கல்லூரிக் காலத்திலே -2

2 வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு... நாட்கள் ஓட ஆரம்பித்தன. புதிய மாணவர்கள்... மெல்ல.. மெல்ல பழைய மாணவர்கள் ஆகிக் கொண்டு வந்தார்கள். அஜீத்துட...

2

வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு... நாட்கள் ஓட ஆரம்பித்தன. புதிய மாணவர்கள்... மெல்ல.. மெல்ல பழைய மாணவர்கள் ஆகிக் கொண்டு வந்தார்கள். அஜீத்துடன் மோதிய ராதாகிருஷ்ணன் அவன் தோள் மேல் கை போட்டுக் கொண்டான். ஹாÞடல் பிடிக்கவில்லையென்று ராபர்ட் ஹாÞடலை விட்டு வெளியேறி... தனி வீடு பார்த்துக் தங்க... அலெக்ஸும் அவனுடன் சேர்ந்து கொண்டு... வாடகையைப் பகிர்ந்து கொண்டான்... எங்கும் தன் கொடியை பறக்க விடும் அஜீத்திற்கு ஹாÞடல் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. வகுப்பறை இனிமையான தருணங்களை வழங்கிக் கொண்டிருந்தது.
அன்று காலையில்... அடித்து விடும் சிகப்பில் உடை உடுத்திக் கொண்டு வந்த சாரா... அதே கலரில் லிப்Þடிக் வேறு போட்டிருந்தாள். அஜீத் புருவம் உயர்த்தினான்.
"ஏண்லே.. இவ படிக்க வருகிறாளா... இல்லை நடிக்க வருகிறாளா."
"உனக்கு அது தேவையா.. பேசாமல் உன் ஜோலிக் கழுதையைப் பார்ப்பியா.. அதை விட்டுவிட்டு அவளை ஏன் நோட்டம் விடுகிறே..."
அருகில் அமர்ந்திருந்த ராதாகிருஷ்ணன் அடிக் குரலில் உறுமினான். அலெக்Þ அவன் பேசுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். பிரசாத்தும் ராபர்ட்டும்... ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ரகசியமாய் சிரித்துக் கொண்டனர்.. அதை ராதாகிருஷ்ணன் பார்த்து விட்டான்.
"ஏண்டா... கண்ணழகா... உன் ஆனந்தக் கண்ணைக் காட்டி முழிச்சுக்கிட்டு... ஏண்டா என்னை இப்படிப் பார்க்கிற?" என்று அலெக்ஸிடம் அவன் மோத...
"ஏன்லே... இவன் ஆம்பளைப் பையன்தானே... இவன் பார்த்தால் நீ ஏன்லே டென்ஷன் ஆகிறாய்.. ஹா.. ஹா.." என்றான் அஜீத்.
"இவன் வேலை உனக்குத் தெரியாது அஜீத். இவன் என்னை இமிடேட் பண்ணுகிறான். என்னை மாதிரியே பேசிக் காட்டுகிறான்."
"அப்படியா.. ஏன்லே அலெக்Þ... போயும் போயும் நீ இமிடேட் பண்ண இவன்தான் கிடைத்தானா? வேறு எந்த நல்ல மூஞ்சியும் கிடைக்கவில்லையா?"
"அஜீத்.. வேண்டாம்... காலையில் இருந்தே.. நீ கடுப்படிக்கிற."
"காலையில் இருந்தேவா.. இவன் என்னலே சொல்லுகிறான். ஓ.. நீ அதைச் சொல்கிறாயா? ஏன்லே அலெக்Þ.. நான் இவனைக் கண்ட நாள் முதல் இந்த நாள் வரை கேட்கனும்.. கேட்கனும்ன்னு நினைத்துக்கிட்டு இருக்கேன்.. இவன் ஏன்லே... அவளைப் பற்றி நான் பேசினாலே டென்சன் ஆகிறான்."
அலெக்Þ உற்சாகமாக கண் சிமிட்டியபடி கூறினான்.
"அது வேறு ஒன்றுமில்லை அஜீத்.. அவள் இவனைப் பார்த்து 'நீ ரொம்ப நல்லவன்..'னு சொல்லிட்டாளாம்... அதுதான் சார்... இந்தப் பாடுபடுகிறார்."
"நல்லவன்னு சொன்னாளா.. யாரு.. இவனைப் பார்த்தா அப்படி ஒரு வார்த்தையைச் சொன்னாள். ச்ச்.. ச்ச்.." என்றான் அஜீத்.
"எதுக்குடா இப்ப நாயைக் கூப்பிடுற.." என்று எரிந்து விழுந்தான் ராதாகிருஷ்ணன்.
"அதுதானே.. நீ பாட்டுக்கு.. ச்ச்... போடாதே அஜீத்.. நம்ம காலேஜ் காம்பவுண்டுக்கு வெளியில் நாய்களுக்கு பஞ்சமில்லை.. நீ கூப்பிட்டு வைத்தால்... அது பாட்டுக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து விடப் போகிறது.." ராபர்ட் கவலையாகக் கூறினான்.
"நாயை நினைத்து இவன் ஏன்லே இப்படிக் கவலைப் படுகிறான்."
"அவனுக்கு நாய் என்றாலே பிடிக்காது அஜீத்." பிரசாத் சிரித்தான்.
"ஆனால் எனக்குப் பிடிக்கும்" என்று அலெக்Þ சொன்னான்.
"இப்ப எதுக்கு நாயைப் பத்தி ஆராய்ச்சி பண்ணுகிற" ராபர்ட் வினவ,
"அதுதானே... எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ டிராக் மாறுகிறோமே... அலெக்Þ... நான்கூட அந்த சாரா பொண்ணின் அலட்டலைப் பார்த்து.. ரொம்ப விவரமான பொண்ணுன்னு நினைச்சுட்டேன். அவள் கடைசியில் இப்படி ஒரு அப்பாவியாய் இருக்காளே.. இவனைப் பார்த்து 'நல்லவன்னு' சொல்லிட்டாளே.." என்று அஜீத் கூறினான்.
அலெக்Þ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.
"எதுக்குடா.. இந்தச் சிரிப்பாணி சிரிக்கிற.. இந்தா அஜீத்.. நீ வாயைத் திறந்தாலே எனக்கு வில்லங்கம் தான். வேண்டாம் சொல்லிட்டேன்."
ராதாகிருஷ்ணன் கோபமாய் எழுந்து கொள்ள முயல.
"அட.. இருலே.. இதுக்குப் போய் கோவிச்சுக்கிட்டு போறவன்.." என்று அஜீத் கட்டிக் கொண்டான்.
திடீரென்று முன் பெஞ்ச் பக்கம் சத்தம் கேட்டது.. ஆனந்த் எதையோ கூற.. சாரா கோபமாய் பேசிக் கொண்டிருந்தாள். அவள் அருகிலிருந்த லேகா.. சாரா பேசுவதை ஆமோதித்துக் கொண்டிருந்தாள்.
"என்னலே... அங்கே கலவரம் வெடிச்சுருக்கு..."
"தெரியவில்லை அஜீத்.. ஆனந்த் கிட்டத்தான் சாரா கோபமாய் பேசிக்கிட்டு இருக்கா. இவனைப் போய் ஏன் பேசுகிறா..?"
"டேய் கண்ணழகா.. ஆனந்த் என்னவோ யோக்கியம் போல் பேசுகிறாயே.. இவன் அவளிடம் என்ன சொன்னானோ.. என்னவோ."
"ராதா.. வாயை மூடு... ஆனந்த் யோக்கிமில்லாமல் நீதான் யோக்கியமா? நீ போய் கேர்ள்ஸிடம் பீலா விட்டுக் கொண்டு நடிப்பது போல் நாங்க செய்ய மாட்டோம்.. அடக்கி வாசி.."
"அவனைச் சொன்னால் உனக்கேன்டா பிரசாத் கோபம் வருது? நான் உன்னைச் சொன்னேனா?"
"யாரைச் சொன்னால் என்ன? அவனைச் சொன்னால் என்னைச் சொன்னது போல்தான்.. ஏண்டா.. நம்ம பாய்ஸுன்னு நினைக்காமல் கேர்ள்Þ&க்கே சப்போர்ட் பண்றே..."
"இவன் எதுவும் பேசாமலா அவள் சண்டை போடுவாள்? நான் நியாயத்தைத் தான்டா சொன்னேன்."
"உன் நியாயத்தைத் தூக்கி உடைப்பில் போடு... நீயும் உன் நியாயமும்.. ஒருத்தி உன்னைப் பார்த்து நல்லவன்னு தெரியாத் தனமாய் சொல்லி விட்டாள் என்பதற்காக... நம்ம பிரண்டையே பேசுகிறாயே... நீ எட்டப்பன் பரம்பரையில் பிறந்தவனாடா..?"
"டேய் அலெக்Þ.. என் பரம்பரையை இழுக்காதே.. என் பரம்பரையைப் பத்தி உனக்கென்ன தெரியும்.. திருமலை நாயக்கர்கிட்ட வீரவாள் வாங்கின பரம்பரைடா... எங்க பரம்பரை."
"பரவாயில்லைலே. காலங்கார்த்தாலே.. ஒரு பெண் பிள்ளை வெடியைப் பத்த வைச்சு அங்க போட்டால்... இங்க வெடிக்குதாலே... லேய் ராதா... அடங்கு... அதோ ஆனந்த் வருகிறான். என்னன்னு விசாரிப்போம்."
அருகில் வந்த ஆனந்த் கோபாவேசமாய் இருந்தான். கண்கள் சிவந்திருந்திருந்தன. கைகள் புடைத்துக் கொண்டிருந்தன.
"அவனை உட்கார வைத்து.. அரைபாட்டில் தண்ணியை அவன் வாயில் ஊத்துங்கலே.. கோபம் அடங்கட்டும். அப்புறம் என்னன்னு விசாரிப்போம்."
ராபர்ட் கொடுத்த தண்ணீரை மடக்... மடக்கென்று குடித்த ஆனந்த் ஆசுவாசமானான்.
"என்னலே.. என்ன சமாச்சாரம்.. அவ ஏன்.. எண்ணெயில் போட் மீன் போல இந்தப் பொரி.. பொரியறாள்.."
அஜீத் விசாரிக்க... அலெக்Þ பிரசாத்தின் காதில் முணுமுணுத்தான்.
"இவன் ஒருத்தன்.. தூத்துக்குடியில் பிறந்தாலும் பிறந்தான்.. மீன் ஒன்றைத் தவிர வேறு எதையும் உவமை சொல்ல மாட்டேன் என்கிறான்."
ஆனந்த் தெம்பு வரப் பெற்றவனாய் அவர்களிடம் கூறினான்.
"கேளுங்கடா... நான் பாட்டுக்கு சீழ்க்கை அடிச்சுக்கிட்டு உள்ளே வருகிறேன்.. அந்த சாரா எழுந்திருக்க என்கூட சண்டைக்கு வருகிறாள்டா."
ஆனந்திடம் இந்தக் குணம் உண்டு.. அவன் உற்சாகமாய் இருக்கும்போது சீழ்க்கை அடிப்பான். அப்போது அவனிடம் யார் கேட்டாலும் சீழ்க்கையிலேயே பதில் சொல்வான். ஒரு முறை சினிமாப் பாட்டையே சீழ்க்கையில் பாடிக் கொண்டிருந்தான்.. காலை நேர புத்துணர்வில் அவன்பாட்டுக்கு தன் போக்கில் சீழ்க்கையடித்துக் கொண்டு வந்திருக்கிறான். சாராவை அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் காலையிலிருந்தே எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் உணர்ந்த சாரா எழுந்து நின்று ஆனந்தைப் பார்த்து...
"என்கிட்ட இதையெல்லாம் வைத்துக் கொள்ளாதே.." என்று கூறியிருக்கிறாள்.
ஆனந்த் சீழ்க்கையை நிறுத்தாமல் புருவத்தை உயர்த்தியிருக்கிறான். சாரா இன்னும் டென்சன் ஆகிவிட்டாள்.
"என்ன திமிரா..?" என்று கேட்டு விட்டாள்.
அவ்வளவுதான் ஆனந்தின் சீழ்க்கை தானாய் நின்று விட அவன் சண்டைக்குப் போய் விட்டான்.
"யாரைப் பார்த்து திமிரா என்கிறாய்?"
"ஏன்... உன்னைப் பார்த்துத் தான்..."
"உன் திமிரைப் பற்றி இந்த காலேஜே பேசுது. நீ என்னைத் திமிர் என்கிறாயா."
"என்னைப் பற்றித் தேவையில்லாமல் பேசினால் நடக்கிறதே வேற..."
"ஏன் மனுஷியாய் நீ நடக்காமல் வேறு மாதிரி நடக்கப் போகிறாயா?"
"கிண்டல் பண்ணுகிறாயா?"
"ஆமாம். இப்ப அதுக்கு என்னங்கிற?"
"என்னை நீ கிண்டல் பண்ணுவதாய் ஹெச்.ஓ.டியிடம் புகார் கொடுப்பேன்."
"போ.. போய் கொடு.. இந்தா பார்.. நான் உன் முகரை எப்படியிருக்குன்னுகூட இதுநாள் வரை பார்த்தது இல்லை. இனிமேல் எனக்கு அதுதாண்டி வேலை... நீ என்ன செய்கிறாய்ன்னு நானும் பார்க்கிறேன்."
அஜீத் உற்சாகமாய் வாயில் விரலை வைத்து சீழ்க்கை அடித்தான்.
"வாரே.. வா.. மச்சான் சபதம் போட்டு விட்டு வந்துட்டான்லே.. சபதம்ன்னா இதுதான் சபதம். நாமளும் இருக்கோமே.. ஏன்லே.. ராதா.. உன் பாட்டனும் முப்பாட்டனும் வீரவாள் வாங்கி என்னாலே பிரயோசனம்.. இப்படி ஒரு வீரசபதத்தை நீ போட்டிருக்கிறாயா?"
அலெக்Þ மேஜையை படபடவென்று தட்டி அஜீத் சொன்னதை ஆமோதித்தான். பின்னால் மாணவர்களின் உற்சாகமான கலாட்டா குரலைக் கேட்டு சாரா திரும்பிப் பார்த்தாள்.
அஜீத் வாயின் மேல் தன் இரு கைகளையும் குவித்து அவளைப் பார்த்து...
"ஊய்ய்..." என்றான்.
சாராவின் முகம் மாறியது. அவள் இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த ராதாகிருஷ்ணன் அவசரமாய் அஜீத்தை கண்டித்தான்.
"அஜீத்... நீ செய்வது தப்பு. பெண்கள் நம் வீட்டின் கண்கள்.. அவர்களைக் கிண்டல் பண்ணுவதோ.. கேலி செய்வதோ.. உலக மகா தப்பு.."
பேசும்போது ஓரக் கண்ணால் சாரா தன்னைக் கவனிக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டான். சாரா நன்றி கலந்த பார்வை ஒன்றை ராதாகிருஷ்ணனின் பக்கம் வீசி விட்டு.. திரும்பி ஒரு பேப்பரை எடுத்து மடமடவென்று எழுத ஆரம்பித்தான்.
அஜீத் ராதாகிருஷ்ணனை முறைத்தான்.
"பொறுக்குலே..." என்றான்.
"எதைடா பொறுக்கச் சொல்கிற..."
"அவளோட இந்தப் பார்வைக்காகத்தானே.. நல்லவன் வேஷம் போட்டாய்.. அவளும் பார்வையை வீசி விட்டாள். பொறுக்கு.. உன்னை மாதிரி ஆளுகளை எல்லாம் உட்கார வைச்சு சுடனும்லே..."
"ஏண்டா.. எல்லோரும் நிற்க வைத்துத்தானே சுடம்னும்பாங்க... நீ என்ன மாற்றிச் சொல்கிறாய்" அலெக்Þ சந்தேகம் கேட்டான்.
"கூடப் படிக்கிறவன்கிற பரிதாபத்தில் சொல்லியிருப்பான். நின்றால் கால் வலிக்காதா..." அக்கறையாய் ராதாகிருஷ்ணனின் கால்களைப் பார்த்துக் கொண்டே ஸ்ரீதரன் விளக்கம் கூறினான்.
"ஆமாண்டா... எல்லோரும் என்னையே வாருங்க.. நல்லதைச் சொன்னால் எவனும் கேட்டுக்க மாட்டான்.." ராதாகிருஷ்ணன் வேண்டுமென்றே சத்தமாய் பேசினான்.
அவனது கணிப்பு சரியாக இருந்தது. சாரா அவனைப் திரும்பிப் பார்த்துக் கனிவோடு புன்னகைத்து வைத்தாள்.
நிராயுதபாணியாய்.. தன் நண்பர்களின் மத்தியில் தான் மாட்டிக் கொண்டு இருப்பதை உணராமல் ராதா கிருஷ்ணன் பதிலுக்கு சிரித்து வைக்க.. ஆத்திரமான ஆனந்த் அவன் முதுகில் மொத்தினான். அனைவரும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.
"எழுந்திருலே... நீ போய் பெண் பிள்ளைகள் மத்தியில் உட்கார்ந்து கொள்... இந்த இடம் உனக்கு லாயக்குப் படாது.."
அஜீத் அவனது தோள் பையைத் தூக்கி பெண்கள் பக்கம் எறிய... அது மிகச் சரியாக சாராவின் மடியில் போய் விழுந்தது.
"இவன் பைகூட இவனை மாதிரியே இருக்குதுலே..." அஜீத் தலையில் அடித்துக் கொள்ள...
"அதிர்ஷ்டக்காரப் பை..." என்று ரசித்தான் அலெக்Þ.
சாரா உன்மத்தம் பிடித்தவள் போல் ஆகி விட்டாள். மாணவர்கள் இருக்கும் திசை பக்கம் திரும்பிப் பார்த்து அவள் பெயர்களை எழுத ஆரம்பிக்க.. அவளது அருகில் அமர்ந்திருந்த லேகா... தானும் திரும்பிப் பார்த்து.. சில பெயர்களைச் சொன்னாள்.
"இவளை நல்லவள்ன்னு நினைத்தால்.. இவளும்... அந்த அலட்டிகூட சேர்ந்துகிட்டாளே..." பிரசாத் கவலைப்பட்டான்.
"இவன் ஏன்டா... அவளைப் பற்றிக் கவலைப்படுகிறான்."
"உனக்குத் தெரியாதாடா ராபர்ட்..? இவன் வந்ததில் இருந்து அந்த லேகாவை லேசு... லேசாய் பார்த்துக்கிட்டு இருக்கான்டா..."
"இதைப் பாருலே.. இப்படி ஒரு பிட் ஓடுதா... ஏன்லே அலெக்ஸு.. இதை ஏன்.. இத்தனை நாளாய் என்கிட்ட சொல்லலே.. பிரசாத்.. நடத்து.. நடத்து.."
"சும்மாயிருங்கடா.. அவளைப் பார்த்தால் அமைதியான பொண்ணு போல தெரியுது.. அதைத்தான் சொன்னேன். நீங்க வேற.. கிளப்பாதீங்க.." பிரசாத் வெட்கப்பட்டான்.
அஜீத்திற்கு அவனது வெட்கத்தைக் கண்டு சிரிப்பு வந்தது. அவன் 'ஹோ.. ஹோ'வென்று சிரித்துக் கொண்டிருக்கும்போது.. வகுப்பறைக்குள் ஹெச்.ஓ.டி. நுழைந்தார்.
அவசரமாய் அனைவரும் எழுந்து நிற்க.. சாரா.. போய் தன் கையில் இருந்த பேப்பரை அவரிடம் கொடுத்தாள்.
"லே.. ஆனந்த்.. பெட்டிசன் பெரியநாயகி பெரிய பேப்பரா நீட்டுகிறாள்டா.. இந்தக் கிளாஸில் இருக்கிற மொத்த ஆண் பிள்ளைகள் பெயரையெல்லாம் எழுதியிருக்கிறாளோ.." என்று அஜீத் முணுமுணுக்க.
"அத்தனை பேரையும் எழுதியிருக்க மாட்டாள்டா.. இந்த எட்டப்பன் பெயரை மட்டும் விட்டிருப்பாள். இவன்தான் ரொம்ப நல்லவன் ஆச்சே." அலெக்Þ ராதாகிருஷ்ணனை முறைத்தான்.
"என்னையே ஏன்டா இழுக்கிற.. பொம்பளப் புள்ளைய கேலி பண்ணாதீங்கடான்னு சொன்னேன். அது ஒரு குத்தமாடா..." ராதாகிருஷ்ணன் சமாதானத்திற்கு வந்தான்.
"ஆன்னா... மான்னா.. இதை ஒன்றைச் சொல்லிவிடுகிறான். ஏண்டா.. நாங்க என்னவோ அவளுகளை கேலி பண்ணத்தான் கிளாÞ ரூமிற்கு வருவது போல் அவள் பிலிம் காட்டிக்கிட்டு இருக்காள். நீ என்ன அவளுக்கு அல்லக்கையா?" ஆனந்த் கொதித்தான்.
"லே.. பொறுங்கலே.. தலைவர் அந்த பேப்பரைப் பிரிக்கக் கூட இல்லை... என்ன நடக்கிறதுன்னு கவனிக்கலாம்."
எல்லோரும் அமைதியாய் அமர... வகுப்பறையில் குண்டூசி விழுந்தால் கூடச் சப்தம் கேட்பது போல் நிசப்தம் நிலவியது.
ஹெச்.ஓ.டி. சாரா தந்த பேப்பரை கையில் பிடித்துக் கொண்டு.
"இது என்ன..?" என்று கேட்டார்.
"கம்ப்ளெயின்ட் பேப்பர் சார்.."
"என்ன கம்ப்ளெயின்ட்..?"
"இந்தக் கிளாÞ பாய்ஸெல்லாம் என்னைக் கிண்டல் பண்ணுகிறார்கள். அவங்க பெயரையும் அவங்க என்ன செய்தாங்க.. என்ன பேசினாங்க.. என்பதையும் அந்த பேப்பரில் எழுதி வைத்திருக்கிறேன்."
ஹெச்.ஓ.டி. அவளை ஏற இறங்கப் பார்த்தார்.
சிவந்த நிற சல்வார். முன் பக்கம் இறக்கி வெட்டப்பட்டு இருந்தது. துப்பட்டாவைக் கீழே இறக்கி போடாமல் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தாள். உதடுகளில் லிப்Þடிக்.. கண்களில் இமைகளின் மேல்.. ஓப்பனை செய்திருந்தாள்.
"தினசரி.. இரண்டு மணி நேரம் ஆகுமா?" என்று அவர் கேட்க,
ஹெச்.ஓ.டி. எதற்கு கேட்கிறார். என்ன கேட்கிறார் என்பதைப் புரியாமல் சாரா பதில் சொன்னாள்.
"இருக்கும் சார்.. நான் சரியாய் கவனிப்பதில்லை."
அஜீத்திற்கு சிரிப்பு வந்து விட்டது. அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"சார்..."
"இப்படி மேக்கப் பண்ணிக்கிட்டு டிரÞ போட்டுக்கிட்டு வந்தால்... பசங்க எல்லோரும் கேலி பண்ணத்தான் செய்வாங்க. இதோ பாரும்மா.. இது மதுரை.. பெங்களூர் இல்லை.. உன் ஊர் நாகரீகத்தை இங்கே காட்டினால் இப்படித்தான் நடக்கும். இப்படி Þலீவ்லெÞ டாப்ஸை போட்டால் பசங்க உன்னைத் திரும்பிப் பார்க்காமல் என்ன செய்வாங்க... மற்ற பெண்கள் யாராவது உன்னைப் போல் டிரÞ போட்டிருக்காங்களா.. உடலை மறைக்கத்தான் உடை.. நீ இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டினால் கேலி பண்ணத்தானே செய்வார்கள். இது காலேஜ்.. Þகூல் இல்லை.. தொட்டதெற்கெல்லாம் குற்றம் சொல்லாதே... 'ஈவ் டீஸிங்' என்பதற்கு அர்த்தமே வேறு..." ஹெச்.ஓ.டி.யின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: கல்லூரிக் காலத்திலே -2
கல்லூரிக் காலத்திலே -2
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s320/kalluri%2Bkalathiyle.jpg
https://1.bp.blogspot.com/-rOIrwW5xXes/Xr0VdkYwn_I/AAAAAAAAA1w/QBHHp3hu6eQVddjJ8_rNYu7RpCZiIJ_ZACPcBGAYYCw/s72-c/kalluri%2Bkalathiyle.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/kallurikkaalaththile-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy