எங்கிருந்தோ ஆசைகள்.. -84

84 நீ செல்லும் இடமெல்லாம் - உன் நிழலாகிவிட ஆசைகொண்டேன்... தலைமேல் இடி விழுவது என்பது இதுதானோ... என்று ஸ்தம்பித்துப் போனாள் காவ்யா.. அவ...

84
நீ செல்லும் இடமெல்லாம் - உன்
நிழலாகிவிட ஆசைகொண்டேன்...


தலைமேல் இடி விழுவது என்பது இதுதானோ... என்று ஸ்தம்பித்துப் போனாள் காவ்யா.. அவள் கண்களில் அதிர்ச்சி தெள்ளத் தெளிவாக தெரிந்தது.. அதை நேகா கண்டு கொண்டாள்.. முகம் மாறினாள்...
'என்னை அர்ஜீனோட வுட் பின்னு சொன்னா... இவள் எதற்காக ஜெர்க் ஆகிறா..' நேகா காவ்யாவை ஏற இறங்கப் பார்த்தாள்...
'ஹீர்ரே..' என்று மனதிற்குள் கூவிக் கொண்டார் பார்த்தசாரதி..
நேகா காவ்யாவை கண்டு கொண்டாள் என்பதை அவரும் கண்டு கொண்டார்...
'இது.. இது.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...'
கள்குடித்த நரியாக மாறினார் பார்த்தசாரதி... நேகா காவ்யாவை பார்வையிடுவதை அவர் பார்வையிட்டார்.. நேகாவின் முகச் சுளிப்பு அவளுக்கு காவ்யாவைப் பிடிக்கவில்லையென்று அறிவித்தது...
விரித்து விட்ட தலைமுடியும்.. ஜீன்ஜீம்.. முழுக்கை காட்டன் சர்ட்டும்.. இடுப்பில் ஸ்டைலான பெல்டுமாக இருந்தவளின் முகத்தில் தெரிந்த அலட்சியத்தில் காவ்யா வெகுவாக பாதிக்கப் பட்டாள்...
நேகா அழகுதான்.. பெண்மை மிளிராத.. வேறு வகையான அழகு அவளுடையது.. அவள் அல்ட்ரா மாடர்ன் அழகி.. வெளுப்பான சருமமும்.. கரிய நிறக் கண்களுமாக.. எதிராளியை ஒரே பார்வையில் அடித்துப் போட்டு விடும் அலட்சிய ஆற்றல் அவளுடையது...
காவ்யா இயற்கையான வனப்பின் வார்ப்பு.. நீண்ட கூந்தலும்.. மஞ்சள் நிறமும் அவளுக்கு இயற்கை தந்த நன்கொடை.. வட்ட முகமும்.. நீள்வடிவக் கண்களும் அவளுக்கு மதுரை மாநகர் தந்த சீதனம்.. என்னதான் துடுக்குத்தனமான பேச்சும்.. துடிப்பான சுபாவமும் அவளிடம் இருந்தாலும் அவளிடம் தெரிந்த பெண்மையின் மிளிர்வு.. அவளைத் தனித்து காட்டியது...
அந்த இயற்கையழகில் நேகா வெகுண்டாள்.. இது போன்ற அழகான ஒரு பெண்ணை அர்ஜீனின் கடையில் அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.. மதுரையில் அந்தக் கடையை வாங்கிய பின்பு அர்ஜீன் அதிகமாக சென்னையில் தங்குவதில்லை.. மதுரைக்கே பறந்து விடுகிறான் என்ற விவரம் அவள் அறிவுக்கு உறைத்தது...
'ஓ.. இதான் ரீஸனா...'
காவ்யாவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சி.. நிச்சயமாக அவளுக்கும்.. அர்ஜீனுக்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை நேகாவுக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்த..
'இவளெல்லாம் எனக்கு இணையா..?' என்ற இகழ்ச்சிப் பார்வையுடன் பார்த்தசாரதியின் பக்கமாக திரும்பினாள் நேகா...
"என்ன அங்கிள்.. நீங்க ஆரத்தி எடுக்கச் சொன்னா.. இந்தப் பெண் அசையா மரமாய் நிற்கிறா..? அர்ஜீன் கடையில வேலை செய்கிற லேபருக்கு.. ஓபிடியன்ட்ன்னா என்னன்னு சொல்லிக் கொடுக்கலையா...?" என்று மிதப்பாக வினவினாள்...
'லேபரா...' வெகுண்டு போய் நிமிர்ந்தாள் காவ்யா...
'ஆஹா.. களை கட்டுதே..' மனதுக்குள் மகிழ்ந்து போனார் பார்த்தசாரதி...
"என்னத்தைச் சொல்ல நேகா.. கடையை டேக் ஓவர் பண்ண நான் வந்திருக்கனும்.. அப்படி வந்திருந்தா இப்படிப்பட்ட லேபர்ஸை விட்டு வைச்சிருக்க மாட்டேன்.. கடையில வேலை செய்கிற அத்தனை பேரையும் டோட்டலா மாத்தியிருப்பேன்..." உண்மையாகச் சொன்னார் பார்த்தசாரதி...

அதில் காவ்யாவின் முகம் கன்றியது.. நேகாவிற்கோ மகா சந்தோசமாக இருந்தது.. பார்த்தசாரதிக்கு காவ்யாவை பிடிக்கவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.. அந்த ஒன்றிற்காகவே பார்த்தசாரதியின் மீது அவளுக்குள் பாசம் பொங்கியது...
"யு ஆர் அப்சல்யூட்லி கரெக்ட் அங்கிள்.." மனதார பாராட்டினாள் நேகா...
"எப்பவுமே நம்ம கடையில வேலை செய்கிறவங்க நம்ம ஆர்டரை ஒபே பண்றவங்களா இருக்கனும்.. அது நாம செலக்ட் பண்ற லேபரா இருக்கிறதுதான்
பெட்டர்.. மத்தவங்க அப்பாயிண்ட்மென்ட் பண்ணின ஆளா இருந்தா.. நம்ம மேல இவங்களுக்கு எப்படி பயம் வரும்..?"
'பயமா..? எதுக்காக பயப்படனும்..? யாருக்காக பயப்படனும்..?'
காவ்யா பல்லைக் கடித்தபடி பாவனாவை பார்த்தாள்.. பாவனாவுக்கும் அதே நினைவுதான் என்பது பதிலுக்கு அவள் பார்த்த பார்வையிலிருந்தே தெரிந்தது...
"யு ஆர் கரெக்ட் நேகா.." பதிலுக்கு நேகாவை பாராட்டினார் பார்த்தசாரதி..
"அட்மினிஸ்ட்ரேசன் வியூ உங்கிட்ட பெட்டரா இருக்கு.. இதைத்தான் அர்ஜீனிடம் நான் சொன்னேன்.. அவன் நேட்டிவிட்டி.. அது.. இதுன்னு கதையளக்கிறான்.." அலுத்துக் கொண்டார்...
"என்னடி இது.. முதல்ல இவ அவரப் பாராட்டினா.. பதிலுக்கு அவரு இவள பாராட்டராரு.. இதுக ரெண்டும் ஒன்னுக்கொன்னு பாராட்டிக்கிறதைக் வேடிக்கை பாக்கவா நாம வந்திருக்கோம்...?" காவ்யாவின் காதோரமாக கிசுகிசுத்தாள் பாவனா...
கடையில் இருந்த அனைவரும்... வாசலில் நடந்த இந்த நாடகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்... அதை ஜாடையாக கவனித்த காவ்யாவிற்கு அப்படியே திரும்பிப் போய் விடலாமா என்று தோன்றியது...
'வேலையை விட்டு விடு..'
முதல்நாள் மாலையில் பூஜையறையில் குலுக்கிப் போட்ட சீட்டில் வந்த கடவுளின் கட்டளை அவளுக்கு நினைவுக்கு வந்தது...
'போய்த்தான் ஆகனுமா..?' துக்கத்துடன் அவள் கேட்டுக் கொண்டாள்...
"பொறுமையா இருடி.. நான் வரும் வரைக்கும் அங்கேயிருந்து நீ நகரக் கூடாது.." அர்ஜீனின் கட்டளை அவள் மனதில் ஒலித்தது...
கடவுளின் கட்டளையா..? காதலனின் கட்டளையா..?
இரண்டுக்கும் இடையில் மனதில் போராடியபடி கடைக்கு வந்தவளுக்கு ஏன் அந்தக் கட்டளையை கடவுள் அவளுக்குத் தந்தார் என்ற காரணம் புரிந்தது..
'அவனன்றி ஒர் அணுவும் அசைவதில்லை..' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் காவ்யா...
காரணகாரியம் இன்றி எதுவும் நடப்பதில்லை... அழகர் கோவிலுக்குப் போ என்று உத்தரவு கொடுத்த கடவுள் எதற்காக வேலையை விட்டுப் போ என்ற உத்தரவை அவளுக்கு கொடுக்க வேண்டும்..?
"இப்ப என்ன செய்யலாம் அங்கிள்.. இந்தப் பெண் எனக்கு ஆரத்தி எடுக்கப் போகிறாளா.. இல்லையா..?" ஆணவத்துடன் கேட்டாள் நேகா...
'அதுக்குத்தான நான் காத்திருக்கேன்..' பல்லைக் கடித்தாள் காவ்யா...
"காவ்யா.." உத்தரவாக அவளைப் பார்த்தார் பார்த்தசாரதி...
"எனக்கு ஆரத்தின்னா என்னன்னே தெரியாது சார்.." காவ்யா ஒரே போடாக போட்டுவிட்டாள்...
பாவனாவது ஆரத்தி எடுக்கத் தெரியாது என்று தான் சொன்னாள்.. காவ்யா அதையும் தாண்டி.. அப்படி ஒன்று இருக்கிறதா என்ற பாவனையில் கேட்டு வைக்க.. பற்களை நறநறத்தார் பார்த்தசாரதி...
'மதுரையில் பிறந்து வளர்ந்தவளுக்கு ஆரத்தின்னா என்னன்னே தெரியாதா..?'
சங்கம் வளர்த்த மதுரை.. தமிழகத்தின் பாரம்பர்யத்தின் பெருமைகளையும்.. கலாச்சாரத்தையும் கட்டிக்காப்பது.. தென் தமிழகம் என்ற பெயர் கொண்டது.. அந்த ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கு.. ஆரத்தி எடுப்பது என்றால் என்னவென்று தெரியாது என்று சொன்னால் அதைக் கைக்குழந்தை கூட நம்பாது.. பேரன்.. பேத்தி எடுத்த தாத்தாவான பார்த்தசாரதி எப்படி நம்புவார்..?
"ஏம்மா.. உனக்கு ஆரத்தின்னா என்னன்னு தெரியாதா..?" அவர் அதட்டினார்...
'அடக்கி வாசிங்க மாமனாரே.. எந்தக் காட்டு சிறுக்கியையோ கொண்டு வந்து என் முன்னே நிப்பாட்டிட்டு.. இவதான் உன் காதலனுக்கு பொண்டாட்டியா வரப் போறா.. ஆரத்தி எடுன்னு எங்கிட்டயே சொல்றீங்களே.. உங்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு இருக்கனும்..? இருக்கு மாமனாரே.. உங்க வீட்டில மருமகளா.. உங்க மகனுக்கு பொண்டாட்டியா.. வலது கால எடுத்து வைச்சு நான் உங்க வீட்டுக்குள்ள நுழையனும்.. அப்புறம் இருக்கு உங்களுக்கு..' மனதுக்குள் கருவிக் கொண்ட காவ்யா...
"எனக்குத் தெரியாதே சார்.." என்று கண்களை விரித்துவிட்டு..
"உனக்குத் தெரியுமாடி பாவனா.." என்று தோழியிடம் கேட்க வேறு செய்தாள்..
"கொஞ்சம்.. கொஞ்சம்.. தெரியும்டி.." பாவனா உடனடியாக கூட்டுச் சேர்ந்தாள்...
"ஏய்.. ஏய்.. எனக்குச் சொல்லுடி..."
"வட்டமா தட்டிருக்கனும்.."
"அப்புறம்..?"
"தட்டுக்குள்ள தண்ணியிருக்கனும்.."
"அப்புறம்..?"
"தண்ணி சிகப்பா.. இல்லயில்ல.. மஞ்சளா.. அதுவுமில்ல.. பச்சையா இருக்கனுமுன்னு நினைக்கிறேன்.."
"சிகப்பா.. மஞ்சளா.. இல்ல பச்சையா..? ஏதாவது ஒரு கலரைச் சொல்லு.."
"எனக்கே ஐடியா இல்லைடி.. ஏன் இளங்கோ.. நீங்கதான் புதுசா கல்யாணமானவரு... உங்க கல்யாணத்தில ஆரத்தி எடுத்திருப்பாங்கள்ல..? நீங்களே சொல்லுங்க.. அது சிகப்பா.. மஞ்சளா.. இல்ல பச்சையா..?"
'இந்த விளையாட்டில என்னை இழுக்காதீங்கம்மா.. நான் புதுசா கல்யாணமானவன்.. இந்த வேலயக் காட்டித்தான் பொண்ணக் கட்டியிருக்கேன்.. அதுக்கு வேட்டு வைச்சிராதீங்க..' கண்களால் அலறிய இளங்கோ.. பாவனா கேட்டது காதில் விழுகாததைப் போல.. அவசர வேலையாக உள்ளே செல்வதைப் போல கடையின் பின்பக்கமாக இருந்த அலுவலகப் பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்...
"பாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாருடி காவ்யா.."
"இளங்கோவுக்கே தெரியலைன்னா யாருக்குத் தெரியும்..?"
"ஏகாம்பரம் சாரைக் கேட்டுப் பார்க்கலாமா..?"
"பாவம்.. அவரே கை நடுங்கின கேஸ்.. அவர் ஆரத்தி எடுத்தா கை நழுவி தட்டு கீழே விழுந்துராதா..? இட்ஸ் டூ பேட் காவ்யா..."
பாவானாவின் வார்த்தைகளில் நேகாவிற்கு கோபம் வந்தது.. என்னதான் ஆரத்தி விசயத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லையென்றாலும்.. முதன் முதலாக அர்ஜீனின் கடைக்கு வந்திருப்பளை.. ஆரத்தி எடுக்கும் போது தட்டு கீழே விழுந்து விடும்என்ற சொல்லை அவள் விரும்பவில்லை..
'கொஞ்சமாவது முதலாளியின் வுட்பிங்கிற பயமிருக்கா..? இதுகளை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பினால்தான் சரிப்படும்..' அவளுக்கு கோபம் வந்தது...
அவளுக்கென்ன தெரியும்.. அந்த இரண்டு பெண்களும் அந்தக் கடையின் வேலை போவதைப் பற்றிய கவலையற்றவர்கள் என்பது...
நேகா பார்த்தசாரதியைக் குறிப்பாக பார்த்தாள்.. என்னதான் முயற்சி செய்தாலும் காவ்யா அவளுக்கு ஆரத்தி எடுக்க மாட்டாள் என்று அவருக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது.. அதே சமயத்தில் பார்த்தசாரதி வாய் விட்டுச் சொன்ன பின்பு ஆரத்தியுடன்தான் அந்தக் கடையில் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்று நேகா தீர்மானித்து விட்டாள்...
"அங்கிள்.. கெஸ்ட் ஹவுஸீக்கு காரை அனுப்பி சிந்தாமணியை வரச் சொல்லுங்க..."
"எதுக்காக நேகா..."
"அவ வந்து ஆரத்தி எடுக்கட்டும்.. அதுக்கு பிரிப்பேரா வரச் சொல்லுங்க..."
"குட்..."
பார்த்தசாரதி நேகாவை சிலாகித்தபடி.. டிரைவரை அழைத்து விவரம் சொன்னார்.. அடுத்த சில நிமிடங்களில் ஆரத்திக்கான தட்டு.. மஞ்சள்.. வெற்றிலை.. கற்பூரம் சுண்ணாம்புகளோடு சிந்தாமணி வந்து சேர்ந்து விட்டாள்...
அவள் ஆரத்தி கரைத்து.. நேகாவுக்கு ஆரத்தி எடுத்தபோது.. நேகா விழியுயர்த்தி காவ்யாவைப் பார்த்தாளே ஒரு வெற்றிப் பார்வை.. பார்த்தசாரதியால் முடியாததை அந்த ஒரு பார்வையில் சாதித்து விட்டாள் நேகா... காவ்யாவின் மனதில் பலத்த அடி விழுந்தது...
"வலது காலை எடுத்து வைச்சு வாங்கம்மா..."
சிந்தாமணியின் ஆரத்தியுடன் வலதுகாலை எடுத்து வைத்து கடைக்குள் நுழைந்து விட்டாள் நேகா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -84
எங்கிருந்தோ ஆசைகள்.. -84
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-84.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-84.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy