு நூறு வயதானாலும் அவனுடைய அம்மாவிற்கு அவன் குழந்தைதானேடா..."
"இதையே எத்தனை தரம் சொல்வீங்கம்மா."
"சரி.. சரி.. காலையிலேயே கோபமா? கொஞ்சுவது ஒரு தப்பாடா..? காபியைக் குடி."
"எனக்கு வயதாகி விட்டதும்மா."
"இருபது முடிந்து இருபத்தி ஒன்றாகிறது.. இது ஒரு வயசாடா?"
"நீங்க திருந்தவே மாட்டீங்கம்மா..."
"என்னவோ நான் தப்பு பண்ணி விட்டது போல பேசுகிறாயே.. சரி.. சரி.. முறைக்காதே.. எழுந்து வா. டாடி உனக்காக புது டிரெÞ வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். வந்து பாரு.."
"யாரைக் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தார்?"
"ஏன்டா.. உனக்கு புது டிரÞ எடுக்க அவர் யாரைக் கேட்கணும்?"
"என்னைக் கேட்கணும்..."
"எதுக்குடா..?"
"எனக்குப் பிடிக்க வேண்டாமா?"
"அதற்குத்தான் இந்தக் கோபமா? பிடிச்சிருக்கான்னு பாரு. பிடிக்கலைன்னா வேறு மாத்திக்கலாம்."
"அதை முதலிலேயே செய்யலாமில்லையா?"
"என்னதான் செய்திருக்கணும்னு நீ நினைக்கிற.. உன்னைக் கடைக்குக் கூப்பிட்டுக் கொண்டு போய் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டுமா?"
"அங்கே போனால் மட்டும் என்னை செலக்ட் பண்ண விட்டு விடுவீர்களா? நீங்களும்.. டாடியும்.. கலந்துரையாடி.. ஒரு டிரெÞஸை செலக்ட் பண்ணிவிட்டு.. பிடிச்திருக்கிறதான்னு கடைசியில் என்னைக் கேட்பீர்கள்..."
"உனக்குப் பிடிக்கவில்லையென்றால் சொல்ல வேண்டியது தானே."
"எப்படிச் சொல்வது.. கடையில் எல்லோர் முன்னாலும் உங்களை விட்டுக் கொடுப்பது போல் ஆகாதா?"
"ஓ.கே... ஓ.கே. நான் இதற்கு ஒரு வழி பண்ணுகிறேன்.. நீ எழுந்து வா."
பிரசாத் எழுந்து பாத்ரூமிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான். ராதா யோசனையுடன்.. மாடியிறங்கினாள்.
"ராதா.. பிரசாத் எழுந்து விட்டானா..?"
"குளிக்கப் போயிருக்கிறான்.."
"நான் புது டிரெÞ எடுத்து வந்திருப்பதைச் சொன்னாயா?"
"சொன்னேன்..."
ராதா விட்டேற்றியாய் பதில் சொல்லிவிட்டு சமையலறைக்கள் புகுந்தாள். ஜனார்த்தனம் அவளைப் பின் தொடர்ந்தார்...
"ஏண்டி என்னவோ போல் பதில் சொல்கிறாய்?"
"வேறு எப்படிச் சொல்ல..?"
"நான் என்னவோ தப்பு செய்து விட்டதுபோல் முகத்தை தூக்கி வைத்துக் கொள்கிறாயே."
"அவனிடம் பணத்தைக் கொடுத்தால் அவனுக்கு பிடித்த டிரÞஸை அவன் எடுத்துக் கொள்ள மாட்டானா?"
"அவன் பாட்டுக்கு எதையாவது.. கர்ரே.. புர்ரேன்னு எடுத்து மாட்டிக் கொண்டு வருவான். டீசன்ட் லுக் வேண்டாமாடி."
"நீங்க லுக் விடுவதற்காக அவன் டிரெÞ எடுத்துக்கணுமா?"
"இப்ப நீ என்னாங்கிற.. அப்படியெல்லாம் அவன் இஷ்டத்துக்கு ஆட முடியாது. சொல்லிட்டேன்... எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்டி.. அவன் என்ன சொன்னாலும் தலையைத் தலையை ஆட்டு.. அவன் கெட்டுப் போவதே உன்னால்தாண்டி..."
"இதோ பாருங்க... காலங்கார்த்தாலே என்னிடம் உறண்டை இழுக்காதீங்க.. சொல்லிட்டேன். இப்ப அவன் என்ன பண்ணிட்டான்னு இந்தக் குதி குதிக்கிறீங்க.. கையில் பிரம்பு வைத்திருப்பது போல் எந்நேரம் பார்த்தாலும் மிரட்டிக் கொண்டிருக்கும் வேலையை என்னிடம் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளையிடம் வேண்டாம்."
"உன்னை என்னடி மிரட்டி வைத்திருக்கிறேன்."
"இப்பக் கேட்கறீங்க பாருங்க. இது கேள்வி.. உங்களுக்குப் பயந்து உங்கள் முன்னால் என்னால் இயல்பாய் பேசிச் சிரிக்க முடிவதில்லை.. என்ன பேசினாலும்.. அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்களோன்னு யோசித்துப் பேச வேண்டியிருக்கிறது.. அப்படி பயந்து பயந்து பேசினாலும்.. நீ இப்படி பேசியிருக்கக் கூடாது ராதான்னு கமென்ட் பண்ணுங்க..."
"இப்ப என்னதான் சொல்ல வருகிறாய்?"
"இந்த பயம் என்னோடு போகட்டும். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன். அவனுடைய இன்டிஜுவாலிட்டியையும் நாம் கன்ஸிடர் பண்ணனும்."
ராதா.. அதற்கு மேல் பேசாமல் சமையலில் ஆழ்ந்து விட்டாள்.
ஜனார்த்தனம் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே நின்றிருந்தார். டைனிங் ஹாலில் பிரசாத்தின் குரல் கேட்டது.
"அம்மா.. டிபன் ரெடியா.. காலேஜுக்கு நேரமாச்சு..."
மகனின் குரல் கேட்டதும் ஜனார்த்தனத்தின் முகம் மாறியது. அவசரமாய் டைனிங் ஹாலுக்குச் சென்று அங்கிருந்தபடி குரல் கொடுத்தார்.
"ராதா.. பிள்ளை ரெடியாகி விட்டான். இன்னுமா நீ டிபனை ரெடி பண்ணவில்லை? அவனுக்கு நேரமாகி விட்டதாம்."
அவசரத்தில் சுடு சாம்பரை காலில் ஊற்றிக் கொள்ளப் போன ராதா நிதானித்தாள்.
'ஊஹூம். இந்த மனுசனுக்குப் பயந்து ஓடி ஓடி வேலை செய்தால் விழுந்து கொள்வேன். இந்நேரம் வரைக்கும் மகன் மேல் புகார் படித்து விட்டு.. மகனைக் கண்டதும் ஓடி ஒட்டிக் கொள்கிறார். அவன் ஜெயித்தால் என் பிள்ளையென்பார். ஏதேனும் சுணங்கி விட்டால்... உன் பிள்ளை.. உன்னால்தான் கெட்டுப் போகிறேன் என்பார். இந்த வீட்டில் இவர் அடிக்கிற மேளத்திற்கு ஆடி ஆடியே ஓய்ந்து விட்டேன்...'
நிதானமாய் பாத்திரங்களை டைனிங் டேபிளில் கொண்டு போய் அடுக்கினாள் ராதா.
"ஏண்டி லேட்டா செய்யரே. பிள்ளைக்குப் பசிக்காதா.."
'எனக்குத் தெரியும்...' என்ற முகபாவனையுடன் பிரசாத்தின் முன் தட்டை வைத்து பரிமாற ஆரம்பித்தாள் ராதா.
ஜனார்த்தனம் மகனிடம் மென்மையான முகபாவனையுடன்,
"உனக்கு டிரÞ எடுத்து வைத்திருக்கிறேன். அம்மா சொன்னாளா?" என்று கேட்டார்.
"சொன்னாங்க டாடி.." தன்மையாக பதில் சொன்னான் பிரசாத்.
"இதோ பார்..." என்று டைனிங் டேபிளின் மீது இருந்த அட்டைப் பெட்டியை பிரித்துக் காட்டினார் ஜனார்த்தனம்.
"பிடித்திருக்கிறதா..." அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டே அவர் கேட்க,
"பென்டாÞடிக் டாடி.." என்று துணியைப் பார்க்காமலே பதில் சொன்னான் பிரசாத்.
'பார்த்தாயா...' என்று மனைவியிடம் விழிகளால் வினவியபடி வெளியே சென்று விட்டார் ஜனார்த்தனம்.
"உண்மையிலேயே உனக்கு இந்த டிரÞ பிடித்திருக்காடா...?"
"பார்த்துத்தான் சொல்லனும்..."
"இப்போது உன் டாடியிடம் பிடித்திருக்குன்னு சொன்னாயே..."
"பார்க்காமலே சொன்னேன் மம்மி."
"ஏன்டா..."
"அவர் வாங்கி வந்ததைப் பிடிக்கவில்லையென்று எப்படிச் சொல்வது?"
"என்னிடம் மட்டும் சொல்கிறாயே..."
"அப்படித்தான் சொல்லுவேன்."
"அதையே அவரிடம் நேரில் சொல்ல வேண்டியது தானே."
"அது எப்படிம்மா..." என்றபடி அவன் எழுந்து சென்று விட்டான்.
'நல்ல தகப்பனும்... மகனும்.. எனக்குன்னு வந்து வாய்ச்சீங்க... நீங்க இரண்டு பேரும் ஒற்றுமையாக பேசிக் கொள்வீங்க... நான் மட்டும் தகப்பனுக்காக மகனிடமும்... மகனுக்காக தகப்பனிடமும்... பாட்டு வாங்க வேண்டும்.. மத்தளம் போல் இரண்டு பேரும் என்னைப் பந்தாடுகிறீர்களே...'
ராதா மௌனமாக மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
பிரசாத் கல்லூரிக்குள் தன் வாகனத்தை செலுத்திக் கொண்டு போகும் போது வழியில் நடந்து கொண்டிருந்த லேகா தென்பட்டாள்... லேசாக ஹாரனை அழுத்தினான்... அவள் திரும்பிப் பார்த்தாள். அவளைப் பார்த்தவாறே வண்டியை விட்டவன்... அவனது தோழர்களுக்கு அருகே சென்று வண்டியை நிறுத்தி இறங்கினான்.
"என்னடா மாப்பிள்ளை... வழியில் நம்ம தங்கச்சிக்கு சிக்னல் கொடுத்தே போல இருக்கே..." கண்களில் விசமம் வழிய வினவினான் சதீஷ்.
"நம்ம தங்கச்சியா..?"
"ஏண்லே.. கதையை மாத்தறே... பிரசாத்.. அவனுக்கு மட்டும்தான் அவள் தங்கச்சி.. உனக்கு இல்லே..."
"கிண்டல் பண்றே பார்த்தியா..."
"விடுங்கலே... நாமெல்லாம் வெற்றிகரமாய் மூன்றாம் வருசத்தில் காலடி எடுத்து வைத்து விட்டோம். இப்பப் போய் சின்னப்புள்ளைத் தனமா பேசிக்கிட்டு.. இருக்காதீங்க..."
"நாங்க பேசுவது இருக்கட்டும்.. முதலில் அவன் பேசினானான்னு கேளு..."
"அவன் பேசாவிட்டால் என்ன... அவன் சார்பா.. நாம் பேசிவிட்டால் போகிறது... என்னலே பிரசாத்.. நான் போய் பேசிப் பார்க்கட்டுமா?"
"பிரசாத் திகிலடைந்து விட்டான்.
'இவனைக் கண்டாலே பெண்களுக்கு ஆகாது... இவன் போய் பேசி... பிரசாத்தின் காதல் பயிர் வளர்வதா.. அது நடக்கிற காரியமா?'
"அஜீத் குட்டி... உனக்கு கோடி கும்பிடு.. நீ இதில் தலை கொடுக்காதே..."
"இவன் ஏன்லே.. இப்படிப் பயப்படுகிறான்... நான் தூது போகிறேன்னுதானே சொன்னேன்? காதலை கலைத்து விடப் போகிறேன்னா சொன்னேன்..."
"உன்னைக் கண்டாலே அவன் காதல் கலைந்து விடுமோ என்ற பயம் தான்..."
"ஏன்லே ஆனந்த்... நீயும் இப்படிச் சொல்லலாமா..."
"வேண்டாம் அஜீத்... நடிகர் திலகத்தை விட்டுவிடு... பிரசாத் காதலில் ஜெயிக்கட்டும்.. அதற்கு உதவி பண்ணு..."
"நான்தான் தூது போகிறேன்னு சொல்கிறேனே..."
"அப்படி எதுவும் செய்து விடாதே... அதுதான் அவனுக்கு நீ செய்யும் மிகப்பெரிய உதவி..."
"ஏன்லே.. காதலுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராதுன்னு முடிவே பண்ணிட்டிங்களா..."
"உனக்கும் நம் கிளாÞ பொண்ணுகளுக்கும் தான் சரிப்பட்டு வராது..."
"என்னலே பிரசாத்.. உன் காதலை வளர்க்க என்னை உதவி செய்ய விடாமல் என் கைகளை கட்டிப் போட்டு விட்டாயே..."
"நீ போகாவிட்டால் என்ன நான் போகிறேன்..." என்று எழுந்தான் ஸ்ரீதரன்.
ஸ்ரீதரன் பிரசாத் தடுக்கத் தடுக்க லேகாவிடம் போய் விட்டான். தனியே நடந்து கொண்டிருந்தவளின் அருகே போய்,
"எக்ÞயூÞ மி... " என்றான்.
"யெÞ..." என்றாள் அவள் மிடுக்குடன்.
'ஆமாம்.. இவள் பெரிய பிரைம் மினிÞடர்... யெÞ சொல்கிறாள்...' என்று மனதிற்குள் தாளித்தபடி.
"உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்..." என்றான் ஸ்ரீதரன்.
"சொல்லு..."
"நம் கிளாஸில் ஒருவன் உன்னை லவ் பண்ணுகிறான்..."
"யார்... பிரசாத்தா..."
"பரவாயில்லை கண்டுபிடித்து விட்டாய்... எனக்கு விளக்கம் சொல்கிற வேலை மிச்சம்..."
"இப்போ அதற்கு என்ன?"
ஸ்ரீதரன் திகைத்தான். இவள் என்ன இவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறாள்.
"லேகா.. அவன் உன்னைக் காதலிக்கிறான்..."
"முதலில் அவனை டாக்டர் ஆகச் சொல்லு..."
அவள் போய் விட்டாள்... ஸ்ரீதரன் திரும்பி வந்து விவரம் சொன்னான். பிரசாத் யோசனையில் ஆழ்ந்தான்.
'அவள் சொல்வதற்கு என்ன அர்த்தம்...'
"அவள் நல்ல பெண் என்று அர்த்தம்..." என்றாள் ராதா.
"என்னம்மா இப்படிச் சொல்கிறீர்கள்...? அப்போ நான் நல்ல பையன் இல்லையா?" பிரசாத் முகம் வாடினான்.
"நீயும் நல்ல பையன் தாண்டா.. இல்லாவிட்டால்.. சைட் அடிப்பது முதற்கொண்டு.. லவ் பண்ணுவது வரை என்னிடம் எப்படி ஷேர் பண்ணிக் கொள்வாய்? நீ நல்ல மகனாக இருப்பதால்தானே.. எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாய்... உன்னை விட அவள் உயர்த்தின்னு நான் சொல்லவில்லை பிரசாத்... அவள் உனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறாள்... அதனால் நல்ல பெண் என்றேன்.."
"அவள் சொல்லாவிட்டால் நான் படிக்கமாட்டேனா?"
"அவள் சொன்ன பின்பு.. இன்னும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி உன் மனதில் வருமில்லையா? நீ இப்போது படிப்பதை விட நன்றாகப் படிப்பாய் தானே..."
ராதா சொன்னதுதான் உண்மையாக இருந்தது... லேகாவின் வாய்மொழி... பிரசாத்தை இரவும்.. பகலும் படிக்க வைத்தது. அந்த செமÞடரில் அவன் எப்போதையும் விட அதிக மதிப்பெண்கள் வாங்கினான்... ராதாவின் புன்முறுவல்.. 'இப்போது என்ன சொல்கிறாய்...' என்று பிரசாத்தைப் பார்த்துக் கேட்டது.
"எப்படி மாம்... இதைக் கண்டுபிடிச்சீங்க..."
"ரிஸர்ச் பண்ணினேன்டா..."
தாயும் மகனும் சிரித்துக் கொண்டிருக்கையில்,
"என்ன விசயம்? சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க... எனக்கும் சொன்னால் நானும் சிரிக்க மாட்டேனா?" என்றபடி ஜனார்த்தனம் அங்கே வந்தார்.
"என்ன பிரசாத்.. உன் டாடிகிட்ட சொல்லிவிடவா?"
"வேண்டாம்மா...ப்ளீÞ..."
"இல்லை... சொல்லுவேன்... காய்கறி விலையெல்லாம் அதிகமாக இருக்கிறது... எந்தக் காயின் பெயரையும் சொல்லவே பயமாக இருக்கிறது. உன் டாடியிடம் விசயத்தைச் சொன்னால்... ஊரிலிருக்கிற காய்கறி பெயரையெல்லாம் சொல்லித் திட்டுவார்.. அப்படியாவது காய்கறிகளின் பெயரைக் கேட்கலாம்.. ஒரு மணி நேரம்.. இரண்டு மணி நேரம் கூட இல்லை... விடிய விடியத் திட்டுவார்.. இன்றைக்கு ஏகாதசி ஆகிவிடும்.. சொல்லவா?"
அதற்குள் ஜனார்த்தனம் அவள் அருகே உட்கார்ந்து விட்டார்.
"என்னடி..."
"இல்லைங்க.. பிரசாத்தின் காலேஜில் ஒரு கலாட்டா நடந்ததாம்... அதைச் சொன்னான்.. சிரித்துக் கொண்டிருந்தோம்."
"காலேஜ்ன்னா... கலாட்டா நடக்கத்தான் செய்யும் அதற்கா இவ்வளவு சிரிப்பு?"
"ஆமாம்.." என்றபடி ராதா எழுந்து போய்விட்டாள்.
'அவ்வளவுதானா..?' நம்பாமல் அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜனார்த்தனம்.
"அப்புறம் பிரசாத்... உன் படிப்பெல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு..."
"ஸோ... குட்.. டாடி..."
பிரசாத்தும் நழுவிவிட்டான். ஜனார்த்தனத்தின் மனதில் சன்னமாய் பொறாமை எழுந்தது. அன்னையிடம் காட்டும் நெருக்கத்தை தன்னிடமும் மகன் காட்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர் நெஞ்சில் எழுந்தது... இயல்பாக அவன் தன்னிடம் பேச யோசித்து மரியாதை காட்டுவது... அவருக்கு என்னவோ போல் இருந்தது... அவர் எழுந்து மனைவியைத் தேடிப் போனார்.
அவள் சப்பாத்திக்கு மாவைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
"ராதா.."
"ம்ம்..."
"அவன் என்னடி சொன்னான்..."
"நான்தான் ஒன்றுமில்லைன்னு சொன்னேனில்ல..."
"ஊஹும்.. ஏதோ இருக்கிறது..."
"ஆமாம் புதையல் இருக்கிறது... வேலையைக் கெடுக்காமல் எழுந்து போங்க..."
ராதா எரிந்து விழுந்து விட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்... ஜனார்த்தனம்... முணுமுணுத்துக் கொண்டே வாசல் பக்கம் சென்றார்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: கல்லூரிக் காலத்திலே -8
கல்லூரிக் காலத்திலே -8
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s320/kalluri%2Bkalathiyle.jpg
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s72-c/kalluri%2Bkalathiyle.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy