கல்லூரிக் காலத்திலே. -4

4 அஜீத்தின் முன்னே வந்து நின்ற செல்வி... "ஏன் என்னைக் கூப்பிட்ட?" என்று வினவினாள். "இவனுக்காகத்தான் கூப்பிட்டேன்..."...

4

அஜீத்தின் முன்னே வந்து நின்ற செல்வி...
"ஏன் என்னைக் கூப்பிட்ட?" என்று வினவினாள்.
"இவனுக்காகத்தான் கூப்பிட்டேன்..." அஜீத் ராபர்ட்டின் பக்கம் கை காட்ட.. ராபர்ட் பதறி விட்டான்.
"அது ஒண்ணுமில்லைங்க.. சும்மாதான்.." என்று உளறிக் கொட்டிக் கிளறி மூடினான்.
"சும்மா கூப்பிட்டிங்களா?" அவள் சந்தேகமாய் பார்க்க.. அலெக்ஸின் விழிகள் சுவாரÞயமாய் ராபர்ட்டை நோக்கின.
"இது வேறா.." என்று நொந்து போனான் ராபர்ட்.
"நீங்க.. வேற.. தப்பா நினைக்காதீங்க... உங்க புத்தகம் கீழே விழுந்து விட்டது. அதைக் கொடுக்கத்தான்.."
"இவ்வளவுதானா... நான் என்னவோ.. ஏதோன்னு பயந்து விட்டேன்."
"நல்லதாகவே நினைம்மா.. கண்டதையும் நினைத்தால் என்னவோ.. ஏதோன்னுதான் தோன்றும்.. புத்தகம் கிடந்தால் கிடந்து விட்டுப் போகட்டும். நமக்கு என்னலே வந்தது. சொன்னாக் கேட்கறீங்களா."
"கோபித்துக் கொள்ளாதே அஜீத்."
"நீ கிளம்பும்மா.. லே.. புத்தகத்தைக் கொடு லே..."
ராபர்ட் புத்தகத்தைக் கொடுக்க.. அதை வாங்கிக் கொண்ட செல்வியின் கண்களும்.. ராபர்ட்டின் கண்களும் கலந்தன. அங்கிருந்து நகர்ந்து போனவள். நடந்து கொண்டே.. ராபர்ட்டை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றாள்.
ராபர்ட் இந்த உலகத்திலேயே இல்லை.. கண்கள் செறுக இருந்தவனைப் பார்த்து... அஜீத்திற்கு கவலை வந்து விட்டது.
"இவன் ஏன்லே.. இப்படி போÞ கொடுக்கிறான்?"
"அது வேறு ஒண்ணுமில்லை அஜீத்.. எல்லாம் பார்வை செய்த மாயம்தான்.." என்ற அலெக்Þ.. ராபர்ட்டை பார்த்துக் கண் சிமிட்டி,
"நீ பார்த்த பார்வை..." என்று பாட ஆரம்பித்தான்.
"உன்னை..." என்று கடுப்பான ராபர்ட். கையில் இருந்த புத்தகத்தை தூக்கி அலெக்ஸின் மேல் எறிந்தான்.
"விடுலே.. இது என்ன சின்ன பிள்ளைத்தனமா இருக்கு. அவ பாட்டுக்கு பார்த்து விட்டுப் போகிறா..நம்ப பயல் பதிலுக்கு பார்க்காம என்ன பண்ணுவான்? எதிலயும் ஒரு நியாயம் வேணும்லே..."
"இது எல்லாம் சரி அஜீத்.. நீ ஏன் எந்தப் பெண்ணையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்கிற?"
"எவலே.. என்னைத் திரும்பிப் பார்க்கிறா? இந்தா பேசுவதற்கு கூலி கேட்கிறான் பாரு... இவனையில்ல அப்படி ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போகிறா."
"நீதான் பொம்பளைப் புள்ளைகளை அப்படி அரட்டி வச்சிருக்கயே... அப்புறம் தைரியமா எப்படி உன்னைத் திரும்பிப் பார்ப்பாக..." என்று கூறியபடி ராதாகிருஷ்ணன் அங்கு வந்து உட்கார்ந்தான்.
"வாலே.. ராதா.. என்னடா.. செல்வி.. வந்து ..நின்று. பின் சென்று விட்டதே. பொம்பளைப் புள்ளைகளோட ஆதர்ச நாயகன் இன்னும் ஆஜராகவில்லையேன்னு நினைத்தேன். உடனே வந்துட்ட.. ஏன்லே அலெக்ஸு.. இதை இங்கிலீஷில் எதுவோ சொல்லவாங்களே."
"எனக்கு இங்கிலீஷ் தெரியாது அஜீத்."
"அது தெரியாமலா... டாக்டருக்குப் படிக்க வந்துட்ட?"
"என்னவோ.. வந்துவிட்டேன்.. இப்ப தமிழில் சொல்லவா? வேண்டாமா?"
"சொல்லு.. சொல்லு."
"பேயை நினைத்தவுடன் வந்து நிற்குமாம்... இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம்.. சொல்லவா..?"
"அதை ஏன் விட்டு வைக்கிற.. சொல்லு.. சொல்லு."
"எட்டப்பனை நினைத்தவுடன்.. அவன் கிட்டப்பனாய் வந்து நிற்பானாம்."
"ச்சு.. ச்சு.. என்னமா சொல்றலே நீ.. அலெக்Þ.. இதையெல்லாம் எங்கேலே கண்டு பிடிச்ச.. எப்படிலே.. எப்படிலே.."
நடிகர் திலகம் தன் தம்பியைக் கட்டிப் பிடிக்கும் பாவனையில் அஜீத்.. அலெக்ஸிடம் நாத்தழுதழுக்கப் பேசி கட்டிக்கொள்ள... ராதாகிருஷ்ணனின் முகத்தில் கோபம் வந்தது.
"என்னடா.. என்னை வைத்து ஓட்டறீங்களா?"
"என்னலே.. ராதா.. என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டுப்புட்டியேலே. உன்னை போய் நான் ஓட்டுவேனா." என்று உருக்கமாகப் பேசிய அஜய்.. சட்டென்று முகம் மாறி.
"இப்படியெல்லாம் நான் கேட்பேன்னு நினைத்தியாலே.. ஆமாம். உன்னை ஓட்டுகிறேன்தான். இப்ப அதுக்கு என்ன செய்யணும்கிறே.." என்று விடைத்தான்.
"ஹா.. ஹா.." என்று அலெக்Þ சிரிக்க.
"கண்ணழகா.. எதுக்குடா இந்தச் சிரிப்பு சிரிக்கிற?" என்று ராதாகிருஷ்ணன் அவனை முறைத்தான்.
"அஜீத் உன்கிட்ட உருகினதும்.. என்னடா.. வெள்ளைக் காக்காய் மல்லாக்கப் பறக்குதுன்னு நினைத்தேன். ஆனால்.. சிரூத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லைன்னு அஜீத் நிரூபிச்சிட்டான். ஹா.. ஹா.."
"போதும்டா.. பல்லு.. சுளுக்கிக்கப் போகுது."
"அது சரி அஜீத்..
மோதல்.. மோதல்.. மோதல்..
மோதலுக்குப் பின்னால்.. மோதலுக்குப் பின்னால் காதல்.. காதல்.. காதல்ன்னு பாரதியார் பாடியிருக்காரே..."
"அடப்பாவி அலெக்Þ. பாரதியார் எங்கேலே அப்படி ஒரு கவிதையைப் பாடினார். நீயே உல்டா பண்ணி விட்டு.. பாரதியை ஏன் டிÞடர்ப் பண்றே... விஷயத்துக்கு வா."
"அந்த சாராகூட உனக்கு மோதல் வந்திருக்கு."
"எனக்கு எங்கலே மோதல் வந்திருக்கு..? நம்ம ஆனந்துக்கு இல்ல மோதல் வந்திருக்கு."
"யாருக்கு வந்தால் என்ன? அவள் ஆனந்தை விட்டு விட்டு உன்னையே முறைக்கிறாளா இல்லையா?"
"ஆமாம்லே.. ஆனந்தை ஆனந்தப் பார்வை பார்க்கிறாள். என்னை மட்டும் முறைக்கிறாள். சவட்டுக் கழுதை. எல்லோரையும் தான் முறைக்குது."
"உன்னை மட்டும் அதிகமாய் முறைக்குதா இல்லையா?"
"இப்ப அதுக்கு என்னலே."
"சாராகூட உனக்கு மோதல் வந்திருப்பதால் அவள் கூட உனக்குக் காதல் வர சான்Þ இருக்கா.. இல்லையா."
"அப்படியே மண்டையில் போட்டு விடுவேன். இப்பத் தெரியுதுலே.. ஏன் உன்னை ராபர்ட் வீடு கட்டி அடிக்கிறான்னு. அவள் கூட மல்லுக்கு நிற்கிறது. நம்ம ஆனந்துதான். மோதலோ.. காதலோ.. அது அவங்க பாடு.. நாம நண்பனுக்குத் தோள் கொடுக்கனும். அவன் காலை வாரக்கூடாது.. எதிலயும் ஒரு தர்மம் இருக்கணும்லே..."
"ஆமாண்டா. அந்த சாரா ஆனந்தை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள். இதில் நீ தோள் கொடுக்க என்னடா இருக்கு."
"இதில் உனக்கு என்னலே வருத்தம்? எலே ராதா.. இது ஆனந்திற்கும் சாராவுக்கும் உள்ள பிரச்சனை. அவள் ஆனந்தை திரும்பிப் பார்த்தால் உனக்கென்ன.. பார்க்காவிட்டால் உனக்கென்ன..?"
"அதெப்படி அப்படி விட முடியும்? இது பொம்பளைப் புள்ளைகளோட கௌரவப் பிரச்னை."
"நாங்களும் பொம்பளைக இருக்கிற வீட்டில் பொறந்து வளர்ந்தவங்கதான். எங்களுக்கும் தாய் குலத்தின் மதிப்பும் மரியாதையும் தெரியும். நீ ஊடே கொடி பிடிக்காமல் உன் ஜோலிக் கழுதையை பார்த்துக்கிட்டுப் போ."
ராதாகிருஷ்ணன் எழுந்து.. சாராவை நோக்கிச் சென்றான். அவன் ஏதோ சொல்லவும்.. சாரா அஜீத்தையும்... ஆனந்தையும் திரும்பிப் பார்த்து முறைத்தாள். அலெக்Þ முணுமுணுத்தான்.
"அஜீத்.. எட்டப்பன் அவனோட வேலையைக் காட்டி விட்டான் போல... சாரா திரும்பி முறைக்கிற முறைப்பில் நாம பத்தி எறிஞ்சிருவோம்போல இருக்கே. இப்ப என்ன செய்யலாம்?"
"எதுவும் செய்ய வேண்டாம்.. வெள்ளைக்காரச்சியே எழுந்து வருகிறாள் பாரு..."
'வெள்ளைக்காரச்சி' என்று அஜீத்தால் அன்புடன் விளிக்கப்படும் சாரா... அக்கினிப் பறவையாய் அவர்களை நோக்கி வந்தாள். அவள் வருவதைக் கவனிக்காதவர்கள் போல் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு பேச ஆரம்பித்தனர்... சாரா அஜீத்தை நோக்கி,
"அஜீத்.. நான் உன் கூடப் பேசணும்" என்று கூறினாள்.
"ஏண்லே.. அலெக்Þ.. ராவணன் படம் ரிலீஸாகிருச்சே. நீ போகலியா."
"அவன் எதுக்குப் போகணும். நீதானே முக்கியமாகப் போகணும்."
"ஏம்மா சாரா.. உனக்கு என்ன பிரச்சனை? நாங்க பசங்க.. சினிமாவைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம்.. நீ ஏன் ஊடாலே.. வருகிற.. போய் உன் பிரண்ட்Þ கிட்டப் பேச வேண்டியதுதானே. அது என்ன.. என்னை மட்டும் ராவணன் படத்துக்குப் போகச் சொல்றே. என்ன விஷயம்?"
"உனக்கும் அந்த ராவணன் புத்திதானே இருக்கு. அதனால்தான் உன்னை முக்கியமாய் போகச் சொன்னேன்."
"இந்தா பாரும்மா.. பெண் பிள்ளையாச்சேன்னு பார்க்கிறேன். என்னைப் பார்த்தால் உனக்கு ராவணன் மாதிரி தெரியுதா? ஏன் நான் எவளையாவது தூக்கிக்கிட்டு வந்தேனா. இது நல்லா இல்லை.. ஆனந்த் சொல்லிவைலே."
அவ்வளவுதான் சாராவிற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"என்மேல் கோபம்ன்னா என்னிடம் நேராப்பேசு. அதை விட்டுவிட்டு ஆனந்த் கிட்ட ஏன் சொல்கிற. அவன் யார் என்னைக் கண்டிக்க?"
"இதோ பாரும்மா. இந்தப் பஞ்சாயத்துக்கு நான் வரலை.. இப்ப நீ ஏன் என்கிட்ட வந்து.. என்னைப் பார்த்து 'ராவணன்'னு சொன்னே? முதலில் அதுக்குப் பதில் சொல்லு."
"வேண்டாம்.. அஜீத்.. என்கிட்ட மோதாதே..."
"உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை?"
"நீ என் ஆனந்திற்கு சப்போர்ட் பண்ணுகிற?"
"ஏன்னா.. அவன் என் நண்பன்."
"அதுக்காக.. அவன் என்ன செய்தாலும் கேள்வி கேட்காமல் சப்போர்ட் பண்ணுவியா? நியாய.. அநியாயம் வேண்டாமா? அவன் என் பின்னாலேயே சுற்றுகிறான். அது தெரியுமா உனக்கு?"
"அப்படியா ?தெரியாதே. ..இரு உன் முன்னாலேயே இவனைக் கண்டிக்கிறேன். ஏன்லே ஆனந்த் இவளை ஏன்லே சுத்தற. ?இவளைச் சுத்துகிறதுக்குப் பதில் நவகிரகங்களைச் சுத்தினாலாவது நல்லது நடக்கும். இதைச் சுத்தி என்ன ஆகப் போகுது."
"தப்புத்தான் அஜீத். என் புத்திக்கு இது எட்டலையே."
"பாத்தியாம்மா. இவன் நல்லவன். சொன்னால் கேட்டுக்குவான். நீ போ.. போய்.. போட்டுக் கொடுக்கிற ராதாகிருஷ்ணனை புகழந்து பேசு.. எங்க கிட்ட நின்று பேசி.. எங்க நேரத்தை வீணடிக்காதே. டேய் வாங்கடா."
அஜீத் எழுந்து முன்னால் செல்ல.. மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். ஆனந்த் மட்டும் தேங்கினான். சாராவைப் பார்த்து...
"தேக்குமரக் காடு பெரிசுதான்.
தீக்குச்சி என்னவோ சிரிசுதான்.
தேக்குமரக் காடு எரியுதடி.."
என்று சன்னமாய் பாடினான்.
"என்ன திமிரா?"
"ஆமாம்."
"என்கிட்ட இதையெல்லாம் வைத்துக் கொள்ளாதே..."
"வைத்துக் கொள்வேன்."
"நீயென்ன ரௌடியா?"
"ஆமாம் ரௌடிதான். காதல் ரௌடி."
"காதலா. அடப்பாவி. இப்போதுதான் முதல் வருடத்தை முடித்து இரண்டாம் வருடத்திற்கு வந்திருக்கிறோம். அதற்குள் காதலா?"
"இன்னும் இரண்டரை வருசம் தான் இருக்குன்னு நானே கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீ அதற்குள்.. என்கிறாயே..."
"நீயும். உன் மூஞ்சியும்.. பார்க்கவே சகிக்கவில்லை. இதில் என் மேல் காதல்ங்கிற."
"எனக்கு மட்டும் உன் முகரையை பார்க்கச் சகிக்குதா? நான் பாட்டுக்கு தேமேன்னு நானாச்சு... நானடிக்கும் விசிலாச்சுன்னு இருந்தேன். என்னை வம்புக்கிழுத்து.. உன் முகரையைப் பார்க்க வைத்ததே நீதானே."
"என்னது... நான் உன்னை வம்புக்கு இழுத்தேனா?"
"பின்னே.. நீ தானே உன்னைப் பார்த்து நான் விசிலடிப்பதாய் என் மேல் பழி போட்ட.. அப்புறம் தானே.. நான் உன் முகரையைப் பார்க்கவே ஆரம்பித்தேன். எனக்கு ஒரு சந்தேகம் சாரா."
"என்ன?"
"உனக்கு என் மேல் ஒரு இதுதானே..."
"கொலையே பண்ணிடுவேன். உளராதே..."
"ஏய்... ஏய்... இப்படியெல்லாம் நடித்தால் நான் ஏமாந்து விடுவேனா? மனதிற்குள் என் மேல் ஒரு இது இல்லாமலா... நான் உன்னைப் பார்த்து விசிலடிப்பதாய் சொல்லி என்னை... உன்னை... பார்க்க வைத்த... ம்..?"
"உன் மேல்.. எனக்கு.. இதுவா..? ஹ..."
சாரா உதட்டை அலட்சியமாகச் சுளித்தாள். ஆனந்த் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவாறு மீண்டும் பாட ஆரம்பித்தான்.
"உசிரே போகுது... உசிரே போகுது...
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே..."
"ஏன்டா... எல்லோரும் வில்லனாகவே ஆசைப்படறீங்க?"
"ஹீரோவாகத்தான் நீ விடமாட்டேன் என்கிறாயே..."
"ஆனந்த்.. நாம் காம்ப்ரமைÞ பண்ணிக் கொள்ளலாம்."
"என்னவென்று... நீ என் மேலிருக்கிற இதுவை ஒப்புக் கொண்டு என்னை காதலிக்க ஆரம்பிக்கப் போகிறாய்.. அதுதானே."
"நீ திருந்தவே மாட்டாயா? அன்றைக்கு நான் செய்தது தப்புத்தான். அதற்காக ஸாரி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து என்னை டிÞடர்ப் பண்ணாதேடா.. ப்ளீÞ."
"ஆமாண்டி... நீ திமிர்தனமாய் என் மேல் பழி போடுவாய். என்னைப் பற்றிக் கம்ப்ளெயின்ட் கொடுப்பாய். ஹெச்.ஓ.டி. நல்லவராய் இருக்கப் போய் நான் தப்பித்தேன். அப்படியில்லாமல் உன் மாய்மாலத்தை நம்புகிறவராய் இருந்திருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்?"
"அதுதான்... எதுவும் நடக்கவில்லையே."
"அது வேறு உனக்குக் குறையா?"
"நான்தான் ஸாரி சொல்கிறேனே."
"நீ ஸாரி சொல்லி விட்டால் எல்லாம் சரியாப் போச்சா?"
"பின்னே... நான் என்னதான் பண்ணனும்கிற?"
"நான் உன்னை சைட் அடிப்பதாகத்தானே நினைத்தாய்? அதுதான் உன் ஆசையைக் கெடுக்க வேண்டாமென்று சைட் அடிக்கிறேன். உன் கவனத்தை கவர விசிலடித்து முயற்சி பண்ணினேன்னுதானே சொன்னாய்? உன் பின்னால் சுற்றி... உன் கவனத்தை கவர முயற்சி செய்கிறேன்."
"ஆனந்த்... வேண்டாம்..."
"நீ வேண்டும். வேண்டாம்ன்னு டிசைட் பண்ண நான் என்ன உன் கையிலிருக்கும் பொம்மையா?"
"நீ என்ன செய்தாலும் நான் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்."
"நான் பார்க்க வைத்து விட்டால்...?"
"அதையும் பார்க்கலாம்..."
"எதையும் பார்க்கலாம் என்கிறாய்? என்னைத்தானே."
"யு... யு..."
"ஐ... ஆம்... ஆனந்த்.. செகன்ட் இயர்."
"என்னவோ செய்து தொலை. இனி உன்னுடன் பேசுவதில் அர்த்தமே இல்லை. நான் போகிறேன்..."
"நான் வருகிறேன்."
"எங்கே?"
"உன் பின்னால்தான்."
சாரா... கோபத்துடன் தரையை தேய்த்தவாறு விரைந்து நடந்தாள். ஆனந்த் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் இரு கைகைளையும் நுழைத்தபடி சீழ்க்கையடித்தவாறு அவளைப் பின் தொடர்ந்தான்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: கல்லூரிக் காலத்திலே. -4
கல்லூரிக் காலத்திலே. -4
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s320/kalluri%2Bkalathiyle.jpg
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s72-c/kalluri%2Bkalathiyle.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy