எங்கிருந்தோ ஆசைகள். -80

80 காதோரம் காதல் சொன்னவன் - தாலி கட்டி விடவே ஆசைகொண்டேன்.. "என்னடி ஆச்சு..?" என்று விசாரித்தாள் பாவனா... காவ்யாவே பார்த்தச...


80
காதோரம் காதல் சொன்னவன் - தாலி
கட்டி விடவே ஆசைகொண்டேன்..


"என்னடி ஆச்சு..?" என்று விசாரித்தாள் பாவனா...
காவ்யாவே பார்த்தசாரதியை தலையால் தண்ணீர் குடிக்க வைத்துவிட்டு வந்து.. அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..
என்னதான் இருந்தாலும் பார்த்தசாரதி அர்ஜீனின் அப்பாவாயிற்றே என்ற எண்ணம் அவளுக்கு...
அவளுடைய வருங்கால மாமனாருடன் இப்படிப்பட்ட அறிமுகம் நேர்ந்ததில் அவள் மனதுக்குள் வருத்தம் வந்திருந்தது.. அந்த வருத்தத்தில் பாவனாவிடம் சுள்ளென்று எரிந்து விழுந்தாள்...
"ஒன்னும் ஆகல.. இப்ப என்னத்த ஆகிருச்சுன்னு வந்து துக்கம் விசாரிக்கிற...?"
"ஏண்டி இப்படி கோவிச்சுக்கற...?"
"பின்னே..? கோவிச்சுக்காம உன்னக் கொஞ்சவா செய்வாங்க..?"
"விடுடி.. வா.. சாப்பிடப் போகலாம்..."
பாவனா தன்மையாகப் பேசியதில் காவ்யாவின் எரிச்சல் கொஞ்சம் குறைந்தது.. மறுத்துப் பேசாமல் எழுந்து கொண்டாள்.. சாப்பிடும் போது காவ்யா மௌனமாக இருந்ததில் பாவனாவுக்குள் கவலை எழுந்தது.. அதை வெளிக்காட்டி பரிவுடன் பேசுவதை காவ்யா விரும்ப மாட்டாள் என்ற நினைவில் அவள் பொதுவான நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தாள்.. இருவர் மனதிலும் ஒரே கேள்விதான் அரித்துக் கொண்டிருந்தது...
'இந்த பார்த்தசாரதி எதுக்காக வந்திருக்கிறார்..?'
அவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளத் தயங்கிய கேள்வியை வெற்றிலையை குதப்பியவாறு அங்கே வந்த ஏகாம்பரம் எளிதாக கேட்டு விட்டார்...
"ஏம்மா பாவனா..?"
"நான் உங்களுக்கு அம்மாவா..? இப்படிக் கூப்பிடாதீங்கன்னு எத்தனை தரம்தான் சொல்லுறது..? வெறுமனே பாவனான்னு கூப்பிட்டா ஆகாதா சார்..?"
"விடும்மா.. இதெல்லாம் ஒரு பேச்சா..?"
"ஓ.. அப்ப.. வேற எதெல்லாம் பேச்சுன்னு நீங்களே சொல்லிருங்க சார்..."
"அட இத விடும்மா.. இப்ப எதுக்காக பெரிய முதலாளி மெட்ராஸில இருந்து வந்து இறங்கியிருக்காரு..?"
"மெட்ராஸா..? அது சென்னை சார்.."
"எங்க பாட்டன் காலத்தில இருந்து மெட்ராஸீன்னு சொல்லித்தான் எங்களுக்கும் பழக்கம்.. புதுசா வழக்கத்த மாத்த என்னால முடியாதும்மா..."
"என்னத்தையோ சொல்லித் தொலைங்க.. நீங்க அம்மான்னு சொல்றதையே கேட்டுக்கறேன்.. இதைக் கேட்க மாட்டேனா..? ஆனா அது என்ன பெரிய முதலாளி..? அப்ப அர்ஜீன் சார் என்ன சின்ன முதலாளியா..? கேட்டுக்கிட்டியா காவ்யா..?"
காவ்யா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.. ஏகாம்பரம் கேட்ட கேள்வியை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டுதான் இருந்தாள்.. இருந்தும் பதில் பேசவில்லை...
"இப்ப இதான் முக்கியமான பேச்சா..? எதுக்காக இவரு வந்திருக்காரு..?" ஏகாம்பரம் கேட்டார்..
"கடையைப் பாக்க வந்திருக்கலாம்..." என்றாள் பாவனா...
"பாத்தா அப்படித் தெரியலையே..." என்று சொன்னார் ஏகாம்பரம்...
"எடுத்தவுடனே பாத்தா அப்படித் தெரியாது சார்.. பார்க்கப் பார்க்கத்தான் அப்படித் தெரியும்..."
"விளயாட்டுப் புள்ளயாவே இருக்கியேம்மா..."
"உடனே பிளேகிரௌவுண்டுக்கு போன்னு பேக்-அப் பண்ணி அனுப்பி வைச்சிராதீங்க.. வேலயப் பாக்க விடுங்க..."
"இப்ப வேலயாம்மா பாக்கிற..? சாப்பிட்டுக்கிட்டுத் தான இருக்கிற..?"
"இதுவும் வேலதான் சார்.. இப்ப உங்களுக்கு என்ன வேணும்..? உங்க பாஷையில சொல்லப் போனா... பெரிய முதலாளி எதுக்காக மெட்ராஸில இருந்து வந்திருக்காருன்னு நாம பேசியாகனும் அவ்வளவுதானே.."
"ஆமாம்மா.. இந்தப் பக்கம் இருக்கிறது மூணே பேரு நாம பேசலன்னா வேற யாரு பேசறது...?"
"பேசிப்புட்டாப் போச்சு.. எத வைச்சு அவரு கடையப் பாக்க வந்ததைப் போலத் தெரியலைன்னு நீங்க சொல்றீங்க..?"
"யோசிம்மா.. வந்த மகராசன்.. முதமுதலா கடைக்குள்ள வந்திருக்காரு..."
"ஆமாமாம்.. ஆனா.. வலது கால எடுத்து வைச்சு வந்தாரா.. இல்ல.. இடது கால எடுத்து வைச்சு வந்தாரான்னு தான் தெரியல..."
தோழியின் வாடிய முகத்தைப் பார்வையிட்டபடி சொன்னாள் பாவனா...
"அதைச் சொல்லு.." ஆமோதித்தார் ஏகாம்பரம்...
"வந்தவரு கடையைச் சுத்திப் பாக்கனும்னுதான நினைக்கனும்..?"
ஏகாம்பரம் எடுத்துவிட்ட கேள்வியில் 'ஆ' வென்று பிரமிப்புடன் அவரைப் பார்த்தாள் பாவனா.. அவளின் அந்த போலி பிரமிப்பில் காவ்யாவுக்கு சிரிப்பு வந்தாலும் அவள் சிரிக்கவில்லை.. அவளால் சிரிக்க முடியவில்லை...
"எப்புடி ஏகாம்பரம் சார்..? எப்புடி இவ்வளவு பெரிய அறிவாளியா மாறினீங்க.. என்னமா யோசிக்கறிங்க.. உங்களைக் கொண்டாட உங்க வீட்டம்மாவுக்கு தெரியலையே... த்ச்சு.. த்ச்சு..."
"விடும்மா.. வீதியில போற நாய் கடைக்குள்ள வந்திரப் போகுது.. ஆமா.. இப்ப எதுக்காக சும்மா போகிற நாய சூச்சூன்னு கூப்பிட்டு வைக்கிற..?"
"இந்தக் கிண்டல்தான வேண்டாம்கிறது.. உங்களப் பாராட்டினா கேட்டுக்குவீங்களா.. அத விட்டுட்டு.. தெரு நாய வம்புக்கு இழுக்கனும்ங்கறிங்களே..."
"உன் பாராட்ட உங்கிட்டயே வைச்சுக்க.. நாம வந்திருக்கிற மனுசரைப் பத்திப் பேசலாம்.. வந்த மனுசர் கடையச் சுத்திப்பாக்கவும் செய்யல.. கணக்கு வழக்கையும் பாக்கல..."
"அதானே..."
"எத்தனை கம்யூட்டர் இருக்குது.. எத்தன விக்குது.. எவ்வளவு லாபம் வருதுன்னு பேசாம.. எதையெதையோ பேசிக்கிட்டு இருக்காரு..."
ஏகாம்பரத்தின் பார்வை காவ்யாவின் மீது படிந்ததில் அவள் தர்ம சங்கடமடைந்தாள்.. இவருக்கு தெரியாமல் இருக்காது என்ற நெருடல் அவள் மனதில் எழுந்தது...
ஏகாம்பரம் மௌனகுருவைப் போல இருந்தபடியே தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவதானிப்பதில் வல்லவர்.. யார் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஒரு பார்வையிலேயே கண்டு பிடித்து விடும் சூட்சும புத்தி படைத்தவர்...
அப்படிப்பட்டவர்.. அர்ஜீன் இல்லாத போது வருகை தந்திருக்கும் பார்த்தசாரதியின் முதல் நடவடிக்கையே காவ்யாவை பாதிப்பதாக இருப்பதைப் பற்றி யோசிக்காமலா இருந்திருப்பார்..?
'என்னத்தையோ செஞ்சு தொலைக்கட்டும்..' காவ்யாவுக்குள் கோபம் பொங்கியது..
அவளின் இருப்பிடம் அர்ஜீனின் மனதில்தான்.. அந்தக் கடையில் அவள் வேலை பார்த்தால்தான் அர்ஜீன் அவளைக் காதலிப்பான் என்று இருக்கிறதா என்ன..?
அவள் எங்கே இருந்தாலும் அவன் அவளைத் தேடி வருவான்.. அவள் அதற்காக கவலைப்பட வேண்டாம்..
பார்த்தசாரதி அதிகமாக அழும்பு பண்ணினால்.. 'போய்யா நீயுமாச்சு.. உன் வேலையுமாச்சு..' என்று போய் விட அவள் முடிவு செய்தாள்...
'வீட்டுக்குப் போனதும்.. முதவேலயா சாமிக்கு முன்னால சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பாத்திரனும்...'
ஏகாம்பரத்தின் பார்வையைக் கவனித்த பாவனா பேச்சை மாற்றினாள்...
"விடுங்க ஏகாம்பரம் சார்.. அவருக்கு என்னவோ இளங்கோவப் பார்த்தவுடனே பிடிச்சுப் போச்சு..."
'இல்லை பாவனா..' காவ்யா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்...
'என்னைப் பார்க்கிறதுக்கு முன்னாலேயே அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கனும்.. அதான் இப்படி...'
இதற்காகத்தான் கண்ணதாசன் யோசித்துக் காதல் செய் என்று தலைப்பாடாய் அடித்துக் கொண்டானோ என்றிருந்தது காவ்யாவிற்கு...
பார்த்தசாரதியின் உதாசீனப் பார்வைகளையும்.. பேச்சையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதற்கு மேலும் இடர் வந்தால் எப்படி அவள் தாங்கிக் கொள்வாள்...?
காதலுக்காக போராட வேண்டும்தான்.. ஆனால் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து எப்படி போராடுவது..? அர்ஜீனுக்காக உயிரை விடச் சொன்னால் காவ்யா சந்தோசமாக உயிரை விடுவாள்.. மரியாதையை விடச் சொன்னால் எப்படி அதைச் செய்வாள்..?
"பிடிச்சவங்களாப் பாத்து வேலைக்கு வைச்சுக்கனும்னு நினைக்கறதில தப்பில்லம்மா.. இது என்ன கவர்ண்மென்ட் ஆபிஸா..? கடைதான..? கடைய விக்கப் போறாங்கன்னு பேச்சு அடிபட்டப்பவே நாமள்ளாம் வெளியேற இருந்தவங்கதான..? அப்ப விட்டுப்புட்டு.. இப்பத் திடிர்ன்னு வந்து இத மாத்து.. அத மாத்துன்னு சொன்னா எப்புடி..?"
காவ்யாவின் இடமாற்றத்தை அவர் சொல்வதைப் புரிந்து கொண்ட காவ்யா உதட்டைக் கடித்தாள்.. தோழியை ஆறுதல் படுத்துவதைப் போல பார்த்து வைத்தாள் பாவனா...
"அதைத்தான் சார் நானும் யோசிக்கிறேன்.. துரியோதனன் சார்கிட்ட கடை இருந்தப்ப எப்படி இருந்துச்சோ.. அப்படியே விட்டிருக்கலாம்.. அர்ஜீன் சார் வந்தவுடனே கடையோட வேலைகளை மாற்றினார்.. அதுகூட ஓகேதான்.. துரியோதனன் சார் உள்ளூர்காரர்.. கடை அவர் பொறுப்பில இருந்துச்சு.. மேற்பார்வைக்கு அவர் இருந்தார்.. அர்ஜீன் சார் அப்படியில்லை.. சென்னைக்காரர்.. ஆடிக்கொருதரம்.. அம்மாவாசைக்கு ஒருதரம்ன்னு வந்து போகிறவர்.. அவர் கடையோட பொறுப்பை நம்பிக்கையான ஒருத்தங்க கையில விட்டு வைக்கனும்னு நினைச்சதுதான் சரி.. பட்.. இப்ப திடிர்ன்னு எம்.டி.யோட அப்பாவந்து எல்லாத்தையும் மாத்தறதுதான் எனக்குப் பிடிக்கல..."
"எனக்கும்தான் பிடிக்கல.. ம்ஹீம்.. உனக்கும்.. எனக்கும் பிடித்து என்ன ஆகப்போகிறது.. நம்ம கருத்த யாரு கேக்கப் போறா..?"
"அதச் சொல்லுங்க..."
ஏகாம்பரம் அகன்றதும்.. எதுவும் பேசாமல் சாப்பாட்டில் விரல்களை அளைய விட்டுக் கொண்டிருந்த காவ்யாவிடம்...
"என்னன்னுதான் சொல்லித் தொலையேண்டி..." என்று எரிச்சல் பட்டாள் பாவனா...
"ம்ப்ச்.. ஒன்னுமில்ல.." விரக்தியாக சொன்னாள் காவ்யா...
"ஏய்ய்.. இந்த ஆளுக்கெல்லாமா நீ இம்பார்டன்ஸ் கொடுக்கிற..? நீ எதையும் சட்டை பண்ணாத ஆளாச்சேடி.. இவரெல்லாம் உனக்கு ஜீஜீபி காவ்யா.."
உண்மைதான்.. பார்த்தசாரதி மட்டும் அர்ஜீனின் அப்பாவாக இல்லையென்றால் காவ்யாவுக்கு அவர் வெறும் ஜீஜீபிதான்.. அப்படியில்லாமல் அவர் அர்ஜீனின் அப்பாவாக இருந்து தொலைக்கிறாரே.. அவரின் மகனிடம் மனதைப் பறிகொடுத்தவள் அவரை ஜீஜீபி என்று சொல்லிவிட முடியுமா..?
காவ்யா மீண்டும் "ம்ப்ச்.." என்றாள்...
"எதுக்குடி இத்தன உச்சுக் கொட்டற.. பிடிச்சா வேலையைப்பாரு.. பிடிக்கலைன்னா போய்யான்னு சொல்லிட்டு உன் வழியைப் பாத்து போய்கிட்டே இரு..
இத நான் உனக்குச் சொல்லனுமா...?"
அதுதான் பார்த்தசாரதியின் எண்ணமோ என்று காவ்யாவிற்குத் தோன்றியது.. அவளை கடையை விட்டு விரட்டியடிக்க நினைக்கிறாரா.. இல்லை..அர்ஜீனின் வாழ்க்கையிலிருந்து விரட்டியடிக்க நினைக்கிறாரா..?
பார்த்தசாரதிக்கு அவளைப் பிடிக்கவில்லை என்பதை நினைத்துப் பார்க்கவே அவளுக்குத் துன்பமாக இருந்தது.. அர்ஜீனைப் பெற்றவர்களின் விருப்பமின்றி அவளுடைய திருமணம் அர்ஜீனுடன் நடந்து விட முடியுமா..?
காவ்யாவிற்கு அழ வேண்டும் போல இருந்தது.. யாருக்காகவும்.. எதற்காகவும்.. கண்கலங்கியிராத காவ்யா.. அர்ஜீனால்.. அவன் காதலால் கண்கலங்கி நின்றாள்...
"ஏய்ய்.. காவ்யா.. அழுகிறயா..?"
"இல்லயே..."
சட்டென்று காவ்யா எழுந்து விட்டாள்... அவள் கைகழுவிவிட்டு வந்தபோது அவளிடமிருக்கும் ஃபைல்களை பார்த்தசாரதி கேட்பதாக இளங்கோ வந்து நின்றான்.. மௌனமாக எடுத்துக் கொடுத்தாள்.. மாலையில் வீட்டிற்குத் திரும்பியபோது அவள் மனம் பாறாங்கல்லாய் கனத்திருந்தது...
கண்ணதாசன் அப்போதுதான் அலுவலத்திலிருந்து வந்திருந்தான்.. குளித்து.. உடைமாற்றி.. காபி குடித்துக் கொண்டிருந்தான்.. காவ்யாவைக் கண்டதும் ஏதோ கேட்க முயன்றான்.. அவனைக் கவனிக்காமல் அவள் கடந்து சென்றதில் அவன் புருவங்கள் மேலேறின...
குளித்து உடைமாற்றி வந்தவள்.. யாரையும் கவனிக்காமல் பூஜையறையை நாடிச் செல்வதைக் கவனித்தவனின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன...
காவ்யா கண்மூடி தெய்வங்களிடம் வணங்கி நின்றாள்.. இரு சீட்டுக்களை சுருட்டிப் போட்டுக் குலுக்கினாள்.. ஒன்றை எடுத்தாள்.. பிரித்துப் படித்தாள்.. அவள் முகம் மாறியது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -80
எங்கிருந்தோ ஆசைகள். -80
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-80.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-80.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy