கல்லூரிக் காலத்திலே.. -5

5 சதீஷ் காலேஜிற்குள் தன் இரு சக்கர வாகனத்தைத் திருப்பினான்... காலேஜின் பிரம்மாண்டமான நுழை வாயிலில் இருந்து காலேஜின் உள்ளே ஒட்டிய நீண்டு அ...

5

சதீஷ் காலேஜிற்குள் தன் இரு சக்கர வாகனத்தைத் திருப்பினான்... காலேஜின் பிரம்மாண்டமான நுழை வாயிலில் இருந்து காலேஜின் உள்ளே ஒட்டிய நீண்டு அகன்ற சிமெண்ட் பாதையின் இரு பக்கமும் மரங்கள் அணிவகுத்து நின்றன. அதனடியில் சிமெண்ட் பெஞ்சுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றின் மேல் அமர்ந்திருந்த வந்தனா அவனைப் பார்த்து கை அசைத்தாள். பதிலுக்கு சிரித்த சதீஷ் வண்டியை பார்க் பண்ணிவிட்டு அவளிடம் வந்தான். அருகில் அமர்ந்தான்.
"ஹாய் வந்தனா..."
"இன்றைக்கு நீ லேட் சதீஷ்."
"ஆமாம். அம்மா டிபன் செய்ய லேட் ஆகி விட்டது."
"நான் அப்போதிருந்து வெயிட் பண்ணுகிறேன் தெரியுமா."
"ஸாரி.. அது எனக்கு எப்படித் தெரியும்."
வந்தனா வாய்க்குள் எதையோ முணுமுணுத்தாள். சதீஷ் புரியாத பார்வை பார்த்தான்.
"என்னப்பா..."
"நத்திங்..."
"நீ நத்திங் என்றால்தான் சம்திங் இருக்குன்னு அர்த்தம். என்னன்னு சொல்லு."
வந்தனா உதட்டைக் கடித்தாள்.
இவனிடம் என்னவென்று சொல்வது.. எப்படிச் சொல்வது.
அதற்குள், "சதீஷ்.. நீ இங்கேயாடா இருக்கிறாய்? உன்னை எங்கேயெல்லாம் தேடுவது...?" என்றபடி பிரசாத் அங்கே வந்து விட்டான். சதீஷ் உடனே எழுந்து,
"பை... வந்தனா.. கிளாÞ ரூமில் பார்ப்போம்..." என்றபடி பிரசாத்தை நோக்கிப் போய் விட்டான்.
வந்தனா அமைதியாக.. தனியாக... அமர்ந்திருந்தாள். அவளது விழியோரம் சிறு நீர் முத்துக்கள் உருவாகின. இமைகளைக் கொட்டி அவற்றை சரி செய்து கொண்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
"இதோ வந்தனாவே வந்து விட்டாளே..." என்றாள் திவ்யா.
"என்னப்பா..." என்றபடி அங்கிருந்த பெண்களின் அருகே அமர்ந்தாள் வந்தனா.
"எல்லாம் வர இருக்கும் காலேஜ் டேயைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கோம். ஆமாம்.. நீ என்ன அங்கே பார்க்கிற?"
"நம்ம பசங்க யாரையும் காணோமேன்னு பார்த்தேன் சாரா."
"நம்ம பசங்களா..? இது எப்போதிருந்து.." என்று சாரா முறைக்க.
"கொஞ்ச நாட்களாகவே நடக்குது போல இருக்கு சாரா... இவள் அந்த சதீஷிடம் அதிகம் பேசுகிறாள்." என்றாள் அஜிதா.
"ஏன்டி.. அப்படியா?"
"அதெல்லாம் இல்லைப்பா.. சும்மா நாலு வார்த்தை பேசினால் அதிகம் பேசுவதாய் சொல்லி விடுவதா?"
"சரி... விடு.. நம்ம கிளாÞ பசங்க எப்படி கிளாஸிற்குள் இருப்பாங்க? அவங்கதான் வானரங்கள் ஆச்சே... மரத்துக்கடியில் இல்லே மீட்டிங் போட்டுக்கிட்டு இருப்பாங்க..." என்று சாரா சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்... மரத்தடியில் அமர்ந்திருந்த மாணவர்கள் கும்பலில் அலெக்Þ அஜீத்திடம் வினவினான்.
"ஏன்டா அஜீத். நம் கிளாஸில் இருக்கும் பெண் கிளிகள் எல்லாம் எங்கேடா... காணோம். ஒருத்திகூட கண்ணில் படவேயில்லையே."
"ஆமாம்லே. அவளுக எங்கே இருக்காளுகன்னு உனக்குப் பாத்துச் சொல்கிறதுதானே என் வேலை? இங்கே தன்னாலே கல்ச்சுரல் டேக்கு என்ன புரோக்ராம் கொடுக்கலாம். எப்படிக் கொடுக்கலாம்னு என்று நாங்களே மண்டையிலிருக்கிற முடியைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறோம். நீயானால் கிளிகளைத் தேடுகிற... உனக்கு ரொம்பத்தான் கொழுப்புலே..."
"அலெக்Þ... அவங்கள்ளாம் கிளாÞ ரூமில் இருக்காங்க."
"அது உனக்கு எப்படிலே சதீஷ் தெரியும்?"
"அவனுக்குத்தானே தெரியும்?"
"என்னலே அலெக்Þ. என்ன சொல்ல வர்றே?"
"இவன்... அந்த வந்தனா கிட்ட கடலை போட்டுக்கிட்டு இருக்கான் அஜீத். உனக்கு இது தெரியாதா?"
"இது எத்தனை நாளாலே நடக்குது..."
"நான் சும்மா பிரண்ட்லியாகத்தான் பேசிக்கிட்டு இருக்கேன் அஜீத். இவன் வேண்டுமென்றே என்னைக் கிண்டல் பண்ணுகிறான்."
"அலெக்Þ.. என்னலே இது."
"அதை விடு அஜீத். நாம் இங்கேதானே இருக்கிறோம். நம்ம கண்ணில் படாம எப்படி கிளிகள் கிளாÞ ரூமிற்குள் போய் அடைந்ததுக?"
"அதுவா ராசா... கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு... உன் கண்ணில் படாமல் பறந்து கிளாÞ ரூமிற்குள் போய் அடைந்து விட்டது... லொக்.. லொக்.."
அஜீத் நடிகர் திலகமாயி அலெக்ஸை தோள் தழுவிக் கொள்ள சதீஷ் சிரித்தான். அலெக்Þ முறைத்தான்.
"இப்ப எதுக்குலே.. அவனை முறைக்கிறே.. கல்ச்சுரல் டேக்கு என்ன புரோக்ராம் கொடுக்கலாமுன்னு சொல்லு..."
"ஆமாம்... அஜீத்.. நாம் தூள் பரப்பனும்.. நம்ம கிளாÞ கேர்ள்Þ நம்மை பீட் அடிக்கிறது போல் புரோக்ராம் பண்ணனும்கிற வெறியோட இருக்காங்க..." என்றபடி அங்கு வந்தான் ஆனந்த்.
"நீ எங்கேடா போயிருந்த..." என்று ஸ்ரீதரன் கேட்டான்.
"வேற எங்கே போயிருப்பான்? அந்த சாராவிற்கு பாடிகார்டு வேலையை பார்த்து... பத்திரமாய் கிளாÞ ரூமிற்குள் உட்கார வைத்து விட்டு வந்திருப்பான். ஆனந்த்... உன் சின்சியர் வொர்க்கைப் பார்த்து என் நெஞ்சம் பூரிக்குதுலே."
"ஏதோ.. உன் ஆசீர்வாதம் குரு..."
"நடத்து.. நடத்து.. ஆமாம். அவளுக போடுகிற பிளான் உனக்கு எப்படித் தெரிந்தது?"
"பாடிகார்டு போலே... பாலோ பண்ணிக்கிட்டு போகிறானில்ல.. அவங்க பேசுகிறதை வைத்துக் கண்டு பிடித்து இருப்பான். என்ன ஆனந்த் சரிதானே..."
"உனக்குத்தான் உடம்பெல்லாம் மூளையாச்சே.... தப்பாகவா சொல்லப் போகிறாய்? அலெக்Þ சொல்வது சரிதான் அஜீத். அவளைப் பாலோ பண்ணும்போது... என்னை ஓர் பார்வை பார்த்தபடி... மத்தவங்ககிட்ட அவள் சொன்னாள்."
"உன்னை உசுப்பேத்தி விடப் பார்த்திருப்பாள். ஆயிரம் தான் சொல்லு அவளுக.. அவளுகளுக்குத் தெரியாமலே நமக்கு பூÞட் கொடுத்து விடுகிறாங்கலே..."
"பூÞட் இÞ தி சீக்ரெட் ஆப் அவர் எனர்ஜி..." என்று அலெக்Þ கூறினான்.
"யுவர் எனர்ஜின்னு சொல்லுலே. அது என்ன அவர் எனர்ஜின்னு எங்களையும் உன்னோடு கூட்டுச் சேர்த்துக் கொள்கிற..." என்றான் அஜீத்.
"என்ன அஜீத்... என்னைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லிப் புட்ட... என் நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கு..."
"எனக்கே போட்டியாலே... இப்படி அப்பாவிப் பிள்ளையைப் போல் கண்களைப் படபடவென்று கொட்டிக் கொண்டா நான் ஐயோ பாவம் பச்சைப் பிள்ளைன்னு நம்பி ஏமாந்து விடுவேனாலே... சும்மாவா உன் கண்ணழகைப் பார்த்து 'கண்ணழகா'ன்னு ராதா திட்டுகிறான். அலெக்Þ.. நீ சரியான அலம்பல் பார்ட்டிலே. இங்கே இத்தனை பேர் இருக்கோம். நீ நம் கிளாÞ பெண் கிளிகளைக் காணோம்ன்னு கண்ணால வலை வீசுகிற... உன்னை கவனிக்கனும்லே."
"ஐயோ அஜீத்.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்."
"இனிமேல் கேட்காதே..."
"நீ சொன்னால் சரிதான்."
"ஓகே.. பாய்Þ.. நாம் எல்லோரும் டிராமா போடுகிறோம். அதன் கதை.. வசனம்.. டைரக்ஷன் என்னுடையது.. நாம் எல்லோருமே அதில் பார்ட்டிசிபேட் பண்ணப் போகிறோம். மத்தபடி தனித்தனியா அவனவன் திறமையைக் காண்பிங்கலே. அலெக்Þ நீ என்ன பண்ணப் போகிற?"
"பாடப் போகிறேன்..."
"என்ன பாட்டு...?"
"வேறு என்ன பாட்டு இங்கிலீஷ் பாட்டுத்தான் கேட்கிறாயா?
ஐ ஆம் இன் தி வெர்ல்டு...
யு ஆர் லைக் எ பர்டு..."
"தொலைந்து விடுவேன்லே..."
"பாரு அஜீத்.. உன் ஊர் என்னவோ... கட்டபொம்மன் ஊர்தான் அதற்காக இங்கிலீஷ் பாட்டு பாடுவதற்காக என்னைத் தொலைப்பது அவ்வளவு சரியில்லை. சொல்லிட்டேன்."
"ஒழுங்காய் தமிழ் பாட்டைப் பாடுலே... பிரசாத் நீ."
"டான்Þ ஆடப் போகிறேன். அஜீத் குட்டி."
"ஏன்லே.. நீ.. என்னைக் குட்டின்னு சொன்னா இந்த உலகம் தாங்குமாலே."
"ஏன் அஜீத்குட்டி..."
"சரி... கூப்பிட்டு விட்டுப் போ. ராபர்ட் நீ என்ன செய்யப் போகிற?"
"செல்வியை நினைத்து கவிதை சொல்லப் போகிறான்"
"நீ மாத்து வாங்கப் போகிற. அஜீத்.. இவன் பேசுவது சரியில்லை."
"விடு ராபர்ட். ஏலே அலெக்Þ. அவனை ஏன்லே வம்புக்கு இழுக்கிற.. அவன் பாட்டுக்கு காத்தில் கோலம் போட்டு... கவிதை சொல்லிக்கிட்டு இருக்கிறான். அவனை வம்புக்கு இழுக்காட்டி உனக்குத் தூக்கமே வராதா?"
"இவன் இதுக்குத்தான் லாயக்கு அஜீத். காத்தில் கோலம் போடாமல் நாலு வரி எழுதி அந்தப் பொண்ணுகிட்ட பினாத்திக் கொண்டிருந்தால் எனக்கு தூக்கம் வந்தாலும் எப்படிடா தூங்க முடியும்.?"
"இவன் சொல்வதிலேயும் ஒரு பாயிண்ட் இருக்கு. ஏன்லே ராபர்ட் உன் தூக்கத்தை அவ கெடுத்தா.. இவன் தூக்கத்தை ஏன்லே நீ கெடுக்கிற?"
ராபர்ட்டின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"இங்க பாருலே.. இவன் பண்ற கூத்தை."
"அவனை விடு.. அவன் அப்படித்தான்.. நீ நம்ம கதைக்கு வா."
"எந்தக் கதை.. காலேஜ் டேக்கு போடப் போகிற கதையா?"
"இப்ப கிளாஸுக்கு போகிற கதைக்கு."
அவர்கள் கும்பலாக கிளாÞ ரூமிற்குள் நுழைந்தார்கள். ஆனந்த் மட்டும் சாராவைக் கடக்கும்போது சின்னதாக விசிலடித்து வைத்தான்.
"கொழுப்பா.." என்றாள் சாரா.
"ஆமாம். அது எப்படி உனக்குத் தெரிந்தது...?." என்று ஆனந்த் அவளிடம் நின்று விட.
"லேய்... ஆனந்த்.. இங்கே வாலே.. அங்கே என்னலே பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கே..." என்று அஜீத் அழைத்தான்.
"சும்மாதான்.. தலை.. இங்க ஒரு மீனு.. ரொம்பத் துள்ளுது.."
"ஒரு நாள் பொரிச்சிரலாம். நீ இப்படி வந்து உட்காரு..."
அவர்கள் சலசலக்கும்போது லெக்சரர் வந்துவிட.. வகுப்பு அமைதியானது.
பிரசாத் வீட்டுக்குள் நுழையும்போதே. ஜனார்த்தனன் காபி குடித்துக் கொண்டிருந்தார். மகனைக் கண்டதும்.. உள் பக்கமாய் திரும்பி..
"ராதா.. பிரசாத் வந்து விட்டான். அவனுக்கு டிபன் காபி.. எடுத்துக்கிட்டு வா.." என்று குரல் கொடுத்தார்.
"அம்மா ஆபிஸில் இருந்து வந்து விட்டாங்களா... டாட்..." என்றவாறு சோபாவில் அமர்ந்த பிரகாஷ்.. ஷூவைக் கழட்டினான்.
"அப்பவே வந்தாச்சு.. நீ தான் லேட்.." என்றவாறு கையில் டிபன் காபி கொண்ட டிரேயோடு வந்தாள் ராதா.
"கல்ச்சுரல் டே வருது மம்மி. ரிகர்சல் பார்த்தோம்."
"இது வேறா? இனி இரண்டு மூன்று வாரங்களுக்கு இதுதான் பேச்சாக இருக்கும். படிப்பை மறந்து விடுவாய்."
"விடு ராதா.. எப்போதும் படிப்பு.. படிப்பு என்று இருந்தால் எப்படி.. இதுவும் வேண்டும்தானே..."
மகனை மனைவி எப்போது கண்டித்தாலும்... சடாரென்று மகனுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் ஜனார்த்தனன் வினவினார். கணவனின் டெக்னிக்கை.. கண்டும் காணாதவள் போல் ராதா.. மகனின் அருகே அமர்ந்தாள்.
"நீ என்ன செய்யப் போகிறாய் பிரசாத்?"
"டான்Þ அண்ட் டிராமா."
"குட்.. டான்ஸிற்கு டிரÞ எடுக்க வேண்டும் தானே."
"யூனிபார்மாய் எடுக்கணும். அதை அப்போது பார்த்துக்கலாம்."
பிரசாத் எழுந்து மாடிக்குப் போய் விட்டான். அவன் போன பின்பு ஜனார்த்தனம் மனைவியைப் பார்த்து.
"டான்Þ.. டிராமான்னு டயத்தை வேÞட் பண்ணுகிறான். நீ கொஞ்சம் சொல்லக் கூடாதா?" என்றார்.
ராதா கணவன் மேல் பாசம் கொண்டவள். அதனால் அவரை எரிக்கும் அளவிற்கு முறைக்காமல் கொஞ்சம் குறைத்தே முறைத்தாள்.
"ஏண்டி முறைக்கிற?"
"ஏன் உங்களுக்கு வாயில்லையா... நீங்கள் சொல்ல வேண்டியதுதானே."
"நான் சொன்னால் சரி வராது ராதா..."
"அதெல்லாம் வரும்.. உங்க டிரிக்கையெல்லாம் வேறு எங்காவது காட்டுங்க.. என்னிடம் வேண்டாம். பிள்ளையிடம் ஒரு கேள்வி கேட்கப் போனால் ஊடே வருவது. அவன் இல்லாதபோது அவனைப் பற்றிக் குறைவாய் பேசுவது. இதுவே உங்களுக்கு வழக்கமாகிப் போச்சு."
ஜனார்த்தனம் பேப்பரை எடுத்து முகத்தை மறைத்துப் பிடித்துக் கொண்டார். இன்றைக்கு இது போதும். இன்னொரு நாள் மீதிக் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என்ற நினைவோடு ராதா வீட்டிற்குள் போய் விட்டாள்.
லேகா.. ஹாÞடலில் அவளது ரூமிற்குள் கட்டிலில் குப்புறப்படுத்தவாறு அவளுடைய தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
"அச்சா.. டாட்.. இங்கே மழையில்லை. ம்ம்... நன்றாகப் படிக்கிறேன்.. மாம் என்ன செய்கிறாங்க.. நோபிராப்ளம்.. ம்ம்.. காலேஜ் டே வருது டாட்.. அதனால் கிளாÞல்லாம் ரெகுலராக வைப்பதில்லை..." என்று பேசி முடித்து விட்டுப் போனை அணைத்தாள்.
சேரில் அமர்ந்து.. புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த சாரா..
"உன் டாடியா?" என்று கேட்டாள்.
"யெÞ... மும்பையில் நல்ல மழையாம். இங்கே எப்படின்னு கேட்டார்."
"ம்ம்.. நம்ம பேரண்ட்Þ ஒரு ஊரில்.. நாம ஒரு ஊரில். என்ன லைப்.. நினைத்தால்.. வீட்டுக்குப் போகணும் போல இருக்கு."
"எனக்கும்தான். வந்து இரண்டு வருடங்களாகி விட்டது. இந்த ஹோம்சிக் இன்னும் போகவில்லை."
"ஏன் லேகா... உன்னை அந்த பிரசாத் சைட் அடிக்கிறானாமே..."
"அப்படித்தான் அஜிதா சொல்கிறாள்."
"ஏன் உனக்குத் தெரியாதா?"
"ஏன் தெரியாது.. நன்றாகத் தெரியும். ஆனால்.. அவனுக்குத் தைரியம் பத்தாது. தூரத்தில் நின்று பார்ப்பான். கிட்ட வந்து பேச மாட்டான்."
"பேசினால்.. நீயும் ஓ.கே. சொல்லி விடுவாய்."
"முதலில் பேசட்டும்."
லேகா விளக்கை அணைத்து விட்டுப் படுத்து விட்டாள்.
மறுநாள் காலேஜில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்த போது திவ்யா கோபமாய் வந்தாள்.
"ஏண்டி இவ்வளவு கோபமாய் வருகிற..." என்று சாரா கேட்டாள்.
"அவனுக மூக்கை உடைக்கணும்டி..."
"எவனுக மூக்கை?"
"நம் கிளாÞ வானரப் பசங்க மூக்கை..."
"ஏன்.. என்ன செய்தானுக...?"
"நம்ம சுபா பரத நாட்டியம் ஆடுகிறாள் இல்லையா?"
"ஆமாம்."
"அவளைப் பார்த்து அதோ தில்லானா மோகனாம்பாள் போகிறாள்ன்னு சொல்கிறாங்களாம்டி. அவ அப்செட் ஆயிட்டா..."
"கவலையே படாதே.. நாம ஜெயிக்கிறோம்..." சாரா சூளுரைத்தாள்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: கல்லூரிக் காலத்திலே.. -5
கல்லூரிக் காலத்திலே.. -5
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s320/kalluri%2Bkalathiyle.jpg
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s72-c/kalluri%2Bkalathiyle.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy