கல்லூரிக் காலத்திலே. -3

3 அஜீத் நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சாராவின் முகம் சிவந்தது. அதை உணராத ஹெச்.ஓ.டி. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார...

3

அஜீத் நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சாராவின் முகம் சிவந்தது. அதை உணராத ஹெச்.ஓ.டி. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
"ஈவ் டீஸிங்ன்னா என்னம்மா. உன்னைத் தவறான முறையில் பார்த்தாலோ இல்லை தவறான வார்த்தைகளை உன்னைப் பார்த்துப் பேசினாலோ.. நீ கம்ப்ளெயின்ட் பண்ணுவதில் அர்த்தமிருக்கிறது.. சும்மா.. எல்லோரும் என்னைப் பார்க்கிறாங்கன்னு கம்ப்ளெயின்ட் பண்ணாதே."
அஜீத் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீதரனின் காதைக் கடித்தான்.
"ஏண்லே... நாம பார்க்கணும்கிறதுக்காகத்தானே இவ்வளவு மேக்கப் போட்டுக்கிட்டு சலம்பிக்கிட்டு வருகிறாள்... பார்க்கலைன்னா வருத்தப்படுவாளேங்கிற ஆதங்கத்தில்தானே பார்க்கறோம். அதைப் புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறாளே.."
"வேணும்னா... நான் போய் ஹெச்.ஓ.டி. கிட்ட இதையும் சொல்லச் சொல்லி சொல்லிவிட்டு வரவா..?"
"நீ செய்தாலும் செய்வேலே..."
ஹெச்.ஓ.டி. சாரா கொடுத்த பேப்பரை திருப்பிக் கொடுத்துவிட்டு புத்திமதி கூறும் பாவனையில் இதமாகக் கூறினார்.
"இதோ பாரும்மா.. இது கோ-எஜுகேசன் காலேஜ்.. பாய்ஸை ஏன் எதிரியாகப் பார்க்கிறாய்? பிரண்ட்லியாக பழகிப் பாரேன்.. ஆண்.. பெண் வித்தியாசமெல்லாம் வராமல் வி ஆர் ஹியூமன் பீயிங்க்Þன்னு இருந்து பாரேன்.. நீ அவங்க இல்லாத உலகில் வாழவும் முடியாது.. அவங்களும் பெண்கள் இல்லாத உலகில் வாழ முடியாது. ஸோ.. நீங்கள் ஒற்றுமையாக படிக்கும் வழியைப் பாருங்கள்.. பாய்Þ.. உங்களையும் வார்ன் பண்ணுகிறேன்.. பாய்Þ.. கேர்ள்ஸுங்கிற வித்தியாசம் இல்லாமல் பழகுங்கள்."
சாராவின் முகம் சுண்டி விட்டது. அன்றிலிருந்து அவள் பெயர் மாணவர்கள் மத்தியில் 'பெட்டிசன் பெரிய நாயகி' என்று ஆகிப் போனது.
"ஏன்லே... ஆனந்த் தினமும் அவள் முகத்தைப் பார்க்கிறதுதான் இனி உன் வேலைன்னு சபதம் போட்டிருக்கயே.. அவள் முகத்தைப் பார்த்து என்னலே செய்யப் போறே..."
"அது தெரியாதாடா அஜீத்.. கல்யாணம் பண்ணிக் கொள்வான்."
"அலெக்Þ.. இவன் மட்டும் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு வை.. பர்Þட் நைட்டே இவன் வாழ்க்கையில் கிடையாது. அம்பேல்தான்."
"ஏண்டா பாவி.. இப்படி சாபம் விடுகிற.."
"பின்னே..? நீ தொட்டாலே அவள் பெட்டிசன் போடுவாளே..."
மாணவர்கள் ஹோஹேவென்று சிரிப்பதைக் கண்டும் காணாதவள் போல் சாரா.. தனது தோள் பையை மாட்டிக் கொண்டு சென்று விட்டாள்.
"நீ அவசரப்பட்டுட்டியோன்னு தோணுது சாரா.."
உடன் நடந்த லேகா கூறினாள்.
"எனக்கும் அப்படித்தான் தோணுது.."
"அவன் சாதாரணமாகவே விசில் அடிக்கிறவன் தான்.. எனக்குத் தெரியும்.. உன்னைப் பார்த்துத்தான் விசிலடித்தான்னு நிச்சயம் சொல்ல முடியாது."
"கிளாÞ ரூமிற்குள் விசில் அடிக்கலாமா?"
"கூடாதுதான்.. ஆனால் பசங்க உலகமே வேறு சாரா."
"அந்தப் பசங்க மத்தியில்தான் ராதாகிருஷ்ணன் போல ஜென்டில்மேன்களும் இருக்கிறாங்க. ஹி இÞ ஸோ.. நைÞ.. பட்.. அந்த அஜீத் இருக்கிறானே.. சுத்த ரோக்.. அவனும்.. அவன் பேச்சும்.. எதுக்கெடுத்தாலும் 'லே' போட்டுக் கொண்டு.. எனக்கு பெட்டிசன் பெரிய நாயகின்னு பெயர் வைத்திருக்கிறானாம்.. அவனைத் தூக்கி.. தூத்துக்குடி கடலில் போட்டால்தான் என் மனம் ஆறும்."
"அவன் சுறா மீன் மேல் சவாரி செய்து கொண்டு வந்து நமக்கு முன்னால் கரையில் நிற்பான். மினிÞடர் வீட்டுப் பையன்.. வீண் வம்பு எதுக்குடி?"
"நீ எதுக்கு அவனுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுகிற?"
"உள்ளதைச் சொன்னால் சப்போர்ட்டா.. பேசாமல் வா."
அடுத்து வந்த தினங்களில்... காலேஜில் சாராவைக் கண்டாலே சீழ்க்கை அடிக்க ஆரம்பித் தான் ஆனந்த்.. வகுப்பறை தவிர.. மற்ற இடங்களில் அவனது சீழ்க்கையொலி அவளைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. பொறுக்க முடியாமல் தோழிகளிடம் தூது விட்டாள் சாரா.

"ராபர்ட்.. ஏன்லே டல்லா இருக்கே...?"
"ச்சு.. ஒன்றுமில்லைடா.. இவன் தொல்லை தாங்கலை."
"எவன் தொல்லை..?"
"அதுதான் என்னோடு ஹவுÞ மோட்டாய் ஒருவன் தங்குகிறானே."
"யாரைச் சொல்றே.. நம்ம அலெக்ஸையா? அவன் என்ன பண்ணினான்?"
"நாய் வளர்க்கணும்கிறான்."
"வளர்த்தால் வளர்த்து விட்டுப் போகிறான்..."
"அஜீத்.. வேண்டாம்.. அவனைத் தூண்டி விடாதே.. இவன் படுத்தும் பாடே தாங்க முடியவில்லை. இதில் இவனுடைய நாய் வேற வந்து படுத்தணுமா?"
"இவன் என்னடா படுத்துகிறான்."
"அதை என்கிட்ட கேட்காதே பிரசாத் கிட்டக் கேளு... எனக்குச் சொல்கிற மூடு இல்லை..."
"என்னலே.. பிரசாத்.. என்ன விஷயம்லே."
பிரசாத் வாயைத் திறக்கப் போகையில் அஜிதா அங்கு வர... அஜீத் புருவம் தூக்கினான்.
"என்னலே.. இது.. கோழிப் பண்ணையிலிருந்து ஒரு கோழி மட்டும் பிரிஞ்சு நம்ம சேவல் பண்ணை பக்கம் வருது. இவ இந்நேரம் வரைக்கும் பெட்டிசன் பெரிய நாயகி பக்கத்தில் இல்ல உட்கார்ந்திருந்தாள்."
அஜிதா நேராக வந்து அஜீத்தின் முகம் பார்த்தாள்.
"அஜீத்.. நான் உன்கிட்டப் பேசணும்."
"ஏன்.. எங்களைப் பார்த்தால் உனக்கு கிளாÞ மேட்டாகத் தெரியலையா? அது என்ன அவனிடம் மட்டும் உனக்குப் பேச்சு.."
"பொறுடா ஸ்ரீதரா.. உனக்கு விவரமே பத்தலைடா.. இவள் பெயர் அஜிதா.. மச்சான் பெயர் அஜீத்.. மேட்ச் அகுதுல்ல.. அதுதான்.. என்ன அஜிதா நான் சொல்வது சரிதானே..."
"அலெக்Þ ப்ளீÞ.. நான் முக்கியமாய் பேச வந்திருக்கிறேன்."
"இருங்கலே.. பாப்பா என்ன சொல்கிறதுன்னு கேப்போம்."
"பாப்பாவா.. யார்.. நானா?"
"சும்மா ஒரு பாசத்திலே சொல்கிறதுதான்.. நீ சொல்லும்மா.."
"அம்மாவா?"
"இது என்னலே.. இந்தப் பொண்ணு பாப்பான்னாலும் முறைக்குது. அம்மான்னாலும் அலறுது. இதுகிட்ட எப்படிப் பேசுறது. ராதா எங்கேலே போனான்? பெண்கள் கிட்ட பேச்சு வார்த்தை நடத்த அவன்தான் லாயக்கு."
"அஜீத்.. சாரா வருத்தப்படுகிறாள்."
"சாராவா..? யாருலே அது."
"நம்ம பெட்டிசன் பெரிய நாயகிதான் மச்சான்."
"அப்படிச் சொன்னாத்தானே நமக்குத் தெரியும்? அதை விட்டு விட்டு அப்பா அம்மா வைத்த பெயரைச் சொன்னால் யாருக்குத் தெரியும்? ஏம்மா அஜிதா.. பெட்டிஷன் பெரியநாயகி எதுக்கு வருத்தப்படுது? பெட்டிசன் போட பேப்பர் கிடைக்கலையா? நான் வேணும்னால் வாங்கித் தரவா..?"
"அஜீத்.. நாம் காலேஜ் Þடூடண்ட்Þ."
"நீ சொல்லித்தான் தெரியனுமா? எங்களுக்குத் தெரியாதா? இதைச் சொல்லவா இவ்வளவு தூரம் வந்தே...?"
"நாம கொஞ்சம் மெச்சூரா பிஹேவ் பண்ணனும்."
"அதை உன் பிரண்டு பெட்டிசன் பெரியநாயகி கிட்ட சொல்லு."
"ஆல்ரெடி நாங்க எல்லாம் சொல்லிட்டோம்."
"அப்புறம் என்ன?"
"அவள் அன்றைக்கு நடந்ததற்கு வருத்தப்படுகிறாள்.."
"அப்படியா..? ஏய் ரவிந்திரா.. விலகுலே.. அது வருத்தப்படறதைப் பார்ப்போம்."
அஜீத் தன் நண்பனின் தலையை விலக்கி எட்டிப் பார்க்கையில் சாரா. திவ்யாவிடம் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
"ஏம்மா.. அந்தப் பொண்ணு வருத்தப்படுதுன்னு சொன்னே.. சிரிச்சுக்கிட்டு இருக்குது..?"
இவனிடம் தூது வருகின்ற வேலையை ஏன்தான் ஏற்றுக் கொண்டோமோ என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் அஜிதா. இவனுக்கு ஏன் பெண்களைக் கண்டாலே ஆவதில்லை என்ற கேள்வியை நெஞ்சிலேயே புதைத்துக் கொண்டவள்..
"நாம பிரண்ட்ஸா ஆகிடலாம்ன்னு அவள் சொல்லச் சொன்னாள்"
"அதாவது வெள்ளைக் கொடி காட்டுது."
"ஆமாம்.. நாம சமாதானமாகப் போய்விடலாம்."
"அப்படியா.. அதுவும் சரிதான். ஆமாம். சமாதானமா போகணும்னால் சமாதான உடன்படிக்கை ஏதாவது செய்துகொள்ள வேண்டுமே.. என்ன சொல்லி விட்டிருக்கு?"
அஜீத்தின் சாதுர்யத்தைக் கண்டு அவனது நண்பர்கள் மனதிற்குள் நகைத்துக் கொண்டிருக்க. அதை அறியாத அஜிதா.. சாரா சொல்லி விட்டதைச் சொன்னாள்.
"ஆனந்த்.. சாராவை பாலோ பண்ணுவதை நிறுத்தணுமாம்."
"ஏன்லே.. நீ அந்தப் பெண்ணை பாலோ பண்ணுகிறாயா?"
"சேச்சே.. நான் போகிற பாதையில் எனக்கு முன்னாலேயே அந்தப் பொண்ணு தினமும் போகுது அஜீத். இதை நீ என்னன்னு கேளு."
"கேட்டியாம்மா.. இவன் ஒண்ணும் அந்தப் பொண்ணை பாலோ பண்ணவில்லையாம்.. அதுதான் இவனுக்கு முன்னாடியே போகுதாம். உன் பிரண்டு கிட்ட சொல்லி வை. இதெல்லாம் சரியில்லே. ஆம்பளைன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா? பெட்டிசன் போட அதுக்குத்தான் தெரியுமா? எனக்குத் தெரியாதா? இனிமே என் பிரண்ட் போகிற பாதையில் அவனுக்கு முன்னாடியே போகிற வேலையெல்லாம் வைத்துக்கக் கூடாதுன்னு நான் கட் அன்ட் ரைட்டா சொல்லி விட்டேன்னு போய் சொல்லு."
அஜிதாவிற்கு.. சிரிப்பதா.. இல்லை அழுவதா என்று தெரியவில்லை.
"அஜீத்.. தினமும் அவளைப் பார்த்தால் விசிலடிக்கலாமா?"
"யார் விசிலடித்தது நானா?"
"உன்னைப் போய் சொல்வேனா?"
"பின்னே... வேறு யாரைச் சொல்கிறாய்?"
"தெரியாதது போல் கேட்கிறாயே..."
"தெரியாமல்தான்ம்மா கேட்கிறேன். சொல்லு."
"விசிலடிச்சான் குஞ்சு.. நம்ம காலேஜில் வேறு யார் இருக்கிறாங்க.. எல்லாம் நம்ம ஆனந்த்தான்."
"நம்ம ஆனந்தா? புதுசா என்னம்மா சொந்தம் கொண்டாடுகிற?"
"என்ன இருந்தாலும் என் கிளாÞ மேட் இல்லையா?"
"நெஞ்சை டச் பண்ணிட்டம்மா.. லே.. ஆனந்த்.. நீ விசிலடித்தாயா?"
"விசிலடிக்கிறதா? அது எப்படி மச்சான்..."
"அடடா.. பயபுள்ளைக்கு இது தெரியலை.. இந்தப் பச்சைப் பிள்ளையைப் பார்த்து பழி போடுகிறீர்களேம்மா.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா...? ஆனந்த்.. விசிலடிக்கிறது எப்படின்னா.. இப்படி விரலை மடக்கிக்கணும். நாக்கை மடிச்சுக்கணும். இப்படிச் செய்யனும்."
"இப்படியா மச்சான்."
"இப்படி இல்லைலே.. இப்படி."
அஜீத் பலமாய் விசிலடிக்க சாரா திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
"எனக்கு வரலைடா மச்சான்."
"பாவம்.. இவனுக்கு வரலையாம். அதனால்.. இரண்டாவது உடன்படிக்கையும் கேன்சல்.. அப்புறம் வேறு என்ன.."
"சொல்லிட்டாலும்.."
அஜிதா நொடித்து விட்டுப் போய் விட்டாள். அவள் மனம் அஜீத்தை தாளித்துக் கொண்டிருந்தது.
"என்னடி சொல்கிறானுங்க...?"
"இது வேலைக்கு ஆகாது சாரா."
"ஏன்..?"
"அந்த அஜீத் மலை இறங்க மாட்டேன்கிறான். அவனுக்கு பெண்களைக் கண்டாலே ஆக மாட்டேன் என்கிறது."
"அவனுக்கு ஆகாவிட்டால் நமக்கு என்ன வந்தது? சொல்லிப் பார்ப்போம். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் போகட்டும்."
சாரா தீவிரமான முகபாவனையுடன் பேசிக் கொண்டிருந்ததை கவனித்த அஜீத் நண்பர்களிடம் கூறினான்.
"விக்டோரியா மகாராணி.. வினயமா பேசுகிறாளே.. என்னலே பேசுகிறா... ஒரு இழவும் காதில் விழ மாட்டேங்குதே..."
"அவங்க அவ்வளவு தூரத்தில் இருந்தால் எப்படி காதில் விழுகும்...?"
"இடைவெளி குறையனும்கிறே..."
"ஆமாம்..."
"அப்படி அவளுக பேசுகிற பேச்சை அவசியம் கேட்கணுமாலே.. தொலையுது விடு..
 அப்போது.. செல்வி அவர்களைக் கடந்து போனாள். அவள் கையில் இருந்த புத்தகங்களில் ஒன்று நழுவி கீழே விழுந்தது.
அது ராபர்ட்டின் அருகே விழுந்து வைக்க... அவன் குனிந்து அதை எடுத்துக் கொண்டு பேந்தப் பேந்த விழித்தான்.
"என்னலே அது?"
"புத்தகம்?"
"யாருடையது?"
"என்ன அஜீத்.. தெரியாதது போல் கேட்கிறாய்? செல்வியுடையது தான்.. என் பக்கத்தில் விழுந்தது தெரியாமல் போகுது."
"ம்.. பெயரெல்லாம் தெரியுதில்ல.. அப்பக் கூப்பிட்டுக் கொடுக்க வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு.. ஏன்லே.. ஆடு திருடின கள்ளன் போல இந்த விழி விழிக்கிறாய்?"
"எப்படிடா கூப்பிடுவது?"
"ஏன் வாயால்தான் கூப்பிடனும். எலே. இவனுக்குக் கூப்பிட்டுக் காண்பிங்கலே.. பார்த்துக்கலே ராபர்ட்.. இவங்க கூப்பிடுவது போல் கூப்பிடு."
ராபர்ட் வாயை அசைத்தான்.. வார்த்தைகள் வர வில்லை. அஜீத் அவன் வாய் அசைவதை விசித்திரமாய் பார்த்தபடி.
"என்னலே.. இது.." என்று அலெக்ஸைப் பார்த்துக் கேட்டான்.
"அது வேறு ஒண்ணுமில்லை அஜீத்.. அவன் கூப்பிடத்தான் நினைக்கிறான். ஆனா.. இஞ்சி இடுப்பழகனுக்கு.. வாயில் வார்த்தைகள் வரவில்iல். வெறும் காத்துத்தான் வருது."
ராபர்ட் அலெக்ஸை முறைத்தான்.
"ஆரம்பிச்சுட்டியா..."
"அப்போ நீ கூப்பிடு..."
"ஏன் நீ கூப்பிட வேண்டியதுதானே..?"
"நானா புத்தகத்தை எடுத்தேன்..?"
"எடுத்தால் நான்தான் கூப்பிட்டுக் கொடுக்கணுமா? நீ குடுக்க வேண்டியது தானே..."
"அடச்சை.. இதற்கு ஒரு வழக்காலே... ஏம்மா... செல்வி.. இங்கே வாம்மா..."
அஜீத் அழைக்கவும்.. அந்தச் செல்வி நின்றாள்... திரும்பிப் பார்த்தாள். பின் அவர்களுக்கு அருகில் வந்து நின்றாள்.
ராபர்ட்டின் இதயத்தில் யாரோ.. டிரம் வாசிக்க ஆரம்பித்தார்கள். புத்தகத்தை பிடித்திருந்த அவனது கைகள் நடுங்கின. வாய் குழறியது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: கல்லூரிக் காலத்திலே. -3
கல்லூரிக் காலத்திலே. -3
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s320/kalluri%2Bkalathiyle.jpg
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s72-c/kalluri%2Bkalathiyle.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy