எங்கிருந்தோ ஆசைகள்.-65

65 நீ போகும் பாதையிலே... என் முகம் தெரிய ஆசைகொண்டேன்.. செல்வியின் தற்காலிக போர் நிறுத்தத்தில் பேச வாய்ப்புக் கிடைத்த தேவராஜன் வா...

65
நீ போகும் பாதையிலே...
என் முகம் தெரிய ஆசைகொண்டேன்..


செல்வியின் தற்காலிக போர் நிறுத்தத்தில் பேச வாய்ப்புக் கிடைத்த தேவராஜன் வாய் திறந்தான்..
"அந்தக் காவ்யாப் புள்ளய அந்த அர்ஜீன் பய உசிருக்குசிரா காதலிக்கிறான்ப்பா..."
"அந்தக் கழுதைய எதுக்காகடா திருப்பித்திருப்பிச் சொல்ற..? என் வயிறு எரியுது.."
"நீங்க நினைச்சா அவன் வயிற எரிய வைக்கலாம்..."
"எப்புடி..?"
"அவன் ஆசைப்படற பொண்ண நீங்க உங்க வீட்டுக்கு மருமகளாக்கிக்கிட்டா..?"
தேவராஜன் கேள்வி கேட்டு விட்டு.. 'எப்புடீ..' என்ற பார்வையை பார்த்து வைத்தான்...
"யம்மோவ்.. இதுதான் பூனைக்குட்டி..! வெளியில ஓடி வந்துருச்சு.. பிடிச்சு வைச்சுக்க..." தேன்மொழி தாய்க்கு மட்டும் கேட்டும்படியாக முணுமுணுத்தாள்...
"அடக் கடன்காரா.. அந்தப் புள்ளய புடிச்சிருக்குன்னா அதைச் சொல்லி கட்டி வைய்யின்னு கேக்க வேண்டியதுதான..? அத விட்டுப்புட்டு கொக்கு தலையில வெண்ணையை வைச்சு.. எட்டுச் சுத்துச் சுத்தி.. முகத்த வளைச்சு மூக்கைத் தொடறானே.. ஏண்டி தேன்மொழி.. இவன் ஆசைக்கு உன்னப் பொண்ணு கட்டச் சொல்லி அந்த பார்த்தசாரதிகிட்ட கேளுன்னு முடுக்கி விட்டுத்தான் காரியத்த சாதிக்கனுமா..? கொஞ்சமாச்சும் தங்கச்சிங்கிற நினப்பு இவன் மனசில இருக்காடி..?"
"விட்டுத்தள்ளும்மா.. அண்ணன் குணத்த இன்னைக்குத்தான் புதுசாக் கண்டியா...? நான் அப்பவே சொல்லலை.. இதில 'உள்குத்து..' இருக்குன்னு..."
"ஆமாண்டி மகளே.. அந்தக் குத்து இந்தக் குத்தா இருக்கும்ன்னு.. எனக்குக் கூடத் தெரியாம போச்சேடி..."
"இது மனசில என்ன ஓடுதுன்னு யாருக்குத் தெரியும்..? பாவம் அந்தக் காவ்யா.. இது கண்ணில பட்டுத் தொலைச்சிருக்கே..."
துரியோதனன் யோசிக்க ஆரம்பித்தார்.. அவருக்கு இதுகூட நல்லாயிருக்கே என்று தோன்றிவிட்டது.. அதை அவர் முகம் உணர்த்த.. தேவராஜன் தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம் உருவேற்றி விட்டான்...
"நீங்களே யோசிச்சுப் பாருங்கப்பா.. உங்களத் தோற்கடிச்ச அந்த அர்ஜீனோட அப்பன நீங்க தோற்கடிக்க இதுதான் சரியான சமயம்.. அந்தக் காவ்யா புள்ள நம்ம சாதி சனம்.. நீங்க மதுரையில கடை கண்ணின்னு வாழறவரு.. நீங்க பொண்ணுக்கேட்டா காவ்யாப்புள்ள வீட்டில பொண்ணுத் தரமாட்டேன்னு சொல்லிப் புடுவாங்களா..?"
"மாட்டாங்கதான்..."
"அப்புடி அந்தப் புள்ளய நம்ம வீட்டுக்கு மருமகளாக்கிப்புட்டா அந்த பார்த்தசாரதி முகத்த எங்க கொண்டு போயி வைச்சுக்குவான்..? அந்த அர்ஜின் பயதான் மதுரப் பக்கம் தல வைச்சுப் படுப்பானா....?"
"ஆமாண்டா மகனே.. நீ சொல்றதும் வாஸ்தவமான பேச்சுத்தான்..."
"அவனுகளத் தோக்கடிக்க இதுதான் சரியான வழிப்பா..."
"அவனுகளத் தோக்கடிக்கனும்டா..."
"நம்ம தேன்மொழியவா வேணாம்ன்னு சொன்னாங்க.. நம்ம தங்கச்சிய வேணாம்ன்னு சொன்னவனுக்கு அவன் ஆசைப்பட்ட பொண்ணு கிடைக்கக் கூடாதுப்பா.."
அது நேரம் வரை அவனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செல்வி இந்தப் பேச்சைக் கேட்டதும் விறகுக் கட்டையைத் தூக்கி விட்டாள்...
"நானும் பெத்த மகனாச்சேன்னு பொறுமையாப் போகலாம்ன்னுதான் பாக்குறேன்.. நீ விட மாட்டேன்னு வினையைக் கட்டியாடா இழுக்கிற...?"
"அம்மா..."
"என்னத்த நொம்மா..? உந்தங்கச்சிக்கு பேரு கட்டிவிடத்தான் நீ அண்ணன்காரன்னு அவ கூடப் பொறந்தியா..? உனக்கும் உங்கப்பனுக்கும் எம்மகன்னா அம்புட்டு இளக்காரமா போயிருச்சாடா..? நான் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன்.. பொண்ணு கொடுக்கறேன்னு வலியக்கப் போயி பேசாதீங்கன்னு.. கேக்காம ஆட்டம் போட்டுட்டு.. இப்ப அவனுக் எம் மகள கட்டிக்கலைன்னு கதையா கட்டி விடறிங்க...! உன்ன மட்டும் சாத்தக் கூடாதுடா.. இதுக்குத் துண போகிற உங்கப்பனையும் நாலு சாத்து சாத்தனும்.. அப்பத்தான் என் மனசு ஆறும்..."
"செல்வி விறகுக் கட்டய கீழே போடு சொல்றேன்.."
"மாட்டேன்..."
"யாருடி இவ.. இப்ப என்ன நடந்து போயிருச்சுன்னு இந்தக் குதி குதிக்கிறவ...?"
"அடப்பாவி மனுஷா..! நல்லாத்தான இருந்தீங்க.. இந்தப்பய மந்திரிச்சுக் கிந்திரிச்சு விட்டுட்டானா..? பெத்த மகளுக்கு ஒத்தச் சொல்ல வாங்கிக் கொடுத்துப் புட்டோம்கிற  குத்த உணர்ச்சி உங்க மனசில வரலையா...?"
"அதுக்குப் பழிதீக்கத்தானடி அவன் ஆசைப்பட்ட பொண்ணகட்ட விடாம செய்யப் போறோம்...?"
"அது அவன் ஆசைப்பட்ட பொண்ணில்லய்யா.. உங்க மகன் ஆசைப்பட்ட பொண்ணு..."
"இருக்கட்டுமே.. அந்தப் புள்ள மேல அந்தப் பயபுள்ளக்கும் ஆசையிருக்குள்ல..? எனக்கு அதுதான் வேணும்..."
செல்வி திகைத்து விட்டாள்.. இனி அவள் தடுத்தாலும்.. ஏன் தேவராஜனே தடுத்தாலும் துரியோதனன் நிற்க மாட்டார் என்று அவளுக்குப் புரிந்து விட்டது.. அவள் கண்களில் நெருப்புப் பொறிபறக்க மகனைப் பார்த்தாள்...
'இந்தப் பயபுள்ளய என்னமோன்னு நினைச்சோமே.. இவன் எதையும் செய்யத் துணிஞ்சவன்.. ஆசைப்பட்டவ கிடைக்கனும்கிறதுக்காக கூடப் பிறந்த தங்கச்சியை கட்டிக்க மாட்டேனுட்டான்னு அந்த அர்ஜீன் பயமேல பேருகட்டி விட்டவன்.. பகையைத் தீர்க்கப் போன்னு பெத்த தகப்பனுக்கே கொம்பு சீவி விடறவன்.. இவனெல்லாம் ஆம்பளையா...?'
செல்வியின் பார்வையில் எதைக் கண்டானோ.. தேவராஜனுக்கு குலை நடுங்கியது...
"என்னம்மா..?"
"தூ... தைரியமிருந்தா நீ அந்தப் புள்ளயத் தூக்கிக்கிட்டு வந்து தாலி கட்டியிருக்கனும்.. அப்ப நீ எனக்கு மகன்.. அதை விட்டுட்டு உந்தங்கச்சிய கட்டிக்கன்னு எவேனா ஒருத்தன கேக்க வைச்சு.. அவன மாட்டேன்னு சொல்ல வைச்சு.. அதுக்குப் பழியெடுக்க நீ ஆசைப்படறவள பொண்ணக் கேளுன்னு உங்கப்பன தூண்டி விடறயே.. நீயாடா எம்மகன்..?"
"செல்வி.. சும்மாயிரு..."
கொதித்துக் கொண்டிருந்த செல்வியை அதட்டி அடக்கினார் துரியோதனன்... அவர் முகத்தில் கண்டிப்பிருந்தது...
"எனக்கும் தெரியும் செல்வி.. இவன் சொன்னான்ங்கிறதுக்காக நான் அந்த அர்ஜீன் பயல மாப்பிள்ளை கேட்கல.. அவன் கோடிஸ்வரன்.. வெளிநாட்டுப் படிப்ப படிச்சாலும் அந்த மமதையில்லாம அடக்கி வாசிக்கிறவன்.. இத்தனக்கும் மேலா சுயமா கோடி கோடியா சம்பாதிக்கத் தெரிஞ்சவன்.. அந்த பார்த்தசாரதிக்கு கட்டுப்படாதவன்.. அவன எம் மாப்பிள்ளையாக்கி.. அவன் மூலமா அந்த பார்த்த சாரதியோட கண்ணில விரல விட்டு ஆட்டனும்னு நான் நினைச்சேன்.. எப்ப அது நடக்கலையோ.. அப்பவே அந்த அர்ஜீன் பய நினைக்கிறதும் நடக்கக் கூடாது..."
"நீங்க நினைக்கிறதும்.. உங்க மகன் நினைக்கிறதும் மட்டும் நடந்துருமா..?"
"நான் நடத்திக்காட்றேண்டி..."
"எப்படி நடக்கும்..? நீங்க கேட்டவுடனே இந்தாய்யான்னு அவங்க புள்ள கையப் புடிச்சுக் கொடுத்துரப் போறாங்களா..? தெரியாமத்தான் கேக்கறேன்.. நம்ம தேன்மொழிய இப்படி ஒரு வில்லங்கம் புடிச்ச பயலுக்கு வெட்டியா ஊர் சுத்தற பொறம்போக்குக்கு.. படிக்காத கூதரைக்கு.. புத்தியேயில்லாத தற்குறிக்கு பொண்ணுக் கேட்டா நாம கொடுத்துருவோமா..?"
செல்வி கேட்டாலும் கேட்டாள்.. ஆணி அடித்ததைப் போல அருமையான கேள்விகளை கேட்டு வைத்தாள்.. சந்தடி சாக்கில் அவள் தேவராஜனைத் திட்டித் தீர்ப்பதை அவனும் புரிந்துதான் இருந்தான்.. இருந்தும் அவனால் வாய் திறக்க முடியுமா..?
"ஏண்டி.. விட்டா நீயே போயி அந்தக் கண்ணதாசனுக்கு சொல்லிக் கொடுத்துட்டு வந்துருவ போல இருக்கே..."
"முடிஞ்சா அதையும் செய்வேன்.. ஏங்க.. நீங்களே நினைச்சுப் பாருங்க.. அந்தக் காவ்யா புள்ளயோ.. நம்ம தேன்மொழி மாதிரி டிகிரிப்படிப்ப படிச்ச புள்ள.. அந்தப்புள்ள எப்புடி படிக்காதவனக் கட்டிக்க சம்மதிக்கும்..?"
"அத அந்தப் புள்ள வீட்டில சொல்லட்டும்..."
"சொல்லிட்டா..?"
"அப்புறமில்ல இருக்கு..."
"என்னத்த செய்வீங்க..? எரிச்சுப் புடுவீங்களோ..."
"அதத்தாண்டி செய்வேன்.. கொழுத்திப் போடுவேன்.."
"அடப்பாவி மனுசா..! எம்புருசன் குணசாலின்னு நினைச்சு இத்தன வருசமா உங்ககூட குடும்பம் நடத்தி குப்பை கொட்டினேனே.. கடைசியில நீங்க இந்த அளவுக்கா இறங்கனும்..? சின்னஞ்சிறுசுக காதலப் பத்த வைக்கிற அளவுக்கா போகனும்..?"
"எனக்கு அதெல்லாம் தெரியாதுடி.. எம்மகளக் கட்டிக்க மாட்டேன்னு சொன்ன அந்த அர்ஜீன்பய மட்டும் ஆசைப்பட்டவளக் கட்டிக்கலாமா..? ஒருநாளும் அதுக்கு நான் விடமாட்டேண்டி..."
"இந்தாப் பாருங்க.. நீங்க கொளுத்திப் போடுவீங்களோ.. இல்ல.. பத்த வைப்பீங்களோ எனக்கு அது தெரியாது.. இன்னொரு தடவ எம் மகள எவனும் கட்டமாட்டேன்னு சொல்லிட்டான்னு பேரு கட்டினீங்க.. நான் சும்மாயிருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்..."
விட்டால் வீச்சரிவாளை எடுத்து விடுபவளைப் போல அவள் மிரட்டிய தோரணையில் வாயை மூடிக் கொண்டார் துரியோதனன்..
தேவராஜன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை.. அவன் கவலையே வேறு..
"அசரப்பட்டு பத்த வைக்கிறதில இறங்கிடாதீங்கப்பா.."
"ஏண்டா..? நமக்கு பழிவாங்கறதுதான முக்கியம்..?"
"அதுக்கு அந்தப் புள்ள கழுத்தில நான் தாலியக்கட்டி பழி வாங்கனும்பா..."
"எல்லாம் ஒன்னுதானடா..?"
"இல்லப்பா.. நீங்க சொல்றத விட.. நான் சொல்றதுக்கு எபெக்டு ஜாஸ்தி..."
"அடேய் மகனே..! உனக்கு சிவதாணுவப் பத்தித் தெரியாது.. கண்ணதாசன் கூட தங்கச்சி மேல பாசம் காட்டி அவ காதலப் பத்தி யோசிப்பான்... சிவதாணு அப்படியில்ல... மகளோட காதல் விவகாரம் காதில விழுந்தா அடுத்த நிமிசமே திருக்குறள தூங்க வைச்சுட்டு மகளுக்கு நம்ம சாதி சனத்தில மாப்பிளயப் பாத்துக் கல்யாணத்த பண்ணி வைச்சுட்டுத்தான் வேற வேலைபார்ப்பான்.."
"அந்த மாப்பிள்ளை நானாய் இருக்கனும்பா..."
"பொண்ணப் பெத்தவன் பொண்ணக் கொடுக்கனுமே..."
"மாட்டேன்னா நீங்க விட்டுறுவீங்களா..?"
"அதெப்படி விடுவேன்..?"
துரியோதனனின் கேள்வியில் 'அப்பாடி..' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தேவராஜன்.. அவர்
"அதான் கொழுத்திப் போடுவேன்னு சொன்னேனில்ல.. கவலைப்படாதேடா மகனே பத்த வைச்சிரலாம்.." என்று சொன்னதும் காற்று இறங்கிய பலூனைப் போல ஆனான்...
தேன்மொழிக்கு சிரிப்புத்தான் வந்தது.. அவள் சிரிப்பில் கோபமான செல்வியின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்...
"ஆக.. அண்ணன் ஆசைப்பட்ட காவ்யாவப் பொண்ணு கேக்க வைக்கிறதுக்காக.. அப்பாவத் தூண்டி விட்டு எனக்காக மாப்பிள்ள கேக்க வைச்சிருக்கு.. தங்கச்சிக்கு சீர் செய்கிற அழகர் இருக்கிற ஊரில இப்படியும் ஒரு அண்ணன்.. ம்ஹீம்..." என்று கண்ணடித்தாள்...






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.-65
எங்கிருந்தோ ஆசைகள்.-65
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal65.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal65.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy