எங்கிருந்தோ ஆசைகள்.. -76

76 உன் கண்ணசைவில் எந்தன் மனம்.. கட்டுப்பட ஆசைகொண்டேன்... அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் வேலை வேண்டாம் என்று ஓடி விடச் சித்தமாகி விட்டாள்...

76
உன் கண்ணசைவில் எந்தன் மனம்..
கட்டுப்பட ஆசைகொண்டேன்...


அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் வேலை வேண்டாம் என்று ஓடி விடச் சித்தமாகி விட்டாள் பாவனா...
'நானே வீட்டுக்குள்ள தனியா இருக்க முடியலைன்னு வெளியுலகத்த பார்க்கலாம்ன்னு வேலைக்கு வந்து போகிறேன்.. இதில இந்தாளு முகத்த மட்டும் பார்த்துக்கிட்டு தனியா உட்காரனும்னா எனக்கு இந்த வேலையே வேண்டாம்டா சாமி.. இந்த மடம் இல்லைன்னா சந்த மடம்.. எந்த மடமும் கிடைக்கலேன்னா வீட்டில பார்த்து வைக்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி ஜாம்.. ஜாம்ன்னு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு ஓடிப் போயிரலாம்.. இந்த சம்பளம் இல்லைன்னா என் பாக்கெட் மணியில் துண்டு விழுகும்.. அவ்வளவுதானே... இதை வாங்கிக்கிட்டுப் போய் என் அப்பாம்மாவிடமா கொடுக்கிறேன்..?'
பாவனாவின் வீட்டிலும் சரி.. காவ்யாவின் வீட்டிலும் சரி.. அவர்களுடைய சம்பளத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்.. காவ்யா அவளுடைய சம்பளத்தை பேங்கில் சேர்த்து வைப்பாள்.. பாவனா சம்பளம் வாங்கிய முதல் வாரத்திலேயே அதைத் தண்ணீராய் செலவளித்து விட்டு.. செலவுக்கு பணம் வேண்டுமென்று அவள் அப்பாவிடம் கேட்டு வைப்பாள்..
அப்பேற்பட்ட பாவனா.. சிடுமூஞ்சியின் சிறைவலையில் மாட்டுவாளா..?
பார்த்தசாரதியின் உத்தேசத்தை அறியும் பொருட்டு அவர் முகத்தை உற்று நோக்கினாள் பாவனா.. நல்ல வேலையாக அவருக்கு அந்த உத்தேசமில்லை..
'கடையில வேலை பாக்கிறவங்களில யாரையாவது கூப்பிடு...' என்றுதான் பாவனாவுக்கு உத்தரவிட்டார்..
ஏன்.. எதற்கு என்று கேட்காமல்.. தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று அறைக்கு வெளியே ஓடி நிம்மதியாக மூச்சு விட்டவள் இளங்கோவை அழைத்தாள்..
"என்ன பாவனா.." இளங்கோ உடனடியாக ஓடி வந்தான்..
இந்த ஓட்டத்தை இதற்கு முன்னால் காவ்யா கூப்பிட்டால்தான் ஓடியிருக்கிறான் என்ற நினைவில் பாவனாவுக்கு என்னவோ போல இருந்தது...
ஒரு நிமிடத்தில் அங்கே நிலைமையே மாறுவதா..?
அலுவலகப் பகுதியில் குனிந்த தலை நிமிராமல் வேலை பார்த்துக் கொண்டிருந்த காவ்யாவை இரக்கத்துடன் பார்த்தாள் பாவனா...
"சார் கூப்பிடறாரு..."
"என்னையா..?"
"ம்ம்ம்..."
"எதுக்குன்னு தெரியுமா பாவனா..?"
இளங்கோ குழைந்தான்.. அவன் குழைவில் பாவனாவுக்கு கோபம் வந்தது.. பெரிய மனிதர்களின் அருகாமையில் நிற்கும் மேஜை நாற்காலிக்குக்கூட இவர்கள் அஞ்சுவார்களா..?
"நானும் உங்களைப் போல்தான் இளங்கோ.. எனக்கு மட்டும் புதுசாய் என்ன தெரியும்..?"
"இல்ல.. சாருக்கு பக்கத்தில நின்னுக்கிட்டு இருந்தீங்களே.."
"அதனால மட்டும் அவரு மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சிருமா..? போங்க இளங்கோ.. போயி.. என்னன்னு கேளுங்க..."
"பயமாயிருக்கு பாவனா.."
"அது என்னத்துக்கு.."
"இவரு முதலாளியப் போல இல்ல.."
"முதலாளியோட அப்பாகிட்ட முதலாளியோட குணத்த எதிர்பார்த்தா எப்படி இளங்கோ..? இதுக்கு முன்னாலே இருந்த நம்ப பழைய முதலாளி துரியோதனன் கிட்ட அவரோட மகன் குணமா இருந்துச்சு..?"
"இங்க தலைகீழாயில்ல இருக்கு..."
"அதைப் பாத்தா வேலை செய்ய முடியாது இளங்கோ.."
"ஊஹீம்.. இவரப் பாத்தாலே கிடுகிடுன்னு நடுங்குது பாவனா.."
"ப்ம்ச்.. இதையெல்லாம் பாத்தா முடியுமா..? அப்படி இவரால உங்கள என்னதான் பண்ண முடியும்..?"
"வேலய விட்டு தூக்க முடியும்..."
"ஹ... இதென்ன கவர்ண்மென்ட் வேலையா..? போனாப் போகுதுன்னு வேற வேலையைத் தேடிக்க வேண்டியதுதானே..?"
"ஏன் சொல்ல மாட்டிங்க..? உங்களுக்கென்னங்க.. நீங்க பொம்பளை.. கட்டின பெண்டாட்டியக் காப்பாத்தனும்கிற பொறுப்பு உங்களுக்கிருக்கா...? நான் புதுசாக் கல்யாணமானவன்.. என் பெண்டாட்டி வேற முழுகாம இருக்கிறா.. இந்தச் சமயத்தில பார்த்துக்கிட்டிருக்கிற வேலையை ரோசப்பட்டு விட என்னால் முடியுமா..? உடனடியாக அடுத்த வேலை கிடைச்சிருமா..? உனக்கு வேலை தர்றேன் வாடான்னு வெத்தலபாக்கை வைச்சுக்கிட்டு யாராவது கூப்பிட்டுக்-கிட்டு இருக்காங்களா..?"
"இல்லைதான்.." என்று சொன்ன பாவனாவிற்கு இளங்கோவைப் பார்க்கப் பார்க்க.. ஐயோ பாவம் என்றிருந்தது...
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் பெரும்பீழை இருக்கிறதென்றுதான் அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.. ஆணாகப் பிறந்து விட்டவனுக்கு வரும் அல்லல்களைப் பற்றி அப்போதுதான் அவள் கேள்விப் படுகிறாள்..
'ஆம்பளையாப் பொறந்தவனுக்கு ரோசமிருக்கக் கூடாதா..? அவன் பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்ற எதையும் தாங்கும் இதயமுடையவனாக மாறிவிட வேண்டுமா...?'
"பயப்படாதீங்க இளங்கோ.. அவரு எதையோ சொல்லத்தான் கூப்பிடறாருன்னு நினைக்கிறேன்.. வில்லங்கமா வேற எதுவும் இருக்காது..."
"அப்படிங்கறிங்களா..?"
"ஆமாம்கிறேன்..."
"தைரியமா போகலாமா..?"
"பயப்படாம போங்க..."
இளங்கோ புலிக்குகைக்குள் நுழைவதைப் போல பயந்து கொண்டே உள்ளே நுழைந்தான்.. பார்த்தசாரதி நிமிர்ந்து பார்த்தார்.. அவரின் பார்வையின் கூர்மையில் அவன் கதிகலங்கி விட்டான்..
"இன்னும் இரண்டு பேரைக் கூப்பிட்டுக்க.. அந்த டேபிள் சேரைத்தூக்கி ரூமுக்கு வெளியே போடு..."
பார்த்தசாரதியின் உத்தரவில் பாவனாவுக்கும்.. இளங்கோவுக்கும் தூக்கிவாரிப் போட்டது.. அவர்கள் இருவரும்.. ஒருவரையொருவர் மௌனப் பார்வை பார்த்துக் கொண்டார்கள்...
அறையை விட்டு வெளியே வந்த இளங்கோ பாவனாவிடம் "என்ன பாவனா.. இவரு இப்படிச் சொல்றாரு...?" என்று கேட்டான்...
பாவனாவின் மனதிலும் அந்த எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது என்றாலும்.. அவள் மனதை மறைத்து தோள்களைக் குலுக்கினாள்..
"நல்லதுதானே இளங்கோ.. காவ்யாகிட்ட இதைச் சொன்னால் அவ ரொம்ப சந்தோசப்படுவா.. ஆக்சுவலா அவளுக்கு முதலாளியோட ரூமுக்கு அவசீட் மாறினதில இஷ்டமேயில்லன்னு நம்ம எல்லாத்துக்குமே தெரியுமே.."
"ஆமாமா..." முகம் தெளிந்தான் இளங்கோ...
அர்ஜீன் இல்லாத நாள்களில் காவ்யா பாவனாவின் பக்கத்திலிருக்கும் சீட்டில்தான் உட்காருவாள்.. அவளுக்கும்.. பாவனாவுக்குமான நட்பை அந்தக் கடையில் வேலை பார்க்கும் அனைவரும் அறிவார்கள்.. அர்ஜீன் வந்த பின்பு அவளின் சீட் இடம் மாறியதில் அவளுக்கிருந்த மனத்தாங்கலையும் அவர்கள் அறிவார்கள் என்பதினால் இளங்கோவும்.. மற்றவர்களும் உற்சாகத்துடன் காவ்யாவின் டேபிள் சேரைத் தூக்கி அர்ஜீனின் அறைக்கு வெளியே போட்டு விட்டார்கள்...
காவ்யா நடப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. அர்ஜீனின் அறைக்கு வெளியே அவளது டேபிளும்.. சேரும் இடம் பெயர்ந்தபோது அர்ஜீனின் வாழ்க்கையிலிருந்தே அவள் வெளியே தள்ளப்படுவதைப் போல மனம் துடித்தாள்...
"இனிமே நீங்க இங்கேயே பெர்மனன்டா உட்காந்துக்கலாம்.. சந்தோசம்தானே காவ்யா..?"
இளங்கோ கேட்டபோது அவளால் இல்லையென்றா சொல்ல முடியும்..? வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்போடு 'ஆமாம்' என்ற பாவனையில் அவள் தலையை அசைத்தாள்..
ஏகாம்பரம் எதையும் கண்டு கொள்ளாதவராக அவர் போக்கில் வேலையைச் செய்து கொண்டிருக்க.. காவ்யா கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் இமைகளைச் சிமிட்டி அடக்கிக் கொண்டாள்...
பார்த்தசாரதி வன்மத்துடன் இளங்கோவை அழைத்தார்...
"கடையில நீ மட்டும்தான் சேல்ஸ் டிபார்ட்மென்டில் இருக்கயா..?"
"இல்லை சார்.. இன்னும் நாலஞ்சு பேரு இருக்காங்க..."
"சேல்ஸை அவங்க கவனிக்கட்டும்.. நீ வெளியே கிடக்கிற சேரில் உட்கார்..."
"நானா..?" விழி விரித்தான் இளங்கோ...
"நீதான்.." அழுத்தமாக சொன்னார் பார்த்தசாரதி...
"எனக்கு கம்யூட்டர் தெரியாது சார்.."
"பரவாயில்லை..."
"அக்கவுண்ட்ஸ் பார்க்கவும் தெரியாது..."
"நோ பிராப்ளம்..."
"இதையெல்லாம் காவ்யா மேடம்தான் பாப்பாங்க சார்..."
"மேடமா..?"
பார்த்தசாரதி முகத்தைச் சுளித்ததில்... தான் எதையும் தப்பாகச் சொல்லிவிட்டோமோ என்று பதறிப் போனான் இளங்கோ..
"மேடம் தான் சார்.. ஏன் சார்.. தப்பா ஏதாச்சும் சொல்லிட்டேனா...?"
தப்பாகத்தான் சொல்லி விட்டாய் என்று பார்த்தசாரதியால் எப்படிச் சொல்லமுடியும்..? அதனால்..
'மேடமா..? அந்தளவுக்கு இந்தக் கடையில் அந்தப் பெண்ணின் ராஜாங்கம் கொடி கட்டிப் பறக்கிறதா..?' என்று மனதுக்குள் பொருமியபடி பல்லைக் கடித்தார்...
"சின்ன வயசாத் தெரியுதே..."
"ஆமாம் சார்.. என்னைவிட ரொம்ப... ரொம்ப... சின்ன வயசு..."
இதைச் சொல்வதில் இளங்கோவுக்குள் பீறிட்ட உற்சாகத்தைக் கவனித்தபடி...
"அப்புறம் எதுக்காக மேடம்ன்னு கூப்பிடனும்..? பெயரைச் சொல்லியே கூப்பிட்டுப் பழகு..." என்று உத்தரவு பிறப்பித்தார் பார்த்தசாரதி...
"அதெப்படி சார்.. அவங்க முதலாளிக்கு செக்ரட்டரி முதலாளி இல்லாத சமயங்கள்ல.. அவங்ககிட்டத்தான் கடை பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க..."
"யாரு..?"
"முதலாளிதான்..."
"நான் அவனைப் பெத்த அப்பன்.. நான் சொல்கிறேன்.. நீ இனிமே அந்தப் பெண்ணை மேடம்ன்னு கூப்பிட வேணாம்..."
"அவங்க பேரு காவ்யா சார்..."
இளங்கோ திடிரென்று சொல்ல.. சம்பந்தமில்லாமல் இவன் எதற்காக சம்பந்தமில்லாமல் அவள் பெயரைச் சொல்கிறான் என்று யோசித்தார் பார்த்தசாரதி...
"இருக்கட்டுமே..."
"இல்ல.. நீங்க வாய்க்கு வாய்.. அந்தப் பெண்.. அந்தப் பெண்ணுன்னு சொன்னீங்களா.. அதான்.. அந்தப் பெண்ணோட பேரு உங்களுக்குத் தெரியலையோன்னு"
"ஓ..."
காவ்யாவின் மீதான மற்றவர்களின் அக்கறையையும்.. அவர்களின் ஒற்றுமையையும் உணர்ந்து கொண்டார் பார்த்தசாரதி...
பாவனாவும் சரி.. இளங்கோவும் சரி.. காவ்யாவை விட்டுக்கொடுக்காமல் பேசினார்கள்.. பாவனா தனக்கு முக்கியத்துவம் கிடைத்தால் கூட அதை வேண்டாம் என்று காவ்யாவிற்காக புறக்கணிப்பவளாக இருந்தாள்...
'இத முதல்ல உடைக்கனுமே...'
அர்ஜீன் வருவதற்குள் அந்தக் கடையில் காவ்யாவை தனிமைப்படுத்தி விடத் திட்டம் தீட்டினார் பார்த்தசாரதி..
'நான் ஓட வைத்ததா இருக்கக் கூடாது.. தானா ஓடி விட்டதா இருக்கனும்.. பார்க்கலாம்.. இந்தப் பெண் எத்தனை நாள் தாக்குப் பிடிக்குதுன்னு...'
மனதின் கடுமையை முகத்தில் பிரதிபலித்தபடி..
"ஓபே மை ஆர்டர்.." என்றார்...
"சார்..?"
"என் ஆர்டரைக் கேட்டு.. அதுபடி நடன்னு சொன்னேன்..."
"ஆகட்டும் சார்.."
"இப்ப வெளியே கிடக்கிற நாற்காலியில நீ போய் உட்காருகிற..."
"சரிங்க சார்..."
மறுத்துப் பேசினால் வேலை போய் விடுமோ என்ற பயத்துடன் அறைக்கு வெளியே கிடந்த காவ்யாவின் நாற்காலியைக் கைப்பற்றி அதில் உட்கார்ந்தான் இளங்கோ..
"இவனுக்கு வந்த வாழ்வைப் பாத்தீங்களாடா..."
கடையின் வேலையாள்கள் கிசுகிசுக்க.. அந்த வாழ்வில் சந்தோசப்படாமல் அவர்களை ஏக்கத்துடன் பார்த்தான் இளங்கோ..
அர்ஜீனின் அறையில் டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலித்தது.. எடுத்து காதுக்கு கொடுத்தார் பார்த்தசாரதி...
"ஹலோ..." என்று மறுமுனையில் சொன்னான் அர்ஜீன்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -76
எங்கிருந்தோ ஆசைகள்.. -76
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-76.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-76.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy