எங்கிருந்தோ ஆசைகள்...77

77 சின்னச் சின்ன வார்த்தைகளில்.. நீ என்மனதை உணர ஆசைகொண்டேன்.. "ஹலோ..." கனத்த குரலில் பதில் சொல்லிவிட்டு.. மகனின் குரலில் வெ...

77
சின்னச் சின்ன வார்த்தைகளில்..
நீ என்மனதை உணர ஆசைகொண்டேன்..


"ஹலோ..."
கனத்த குரலில் பதில் சொல்லிவிட்டு.. மகனின் குரலில் வெளிப்படப் போகும் உணர்வுகளை அவதானிக்கக் காத்திருந்தார் பார்த்தசாரதி...
ஒரு நொடி மௌனம் சாதித்த மறுமுனையில்...
"டாடி...?" என்ற அதிர்ச்சியுடன் கேட்டான் அர்ஜீன்..
"யெஸ் மை டியர் சன்.. உன்னோட டாடியேதான்.." அவன் அதிர்ச்சியை ரசித்தபடி பதில் சொன்னார் பார்த்தசாரதி...
'உன் காதல் விவகாரத்தை காதில் கேட்டதும் இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும்...'
"அங்கே என்ன பண்றீங்க...?"
"இது என்ன கேள்வி அர்ஜீன்..? இங்கே என்ன பண்ணுவாங்க..? சூபர்வைஸ் பண்ணுவாங்க..."
"இது என்ன புதுசா...?"
"புதுசா நிறைய நடக்குதே.. அதில இதுவும் ஒன்னா இருக்கட்டுமே..."
"ஐ கான்ட் பிலிவ் திஸ்.. உங்க எக்ஸ்போர்ட் கம்பெனியை விட்டு ஓரடிகூட நீங்க வெளியில வைச்சதில்ல..."
"அந்தக் குறையிருக்கக் கூடாதுன்னுதான் இப்ப மதுரைப்பக்கமா காலடி வைச்சிருக்கேன்..."
"கடையைப் பார்த்துக்க ஆளிருக்கு டாடி.. நீங்க உங்க டயத்தை வேஸ்டா ஸ்பென்ட் பண்றிங்க..."
"என் கம்பெனியைப் பார்த்துக்கவும் ஆளிருக்கு அர்ஜீன்.. இது நான் பிறந்து வளர்ந்த மதுரை.. இந்தக் கடை நான் வாங்கனும்னு நினைச்சு வாங்கின கடை.. அன்னைக்குத்தான் நண்பன்கிட்டயிருந்து கடையை பிடுங்கினதைப் போல ஆகிவிடக் கூடாதுன்னு கடையை டேக் ஓவர் பண்ண நான் வரலை.. இனிமே அந்தப் பிரச்னை இல்லையே.. ஸோ.. இனி கடையை நானே பார்த்துக்கிறேன்..."
பார்த்தசாரதி.. நிதானமாக.. பிசிறில்லாத குரலில் பேசினார்.. அர்ஜீன் குறுக்கிடவில்லை.. அவர் பேசி முடித்ததும்... அவரைவிட நிதானமாக ஆனால் அழுத்தத்துடன் அவன் கேட்டான்..
"வாட் இஸ் தி பிராப்ளம் டாடி..? மிஸ்டர் தீனதயாளன் அவரோட மகள் நேகாவை பெண் தரேன்னு சொல்லிட்டாரா..?"
"அர்ஜீன்..."
"ரிலாக்ஸ் டாட்.. ஐ நோ யு.. நீங்க எதுக்காக மதுரை மேலே திடிர்ன்னு இன்ட்ரெஸ்ட் காட்டறிங்க டாட்..?"
"அதான் சொன்னேனே..."
"நீங்க பிறந்து வளர்ந்த ஊர்.. ஆசைப்பட்டு வாங்கின கடை.. லொட்டு.. லொசுக்கு.. இதையெல்லாம் நம்ப நானொன்னும் முட்டாளில்லை..."
"ஒரு உறையில் ரெண்டு கத்தி இருக்க முடியாது அர்ஜீன்..."
"புரியலை..."
"இந்தக் கடைக்கு நான்தான் பாஸ்..."
"ஓ..." ஒருமாதிரியான குரலில் சொன்னான் அர்ஜீன்..
"இது எப்பயிருந்து டாட்...?"
"எது..?"
"உன்னது.. என்னதுன்னு பிரிச்சுப் பேசறது.. இப்படிப் பேசுகிறவர்தான் உங்க எக்ஸ்போர்ட் கம்பெனியில எனக்கு உரிமையிருக்குன்னு சொன்னீங்களா...?"
"அர்ஜீன்.. அது வேற.. இது வேற..."
"இரண்டுமே புராப்பர்ட்டீஸ்தான்.. இதில எனக்கு உரிமையில்லாதாப்ப.. அந்தக் கம்பெனியிலயும் எனக்கு உரிமை வேணாம்..."
"அடம் பிடிக்காதே அர்ஜீன்.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. இந்தக் கடை உன் பொறுப்பில் இருக்கிறதாலேதான் நீ சென்னையில தங்க மாட்டேங்கிறன்னு சுந்தரி வருத்தப்படறா..."
"ஓஹோ.. அப்ப அம்மாவோட வருத்தத்துக்காகத்தான் நீங்க மதுரைக் கடையை கைப்பத்த போயிருக்கீங்களோ.."
"ஷ்யூர்.. இந்தக் கடையை உன் பொறுப்பில இருந்து நான் எடுத்துக்கிட்டா நீயும் ஃப்ரீயாகிடுவ..."
"அப்புறம்..?"
"நிம்மதியா உன் தொழிலையும் பார்ப்ப..."
"இப்ப நான் நிம்மதியில்லாம தொழிலைப் பார்க்கிறேன்னு யார் உங்களுக்குச் சொன்னது..?"
"கடல் தாண்டிப் பறந்து கம்யூட்டர் பிஸினெஸ் பண்றவன்கிட்ட மதுரையில இருக்கிற கடையைப் பார்த்துக்கடான்னு நான் சொன்னது தப்பு அர்ஜீன்..."
"ஸோ.. அந்தத் தப்பை சரிபண்ண நீங்க மதுரைக்கு போயிருக்கீங்க..?"
"யெஸ்..."
"உங்க டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க டாடி.. நான் அந்தக் கடையை விட்டுக் கொடுக்கிறதா இல்லை..."
"இந்தக் கடையை உன் பெயருக்கு வாங்கியது நான்..."
"இன்னும் ஆறே நிமிசத்தில உங்க அக்கவுண்ட்டுக்கு கடைக்கான மொத்தப் பணமும் டிரான்ஸ்பர் ஆகிரும் டாடி.. இனி இந்தக் கடையில உங்களுக்கு உரிமையில்லை.."
"லுக் அர்ஜீன்.. இதை ஒரு சேலன்ஜீக்காக நான் வாங்கினேன்..."
"தெரியும்.. இப்ப இந்தக் கடையை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நான் சொல்கிறதும் சேலன்ஜ்தான்..."
"என்னிடமே சேலன்ஜ் பண்றயா..?"
"நோ அதர் வே.. இதைப் பண்ணித்தான் ஆகனும்னா நான் என்ன செய்ய முடியும்..?"
"நீ என் மகன்டா..."
"யார் இல்லைன்னது..? அதுக்காக என் பெயரில வாங்கின கடையை சொல்லிக் காண்பிப்பிங்களா..? நான் உங்களைவிட அதிகமா சம்பாதிக்கிறவன் டாடி..."
"அர்ஜீன்.."
"என் பிஸினெஸ்ஸில உங்க பணம்ன்னு ஒரு ரூபாய் கூட கிடையாது..."
"நீ உன் டாடியிடம் பேசுகிறேன்னு நினைவில் வைச்சுக்கடா..."
"ஊஹீம்.. ஒரு கடைக்கு இரண்டு பாஸ் இருக்கக் கூடாதுன்னு சொன்ன பிஸினெஸ் மேன்கிட்டப் பேசுகிறேன்.. அந்தக் கடை என்னோட சொத்து..."
"இது துரியோதனனோட சொத்து அர்ஜீன்..."
"டாமிட்.. விற்ற கடைக்கு அவர் சொந்தம் கொண்டாட முடியாது.. கடையை அவர் விற்றாச்சு.."
"நான் வாங்கியாச்சு..."
"நோ டாட்.. நான் வாங்கியாச்சு.. உங்க செல்போனில இந்நேரத்துக்கு மெஸேஜ் வந்திருக்கனுமே..."
அர்ஜீன் சொல்லிக் கொண்டிருந்த போதே பார்த்தசாரதியின் செல்போனின் திரை ஒளிர்ந்து செய்தி வந்திருக்கிறது என்று அறிவித்தது...
புருவங்கள் முடிச்சிட எடுத்துப் பார்த்தார்.. அவரின் பேங்க் அக்கவுண்டில் அந்தக் கடைக்கான விலையைவிட அதிகமான பணம் வரவாகியிருந்ததை அது அறிவித்தது..
"வட்டியோட உங்க பணத்தை கொடுத்துட்டேன் டாடி.. இனி அந்தக் கடையில் உங்களுக்கு உரிமையில்லை.. கிளம்புங்க..." என்றான் அர்ஜீன்...
பார்த்தசாரதியின் முகம் கருத்து விட்டது... அர்ஜீனின் இத்தனை வேகமான செயல்பாட்டை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை..
'பெற்ற அப்பனிடமே கணக்குத் தீர்க்கிறான்...' அவர் மனதுக்குள் பொருமினார்...
'என்கிட்டப் பேசிக்கிட்டே எப்படி சென்னைக்கு செய்தி அனுப்பினான்..?' அவருக்குப் புரியவில்லை...
"லேப் டாப் எதுக்கிருக்கு..?" என்று கேட்டான் அர்ஜீன்...
"உங்ககிட்ட பேசிக்கிட்டே என் சென்னை கம்பெனிக்கு மெஸேஜ் அனுப்பினேன்.. உங்க அக்கவுண்டில பணத்த கிரெடிட் பண்ணிட்டாங்க..."
"இது தேவையில்லாத வேலை அர்ஜீன்..."
"இத்தனை நாளா இந்தக்கடை உங்களுக்கு தேவையில்லாம இருந்தது.. இப்பத் திடிர்ன்னு தேவையானதா மாறலையா..? அதைப் போலத்தான் இதுவும்..."
அர்ஜீன் விவரத்தை யூகித்து விட்டான் என்பதில் பார்த்தசாரதிக்குள் கோபம் மூண்டது...
அவருடைய மகன்.. அவர் வாங்கிப் போட்ட கடையை பொறுப்பில் எடுத்துக் கொள்ள வந்த இடத்தில் ஒரு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் மயங்கிப் போயிருக்கிறான்.. அதைக் கண்டு பிடித்து... சரி செய்ய வந்தவரிடம் மறைமுகமாக யுத்தம் புரிகிறானென்றால் அவர் அதைப் போய் எங்கே சொல்வார்..?
"எப்பவுமே இந்தக் கடை எனக்குத் தேவையானதாகத் தான் இருந்தது.. துரியோதனன் என் பிரண்ட்..."
"ஈஸிட்..?"
மகனின் கிண்டல் புரிந்தவராக பல்லைக் கடித்தார் பார்த்தசாரதி.. இதுபோன்ற உரையாடலை அவனுடன் உரையாடுவதில் அவருக்கும் சங்கடம் ஏற்படத்தான் செய்தது.. ஆனாலும் என்ன செய்வது..? அவருக்கு நேகா மருமகளாக வரவேண்டுமே.. அதற்காக காவ்யாவை அர்ஜீனின் வாழ்க்கையிலிருந்து விலக்கியாக வேண்டுமே..
"புரிஞ்சுக்க அர்ஜீன்.."
"யாரை...?"
"என் மனதை..."
"அதில் என்ன இருக்கு.. என்ன பிளான் இருக்குன்னு தான் எனக்குத் தெரியலையே டாடி..."
"ஆயிரம்தான் இருந்தாலும் துரியோதனன் என் பிரண்ட்..."
"அதுக்கு இப்ப என்ன செய்யனும்ங்கறிங்க...?"
"இந்தக் கடையை அவனுக்குத் திருப்பிக் கொடுத்து விடலாம்கிறேன்.."
"வாட்..?!..."
மறுமுனையில் அர்ஜீனின் அதிர்ச்சி வெளிப்பட்டது.. பார்த்தசாரதிக்கும் மனதில்லைதான்.. துரியோதனனை வென்று விட்டதற்கு அடையாளமாக நிற்கும் கடையை காலாகாலத்திற்கும் கையில் வைத்திருப்பதை விட்டுவிட்டு அதை துரியோதனனிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கனவிலும் அவர் நினைத்ததில்லைதான்.. வருடக் கணக்கில் அவர் மனதில் உறைந்திருந்த ரணத்தை ஆற்றி விட வந்த.. மருந்தான கடையை அந்த ரணத்தை உண்டாக்கியவனுக்கே
தாரை வார்ப்பதில் அவருக்கு கடுகளவு கூட உடன்பாடில்லைதான்...
ஆனாலும் அவர் என்னதான் செய்வார்..?
இதற்காகவெல்லாம் அவர் பார்த்துக் கொண்டிருந்தால் அவரின் தற்போதைய கனவு என்னாவது..? நேகா அவர் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டியது அவசியமல்லவா..? அதற்காக காவ்யாவை அர்ஜீனின் வாழ்க்கையை விட்டு அனுப்ப வேண்டியது அதை விட அவசியமல்லவா..?
"எஸ் அர்ஜீன்.. ஐ டிசைட் இட்.. என் பிரண்டுக்கு அவன் கேட்ட சொல்லினால் ஏற்படும் மனவலியை உணர்த்த வேண்டுமென்றுதான் நான் நினைத்தேன்.. அதனால் ஏற்படும் மனக்காயத்தைப் பற்றி அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் நான் நினைத்தேன்..."
"ஓ..."
அர்ஜீனின் இகழ்ச்சியான 'ஓ' பார்த்தசாரதியின் காதுகளில் ஒலித்தது...
அந்தக் கடை அவர்களின் கைக்கு வந்து பதினொரு மாதங்களுக்கு மேலாகி விட்டன... கிட்டத்தட்ட ஒரு வருடத்தை தொடப்போகும் அந்த நேரத்தில் பார்த்தசாரதி திடிரென்று நட்பிற்கான அதிகாரத்தை எழுதினால் அதை அவன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை...
அர்ஜீன் அவனுடைய தகப்பனின் குணாதிசியத்தைப் பற்றி மிக நன்றாகவே அறிவான்.. அவர் வியாபாரத்தில் கை தேர்ந்தவர்.. வெற்றியின் அடையாளங்களை பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறவர்.. அவராவது அந்த வெற்றியின் அடையாளத்தை விட்டுக் கொடுப்பதாவது.. அதையும் அவர் நட்பிற்காகவே விட்டுக் கொடுக்கிறேன் என்று சொன்னால் அதை நம்ப அர்ஜீன் ஒன்றும் அடி முட்டாளில்லையே..
அவருக்கு திடிரென்று ஞானோதயம் ஏற்பட்டு விட்டதென்று அவர் சொல்வதை அர்ஜீன் நம்பவில்லை..
"இத்தனை நாளா இந்த பிரண்ட்ஷிப் எந்த ஷிப்பில் மூழ்கி கடலில் கிடந்தது டாட்..?" என்றுதான் அவன் கேட்டான்...
"லுக் அர்ஜீன்.. எதையும் கிண்டல் பண்ணிலாம்ன்னு நீ நினைக்கிற விதத்தை நான் ரசிக்கவில்லை..."
"ஐ டோன்ட் கேர் ஃபார் தட்.. இந்த செகண்டில் அது என்னோட கடை.. என் கடையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.. நீங்க சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிருங்க..."
"ஹவ் இஸ் இட் பாஸிபிள்..? இதை என் மன நிம்மதிக்காக நான் வாங்கினேன்..."
"உங்க பெயரில் வாங்கலை.. அது என் பெயரில் வாங்கின கடை.. அதுக்கான பணத்தை வட்டியோட உங்களுக்கு செட்டில் பண்ணிட்டேன்..."
"அர்ஜீன்.. இந்தக் கடையை வாங்கறது நான்தான்னு தெரிஞ்சா துரியோதனன் எனக்கு கடையை விற்க மாட்டான்.. அந்த ஒரு காரணத்துக்காகவே நான் உன் பெயரில் கடையை வாங்கினேன்.. மறந்துராதே..."
அவர் எதற்காக கடையை துரியோதனனுக்கு தாரை வார்த்துக்கொடுக்க விரும்புகிறார் என்பதை புரிந்து வைத்திருந்த அர்ஜீனும்.. அவன் எதற்காக கடையை விட்டுத்தர மறுக்கிறான் என்பதை தெரிந்து வைத்திருந்த பார்த்தசாரதியும் மோதிக்கொண்டார்கள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்...77
எங்கிருந்தோ ஆசைகள்...77
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-77.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-77.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy