எங்கிருந்தோ ஆசைகள். -78

78 மந்திரத்தாலே எனை வென்றவனே-நீ தந்திரத்தாலே பகைவெல்ல ஆசைகொண்டேன்.. அது தகப்பனுக்கும்.. மகனுக்குமான யுத்தமாக இருந்தது... இருவருமே ஒருவ...

78
மந்திரத்தாலே எனை வென்றவனே-நீ
தந்திரத்தாலே பகைவெல்ல ஆசைகொண்டேன்..


அது தகப்பனுக்கும்.. மகனுக்குமான யுத்தமாக இருந்தது... இருவருமே ஒருவரின் மனநிலையைப் பற்றி மற்றொருவர் அறிந்திருந்தவராகவே இருந்தனர்... அர்ஜீன் கொதிப்பான மனநிலையில் இருந்தான்.. கனடாவிற்கு அவன் சென்றிருந்த வேலை முடிந்து விட்டது.. சென்னைக்கு திரும்பியதும் முதல் வேலையாக அவன் காதலைப்பற்றி வீட்டில் சொல்லி.. அவர்களை அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று காவ்யாவை பெண் கேட்பதாக இருந்தான்.. அந்த நிலையில் இப்படியொரு நெருக்கடியை அவனுக்கு பார்த்தசாரதி கொடுத்துக் கொண்டிருந்தார்...
அவருடைய திட்டம் எதுவாக இருக்கக் கூடும் என்று உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல அவனுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியிருந்தது.. தீனதயாளனின் மகளான நேகாவை அவனுக்கு மனம் முடித்து வைத்துவிட வேண்டுமென்ற அவரின் ஆசையை பலசமயங்களில் வெளிப்படையாகவே பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.. நேகாவை புறக்கணிக்காமல் அவளிடம் பேசிப் பழகும்படி அர்ஜீனிடம் ஏறக்குறைய அவர் மன்றாடியிருக்கிறார்...
"நீ நேகாவை அவாய்டு பண்ணாதே அர்ஜீன்..."
"ஐ டோன்ட் கேர்..."
"இதையெல்லாம் நீ கேர் பண்ணித்தான் ஆகனும்.. அர்ஜீன்.."
"டாட்.. நீங்க என் பிஸினெஸ்ஸில் இன்டர்பியர் ஆனாலே என்னால அதை பொறுத்துக்க முடியாது.. அப்படியிருக்க.. என் பெர்ஸனல் லைஃபில் இன்டர்பியர் ஆகனும்னு நினைக்கறிங்களே..."
"அஃப் போர்ஸ்.. நான் உனக்கு டாடிடா.. உன் பியுச்சரை தீர்மானிக்க எனக்கு உரிமையில்லையா...?"
"இல்லை.."
"அர்ஜீன்..."
"என் பியுச்சரை இது வரைக்கும் நான்தான் தீர்மானிச்சிருக்கேன்.. இனியும் நான்தான் தீர்மானிப்பேன்.."
"அதுக்காக பெத்தவங்களை தூக்கி எறிஞ்சிருவியா...?"
"நான் அப்படிச் சொல்லலையே.. பெத்தவங்க பிள்ளைகளின் விருப்பத்துக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கனுமா.. வேண்டாமா..? ஆனந்தியக்காவை எந்த விசயத்திலாவது நீங்க ஃபோர்ஸ் பண்ணியிருக்கீங்களா..?"
பார்த்தசாரதி வாயடைத்துப் போவார்.. ஆனந்தி அவரின் செல்லமகள்.. அவளுடைய விருப்பத்திற்கு மாறாக எதையும் அவர் செய்ததில்லை.. அதைத்தான் அர்ஜீன் அவருக்கு நினைவு படுத்தினான்...
"அக்காவுக்கு வெளிநாட்டில பிஸினெஸ் பண்ற பணக்கார மாப்பிள்ளைகள் வந்தாங்க.. உங்களுக்கும் அவங்களில ஒருத்தருக்குத்தான் அக்காவைக் கொடுக்கனும்ங்கிற எண்ணமிருந்தது.. கொடுத்தீங்களா..?"
பார்த்தசாரதி.. என்ன பதிலைச் சொல்லுவாள்..? ஆனந்திதான் மறுத்து விட்டாளே...
"ஏன் டாட் பதில் சொல்ல மாட்டேங்கறிங்க.. நான் சொல்லவா...? அக்காவுக்கு அதில் விருப்பமில்லை.. அவங்க சென்னையிலே செட்டிலான சத்தியமூர்த்தி மாமாவை கை காட்டினாங்க.. உங்க எதிர்பார்ப்புக்கு சத்தியமூர்த்தி மாமா கிட்டக்கூட வரமுடியாது.. ஆனாலும் நீங்க அவருக்குத்தான் ஆனந்தியக்காவை மேரேஜ் பண்ணிக் கொடுத்தீங்க.. ஏன்..?"
ஏனென்ற கேள்விகளுக்கு முடிவு வந்தால் தேவையென்று பார்த்தசாரதிக்குத் தோன்றியது.. எந்த வீட்டிலும் மகளைவிட.. மகனின் விவகாரத்தில் அதிகமாக தலையிடுவார்கள்.. இதை அர்ஜீனுக்கு அவர் எப்படி உணர்த்துவார்..?
"அக்காவுக்கு.. சத்தியமூர்த்தி மாமாவைத்தான் பிடித்திருந்தது.. நீங்க அவங்க விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்தீங்க.. அதைப்போல என் விருப்பத்துக்கும் மதிப்புக் கொடுங்க.. எனக்கு அந்த நேகாவைப் பிடிக்கவில்லை..."
இதை பட்டவர்த்தனமாக அறிவித்திருந்தவன் அர்ஜீன்.. அவனுக்கு நேகாவைக் கண்டாலே ஆகாது.. அவளை வெளிப்படையாக புறக்கணிப்பான்.. அவனுடைய உதாசீனத்தில் அவள் முகம் சுருங்கும்போது பார்த்தசாரதி மனம் பதறுவார்.. அர்ஜீன் அலட்சியமாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுவான்...
"அர்ஜீன் அந்தப் பெண்ணோட கையில நேகா குருப்ஆஃப் கம்பெனிஸீஸ் இருக்கு..."
"என் கையில் என்னோட கம்பெனி இருக்குது டாட்.."
"அதுவும் இதுவும் சேர்ந்தா அதுக்கு எத்தனை வேல்யூன்னு நினைத்துப் பார்த்தியா..?"
"தேவையில்லை டாட்.. நான் உங்க கம்பெனியையே என் கம்பெனியோட இணைத்துப் பார்க்காதவன்..."
"அர்ஜீன்.. அர்ஜீன்.. நீ ஏன் என்னைப் புரிந்துக்கவே மாட்டேங்கிற..?"
பார்த்தசாரதி பதறும்போது அவரை நிதானமாக கூர்ந்து பார்ப்பான் அர்ஜீன்...
"நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டிங்களா..?"
காலம் காலமாக தகப்பன்களைப் பார்த்து மகன்கள் வீசியெறியும் கேள்வி இது.. தோளுக்கு மேல் வளர்ந்த மகன்களிடம் தோழமை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் சில தகப்பன்களுக்கு வருவதேயில்லை..
அவர்கள் தங்கள் மகன்களைக் கட்டுப்படுத்த விரும்பும் போது அவர்கள் கட்டுக்களை அறுத்துக் கொண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்புகிறார்கள்.. அப்பாக்களுக்கும் மகன்களுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.. அம்மாக்களுக்கும் மகன்களுக்குமான தோழமை அதிகரிக்கிறது...
ஒரு மகனின் முதல் விளையாட்டுத் தோழமையைத் தருவது அம்மாதான்...
அவன் முகம் பார்க்கும் குழந்தைப் பருவத்தில் அவன் முகம் நோக்கிக் குனிந்து.. அழகுகாட்டி சிரிக்க வைப்பது அவனுடைய அம்மாதான்.. அவளுக்கும்.. அவளுடைய குழந்தைக்குமான உலகமே தனியானது..

அந்தக் குழந்தையின் பாசையை அதன் அம்மாவே புரிந்து கொள்கிறாள்...
அவன் தவழும்போது அவளும் தவழ்கிறாள்.. தளர்நடை பயிலும் போது அவளும் கூட நடக்கிறாள்.. வளர்ந்த பின்னால் வெளியுலகைப் பற்றிய அவனுடைய பகிர்வுகளை பொறுமையாக கேட்டுக் கொள்கிறாள்.. அவனுடைய விருப்பத்துக்கு ஏற்ப வாழ்வை வடிவமைத்துக் கொடுக்கிறாள்...
பிள்ளைகள் அப்பாவைவிட அம்மாவிடம் நெருக்கமாக இருப்பதற்கான தாத்பர்யம் இதுதான்...
அர்ஜீன் சுந்தரியிடம்தான் எதையும் பகிர்ந்து கொள்வான்.. ஆனந்தியின் வார்த்தைக்குத்தான் கட்டுப்படுவான்.. பார்த்தசாரதியிடம் ஒரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசவே மாட்டான்...
அவனை அவர் புரிந்து கொண்டதைவிட.. அவரை அவன் நன்றாகவே புரிந்து வைத்திருந்தான்...
"எங்க கொள்ளுத்தாத்தா காலத்தில திருநெல்வேலியில இருந்தாங்களாம்.. அவர் என்னோட தாத்தாவுக்கு வசதியான வாழ்க்கையைத் தந்தாரு.. அவ்வளவுதான்.. என் தாத்தாகாலத்தில மதுரையில கடைவைச்சிருந்தாராம்.. அவரும் என் அப்பாவுக்கு வசதியான வாழ்க்கையைத் தந்தாரு.. அதுக்கு மேல எதுவுமில்ல.. என் காலத்திலதான் நான் என் பரம்பரையை கொடி கட்டிப் பறக்க வைச்சிருக்கேன்... என் பிள்ளைகளுக்கு கோடிஸ்வரனோட பிள்ளைகள்ங்கிற அடையாளத்தைக் கொடுத்திருக்கேன்.. அவங்களுக்கு கோடிஸ்வர வாழ்க்கையைக் கொடுத்திருக்கேன்..."
மறந்தும் அதற்கு சுந்தரியின் பணமும்.. சொத்துக்களும் காரணமாக இருந்தன என்பதை அவர் சொல்ல மாட்டார்...
அவர் சொல்லிச் சொல்லி வளர்த்த வார்த்தைகளில் அர்ஜீன் ரோசப்பட்டான்.. அவரின் அடையாளத்தின் அடியில் வாழாமல் சுயமாய் வாழ ஆசைப்பட்டான்.. பிரிந்து தனித் தொழிலை ஆரம்பித்தான்.. அதற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி அடைத்தான்.. அவன் காலில் அவன் நின்றான்.. தகப்பனைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தான்...
பார்த்தசாரதிக்கான முதல் தோல்வி அது..
அவரால் அர்ஜீனைக் கட்டுப் படுத்த முடியாமல் போவதை அவர் உணர்ந்தார்.. அவனுக்கு அவருடைய சொத்துக்களும்.. அடையாளமும் தேவையாக இருந்தால் தானே அவர் விருப்பப்படி அவனை ஆட்டி வைக்க அவரால் முடியும்..?
அதோடு.. சுந்தரியின் பணத்தில் கம்பெனியை ஆரம்பித்தவர் கம்பெனி வளர்ந்ததும் அந்தப் பணத்தை அவளிடம் திருப்பிக் கொடுக்கவில்லை.. ஆனால்.. அவர் பெற்ற மகன்.. அவரிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்தான்...
அதில் அவர் அடிமனதில் காயம் ஏற்பட்டது.. அதை அறிந்தும் அறியாதவனைப் போல தன் போக்கில் தன் தொழிலைக் கவனிக்க ஆரம்பித்தான் அர்ஜீன்.. பார்த்த சாரதியின் மகன் அவன் என்ற அடையாளம் மாறி... அர்ஜீனின் தந்தை தான் அவர் என்ற அடையாளம் வந்து சேர்ந்தது.. அவரிடம் நின்றுகூடப் பேசாத தீனதயாளன் அவரின் பெண்ணை அர்ஜீனுக்கு கொடுக்க வேண்டும் என்று அவரிடம் வந்து நின்று பேசும் அளவிற்கு அர்ஜீன் உயரத்தில் இருந்தான்...
இவைகளில் ஒரு தந்தையாக பார்த்தசாரதிக்கு மகிழ்ச்சிதான்.. ஆனால்.. ஒரு தந்தையாக மகனின் திருமணத்தை முடிவு செய்ய முடியாமல் அவன்
தள்ளி நிற்பதைத்தான் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...
தீனதயாளன் அவருக்கு சம்பந்தியாக ஆகி விட்டால் அவருடைய தொழில் வட்டாரத்தில் அவரின் பிம்பம் உயரத்தில் ஏறிவிடும்...
"யு நோ.. மிஸ்டர் தீனதயாளனோட டாட்டரை பார்த்தசாரதியின் சன்னுக்கு பேசி முடிச்சிட்டாங்களாமே.."
இந்த வார்த்தைகளை பொறாமையுடன் அவரைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லும் நந்நாளுக்காக அவர் ஏங்கினார்.. அந்த நாளை அவருக்குத் தருவேனா என்று அவர்மகன் அவருடன் மல்லுக்கு நின்றான்...
"நேகாவிடம் என்ன இல்லை அர்ஜீன்..? அழகில்லையா.. பணமில்லையா.. அறிவில்லையா..?"
இப்படிக் கேட்பவரை துளைக்கும் பார்வை பார்ப்பான் அர்ஜீன்..
"நீங்க என்ன அவளோட குவாலிபிகேஷனை பிட்டுப்பிட்டு வைக்கிற செக்ரட்டரியா..?"
"அர்ஜீன்..."
"ப்ளீஸ் டாட்.. நீங்க உங்க உயரத்தில இருந்து இறங்காதீங்க.. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.."
"அவளை நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா இன்னும் உயரத்திற்கு நான் போவேண்டா..."
"அதை உங்க பிஸினெஸ்ஸை இம்ப்ரூவ் பண்ணிச் செய்து காட்டுங்க.. என் மேரேஜை யூஸ் பண்ணிச் செய்து காட்டனும்னு நினைக்காதீங்க.. வாழ்க்கை பிஸினெஸ்ஸில்லை.."
"அர்ஜீன்..."
"உங்களுக்கு மட்டும் அடக்க.. ஒடுக்கமாக.. காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்த என் அம்மா வேணும்.. எனக்கு மட்டும் நேகாவைக் கை காட்டுவீங்களா..?"
"அர்ஜீன்..."
"நீங்க மட்டும் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்து பார்க்கனும்.. நான் மட்டும் நீங்களும்.. ஆனந்தியக்காவும் வாழ்கிற நிறைவான வாழ்க்கையை வேடிக்கை பார்க்கனுமா..?"
"அர்ஜீன்..."
"என் வாழ்க்கையை வாழப் போகிறவன் நான்.. எனக்கும் எனக்கு மனைவியாக வரப்போகிறவளைப் பற்றி சில எதிர்பார்ப்புகள் இருக்கு.. அவ என் மனசுக்குப் பிடிச்சவளா இருக்கனும்..."
"நேகாவை ஏண்டா உன் மனசுக்குப் பிடிக்கல..?"
இப்படிக் கேட்கிறவரை என்ன செய்தால் தேவலாம் என்ற கோபம் மனதில் மூள.. இமைக்காமல் அவரையே பார்த்தான் அர்ஜீன்...
மனது என்ன களிமண்ணா.. பிடித்து வைப்பரின் விருப்பத்துக்கு ஏற்ப உருமாறுவதற்கு..?
அது கட்டுக்கடங்காத கடல் போன்றது.. தளைகளால் பிணைக்க முடியாதது...
மனம் என்னும் மாயக்குதிரையை அடக்கி ஆள யாராலும் முடியாது...
அந்த மனதிற்கு யாரைப் பிடிக்கும்.. யாரைப் பிடிக்காது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமா..? யாராவது ஒருவரைக் கை காட்டி அவரைப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியுமா..?
ஒருவரைக் காட்டி.. மனமே.. மனமே.. இவரை உனக்குப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியுமா..?
மயிலே.. மயிலே என்றால் கூட அது இறகைப் போட்டு விடும்.. மனது அது போன்ற கெஞ்சல்களுக்-கெல்லாம் மசியாது..
அர்ஜீனின் மனதிற்கு நேகாவைப் பிடிக்கவில்லை.. அதை ஏனென்று பார்த்தசாரதி கேட்டால் அவன் எப்படி விளக்கம் சொல்வான்...?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -78
எங்கிருந்தோ ஆசைகள். -78
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-78.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-78.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy