எங்கிருந்தோ ஆசைகள்.-75

75 இன்னல்களை முறியடித்து... நீ எனைக் கவர்ந்து செல்ல ஆசைகொண்டேன்.. "வேலைக்கு ஆகுமாப்பா...?" கவலையுடன் கேட்டான் தேவராஜன்.. கட...

75
இன்னல்களை முறியடித்து...
நீ எனைக் கவர்ந்து செல்ல ஆசைகொண்டேன்..

"வேலைக்கு ஆகுமாப்பா...?"
கவலையுடன் கேட்டான் தேவராஜன்..
கடையை விற்க வேண்டிய நிலை வந்த போதுகூட இந்த அளவுக்கு அவன் கவலைப்பட்டதில்லை என்பதை நினைவு கூர்ந்தார் துரியோதனன்...
"இது வேலைக்காகலன்னா.. வேற எதுதான் வேலைக்கு ஆகப் போகுது..?" என்று கேட்டார் அவர்..
"அந்தப் பார்த்தசாரதி நீங்க சொல்வதைக் கேட்பாரா..?" சந்தேகத்துடன் கேட்டான் தேவராஜன்...
"நிச்சயமாக் கேட்க மாட்டான்..." ஆணித்தரமாகப் பதில் சொன்னார் துரியோதனன்...
"அப்புறம்.. எதை வைச்சுப்பா இது வேலைக்காகும்ன்னு சொல்றீங்க..?" சலிப்புடன் கேட்டான் தேவராஜன்..
"அவனப் பத்தி எனக்குத் தெரியும்டா.. என் பேச்சை அவன் மதிக்க மாட்டான்.. ஆனா மகனோட காதலை கண்டுக்குவான்.. அதை நிறைவேற விடமாட்டான்..."
"அப்படிங்கறிங்க..?"
"ஆமாம்கிறேன்..."
துரியோதனனின் கணிப்பு மிகச் சரியானதாக இருந்தது.. மறுநாள் காலை விமானத்தில் மதுரைக்கு வந்து இறங்கி விட்டார் பார்த்தசாரதி.. நேராக கடைக்கு வந்து நுழைந்தவரை வாசலிலேயே வழி மறித்தார் கந்தசாமி...
"கம்யூட்டர் வாங்க வந்திருக்கீங்களா...?"
"இல்லை.. விற்க வந்திருக்கிறேன்..."
கந்தசாமியிடம் நின்று பேசாமல் படியில் ஏறியபடி மிடுக்காக பேசியவரை 'ஆ'வென்று பார்த்தார் கந்தசாமி...
'கோட்டும்.. சூட்டுமா வந்து இறங்கியிருக்காரே.. இவரு யாரா இருக்கும்...?'
விற்பனை பிரிவில் இருந்த இளங்கோ.. டைகட்டியிருந்தான்.. பார்த்தசாரதியிடம் பவ்யமான மரியாதையுடன்...
"என்ன வேணும் சார்..?" என்று விசாரித்தான்...
பதிலுக்கு அவனை ஏற இறங்க பார்த்த பார்த்தசாரதி..
"எம்.டியோட ரூம் எது..?" என்று கேட்டார்..
"எம்.டி.யா..?" இளங்கோவுக்கு விளங்கவில்லை..
அவன் வேலை பார்ப்பதோ கம்யூட்டர் விற்பனை செய்யும் கடையில்..
அங்கே போய் எம்.டியைப் பற்றிக் கேட்டால் அவனுக்கு என்ன தெரியும்..?
கருப்பு பேனட்.. வெள்ளை சட்டை.. டை என்று அங்கே வேலை செய்பவர்களை உயர்தரத் தோற்றத்திற்கு அர்ஜீன் வந்துதான் மாற்றியிருந்தான்.. துரியோதனனின் பொறுப்பில் இருந்தபோது அவர் உடை விசயத்தில் தலையிட்டதே இல்லை..
அப்படியிருக்க.. அவன் எம்.டி.யை எங்கே கண்டான்..?
"எம்.டின்னா தெரியலையா..?" பார்த்தசாரதிக்கு கோபம் வந்தது...
"தெரியலைங்களே..." இளங்கோ நெளிந்த போது அங்கே வந்த பாவனா...
"வாட் இஸ் தி பிராப்ளம் இளங்கோ..?" என்று விசாரித்தாள்..
அவளின் நாகரிகமான தோற்றத்தை பார்த்தவருக்கு இவள்தான் அந்தப் பெண் காவ்யாவோ என்று தோன்றியது.. அதற்குள்..
"இவர் எம்.டி யோட ரூம் எதுன்னு கேட்கிறார் பாவனா..." என்று சொன்னான் இளங்கோ...
'அப்ப.. இது அந்த காவ்யா இல்ல...'
பாவனா வியப்புடன் பார்த்தசாரதியைத் திரும்பிப் பார்த்தாள்..
"எம்.டி. ஊரில இல்லையே சார்.. ஹி இஸ் அவுட் ஆஃப் ஸ்டேசன்.." என்றாள்...
"ஐ நோ.. பட்.. நான் எம்.டியோட ரூமுக்கு போயாகனும்.." கண்டிப்புடன் பேசினார் பார்த்தசாரதி...
"வாட் ஃபார்..? அவர்தான் இல்லைன்னு சொல்கிறேனே..."
"லிஸன் யங் லேடி... ஐ ஆம் பார்த்தசாரதி.. ஃபாதர் ஆஃப் அர்ஜீன்..." என்றார் பார்த்தசாரதி..
"வாட்.." பாவனா விழிகள் விரிய பரபரத்தாள்..
"இளங்கோ.. இவர் நம்ம முதலாளியோட அப்பா..."
"முதலாளியோட அப்பாவா..?"
அந்த இளங்கோ பதட்டத்துடன் அவர் அருகே வந்து மரியாதையாய் நின்றபோது.. அவனுக்கு முதலாளி என்ற வார்த்தைதான் பரிச்சயம் என்பது பார்த்தசாரதிக்குப் புரிந்தது...
"முதலாளியோட ரூம் சாவி காவ்யா மேடத்துக்கிட்ட இருக்கு பாவனா..."
"நான் போய் வாங்கிட்டு வாரேன்..."
பாவனா விரைந்து ஒட.. அர்ஜீனின் அறைச்சாவி.. காவ்யாவின் பொறுப்பில் இருக்கிறதா.. என்ற கோபம் பார்த்தசாரதிக்குள் எழுந்தது...
'கவனிக்காமல் விட்டு விட்டேனே...'
எத்தனையோ வெற்றிகளை ஈட்டியிருந்த பார்த்தசாரதியின் புருவங்கள் முடிச்சிட்டன... அவர் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.. அர்ஜீன் திருமணத்தை மறுத்து வந்தான் தான்.. நேகாவை மறுத்து வந்தான்தான்.. ஆனால்.. அதன் பிண்ணனியில் மதுரை மண்ணின் மகள் இருக்கக் கூடும் என்று அவர் நினைத்தும் பார்த்ததில்லை...
எத்தனையோ நாடுகளில் சுற்றி வந்த அர்ஜீனின் மனம் மதுரை மண்ணில் நிலை கொள்ளும் என்று அவர் கனவா கண்டார்...?
பாவனாவின் பின்னால்.. பதட்டமான முகத்துடன் வந்து நின்ற பெண்ணின் முகத்திலிருந்த அழகு அவரைப் பேசவிடாமல் செய்தது..
கொடி போன்ற உடலும்.. பேசும் விழிகளும்.. அந்த விழிகளில் கண்டிப்பும்.. பூப்போன்ற மென்மையும்.. நீண்ட கூந்தலுமாக தேவதை போல வந்து நின்றவளைப் பார்த்தபோது.. இவளிடம் அர்ஜீன் மயங்கிப் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்று முடிவுக்கு அவர் வந்தார்...
"காவ்யா.. சார்தான் நம்ம எம்.டியோட அப்பா..."
"வணக்கம்..."
பாவனா அறிமுகப் படுத்தியதற்கு கை குவித்த காவ்யாவின் அமைதியான.. அழகான தோற்றத்தில் பார்த்தசாரதிக்குள் கோப அலை எழுந்தது..
அவருக்குத் தெரியும்.. சுந்தரிக்கு நேகாவைப் பிடிக்கவில்லை என்பது..
அப்படிப்பட்ட மனநிலையுடன் இருப்பவளின் முன்னால் அர்ஜீன் இப்படிப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டு போய் நிறுத்தினால்... அவள்.. இதை.. இதை.. இதைத்தாண்டா நான் எதிர்பார்த்தேன் என்று பூரித்து விட்டு..
'இவள்தான் என் மருமகள்..' என்று அறிவித்து விட மாட்டாளா...?
ஆனந்தி எப்போதுமே அர்ஜீனின் பக்கம்தான்.. தம்பிக்கு எதிரான எதையும் அவள் சிந்தித்தும் பார்க்க மாட்டாள்.. சுந்தரியும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து விட்டால் அர்ஜீனின் கூட்டணியில் பலம் அதிகரித்து விடும்.. பார்த்தசாரதி தனிமைப்பட்டு விடுவார்.. அந்த பயத்தை அவருக்கு அளித்த காவ்யாவின் மீது அவருக்கு கோபம் வருமா.. வராதா...?
"நீ யார்..?"
எடுத்த எடுப்பில் காவ்யாவின் மன தைரியத்தை உடைக்கும் வகையில் கடுமையாக கேள்வி கேட்டார் பார்த்தசாரதி...
காவ்யா.. ஓரக்கண்ணால் கடையில் உள்ளவர்களைப் பார்த்தாள்.. அவர்கள் மத்தியில் அவளுக்கிருந்த பிம்பம் சரிவதைப் போல அவள் உணர்ந்தாள்..
துரியோதனனிடம் கடை இருந்த காலத்திலிருந்து.. காவ்யாவிடம்தான் கடையின் முக்கிய பொறுப்புக்கள் இருந்து வந்திருக்கின்றன.. அர்ஜீன் வந்த பின்பு
அவை அதிகரித்தன.. அதனால் சக ஊழியர்களின் மத்தியில் அவளுக்கென்று ஒரு செல்வாக்கு இருந்தது.. முதலாளியிடம் சொல்ல வேண்டிய கோரிக்கைகளை
அவள் மூலமாகத்தான் அவர்கள் சொல்வார்கள்..
அப்படிப்பட்ட நிலையில் இருந்தவளை.. இருப்பவளை.. கடைக்குள் காலடி வைத்த மறு நொடியிலேயே 'நீ யார்..' என்று முதலாளியின் தந்தை கேட்டால்.. அவளுக்கு எப்படியிருக்கும்..?
பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாறி நின்றபோது பாவனா கை கொடுத்தாள்..
"இவள்தான் காவ்யா சார்... எம்.டி யோட செக்கரட்டரி..."
"ஓ.." இகழ்ச்சியாக உதட்டை மடித்த பார்த்தசாரதி..
"இந்தக் கடைக்கு ஒரு செக்கரட்டரி தேவையா..?" என்று பாவனாவிடம் கேட்டார்...
'இதை உங்க மகனிடம்தான் நீங்க கேட்க வேண்டும்...'
அந்த இரு பெண்களும் ஒரு மனதாக இதை நினைத்தார்கள்.. அதை அவரிடம் சொல்ல முடியாத பாவனா...
"இந்த போஸ்டை எம்.டி தான் கிரியேட் பண்ணினார்.." என்று சொன்னாள்..
அவரிடம் போய் நீ இதைக் கேள் என்ற மறைமுக பதில் அதில் பொதிந்திருப்பதை உணர்ந்து கொண்ட பார்த்தசாரதியின் புருவங்கள் சுருங்கின...
"கிவ் மீ தி கீ..." அவர் பாவனாவிடம் கை நீட்டினார்..
"சார்..?..." பாவனா ஆச்சரியமாகி விட்டாள்...
சாவி காவ்யாவிடம்தான் இருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.. அவரிடம் அதைச் சொல்லி விட்டுத்தான் காவ்யாவை அழைத்து வருவதற்காக அவள் ஓடினாள்.. காவ்யாவும் வந்திருக்கிறாள்...
அப்படியிருக்கையில் சாவிக்காக காவ்யாவிடம் கைநீட்டாமல் பாவனாவிடம் அவர் கை நீட்டினால் இதை என்னவென்று அவள் சொல்லுவாள்..?
"கீ காவ்யாகிட்ட இருக்கு சார்..."
இது எனக்குத் தெரியாதா என்ற பாவனையில் அவர் முகத்தைச் சுளித்ததில் காவ்யா மனதில் அடி வாங்கினாள்.. இதுபோன்ற செய்கைகளினால் மற்றவர்களின் மனதை உடைக்கும் வித்தை அவருக்குத் தெரியும் என்பது அவளுக்குத் தெரியாது...
அவள் முகம் கன்ற சாவியை பாவனாவிடம் கொடுத்தாள்... கண்களில் கேள்வியுடன் அதை வாங்கிய பாவனா பார்த்தசாரதியிடம் அதை நீட்டினாள்...
"கம் வித் மி..."
பார்த்தசாரதி பாவனாவிடம் சொல்லிவிட்டு அறையை நோக்கி நடந்தார்...
"சார்..." பாவனா தயங்கினாள்...
"வாட்..?" பார்த்தசாரதி திரும்பிப் பார்த்தார்..
"காவ்யாதான் எம்.டியோட செக்ரட்டரி.."
"அது எனக்கும் தெரியும்.. நான் அர்ஜீனில்ல.. ஸோ.. எதிர் கேள்வி கேட்காமல் நான் சொன்னதைச் செய்.." கடுமையான குரலில் உத்தரவிட்டார் பார்த்தசாரதி...
வேறு வழியில்லாமல் பாவனா பார்த்தசாரதியை பின்தொடர்ந்து விட.. காவ்யா தேங்கி நின்றாள்...
அவளுக்கு மட்டும் உரிமையான பதவியின் உரிமை அவளுக்கு மறுக்கப்படுவதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. கடையில் உள்ளவர்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள் பேசிக் கொள்வதை அவள் உணர்ந்தாள்...
அர்ஜீனின் வரவுக்கு முன்னாலிருந்த காவ்யாவாக இருந்திருந்தால் அவள் இந்தப் புறக்கணிப்பில் கொதித்திருப்பாள்.. போடா.. நீயுமாச்சு.. உன் வேலையுமாச்சு என்று தூக்கிப் போட்டு விட்டு.. திரும்பிப் பார்க்காமல் வெளியேறியிருப்பாள்...
இப்போது அப்படிச் செய்ய முடியாமல் காதல் அவளுக்கு கால் விலங்கையிட்டது...
வந்திருப்பது அவளது காதலனின் தந்தை.. வருங்கால மாமனார்.. அவரின் புறக்கணிப்பில் மனம் கொதிக்க அவளால் முடியுமா..?
காவ்யா உதட்டைக் கடித்துக் கொண்டு அலுவலகப் பகுதிக்கு போய்விட்டாள்.. இனிக் கடையில் அவளுக்கான இடம் எதுவாக இருக்கக் கூடும் என்ற கேள்வி அவள் நெஞ்சில் எழுந்தது...
பார்த்தசாரதியின் பின்னால் போன பாவனா.. அர்ஜீனின் அறைக்கதவைத் திறந்து விட்டாள்.. உள்ளே பிரவேசித்த பார்த்தசாரதியின் பார்வை அறைமுழுவதும் சுழன்றது.. அறையின் ஒரு கோடியிலிருந்த காவ்யாவின் டேபிளையும்.. சீட்டையும் சுட்டிக் காட்டியர்...
"அது யாரோட டேபிள்..?" என்று கேட்டார்...
"காவ்யாவோட சீட் சார்.." தயக்கத்துடன் சொன்னாள் பாவனா...
"செக்ரட்டரியோட சீட் எம்.டியோட ரூமுக்கு வெளியில இருக்கனும்.. உள்ளே இருக்கக் கூடாது.. எம்.டியை அப்பாயிண்ட்மென்ட் இல்லாம யாராவது
பார்க்க வந்தாங்கன்னா தடுத்து நிறுத்த செக்ரட்டரி வேண்டாமா..?" கோபத்துடன் கேட்டார் பார்த்தசாரதி..
'ஆமாம்.. இது பெரிய மல்ட்டி இன்டர் நேசனல் கம்பெனி.. இங்கே எம்.டியை பார்க்க அப்பாயிண்மென்ட் வாங்கிக்கிட்டு வரிசைகட்டி நிக்கிறாங்க.. அதை சரிபார்த்து அனுப்புறதுக்கு செக்கரட்டரி வாசலில போயி உட்காரனும்.. கம்யூட்டர் விற்கிற கடைக்கு இத்தனை பில்ட் அப்பா..?' மனதுக்குள் எரிச்சல் பட்டாள் பாவனா..
அவளுக்கு பார்த்தசாரதியின் முசுட்டு முகத்தைப் பிடிக்கவில்லை.. அவள் சிரித்துப் பேசி பழக்கப்பட்டவள்.. கலகலப்பான சூழ்நிலையில் வேலை செய்ய விரும்புபவள்.. அவளைப் பிடித்து வந்து உம்மணாம்மூஞ்சி பார்த்த சாரதியிடம் விட்டால் அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வராதா..?
'இந்த மனிதருக்கு காவ்யாவக் கண்டவுடன் பிடிக்காமப் போயிருச்சு.. இவர் பாட்டுக்கு அவ சீட்டில என்னை உட்காரச் சொல்லிட்டா என் கதி
என்னவாகிறது..?'
திகிலடைந்த முகத்துடன் பார்த்தசாரதியின் முகத்தை கவலையுடன் பார்த்தாள் பாவனா...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.-75
எங்கிருந்தோ ஆசைகள்.-75
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-75.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-75.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy