எங்கிருந்தோ ஆசைகள். -79

79 உன் மனதுக்கு என்னைப் பிடித்துவிட... உளமாற ஆசைகொண்டேன்.. தகப்பனும்.. மகனும் பிடிவாதத்தில் ஒருவருக்-கொருவர் சளைத்தவர்களல்ல.. பார்த்த...

79
உன் மனதுக்கு என்னைப் பிடித்துவிட...
உளமாற ஆசைகொண்டேன்..



தகப்பனும்.. மகனும் பிடிவாதத்தில் ஒருவருக்-கொருவர் சளைத்தவர்களல்ல.. பார்த்தசாரதி நேகாதான் அவருடைய மருமகள் என்ற விசயத்தில் பிடிவாதமாக இருந்தார்.. அர்ஜீனோ.. அவன் மனதுக்குப் பிடிக்காத பெண்ணை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தான்...
இரண்டு எதிர்மறைத் துருவங்களும் மோதிக் கொண்டிருந்தன..
"இது என்னோட பிரஸ்டிஜ் இஸ்யு.." என்றார் பார்த்தசாரதி...
"எது..?" அர்ஜீன் கேட்டான்..
"இந்தக் கடை.."
"எனக்கும் அப்படித்தான்.."
"அர்ஜீன் என் மனம் உறுத்துது.."
"எதுக்காக டாட்.. என்னடா நம்ம மகனை இந்த அளவுக்கு ஹர்ட் பண்றோமேன்னு உறுத்துதா..?"
"அது உனக்கு உறுத்தனும்.. பிகாஸ்.. நீதான் என்னை ஹர்ட் பண்ற..."
"ஓ... டாட்.. என் லைனில் நீங்கதான் கிராஸ் பண்றிங்க.. நான் உங்க லைனுக்கே வரலையே.. நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேனே..."
"நானும் அதைத்தான் சொல்கிறேன்.. நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துக்கிட்டு இரு.. மதுரையில் உனக்கு என்ன வேலை..?"
பார்த்தசாரதியின் பிடிவாதத்தில் அர்ஜீன் பல்லைக் கடித்தான்.. அது நாள்வரை அவனும் பார்த்தசாரதியும் இந்த அளவுக்கு பேசிக் கொண்டதில்லை.. எதைச் சொல்வதாக இருந்தாலும் ஊடே சுந்தரியையும்.. ஆனந்தியையும் வைத்து அவர்கள் மூலமாகவே பேசிக் கொள்வார்கள்..
முதன் முறையாக ஊடே சுந்தரியும்.. ஆனந்தியும் வராமல் அவர்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டார்கள்..
"டாட்.. நான்.. எங்கே.. என்ன வேலை பார்க்கனும்னு நான்தான் முடிவு பண்ணனும்.. நீங்க முடிவு பண்ணக்கூடாது.. இது என்னோட லைஃப்..."
"இது நான் வாங்கின கடை..."
"என் பெயரில் வாங்கினீங்க.. பணத்தை நான் செட்டில் பண்ணிட்டேன்..."
"ஆனா.. இந்தக் கடையை என் பிரண்டுக்கே நான் திருப்பிக்கொடுக்கிறதா இருக்கேனே.. ஸோ.. உன் பணத்தை நீயே வைத்துக்க..."
"என் பெயரில் இருக்கிற கடையை நான் கையெழுத்துப் போடாம திருப்பிக்கொடுக்க முடியாது.. ஸோ.. நான் கடைக்காக கொடுத்த பணம் கொடுத்தது தான்.. திருப்பி வாங்கிக்கிறதாயில்லை..."
"இது சரியில்லை அர்ஜீன்.. என் பிரண்டின் மனசு புண்பட்டிருக்கு.. நான் அதை சரிபண்ணனும்..."
"நீங்க எதை சரிபண்ணனும்னு நினைக்கறிங்கன்னு எனக்கும் தெரியும்... நீங்க முதல்ல சென்னைக்கு கிளம்புங்க..."
அர்ஜீன் போனை வைத்து விட்டான்.. பார்த்தசாரதி கொதித்தார்.. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே போனை வைத்து விட்ட அர்ஜீனின் செய்கையில் அவரின் கோபம் அதிகரித்தது...
'இதெல்லாம் யாராலே...'
காவ்யாவினால் என்று தீர்மானித்தவர் இளங்கோவை கூப்பிட்டார்..
"அந்தப் பெண்ணைக் கூப்பிடு..."
"அவங்க பெயர் காவ்யா சார்.."
எந்தப் பெண்ணை என்று கேட்காமல் உடனடியாக இளங்கோ பதில் சொல்லியதிலிருந்து.. அவன் எந்த அளவுக்கு அவரை புரிந்து வைத்திருக்கிறான் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது...
"அதை நான் கேட்டேனா..?"
அவர் எரிந்து விழுந்தார்.. இளங்கோ விரைவாக அந்த இடத்தைவிட்டு அகன்றான்.. அவன் போனபோது காவ்யாவுடன் செல்போனில் அர்ஜீன் பேசிக் கொண்டிருந்தான்...
"லேன்ட் லைனுக்கு போன் பண்ணியிருந்தேன்..."
"நான் அங்க இல்ல..."
"தெரியும்.. டாடிதான் போனை எடுத்தார்.. எப்ப வந்தார்..?"
"இப்பத்தான்..."
"உன்னிடம் பேசினாரா..?"
"இல்ல..."
அவர் அவளை உதாசீனப் படுத்தியதையும்.. அவளின் டேபிள் சேரை அர்ஜீனின் அறைக்கு வெளியே போட்டு அதில் இளங்கோவை உட்கார வைத்ததையும் அவள் அவனிடம் சொல்லவில்லை..
"ஏன் என்னவோ போல பேசற..?"
"ஒன்.. ஒன்னுமில்லயே..."
"இல்லை.. எதுவோ இருக்கு.. உன் வாய்ஸே சரியில்லை.. மறைக்காமல் சொல் காவ்யா.. அங்கே என்ன நடக்குது..?"
அர்ஜீன் போனில் கேட்டுக் கொண்டிருந்தபோதே இளங்கோ வந்து விட்டான்.. காவ்யா அவசரமாக போனை அணைத்து விட்டாள்...
"என்ன இளங்கோ..?"
"பெரியவர் உங்களைக் கூப்பிடறாரு..."
"எதுக்காம்...?"
"சொல்லலை..."
இளங்கோ அவளைப் பார்த்த பார்வையில் இரக்கமிருந்தது.. அதில் காவ்யாவின் மனம் வலித்தது.. கடைசியில் இளங்கோவின் இரக்கப் பார்வைக்கு ஆளாகும் அளவிற்கா அவளின் நிலை ஆகிவிட்டது...?
"வர்றேன்னு சொல்லுங்க..."
இளங்கோவுடன் சேர்ந்து போவதை தவிர்க்க விரும்பியவளாக டேபிளை சரிபண்ண ஆரம்பித்தாள் காவ்யா... அவளின் அந்தப்பதிலில் இளங்கோவின் முகத்தில் திருப்தி நிலவுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவள் நிமிர்வாக பதில் சொல்வதாக அவன் நினைத்துக் கொள்வதையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது...
இளங்கோ சந்தோசத்துடன் போய்விட்டான்...
தன்னால் எதிர்க்க முடியாததை வேறு ஒருவர் எதிர்த்து நிற்கும்போது மகிழ்ச்சி கொள்வது மனித இயல்பு.. அதைத்தான் இளங்கோவும் செய்தான்...
அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருந்த பார்த்தசாரதி நிமிர்ந்து பார்த்தார்.. இளங்கோவின் முதுகுக்குப் பின்னால் அவரின் பார்வை துழாவியது...
"வர்றேன்னு சொன்னாங்க சார்.."
அவரின் முகபாவத்தை அளவிட்டபடி சொன்னான் இளங்கோ...
'என்ன திமிர்...!' பார்த்தசாரதியின் கண்கள் சிவந்தன.
"நான் கூப்பிட்டேன்னு சொன்னீயா..?"
"சொன்னேன் சார்..."
'சொல்லியுமா வரலை...' உக்கிரமானார் பார்த்தசாரதி..
"ஓகே.. நீ போ..."
இளங்கோ வெளியேறிய சிறிது நேரத்தில் காவ்யா வந்தாள்.. காதலனைப் பெற்றவரின் முன்னால் நிற்கும் படபடப்பு அவள் முகத்தில் தெரிந்தது.. நடுங்கிய விரல்களை மடித்துக் கொண்டபடி.. மௌனமாக அவள் நின்றாள்...
பார்த்தசாரதி அவளை உறுத்துப் பார்த்தார்.. அந்தப் பார்வையில் அவள் நடுங்கினாள்..
"கூப்பிட்டா.. வர்றேன்னு சொன்னியாமே..."
பார்த்தசாரதியின் கோபத்தில் அவள் மென்று விழுங்கினாள்...
"டேபிளை சரிபண்ண வேண்டியிருந்தது சார்..."
"என் ஆபிஸில் இப்படியொரு லேபர் இருந்தால்.. உடனடியா அந்த லேபரின் சீட்டைக்கிழித்து விட்டுத்தான் நான் வேற வேலையைப் பார்ப்பேன்..."
'லேபர்' என்ற வார்த்தையில் மனதில் அடிவாங்கினாள் காவ்யா...
'இருக்கட்டுமே..' தனக்குள் சொல்லிக்கொண்டாள்..
'நான் தொழிலாளிதானே...' சமாதானப் படுத்திக் கொண்டாள்..
"ஐ ஆம் சாரி..."
அர்ஜீனின் தந்தை என்பதற்காகத்தான் அவள் அந்த 'ஸாரி..'யைச் சொல்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ளாத பார்த்தசாரதி எகிறினார்...
"எனக்குப் பிடிக்காத வார்த்தைன்னு ஒன்று இருக்குன்னா அது இந்த ஸாரிதான்..."
இதற்கு என்ன பதிலைச் சொல்லுவது என்று தெரியாமல் காவ்யா மௌனமாக நின்றாள்...
"நீ இங்கே எத்தனை நாளா வேலை பார்க்கிற..?"
"நாளில்லை சார்.. வருசங்கள்.."
"ஓ.. துரியோதனன் காலத்தில இருந்தே.. இங்க நீ வேலை பார்க்கிறயா..?"
துரியோதனன் காலம் என்பது எந்தக்காலம்..? என்று கேட்க நினைத்தவள் பேசாமல் நின்றாள்...
என்னவோ மகாபாரத துரியோதனன் காலத்தைச் சொல்வதைப் போல அவர் சொல்லி வைத்ததில் அவளுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை..
'நானென்ன தொண்டுக் கிழவியா..?'
பார்த்தசாரதி அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்கிறவராகவே இல்லை.. அவளை உதாசீனமாக பார்த்தபடி..
"கடையை டேக் ஓவர் பண்ண நான் வந்திருக்கனும்.." என்றார்...
எதற்காக இதைச் சொல்கிறார் என்று காவ்யாவின் புருவங்கள் சுருங்கின.. பார்த்தசாரதி அதைத்தான் எதிர்பார்த்திருந்தார் போல.. அவளை வன்மமாக பார்த்தபடி..
"அப்படி வந்திருந்தேன்னா.. தேவையில்லாத ஆள்களை உடனடியா வடிகட்டியிருப்பேன்.." என்றார்..
காவ்யா துடித்துப் போய் நிமிர்ந்தாள்..
'இதற்கு என்ன அர்த்தம்..? நான் தேவையில்லாத ஆள்ன்னு இவர் நினைக்கிறாரா..? என்னை வடிகட்டி வீட்டுக்கு அனுப்பியிருப்பாரா..?'
அவளின் தன்மானம் சிலிர்த்தது.. அர்ஜீனுக்காக பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றாள்...
"கடையோட இன்சார்ஜ் நீதானாமே..."
"யார் சொன்னது..?"
"கடையில வேலை பார்க்கிற எல்லோருமே சொல்றாங்களே..."
"இருக்கலாம்..."
காவ்யாவிடம் தோன்றிய நிமிர்வைக் கவனித்தார் பார்த்தசாரதி.. அவளின் படபடப்பு அடங்கியிருந்தது.. விரல் நடுக்கம் நின்றிருந்தது.. அந்த நிமிர்வில் அவருக்குள் கோபம் எழுந்தது..
'என்ன தைரியம்...'
அவருக்கும் தெரியும்.. அது மதுரை மண்ணிற்கே உரிய தெனாவெட்டு என்பது.. அவரும் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர்தானே...
'எல்லாம் அவன் கொடுத்து வைத்திருக்கிற இடம்..'
மகனை மனதுக்குள் திட்டிக் கொண்டார் பார்த்தசாரதி...
"எங்க கடைக்கு இன்சார்ஜா இருக்க நீ யார்..?" எரிச்சலுடன் அவர் கேட்டார்...
"இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது சார்.. உங்க மகனிடம் கேட்கனும்.. நான் இன்சார்ஜாய் இருக்கிறேன்னு தவ்வல.. இன்னும் சொல்லப் போனா.. இந்தக் கடையோட இன்சார்ஜா என்னைப் போட்டிருக்கிற விவரமே மத்தவங்க சொல்லித்தான் எனக்குத் தெரிஞ்சது..."
"செக்கரட்டரியாய் உன்னை செலக்ட் பண்ணியிருக்கானே.. உன் குவாலிபிகேசன் என்ன..?"
"பி.எஸ்.ஸி. கம்யூட்டர் சயின்ஸ்..."
"செக்கரட்டரி கோர்ஸ் படித்திருக்கிறயா..?"
"அது என்ன தேவைக்கு..?" எரிச்சலுடன் கேட்டாள் காவ்யா...
'இந்த ஓட்டைக்கடையில வேலை பாக்குறதுக்கு எண்பத்திரண்டு கோர்ஸ படிச்சு முடிச்சிருக்கனுமாக்கும்..?'
"அப்புறம் எப்படி உன்னைப் போய் செக்கரட்டரியாய் போட்டான்..?" அவளைவிட எரிச்சல் பட்டார் பார்த்தசாரதி...
"என்னக் கேட்டா.. எனக்கென்ன தெரியும்..? இந்தப் பதவிக்கும் நான் தாவிக் குதிக்கல.. உங்க மகன்தான் செக்கரட்டரின்னாரு.. நான் சிவனேன்னு அக்கவுண்ட்ஸை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்த ஆளு சார்.. எனக்கெதுக்கு இந்தப் பொறுப்பு..?"
'என்னடா இது...' என்றிருந்தது பார்த்தசாரதிக்கு..
காவ்யாவை மனரீதியாக பலவீனமாக்க அவளிடமிருக்கும் பொறுப்புக்களை தட்டிப் பறிக்க அவர் முனைந்தால்.. அவரை முந்திக் கொண்டு அவள் அந்தப் பொறுப்புக்களை தட்டிக் கழிக்கிறாளே...
"ஆர் யு ஷ்யூர்..?"
"இதென்ன சார் வம்பாப் போச்சு.. எனக்கு இந்தப் பொறுப்பு வேணாம்.. நான் ஏற்கனெவே முதலாளியிடம் சொன்னதுதான்.."
"யார் உன்னோட முதலாளி...?"
"உங்க மகன்தான்..."
"அப்ப என்னைப் பார்த்தா உனக்கு முதலாளியாத் தெரியலையா..?"
பார்த்தசாரதி இழுத்த உறண்டையில் கனடாவிலிருந்த அர்ஜீனை மனதுக்குள் திட்டித் தீர்த்தாள் காவ்யா...
'மத்தவங்க வீட்டில மாமியாதான் மருமககிட்ட பிரச்னை பண்ணுவான்னா.. எங் கதையே வேறாயிருக்கே.. இப்படியாப்பட்ட மாமனாருக்கா அவன் மகனாப் பிறந்து தொலைக்கனும்..?'
மனதுக்குள் காவ்யா அவரை அர்ச்சித்துக் கொண்டிருப்பதை அறியாதவராக பார்த்தசாரதி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்...
"இந்த விளையாட்டுக்கே நான் வரலை சார்.. இங்கே முதலாளி நீங்களா இருந்தா எனக்கென்ன..? இல்ல.. உங்க மகனா இருந்தா எனக்கென்ன..? வேலையைப் பார்க்கிறேன்.. சம்பளத்த வாங்கிக்கிட்டு நடையக் கட்டறேன்.. இதெல்லாம் எனக்குத் தேவையில்லாத பேச்சு..."
காவ்யா பிளந்து கட்டியதில் பார்த்தசாரதி வாயடைத்துப் போனார்.. அவருக்கு வாழைப் பழத்தில் ஊசி ஏற்றித்தான் பழக்கம்.. இப்படி சிதறுகாய் போல நேருக்கு நேராக வெடித்துப் பழக்கமில்லை.. அந்த நிலையிலும்...
'என் மகனைக் காதலிக்கிறான்னு சொல்றாங்க... இவ கொஞ்சமாவது இவளோட காதலனோட அப்பாவாச்சேன்னு என்னை நினைத்துப் பார்க்கிறாளா..?' என்று நினைத்துப் பார்க்காமலிருக்க அவரால் முடியவில்லை...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -79
எங்கிருந்தோ ஆசைகள். -79
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-79.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-79.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy