கல்லூரிக் காலத்திலே. -7

7 "அதற்காக நீ அவனைக் காதலிப்பது போல் நடிக்கப் போகிறாயா?" "நான் எப்படி.. அப்படி நடிக்க முடியும்?" "ஏன்..?"...

7

"அதற்காக நீ அவனைக் காதலிப்பது போல் நடிக்கப் போகிறாயா?"
"நான் எப்படி.. அப்படி நடிக்க முடியும்?"
"ஏன்..?"
"அவன்தான். ஆனந்திற்கும்.. எனக்கும் மோதலோ.. காதலோ எதுவாக இருந்தாலும் ஊடே அவன் வரமாட்டேன்னு சொல்லியிருக்கானாமே.. நான் அவனிடம் சும்மா பேசப் போனால்கூட அவன் என்னுடன் பேச மாட்டான்."
"அப்புறம் என்ன செய்யப் போகிறாய்?"
"வேறு யாராவதுதான் போக வேண்டும். நீ இதைச் செய்கிறாயா?"
"ஷட் அப் சாரா.. இது போன்ற பேச்சையெல்லாம் இனிமேல் என்னிடம் பேசாதே.. எனக்கு இது பிடிக்காது.. என் பேமிலிக்கும் பிடிக்காது.."
"ஓ.கே. கூல் டவுன்.. கூல் டவுன்.. நான் வேறு யாராவது மாட்டுவாங்களான்னு பார்க்கிறேன்."
மறுநாள் முழுவதும் அடித்துப் போட்டது போலத் தூங்கின நண்பர்கள் மாலையில் ஒன்று சேர்ந்தார்கள். டிராமாவிற்கு பரிசு வாங்கியதைக் கொண்டாட ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனார்கள். அவரவர்க்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்து விட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். சாராவும் தன் தோழியருடன் அதே ஹோட்டலுக்கு சாப்பிட வந்து கொண்டிருந்தாள்.
அலெக்Þ ஆர்வமாய் பெண்கள் பக்கம் பார்த்துக் கொண்டே.
"எனக்கு லெக் பீÞ மட்டும் போதும்.. வேறு எதுவும் வேண்டாம்" என்று பீலா விட்டான்.
"ஏன்லே.. இவனுக்கு என்னலே ஆச்சு.. லெக்பீÞ மட்டும் போதும்கிறான். அது எப்படில்லே இவன் வயிற்றுக்குப் போhதம்."
"அது ஒன்றுமில்லை அஜீத். இது வேறு ஒரு விசயம்."
"என்னலே ராபர்ட்.. புதிர் போடறே.. புதிரை விடுவி."
"கேர்ள்Þ வந்திருக்காங்க இல்ல. இவன் அவங்களைப் பார்த்து விட்டு பிலிம் காட்டுகிறான்."
"ஷ்ஷ்.." என்று வாயில் விரலை வைத்துக் கூறினான் அலெக்Þ.
"என்னலே..."
"அங்கே பார்."
பிரசாத் எழுந்து கை கழுவப் போகையில்.. பெண்களின் பக்கமிருந்து எழுந்து கொண்ட லேகாவும் கைகழுவப் போனாள். அவள் அவனையே பார்த்துக் கொண்டு போக... அவள் வருவதைக் கவனிக்காத பிரசாத் இயல்பாய் கைகழுவும் இடத்திற்குச் சென்று விட்டான்.
"நம்ம பயலும் போகிறான்.. இவளும் போகிறாள்."
"ஆமாண்டா.. இப்பப் பாரு வேடிக்கையை."
"என்னலே நடக்கும்?"
"வேறு என்ன நடக்கும்? அண்ணலும் நோக்குவான்... அவளும் நோக்குவான்.."
"நாமும் நோக்குவோமே..."
"அது அவர்களுக்குத் தெரியாதே."
பிரசாத் கை கழுவி விட்டு.. திரும்பும்போது.. யதேச்சையாய் அருகில் நோக்கினான். அதே சமயம் கைகழுவிக் கொண்டே லேகாவும் பார்த்தாள். பிரசாத்தின் கண்கள் மின்னின. முகத்தில் ஒளி பரவியது.
"என்னலே.. நோக்கிடுச்சுக.. ஆனால் வாயைத் திறந்து எதுவும் பேசிக்க மாட்டேன்குதுகளே."
"அவன் திரும்பி வருகிறான்?"
"ஏன்லே..? அவள்தான் அவனை அப்படிப் பார்த்தாளே..."
"பார்க்கிறாள்தான். ஆனால் நம்ம பயல்தான் வாயைத் திறந்தால் முத்து உதிர்ந்து விடும்ன்னு வாயை இறுக மூடிக் கொண்டு திரும்பி வருகிறானே."
"ஏன்லே பிரசாத்... இப்படி உட்காருலே."
முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்கள் ஒளிர அஜீத்தின் அருகே அமர்ந்தான் பிரசாத்.
"என்ன அஜீத்."
"ஏன்லே ஒரு மார்க்கமா விழிக்கிற?"
"ஒன்றுமில்லை..."
"ஒன்றுமில்லையா.. நீ கைகழுவப் போன இடத்தில் அவளும் வந்திருந்தாள். போல..."
"எவள்...."
"அந்தப் பொண்ணு பேரு என்னலே..."
அஜீத் அலெக்ஸிடம் வினவ பிரசாத் பதில் சொன்னான்.
"லேகா..."
"சொல்லும்போதே வாய் இனிக்குதாக்கும்."
பிரசாத் பதில் சொல்லாமல் லேகா இருக்கும் திசையைப் பார்த்தான். அதே சமயம் அவளும் இவன் பக்கமாய் பார்த்தாள். அவளது பார்வை போகும் திசையை கவனிக்க சாராவும் ஆண்கள் பக்கம் பர்க்க ஆனந்த் தன் ஒரு விரலை தூக்கி நெற்றியில் வைத்தான். அவசரமாய் பார்வையைத் திருப்பிக் கொண்ட சாரா.
"உன்னால்தாண்டி..." என்று லேகாவை கடிந்து கொண்டாள்.
"என்னாலா.. எது என்னால் நடந்தது..." பிரசாத்தின் பக்கமிருந்த பார்வையைத் திருப்பாமல் லேகா கேட்டாள்.
"அங்கே என்னடி பார்வை..."
சாரா எரிந்து விழ... அஜிதா 'களுக்'கென்று சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிறாய்..?"
"அவள் அங்கே பார்க்காமல் வேறு எங்கே பார்ப்பாள்? அங்கேதானே பிரசாத் உட்கார்ந்திருக்கிறான்."
"ஓ... கதை அப்படிப் போகுதா... ஏன் லேகா.. இப்போதுதானே அவனை வாஷ்பேஷின் பக்கத்தில் பார்த்தாய்..."
"இவள் மட்டுமா பார்த்தாள்? அவனும்தான் பார்த்தான்."
"அப்போ பேச வேண்டியதுதானே..."
"எங்கே பேசுவது...? அவன் பேசினால்தானே...? அவன் பேசாமலே திரும்பிப் போய் விட்டான்..."
"என்னடி இது...?"
"சும்மாவும் போகவில்லை. இவளைப் பார்த்துக் கொண்டே போய் விட்டான்..."
"வெறும் லுக்தானா? அதற்கா இவள் இப்படி ஜெர்க் ஆகிறாள்?"
சாராவின் வார்த்தைகளில் பாதிக்கப்பட்ட லேகா முகம் சுளித்தாள்.
"பார்க்காமல்.. உன் ஆனந்தைப் போல விசிலடித்துக் கொண்டே பின்னால் வரச் சொல்கிறாயா?"
"என் ஆனந்தனா..? லேகா.. வேண்டாம்."
"அப்போ.. நீயும் எங்களைப் பற்றிப் பேசாதே.. எனக்கு பிரசாத்தின் தயக்கம்தான் பிடித்திருக்கிறது."
லேகா கோபமாய் எழுந்து செல்ல.. மற்றவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
"ஹோட்டல்லே வெறிச்சுன்னு ஆகிவிட்டதடா..." அலெக்Þ கவலைப்பட்டான்.
"கோழிப்பண்ணை காலியாகி விட்டது இல்ல.. அப்படித்தான் இருக்கும். நீ கிளம்பு.. ராபர்ட். இவனைக் கைத்தாங்கலா வீட்டுக்குக் கூப்பிட்டுப்போ."
"கைத்தாங்கலாகவா.. எதற்கு அஜீத்.."
"கோழிகள் பறந்து விட்ட சோகத்தில் இருக்கானே..."
ராபர்ட்டும்.. பிரசாத்தும் சிரிக்க.. அலெக்ஸின் முகத்தில் வெட்கம் சூழ்ந்தது.. நண்பர்களிடமிருந்து விடை பெற்று.. வீட்டுக்குச் சென்றான் பிரசாத்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: கல்லூரிக் காலத்திலே. -7
கல்லூரிக் காலத்திலே. -7
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s320/kalluri%2Bkalathiyle.jpg
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s72-c/kalluri%2Bkalathiyle.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy